Monday, January 29, 2007

சாரல் 297

சாரல் : 297 பொழிந்தது : ஜனவரி 29, 2007

அரசியல் அலசல்

இப்போ உலகத்துலேயே தைரியமான தலைவர் யார்னு கேட்டா உலகமே ஜெயலலிதான்னுதான் சொல்லுது- அவங்க ஆயிரம் இந்திராகாந்திக்குச் சமம் -அ.தி.மு.க எம்.எல்.ஏ, நடிகர் எஸ். வி. சேகர். நாம்: சும்மாவா சொன்னாங்க உங்களை நல்ல நகைச்சுவை நடிகர்னு?

( ஜபர )


சினி வம்பு - அங்கிருந்தும் இங்கிருந்தும்

விஜய் நடித்து வெளியாகி இருக்கும் போக்கிரி கேரளாவில் வசூலில் ஒரு சாதனை படைத்திருக்கிறது. படம் ஓடிய முதல் வாரத்திலேயே 14 லட்சத்திற்கு மேல் வசூலாம். கேரளாவில் இது வரை வெளியான தமிழ்ப் படங்களில் அதிக வசூல் பெற்ரு சாதனை செய்திருப்பது போக்கிரிதானாம்.

( ஜன்பத் )


குழந்தையைத் தொலைத்து விட்டேன்

"பிள்ளை பிடிக்கிற கும்பல் ஒண்ணு மாட்டிச்சு.. அதுல ஒரு பையன்.. இந்த ஊர்னு சொல்றான்.. ஏழெட்டு வருஷம் முன்னால கடத்தினாங்களாம்.. உங்க பையனா இருக்குமா.. பாருங்க" இவளைத் திரும்பிப் பார்த்தேன்.

( ரிஷபன் )


விலங்குகளை எப்படிப் படம் எடுக்கிறார்கள்?

வேகமாக ஓடும் சிறுத்தை, மான், பாய்ந்து இரையை அடிக்கும் புலி, சிங்கம், வானில் உயரப் பறக்கும் குட்டிப் பறவைகள் - இவை அனைத்தும் தங்களுடன் சிறிய கேமராக்களைக் கட்டிக் கொள்வதாலேயே படப்பிடிப்பு அனைத்தும் எடுப்பது சாத்தியமாகிறது.

( ச.நாகராஜன் )


கற்கை நன்றே கற்கை நன்றே

புத்தகங்கள் மகத்தான சக்தி வாய்ந்தவை, சிந்திக்க சிந்திக்க, நொடிக்கு நொடி புத்தம் புதிய கருத்துக்களை வீசிக்கொண்டே இருக்கும். சிந்திப்பவனே மனிதன். அத்தகைய சிந்தனையை செம்மையாக்க உதவுபவை அறிஞர் தம் நூல்கள். புத்தகங்களை படிப்பதைவிட, படிப்பதற்குரிய புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் தான் அதிக கவனம் வேண்டும்.

( கு.சித்ரா )


வெற்றிக்கான சிந்த‎னைகள்

|தளராத முயற்சிக்கு ஈடாக உலகில் எதுவுமே இல்லை. திறமை கிடையாது. திறமையிருந்தும் வெற்றியடையாதவர்கள் ஏராளம். மேதாவித்தனம் கிடையாது. பலன் கிடைக்காத மேதாவிகளின் கதைகள் பிரபலம். படிப்பு கிடையாது. படித்தவர்களில் தோல்வியாளர்கள் பலர் இருக்கிறார்கள். திடமான உறுதியும், விடாமுயற்சியுமே சர்வ வல்லமை படைத்தவை.

( ஜ.ப.ர. )


ஆப்பிள் கனவு

ஆராய்ந்து பார்ப்பதில் அர்த்தமில்லை.. இதயம் துடிக்கும் ஓசை - புல்லாங்குழலின் நாதம் விடவும் மேன்மையானது..

( ராசி )


நான் ரசித்த பாடல் (7)

'நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறி விடு. மலையோ அது பனியோ நீ மோதி விடு. '

( பிரேமா சுரேந்திரநாத் )


காவிய நாயகன் நேதாஜி (35)

1930 ல் தொடங்கிய பத்தாண்டு இந்திய விடுதலைப் போரில் முக்கியமான காலகட்டம். உப்பு சத்தியாக்கிரகத்தில் தொடங்கி நமது சம்மதமில்லாமல், நமது நாட்டை இரண்டாவது உலகப் போரில் பிரிட்டன் ஈடுபடுத்தியதற்குக் கண்டனம் தெரிவித்து மாகாணக் காங்கிரஸ் மந்திரிகள் ராஜிநாமா செய்ததில் முடிவடைந்தது.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


நீ நான் தாமிரபரணி (55)

வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே மாதுரிக்கு மனம் திக் திக் என்று இருந்தது. போவதற்கு நேரம் நெருங்க நெருங்க அவள் படபடப்பு அதிகமாகியது. அருணின் நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்தால் பிள்ளையாருக்கு நூற்றியொரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டாள்.

( என்.கணேசன் )


நானென்றும் நீயென்றும (51)

"மாப்பிள்ளையை என்ன விட்டுட்டு? மாப்பிள்ளையே வேண்டாம் என்றுதானே யாரோ ஒரு பொறுக்கியோடு ஓடிப்போய் இப்படிக் காலை உடைத்துக் கொண்டு வந்திருக்கிறாள் உங்கள் மகள்" கோபமாகப் பொரிந்தார் கமலா.

( சுகந்தி )


சுவையான ரசவகைகள்

புளியைக் கொதிக்கவிட்டு நீர்க்கரைசலை தயாரித்துக் கொள்ளவும்.உப்பும், வெல்லமும் சேர்த்துக் கொதிக்க வைத்துக் கொண்டு, தாளிக்கும் கரண்டியில் சிறிது நெய் ஊற்றி துண்டுகளாக்கிய சிகப்பு மிளகாயுடன் பெருங்காயம், கடுகு, வேப்பம்பூவைச் சற்று வறுத்து, ரசத்தில் கொட்டி மூடி வைக்கவும். சற்றும் கசப்பில்லாமல் சுவையாக இருக்கும்.

( பிரேமா சுரேந்திரநாத் )


Deepavali – Music Review

Ezhil who has got hit flicks like “Thullaadha mananum thullum”, “Poovellaam un vaasam” to his credit, is back with Deepavali. This is Lingusamy’s maiden production and has music by Yuvan Shankar Raja. Ezhil is known for extracting wonderful songs from the music directors he had worked with in his previous films. Here too, he has inspired Yuvan to come out with brilliant songs.

( Vignesh Ram )


ராசிபலன்(சிறுகதை)

அடுப்பில் ரசத்துக்கு கடுகு தாளித்துக் கொண்டிருந்த லலிதா, ''அம்மா,அம்மா, இன்னிக்கு ராசி பலனில் உன் ராசிக்கு அமோகமா போட்டிருக்கு.''என்று கத்திக் கொண்டே வந்த தன் மகள் மாலினியிடம், ...

( புஷ்பா ராகவன் )


இந்திய நாட்டுச் சட்டங்கள்

இந்திய நாட்டுச் சட்டவிதிகள் பெரும்பாலும் ஆங்கிலேய நாட்டுப் பொதுச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றன. இந்தியச் சட்டங்கள் முதன் முதலாகப் பிரிட்டிஷாரால் அவர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தபோது கொண்டு வரப்பட்டன. பிரிட்டிஷ்காரர்கள் வகுத்த பல விதிகளும், ஆணைகளும் இன்றும் இந்தியாவில் அமலில் இருக்கின்றன.

( டி.எஸ்.பத்மநாபன் )


செய்திகள் அலசல்

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா உலக சமாதானத்திற்கான அதிருத்ர மஹாயக்ஞத்துக்காக சென்னை வந்திருக்கிறார். முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்கு அவர் சென்றது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி. முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் அவர் காலில் விழுந்து வணங்கியிருக்கிறார்.

( ஜ.ப.ர. )


அதீதாவுக்கு.. மடல் - 21

வீடு எரிந்து கொண்டிருக்கையில் நிம்மதியாகத் தூங்கும் மூடனடி நான். இதை உணரும் இந்தக் கணத்தில் தொண்டையை அடைக்குதடி துக்கம்! எப்போதுதானடி நான் துயிலெழுவேன்? எப்போதடி நிகழும் என் விடுதலை? எப்போதடி தப்பிப்பேன் வாழ்க்கை என்னும் கொடிய எரியும் தழலின் பிடியினின்று? சொல்லடி அம்பிஹே! சொல்!

( நட்சத்ரன் )


இராசி பலன்கள் 29.012007 முதல் 04.02.2007 வரை

துலாம்ராசி அன்பர்களே சூரியன் உங்களுக்கு நன்மை தரும் கிரகமாகும். செல்வாக்கு, புகழ் கூடும். உத்தியோகத்தால் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் மூலம் நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகளினால் சில தொல்லைகள் வந்து விலகும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் உண்டு.

( டாக்டர் ப. இசக்கி )


His Name is Siva Shankar..(232)

There is a voice of God inside you. He will always direct your actions, telling you ‘do this; don’t do this’. If you obey, you will always be in joy. If you disobey your inner voice that is the Divine Command, you will feel land yourself in sorrow. So, always follow the dictums of divinity. Nothing can go wrong with your life.

( N C Sangeethaa )


உறவுகள்

காதலி மணமாகிப்போனால் காதலனின் உறவு முட்டாள்தனமாய்! வசதி இல்லாதவர்களின் உறவு வசதியானவர்களுக்கு பைத்தியக்காரத்தனமாய்!

( சிலம்பூர் யுகா )


Tuesday, January 23, 2007

சாரல் 296

சாரல் : 296 பொழிந்தது : ஜனவரி 22, 2006

பிஞ்சுக் குழந்தைகளும் நஞ்சு மனங்களும்
வக்கிர மனம் படைத்த - மனித உருவில் உலாவும் மிருகங்கள் (மிருகங்கள் என்று கூடச் சொல்லக் கூடாது. மிருகங்கள் கோபிக்கும்) குழந்தைகளுக்கு இழைத்துள்ள கொடுமைகளையும் கொடூரமான கொலைகளையும் உத்திரப் பிரதேசம் நொய்டாவில் நிதாரி கிராமத்தில் காணும்போது பதறுகிறது.

( ஜ.ப.ர )

அவதாரங்களில் மச்சேஸ்வரர்

திருமால் மிகப்பெரிய சுறாமீனாக உருவம் தாங்கினார். கடலுக்கடியில் சென்று அதை கலக்கினார் அதனால் கோபம் கொண்டு வெளிவந்த சோமுகாசூரனைக் கொன்று வேதங்களை மீட்டார். வேதங்களைக் குழந்தைகள் வடிவில் அவர் எடுத்து வந்தார்.

( E.A. ஏகாம்பர குருக்கள் )

அதிரடிப் பெண்களின் அட்டகாச சீரியல்!

சார்லிஸ் ஏஞ்சல்ஸ்! சுழன்று சுழன்று கைகளாலும் கால்களாலும் எதிராளிகளைப் பந்தாடி வீழ்த்துவது, துப்பாக்கியை நினைத்தபடி சுழற்றி குறி பார்த்து குருவி சுடுவது போல சுடுவது, வில்லிலிருந்து அம்பை மலை மீது ஏவி அதில் தொங்கும் கயிற்றின் வழியே சாகஸமாக ஏறுவது,

( ச.நாகராஜன் )

நாயகன் ஒரு நங்கை (26)

லிஃப்டினுள் சென்றவுடன், சீதாவிடம் கேட்டேன், "எனக்கென்ன பைத்தியமா?" என்றேன். தன் மார்பின் மேல் என் நெஞ்சை சாய்த்துக்கொண்டாள். "இல்லடா" என்றாள், கண்களிலிருந்து நீர் கசியக் கசிய. ஏன் அழுதாள் என்று தான் எனக்கு இன்று வரை புரியவில்லை.

( நரேன் )

புண்ணியத்தலங்களும் புண்ணாகிப்போன மனமும்

ஆலங்குடி குருஸ்தலத்தில், கோயிலின் இனிமை, கோபுரத்தின் தரிசனம், அதிகாலை வேளையோ என்னமோ! மனதிற்கு இதமாக அமைந்தது. அந்த இனிமை தணிப்பதற்காக அமைந்தாற்போல் அங்ககீனமான மக்கள் பிச்சைப் பாத்திரத்துடன் அமர்ந்து இரக்கும் கொடுமை அமைந்து போனது.

( ராஜூ சரவணன் )

அரசியல் அலசல்
இப்போது கலைஞர் கருணாநிதி எடுத்த முடிவுதான் அதிரடியானது - ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்க மாட்டார். அடுத்த தீர்ப்புவரை காத்திருக்காமல் 99 வார்டுகளிலுமுள்ள கவுன்சிலர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவித்துள்ளார்.

( ஜபர )

ஆசை

விரதமிருக்கத் தெரிந்த உனக்கு மூச்சடக்கி நிற்கும் எனது வார்த்தை வரங்களை வரவேற்கத் தவறியதேன்?

( ராசி )

நீ நான் தாமிரபரணி (54)

அருண் ஏமாற்றத்துடன் சொன்னான். "அவங்க அம்பலவாணன் சார் கிட்ட தனியாய் பேசணும், வேற யாரும் இருக்கக் கூடாதுன்னு முதல்லயே சொல்லி அவர் ஒத்துகிட்டதுக்கப்புறம் தான் வந்தாங்க. வந்து அவர் கிட்ட மட்டும் தான் பேசினாங்க. எனக்கு முதல்லயே தெரிஞ்சிருந்தா ஒளிஞ்சு நின்னாவது நான் பார்த்திருப்பேன்..."

( என்.கணேசன் )

நான் ரசித்த பாடல் (6)

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா? அட என்னாடு என்றாலும் அது நம் நாட்டிற்கு ஈடாகுமா? பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா? ஆ ஆ ஆ ஆ

( பிரேமா சுரேந்திரநாத் )

காவிய நாயகன் நேதாஜி (34)

1930 ஜனவரி 26ம் தேதியை நாடெங்கும் சுதந்திர தினமாகக் கொண்டாடுவது என்று காங்கிரஸ் தீர்மானித்து உற்சாகமான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. வங்காளத்தில் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடுவாரா சுபாஷ்? அதி தீவிரமான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

நானென்றும் நீயென்றும் (50)

என்ன பேச்சு பேசிவிட்டான்.. அப்படியே பாய்ந்து அவன் சட்டைக் காலரை இழுத்து நாலு அறை விட வேண்டும் என்று பல்லைக் கடித்தாள். ஆனால் அவளால் எழுந்து கூடப் போக முடியவில்லையே. கை முஷ்டிகளை இறுக்கி சக்கர நாற்காலியின் கைப்பிடிகளை இறுகப் பிடித்தாள் பூஜா.

( சுகந்தி )

'ஒரு நிமிடக் கதை' தப்புக் கணக்கு

பாலுவுக்கு ரொம்ப நாட்களாக பேங்கில் கணக்குத் துவங்க வேண்டும் என்று ஆசை, அதிலும் ஸ்டேட் பேங்கில் துவங்க வேண்டும் என்பதில் ரொம்பவும் ஆர்வமாக இருந்தான். பாலு படித்ததெல்லாம் எட்டாவது வரைதான்.

( லால்குடி வெ. நாராயணன )

Profile of Shilpa

Profile of 'Big Brother' fame Shilpa Shetty - likes, dislikes, family, education, hobbies, nick names.. all about Shilpa

( PS )

சினி செய்திகள்- இங்கிருந்தும் அங்கிருந்தும்

அமெரிக்காவிலிருந்து சிம்பு புத்தூணர்ச்சியுடனும் புது ஹேர் ஸ்டைலுடனும் திரும்பி விட்டார். அடுத்து இப்போது அவர் இயக்கப் போவதில்லையம். அவர் நடிக்க இருக்கும் அடுத்தபடம் மோசமானவன், மோசமான(வன்) கதாநாயகி யாருங்க? (நயன்தாரா இல்லையா?)

( ஜன்பத் )

இராசி பலன்கள் 22.012007 முதல் 28.01.2007 வரை

மேஷராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எடுத்த காரியங்களைச் சற்று பிரயாசையுடன் செய்து முடிப்பீர்கள்;. திடீர் அதிஷ்டம் மூலம் தனம் கிடைக்கக் கூடிய காலமாகும்.

( டாக்டர் ப. இசக்கி )

தொடருவோம் தோழமையை....

ஆத்மாவை அலங்கரித்துக்கொடுத்த உன்னோடு உடை களையும் உறவு கொச்சையாகும். அதனால் மறுப்பதற்கு மன்னிக்கவும். நண்பனே நட்புஸ்தானம் பெற்று உடனே வா தொடருவோம் தோழமையை.......

( சிலம்பூர் யுகா )

செய்திகள் அலசல்
பிரிட்டனில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அங்குள்ள தனியார் டி. வி நிகழ்ச்சியில் ஏற்பட்ட அவமானம் ஒவ்வொரு இந்தியனையும் வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்தியாவிலிருந்து வேற்று நாட்டுக்குச் செல்லும் ஒவ்வொரு இந்தியரும்....

( ஜ.ப.ர. )

கல்யாணச்சந்தை

அவள் பாட்டுப் பாடினால் மெய்மறந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகிய, தேன் போன்ற குரல். நீண்ட கருங்கூந்தல். மேக் அப் எதுவும் தேவையில்லாத இயற்கை அழகி. சாதாரண காட்டன் புடவையில் தேவதை போல காட்சியளிப்பவள்.

( வை.கோபாலகிருஷ்ண‎ன் )

Guru– Music Review

The musical magic of Mani-ARR-Vairamuthu team never ceases to work wonders and provide an auditory treat. The saga continues in Guru (Tamil). The title "Guru" is a special one, because it holds the same meaning in all the regional languages and Hindi. Guru, a Kamal starrer had wonderful songs,not to mention the Malayalam "Guru", a Mohanlal starrer. Now this 2007 "Guru" is in line with those records.

( Vignesh Ram )

His Name is Siva Shankar..(231)

Badragiri was a renowned king. There was no pleasure he had not experienced. When people, out of their sheer ignorance, punished the great Pattinathar and the saint emerged unhurt, Badragiri renounced his kingdom and became an ardent disciple of Pattinathar.

( N C Sangeethaa )

Monday, January 15, 2007

சாரல் 295

சாரல் : 295 பொழிந்தது : ஜனவரி 15, 2006

வெயில் - திரைவிமர்சனம்

விருதுநகரின் புழுக்கமான சந்துபொந்துகளில்தான் கதை நகர்கிறது. பசுபதியும், பரத்தும் சகோதரர்கள். அன்புக்கு ஏங்கும் பசுபதி - ஆனால் அது கிடைக்காமல் போகும் பரிதாபம். துறுதுறு இளைஞன் பரத் - விளம்பர கம்பெனி நடத்துகிறார். இருவரது பள்ளிப்பருவத்திலிருந்து கதை ஜோராக ஆரம்பிக்கிறது.

( ரிஷிகுமார் )


அரசியல் அலசல்

தமிழக அரசு பொங்கல் நாளை முன்னிட்டு இலவச காஸ் அடுப்பு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அடுப்பும் இணைப்பும் இலவசமாம். காஸின் விலை 300 ரூபாயைப் பயனாளிகள் செலுத்த வேண்டுமாம். மாதாமாதம் காஸ் வாங்குவதற்குப் பணமிருப்பவர்கள் அடுப்பை வாங்கிக்கொள்ள மாட்டார்களா? இந்த அடுப்படி காஸ் திட்டம் அடிப்படையிலேயே கசியும் திட்டம்.

( ஜபர )


நான் செஞ்சது தப்பா?

"வருஷத்துக்கு ரெண்டு தடவை ஃபீஸ் கட்டினது போக அதிகப்படியாவே மிஞ்சுதுய்யா. நான் மட்டும் படிச்சு முன்னேறினாப் போதுமா.. என்னை மாதிரி எங்க ஊர்ல சில மாணவர்கள் சிரமப் படறாங்க. அவங்களுக்கு ஃபீஸ் கட்ட யூஸ் பண்ணிக்கிட்டேன். நான் செஞ்சது தப்பாய்யா" மனசெல்லாம் சிலிர்த்துப்போக ஜவஹரை அப்படியே கட்டிக் கொண்டேன்.

( ரிஷபன் )


புதையல் வேண்டுமா?

காலம் என்பது யாருக்காகவும் காத்திருக்காது; நேற்று என்பது ஒரு சரித்திரம்; நாளை என்பது ஒரு மர்மம்; இன்று என்பது நிச்சயம் ஒரு வெகுமதி;

( வை. கோபாலகிருஷ்ணன் )


ஹாலி, பாலி, கோலி--- ஜாலி!

திரெளபதி வஸ்திராபரணம் என்ற புராணப்படம் 1917 ல் வெளியானது. தயாரிப்பு நடராஜ முதலியார். இதில் திரெளபதியாக நடிப்பதற்கு எந்த தமிழ்ப் பெண்ணும் முன்வராததால் வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவர் நடித்தாராம்.

( ஜன்பத் )


நானென்றும் நீயென்றும் (49)

இந்த பூஜா என்ன இப்படி விளையாட்டுத்தனமாகவே இருக்கிறாள்? எல்லாமே இவளுக்கு விளையாட்டுத்தானா? இல்லை அப்படி நடிக்கிறாளா? பட்டென்று ஏதாவது அவளுக்கு வலிக்கும்படி சொல்ல வேண்டுமென்று நாக்குத் துடித்தது.

( சுகந்தி )


நீ நான் தாமிரபரணி (53)

தாரா பேச்சிழந்தது போல ஓரிரு நிமிடங்கள் அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் எல்லையில்லாத சோகம் படர்ந்தது. பிறகு உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள். "சில விஷயங்களை திருப்பி கொண்டு வர்ற சக்தி நம்ம கிட்ட இல்லை சார். அப்படி இருந்திருந்தா எவ்வளவோ நல்லா இருக்கும். விதி தீர்மானிச்சுட்ட விஷயங்களை மனுஷன் மாத்திட முடியுமா சார்?"

( என்.கணேசன் )


ஜோதிடம் கேளுங்கள்

எப்பொழுது எனக்கு திருமணம் நடக்கும்? எனது குடும்பவாழ்க்கை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும்?

( குருஜி கார்த்திகா சித்தார்த் )


காவிய நாயகன் நேதாஜி (33)

எது எப்படியிருந்த போதிலும், தீவிரவாதத்துக்கும், வன்முறைக்கும் ஆதரவும் அனுதாபமும் பெருகி வருவது காந்திஜியின் மனத்தில் ஒரு பீதியை ஏற்படுத்தி விட்டது. விரைவிலேயே, அஹிம்சை முறையிலான ஒரு தீவிரப் போராட்டத்தைத் தொடங்காவிட்டால், வன்முறையாளர்கள் மற்றும் தீவிரவாதிகள் கை ஓங்கிவிடும் என்று அவர் புரிந்து கொண்டார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


நான் ரசித்த பாடல் (5)

கவிஞர் கண்ணதாசன் காதல் கனிரசம் சொட்டும் ஸ்ருங்காரப் பாடல்களை மாத்திரமின்றி வாழ்க்கையின் நிலையாமையைக் குறித்த தத்துவப் பாடல்களையும் எழுத வல்லவர் என்பதை அனைவரும் அறிந்ததோடன்றி அப்பாடல்களை நாம் திரும்பத் திரும்பக் கேட்டும், சுவைத்தும் மகிழ்ந்திருக்கிறோம்.

( பிரேமா சுரேந்திரநாத் )


உங்கள் கூடவே நிரந்தரமாக இருக்கும் இரண்டு டாக்டர்கள்!

தினமும் விடாமல் அரை மணி நேரம் நடப்பதால் கவர்ச்சி, அழகு, ஆரோக்கியம், நீடித்த ஆயுள் நிச்சயம்.ஆகவே உங்களுடன் கூடவே இருக்கும் இரண்டு டாக்டர்களைச் சற்று போற்றி மதியுங்கள்; அதன் மூலம் வலிமை வாய்ந்த உடலுடன் சமுதாயத்தில் மதிப்புடன் வாழுங்கள்!

( ச.நாகராஜன் )


Paruthi veeran – Music Review

Ameer’s previous ventures “Mounam pesiyadhe” and “Raam” were backed up by Yuvan’s songs and background score. The successful combination is back in “Paruthiveeran”, but into neck deep rustic folk this time.

( Vignesh Ram )


நாயகன் ஒரு நங்கை (25)

அன்று இரவு முழுவதும் அழுது கொண்டே தான் இருந்தாள். காலையில் மணப்பந்தலில் அமர்ந்துகொண்டோம். இன்னும் சோகமாகவே காணப்பட்டாள். அவள் சித்தப்பாவின் மடியில் அவளை அமர்த்தி நான் திருமாங்கல்யத்தை அவள் கழுத்தில் கட்டும் சமயத்தில், யாரோ என் பின்னாடி உதைத்தார்கள். "நான் இல்லாம தாலி கட்டிடுவியாடா?"

( நரேன் )


His Name is Siva Shankar..(230)

Lord Siva says, 'People are fighting over religion and are dying. So go and remove their confusion...' and goes on to complete, 'loving all forms of life is what is dear to me. Fighting and dying over religion is not.'

( N C Sangeethaa )


இராசி பலன்கள் 15.012007 முதல 21.01.2007 வரை

விருச்சிக ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். உங்களுக்குத் தீராத நோய்களும், கடன் தொல்லைகளும் தீரக்கூடிய காலமாகும். எதிர்பாராத தனம் கை வந்து சேரும். தொட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

( டாக்டர் ப. இசக்கி )


காக்கைப் பொன்

சொற்பொறி அழகேசன். அவனது நிஜப்பேர் என்ன என்று இன்றுவரை அவளுக்குத் தெரியாது. சொந்தப்பேரை அவனே விரும்பவில்லை போல. தாய் தந்தை யாருமே இல்லை அவனுடன். சின்ன வயசிலேயே வீட்டில் கோபித்துக் கொண்டு ரயிலேறியவன்.

( எஸ். ஷங்கரநாராயணன் )


பாட்டியின் கதைகள் (29)

கும்பகோணம் அருகில் சுவாமி மலை முருகன் கோவில் இருக்கிறது. அங்கு பொன்னன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் தொடர்ந்து பருவமழை தவறியதால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பிழைப்புக்காக நிறைய பேர்கள் குடும்பம் குடும்பமாக ஊரை விட்டு வெளியேறினார்கள்.

( P.நட‎ராஜன் )


மகனுக்கு தோழனாய்...

இனிய மகனே எனக்காக எழுதுகிறேன் இருந்தும் இது உனக்காகவும். உபதேசமென்று நினைத்து ஒதுக்க வேண்டாம்!

( சிலம்பூர் யுகா )


செய்திகள்அலசல்

புதிய வாட் முறையில் மூலப்பொருளை வாங்குகிற போது கொடுக்கிற வரியை, அதன் மூலம் உற்பத்தி செய்து விற்கிறபோது கொடுக்க வேண்டிய வரியில் கழித்துக் கொள்ளலாம். இதன் மூலம் விற்பனை விலை ரூ.114.40 தான் ஆகும் என்று கணக்கிடப்படுகிறது. இந்த வரிகள் நுகர்வோரிடமிருந்தே பெற்று செலுத்தப்படுகிறது. எனவே புதிய முறையில் நுகர்வோருக்கு லாபம் ரூ. 3.12.

( ஜ.ப.ர. )


தேவை இரண்டு கிளிகள்!

நீ! என் இதயத்தைத் தின்றது போதாதென்று கனவுகளையும் களவாடுகிறாய்.. இமைகளின் மேல் அமர்ந்து கொண்டு கொட்டமடிக்கும் உன் சிரிப்பை-நான் எப்படிப் புறக்கணிப்பது?

( ராசி )


Monday, January 08, 2007

சாரல் 294

சாரல் : 294 பொழிந்தது : ஜனவரி 8, 2007

ஜ.ப.ர.வின் செய்திகள் அலசல்
தில்லியை அடுத்துள்ள நொய்டாவில் ஒரு பங்களாவை ஒட்டிய சாக்கடை மற்றும் இதரப் பகுதிகளில் தோண்டத் தோண்ட வெளி வந்த எலும்புக்கூடுகள் பற்றிய செய்திகள் மனதை உறைய வைக்கின்றன.

( ஜ.ப.ர. )

சினி செய்திகள் - அங்கிருந்தும் இங்கிருந்தும்
மிகவும் எதிர்பார்க்கப்படும் ரஜினியின் 'சிவாஜி' ஏப்ரல் 14ல் ரிலீசுக்குத் தயாராகி வருகிறது. இதே சமயத்தில் கமல் பத்து வேடங்களில் அமர்க்களப்படுத்தும் 'தசாவதார'மும் வெளியிட ரெடியாகுமாம். ஆனால் தயாரிப்பாளர்கள் இந்த இரு படங்களையும் ஒரே சமயத்தில் வெளியிட விரும்பவில்லை.

( வம்புநாதன் )

அப்பாவின் ஞாபகம்

வீட்டு வாசலில் படிக்கட்டின் இருபுறமும் முழங்கால் உயரத்தில் சிட் அவுட் மாதிரி கட்டியிருந்தோம். ஒன்றில் அப்பா உட்கார்ந்திருந்தார். எதிர்புறம் நான் அமர்ந்தேன். அப்பா நான் வந்து அமர்ந்ததை கண்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை. கவனம் முழுக்க வெற்றிடத்தில்.

( ரிஷபன் )

நான் ரசித்த பாடல் (4)

"பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப்பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம் துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்

( பிரேமா சுரேந்திரநாத் )

புத்தாண்டு பூத்தது

நமக்கு காலம் புத்தாண்டைத் தருகிறது.. நாம் அதற்கு என்ன பரிசைத் தரப் போகிறோம்? உழைப்பைத் தருகிற இடம் நாம் கவனமாய்த் தேடுவோம்..

( ராசி )

அன்னையின் அசரிரீ
அம்மா அம்மாவென்று புலம்பிக்கொண்டிருந்த அச்சிறுவனுக்கு திடீரென்று கடவுள் நம்பிக்கையே விலகியது. "முருகனாவது கடவுளாவது? எல்லாமெ வெறும் பொய். உண்மையாக் கடவுள் இருந்தால், எல்லோருக்கும் நன்மை செஞ்சிண்டு ஒரு ஈ எறும்புக்குக் கூட மனசால கூட கெடுதல் செய்யாதெ 38 வயசு கூட ஆகாத என் அம்மா எதுக்காக சாகனும்?

( சரோஜா ஸ்ரீனிவாசன் )

பரம மங்களம் தரும் பாராயணம்!
" அனுமனே உனக்கு சுந்தரன் என்ற பெயரும் உண்டு என்பது உனக்குத் தெரியுமா" என்றார். வியந்து போன அனுமன் அப்படி ஒரு பெயர் தனக்கு இல்லை என்று கூறவே வால்மீகி முனிவர்," சந்தேகம் இருந்தால் உன் தாய் அஞ்சனா தேவியிடம் சென்று கேள்" என்றார்.

( ச.நாகராஜன் )

புராண வரலாறுகளில் மகாவிஷ்ணு

ஆதியில் உலகத்தைப் படைத்த சிவ-பார்வதியார் தாம் படைத்த உலகையும் உயிர்களையும் காத்து அருள் புரிவதற்காக ஒரு தேவனைப் படைத்தார். அவரே திருமால் எனப்பட்டார். அவர் மாயையின் வடிவாக விளங்கியதால் மாயவன் எனப்பட்டார்.
( E.S.ஏகாம்பர குருக்கள் )

ஹைக்ஹூ

கவிதைக்குக் கரு எங்கிருந்து கிடைக்கிறது காதலி கேட்கிறாள், ஆயிரமாயிரம் கருக்களை விழியால் வீசியபடி!
( சிலம்பூர் யுகா )

ஜபரவின் அரசியல் அலசல்

சதாம் உசைனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாமே தவிர தீர்ப்பு என்னவோ நியாயமானதுதான். போகிறபோக்கில் புஷ் தனக்குத் தெரியாமலே சதாம் உசைனுக்கு ஒரு நல்லது செய்திருக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று சதாமுக்குத் தூக்கு- அவரது ஆவி சொர்க்கத்தை அடைந்திருக்கும் என்கிறார்கள் சிலர்!
( ஜபர )

காவிய நாயகன் நேதாஜி (32)

கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் வெளிப்பட்ட ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் காந்திஜிக்குப் பிடிக்கவில்லை. வித்தை பார்க்க வந்த கூட்டம் நமது வலிமையைக் காட்டாது என்று விட்டார் அவர். அவர் சொன்னாற்போல காங்கிரஸ் பந்தலே ஒரு சர்க்கஸ் மைதானத்துக்குள்தான் அமைந்திருந்தது.
( டி.எஸ்.வேங்கட ரமணி )

வண்ணத்துப் பூச்சி

சப்தம் எழுப்பாமல், சருகுகள் கலைக்காமல், அடிமேல் அடிவைத்து, நான் பிடித்த வண்ணத்து பூச்சி,
( கமலி )

முன்னெச்சரிக்கை முகுந்தன்

'ஐம்பது வயதைத் தாண்டிய முகுந்தனுக்குச் சற்றுபெருத்த சரீரம். நடந்தாலே பெருமூச்சு வாங்கும். சுகர், பிரஷருடன் சமீபகாலமாகச் சற்று ஞாபகமறதியும் சேர்ந்து கொண்டுள்ளது. எப்போதுமே எதிலும் ஒரு விதப்படபடப்பு. எதையாவது மறந்து விட்டு விடுவோமோ என்று முன்னெச்சரிக்கையாகவே இருப்பார்.

( வை.கோபாலகிருஷ்ண‎ன் )

பேராசை

ஆனைமலை என்ற ஊரில் மாரி என்பவன் வசித்து வந்தான். அவன் நகை செய்யும் தட்டான். நல்ல டிசைன்களில் ஊர்மக்கள் விரும்பும்படி நகைகள் செய்வான். அதனால் அவனுக்கு வருஷம் முழுவதும் வேலை இருந்து கொண்டே இருக்கும். நல்ல வருமானம் வர பணத்தாசையும் ஆசையும் கூடவே வந்து விட்டது.

( P.நட‎ராஜன் )

நாயகன் ஒரு நங்கை (24)
தினமும் அவனைப் புடிச்சு - இப்படி உன் பின்னாலேயே அலையறேனே, ஏன் இப்படி இருக்கேன்னு கத்தணும்னு போவேன். அவனைப் பாத்தவுடனே கத்தல் கெஞ்சலா மாறிடும். அப்போல்லாம் விலகி விலகிப் போனான். திடீர்னு ஒரு நாள் வாய்லேர்ந்து ரத்தம் கொட்டுது.
( நரேன் )

கவிதைப்பூக்கள்
சொன்னாயாமே? "எனக்குப் பதிலுக்கு 'ஹேப்பி வீக்எண்ட்' சொல்லும் நாகரீகம் கூடத் தெரியவில்லை" என்று கடனாகத்தான் சொன்னாயா அந்த "ஹேப்பி வீக்எண்ட்"?
( சரண் )

நீ நான் தாமிரபரணி (52)
அம்பலவாணனுக்குத் தாரா போன் செய்த விஷயத்தை அருணிடம் சொல்ல மனம் துடித்தாலும் தாராவுக்குக் கொடுத்த வாக்கை மீற அவரால் முடியவில்லை. அருண் அந்த அலுவலகத்திலேயே வேறொரு வேலையில் மும்முரமாக மூழ்கிக் கிடக்க அவர் தாராவின் வரவுக்காகக் காத்திருந்தார்.
( என்.கணேசன் )

நானென்றும் நீயென்றும் (48)
அன்று முத்தமிட்டு சென்ற அவினாஷ் தன்னை நாடி வரவில்லை என்றதுமே அவினாஷின் மனநிலை புரிந்து தவித்தாள் பூஜா. அவன் கோபம் அவளுக்குத் தெரிந்து தான் இருந்தது. ஆனாலும் மனதுக்குள் ஒரு நைப்பாசை. அன்று முத்தமிட்டு விட்டுச் சென்றானே அவளை மன்னித்து விட்டானோ என்று நினைத்தாள்.
( சுகந்தி )

மச்சினி சொன்னா கேட்டுக்கணும்
"தண்ணி ஊத்துறா மஞ்சத் தண்ணி ஊத்துறா மாமன்காரன் மயங்கி நின்னா வென்னீ ஊத்துறா" என்ற பாடல் ஒளிபரப்பாக, "மாமா இதுகூட சிச்சுவேஷன் சாங் தான்" என்று அவள் சிரிக்க அவனும் தன் தவறை உணர்ந்து அவளுடன் சேர்ந்து சிரித்தான்.
( லால்குடி, வெ. நாராயணன். )

VANNA KOLANGAL
Kolangal
( G.Divya praba )

His Name is Siva Shankar..(229)
I am not saying, 'Believe me only'. Go around and search among those whom you believe. Check who give you their unconditional love, who doesn't take money from you, etc.
( N C Sangeethaa )

Monday, January 01, 2007

சாரல் 293

சாரல் : 293 பொழிந்தது : ஜனவரி 1, 2007

காலாவதியாகும் கடவுள் கொள்கை

கடவுள் நம்பிக்கை மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்றாது. அவர்களுக்காவது, தவறு செய்தால், கண்ணைக் குத்துவதற்கு ஒரு கற்பனைக் கடவுள் உண்டு. மாறாக, பாவ புண்ணிய கணக்கில், மறுபிறப்பில், விதியில், கடவுளில், சடங்குகளில் நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்கள், தம் நடத்தைகளை தம் எண்ணங்களால் சீர்தூக்கி, கொள்வன கொண்டு, குறைப்பன குறைத்து, தனக்கும், சமூகத்துக்கும் பயனுள்ள ஒரு மாமனிதனாக வாழமுடியும்,

( கு.சித்ரா ), 1/1/2007


கோலிவுட் 2006 - ஒரு அலசல்

2006ம் ஆண்டைத் தமிழ்த் திரையுலகின் பொற்காலம் என்று சொல்லலாம். இதற்கு முந்தைய 2005ம் ஆண்டில் எடுக்கப்பட்ட எழுபது தமிழ்ப் படங்களில் மொத்தம் ஆறு படங்களே பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி கண்டன.

( ஜன்பத் ), 1/1/2007


உலகப்போரை நிறுத்தியிருக்கலாமோ?

நான் சொல்வதை நம்புவதற்குக் கடினமாக இருக்கும். கிறிஸ்துமஸ் அன்று அதிகாலை ஒரு மணிக்கு நான் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிப் பகுதியிலிருந்த வீரர் ஒருவர் எனக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்தும் காலை வணக்கமும் சொன்னார்.

( நிலா ), 1/1/2007


நான் ரசித்த பாடல் (3)

நாட்டியப்பேரொளி திருமதி.பத்மினி சிறு குழந்தையைக் கையில் ஏந்தியவாறு 'மங்கையர் திலகம்' படத்தில் பாடிய 'நீலவண்ணக் கண்ணா வாடா ' என்ற பாடல் நான் ரசித்த பாடல்களில் ஒன்றாகும்.

( பிரேமா சுரேந்திரநாத் ), 1/1/2007


நானென்றும் நீயென்றும் (47)

ட்ராவிஸின் இருப்பிடத்தையும் சோதித்துப் பார்த்ததில் அவன் ஒரு கயவன் என்று மட்டும் தெரிகிறது.ப்ளாரிடா மாநிலத்திலும் அட்லாண்டாவிலும் பெண்களைக் கொடுமைப் படுத்தும் சட்டத்தின் கீழ் கைதானவன் என்பது மட்டுமே அவனைப் பற்றிய விஷயம் அவர்களுக்குக் கிடைத்து இருக்கிறது.

( சுகந்தி ), 1/1/2007


2006 - செய்திகள் அலசல்

ஒரு ஆண்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் எழுதுவது சாத்தியமல்ல. தமிழ்நாட்டிலும், மத்திய அரசிலும் நடந்த முக்கியமான நிகழ்வுகளின் செய்திச் சிதறல்களின் தொகுப்பு இது.

( ஜபர ), 1/1/2007


விளையாட்டு-2006- ஒரு பார்வை

சென்ற மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் எனப் பெருமை பெற்றார் அனில் கும்ப்ளே.

( ஜன்பத் ), 1/1/2007


நீ நான் தாமிரபரணி (51)

தாமிராவின் கேள்வி தாராவை நிலைகுலைய வைத்தது. என்ன சொல்வது என்று அவள் தடுமாறுவதற்குள் ஈஸ்வரன் மருமகளைப் பார்த்து எரிச்சலுடன் சொன்னார். "அந்த விஞ்ஞானியைப் பத்திக் கேட்டு கேட்டு எனக்குக் காது புளிச்சுடுச்சு. உங்கம்மா கிட்டயும் அந்த ராமாயணத்தை ஆரம்பிச்சுடாதே".

( என்.கணேசன் ), 1/1/2007


எது நல்ல கதை என்று இவர்களிடம் கேட்டால்.....

குடிகாரர்: "என்னதான் கதை அப்படி இப்படி போனாலும் அதன் மெயின் தீம் ஸ்டெடியா நிக்கணும்"

( மெலட்டூர்.இரா.நடராஜன் ), 1/1/2007


ஜோதிடம் கேளுங்கள்

வெளிநாட்டுப் பயண வாய்ப்பு இன்னும் 9 மாதம் சென்ற பின்பு தங்களைத் தேடி வரும். அதைப் பயன்படுத்தி நல்ல வெளிநாட்டு உத்யோகத்தில் சேர்ந்து விடுவீர்கள். தற்பொழுது சொந்தத் தொழிலுக்கு முயற்சி செய்யாமல் வேறு ஒரு இடத்தில் வேலைக்கு அமர முயற்சி செய்யுங்கள்.

( குருஜி கார்த்திகா சித்தார்த் ), 1/1/2007


நாயகன் ஒரு நங்கை (23)

"கேன்ஸர் இன்ஸ்டிட்யூட் கிட்ட, ராங் சைட்ல வந்தா. கார் மோதி, சைக்கிள் அவமேல விழுந்துருத்து! அவ பேக்ல ஐஐடி அட்மிஷன் கார்ட் பார்த்து, இங்க கூட்டிண்டு வந்தேன். அடிப்பட்டப்ப கூட நல்லா தான் இருந்தா. கார்ல தான் மயங்கிட்டா போல" மூச்சு வாங்கிக்கொண்டே சொன்னாள்.

( நரேன் ), 1/1/2007


கவிதை கேளுங்கள்

ஊரோர ஆலமரம் வேலியோரத்துக் கள்ளிகள் பள்ளிக்கழிப்பறை அரசாங்கப் பேருந்த நான் சுவாசித்துவிடும் காற்று எல்லாவற்றிலும் எழுதியிருக்கிறேன் நம் காதலை!

( சிலம்பூர் யுகா ), 1/1/2007


வண்டு

'சாப்ட்வேர் கம்பெனியின் பணிமனை, செயற்கையின் சொர்க்கமாக இருந்தது. வரவேற்பறையில் நுழைந்து கொண்டிருந்த நித்யா சிநேகிதியின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

( P.நடராஜ‎ன் ), 1/1/2007


இராசி பலன்கள் 1-7-2007 முதல் 7-7-2007 வரை

சிம்மராசி அன்பர்களே கேது நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயங்களில் கவனம் தேவை.பொதுத் தொண்டுகளில் பிரியமுடன் சென்று பணியாற்ற வாய்ப்புள்ளது. அந்நிய நாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

( டாக்டர் ப. இசக்கி ), 1/1/2007


பரிச்சயம்

நான் தேடியோடி வரவழைத்துக்கொள்ளும் தனிமையிலா? தங்காமல் ஒடிவிடும் கனவுத் துளிகளிலா? தேங்கும் மழையிலோ? காலத்திலோ? இல்லை பூசணி சிரிக்கும் புள்ளிக் கோலத்திலா?

( லேனா.பழ ), 1/1/2007


காவிய நாயகன் நேதாஜி (31)

தமது பரமார்த்த சிஷ்யன் என்று நினைத்துக் கொண்டிருந்த ஜவஹர்லால் இப்படி அதி தீவிரமாகப் போவது காந்திஜிக்குப் பிடிக்கவில்லை. தமது மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி ஜனவரி 4,1928 ல் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி ), 1/1/2007


மடப்பள்ளி

''மீனாட்சி! ஏழு மணிக்கு அம்பாளுக்கு அர்ச்சனை, மச மச மசன்னு நிக்காம நைவேத்ய வேலையப் பாரு. ஆறரைக்கு புளியஞ்சாதமும், சக்கரப் பொங்கலும் ரெடியா இருக்கணும்'', சிவபால குருக்கள் கட்டளையிட்டுவிட்டுப் போனார்.

( திரு ), 1/1/2007


கடவுள் கேட்காத ஒன்பது விஷயங்கள்

நீ எவ்வகையான காரை ஓட்டுகிறாய் என்று கடவுள் கேட்க மாட்டார்; வாகனமில்லாத எவ்வளவு பேரை நீ ஏற்றிக்கொண்டு சென்றாய் என அவர் கேட்பார்.

( ஆ.கி. இராஜகோபாலன் ), 1/1/2007


NEW YEAR MESSAGE FROM BABA

Whatever God does is for your good; God Cares; God Cares Only; Only God Cares. Happy 2007 to all of you; Happiness always, in all ways!

( N C Sangeethaa ), 1/1/2007


அதீதாவுக்கு.. மடல் - 20

ம்! ஏண்டி இப்போ கொட்டாவி விடுறே? ரொம்ப சீரியஸா போயிட்டேனோ! ஸாரிடி! இனிமே இப்பிடி படுத்தமாட்டேன். உனக்கு தலையே வெடிச்சுடும்போல் ஆயிருக்குமே இப்ப. தலை பயங்கரமா வலிக்குதில்லே? அடடா, எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு! என்ன செய்யிறது, என் பேச்சைக் கேட்க யாருமில்லையடி பெண்ணே, உன்னைத்தவிர?

( நட்சத்ரன் ), 1/1/2007