Tuesday, March 27, 2007

சாரல் 305

சாரல் : 305 பொழிந்தது : மார்ச் 26, 2007

உலகக்கோப்பை 2007 "சாதனைகள் வேதனைகள்"

இந்திய அணியினர் வங்க தேசத்திடம் தோல்வியடைந்தது. 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?' என்பது போல் அலட்சியப்போக்குக் காட்டியதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். வங்க தேசத்தைப் பற்றித் தப்புக்கணக்குப் போட முடியாது. அதனால்தான் இந்த வங்க தேசம் இடம் பெற்றுள்ள அணியை Death trap என்பார்கள். எதிர்பாராத சந்தர்ப்பங்களில் எதிர் அணியை வீழ்த்திவிடும். ஆனாலும் டாசை வென்ற பிறகு பீல்டிங் செய்வதற்குப் பதிலாக பேட்டிங் தேர்ந்தெடுத்ததுதான் தோல்விக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

( டி.எஸ்.பத்மநாபன் )

காவிய நாயகன் நேதாஜி (43)

காங்கிரஸ் தலைவர்களின் தனிப் பெரும் தலைவராக மதிக்கப்பட்ட காந்திஜியின் விருப்பத்தையும் மீறித் தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் ஓர் அறிக்கை விடுத்தார். அதில் அவர், தேர்தலோடு கருத்து வேற்றுமைகள் அனைத்தும் புதைக்கப்பட்டு விட்டன, காங்கிரசுக்குள் பிளவு ஏற்படும் என்று நினைத்து சில காங்கிரஸ்காரர்கள் மகிழ்கிறார்கள், அவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

பிரமிக்க வைக்கும் கின்னஸ் உலக சாதனைகள்!

சில வாரம் முடங்கிக் கிடந்த ஏ.எக்ஸ்.என் ('AXN') சேனல் மீண்டும் செயல்படத் துவங்கி விட்டது. இதில் அனைவரும் விரும்பிப் பார்க்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் அல்டிமேட் கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட்ஸ் பிரமிக்க வைக்கும் நிகழ்ச்சியாகும்! (செவ்வாய்க்கிழமை தோறும் Guinness World records புதன்கிழமை தோறும் Ultimate Guinness World records )

( ச.நாகராஜன் )

சர்தார் தி கிரேட்! (3)

நண்பர் : ஏன் மானிட்டரை துணியைவச்சு அடிக்கடி துடைச்சிக்கிட்டு இருக்கே? சர்தார் : என்னோட டாஸ் வெர்சன்ல "க்ளியர்" கமாண்டு வொர்க் ஆக மாட்டேங்குது.

( ரிஷிகுமார் )

மனசே சுகமா? (6)

கையில் ஒரு நாணயத்தை எடுங்கள். அதனை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொள்ளுங்கள். பின் அந்த நாணயம் சூடாக இருக்கிறது என எண்ணுங்கள். திரும்பத் திரும்ப அதே சிந்தனையை மனதில் ஓட விடுங்கள். அந்த நாணயத்தை வைத்திருக்கும் கை நெகிழ்வதைக் கவனியுங்கள். சற்று நேரத்தில் அந்த நாணயத்தை நீங்களாகவே கீழே வைத்துவிடுவீர்கள். இதுதான் எண்ணங்களின் வலிமை.

( நிலா )

Maayakannaadi – Music Review

Maestro has come up with this song on Cheran’s request of a song with "basic love feel". A typical Raja styled melody, beautifully rendered by Shreya and Karthik. This is the first song of Pa.Vijay in Raja's music and he has come up with lyrics praising the mobile phone for connecting people in love. De ja vu feeling of many recent Raja songs is unavoidable.

( Vignesh Ram )

'வர்த்தகமல்ல கல்வி'

"எனது பெற்றோர்கள் என்னைப் படிக்க வைக்கத் தயங்கினார்கள். மற்ற பள்ளிகளில் ரூபாய் நூறோ இருநூறோதான் உதவித் தொகையாக வழங்குவதாகச் சொன்னார்கள். ஆனால் சுஷீல் ஹரியில் எனக்கு இலவசக் கல்வியோடு இருக்க இடமும் உணவும், ஏன் சீருடை முதற்கொண்டு தந்து உதவுகிறார்கள். இந்த உதவித் திட்டத்தினால்தான் என்னால் மேலே படிக்க முடிகிறது" என்கிறார் பதினோராவது வகுப்பு படிக்கும் பனிப்பாவை. இவர் போல உதவித் தொகை பெறும் பல கிராமப்புற மாணவர்கள் இப்பள்ளியில் உண்டு.

( நிலா )

காலிஃப்ளவர் தண்டு சூப்

காலி ஃப்ளவரின் சுற்றியுள்ள இலையையும், தண்டுப்பகுதியையும் நன்றாகக் கழுவிய பின்னர் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு குக்கர் பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய இலை,தண்டுப்பகுதியுடன் , அரிசி களைந்த நீர், நறுக்கிய தக்காளித் துண்டுகள், துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கிய பூண்டு துண்டுகள், நறுக்கிய வெங்காயம், மிளகு, ஜீரகம்,உப்பு, சர்க்கரை சேர்த்துத் தேவையான நீர் ஊற்றி , மேல் தட்டில் பொடியாக நறுக்கிய காய்கறித்துண்டுகளைச் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

( பிரேமா சுரேந்திரநாத் )

செய்தித் துளிகள்

தாராபாய் பூனேயைச் சேர்ந்த 40 வயதுப் பெண்மணி. இவர் சமைக்கும்போது குக்கர் வெடித்து அதன் ஏழு அங்குலக் கைப்பிடி அவர் கண்களைத் துளைத்து, மண்டைக்குள் புகுந்து, மூளையைக் கடந்து சென்றது. இவர் நாலு நாட்கள் கோமாவில் இருந்தபிறகு இப்போது சுயநினைவோடு தேறி வருகிறார் என்றால் இதைவிட அதிசயம் என்ன இருக்க முடியும்?

( ஜ. ப .ர )

வெண்மைப் பொய்

அனிச்சையாய் தீபிகாவிடம் திரும்பியவர், அவள் முகத்தில் தெரிந்த பரவசத்தைக் கண்டதும் யோசனையிலாழ்ந்தார். அவர் உற்றுப் பார்ப்பதை உணர்ந்து கண்விழித்த தீபிகா ஆதரவாய்ப் புன்னகைத்து, "பயப்படாதீங்கப்பா... வாமனன் சுவாமி கடவுளின் அவதாரம். அவர் என்னைக் கண்டிப்பா காப்பாத்துவார்" என்றாள். வெளிறிய முகத்தில் கண்கள் நம்பிக்கையோடு மின்னின.

( நிலா )

நீ நான் தாமிரபரணி (63)

தன் தாயிற்கு நன்றாக வரைய வரும் என்று நேற்று தெரிந்து கொண்டதை அவள் சொன்ன போது அவள் உணர்ச்சிவசப்பட்டாள். "...ஒரு நிமிஷம் அம்மா தான் தேவியாய் இருக்கலாம்னு தோணுது....இன்னொரு நிமிஷம் இருக்க முடியாதுன்னு தோணுது.... இப்படி மாறி மாறி சந்தேகம் வர்றது பெரிய சித்திரவதையாக இருக்கு அருண். இந்தப் புதிரை எல்லாம் விடுவிக்காம நாம் திரும்பக் கூடாது"

( என்.கணேசன் )

His Name is Siva Shankar..(240)

A Mahaan has come to coach. So he must be among the masses, swimming along until such time the seekers learn to swim. And then he must wait by the banks as his disciples swim along in the confidence that their Master is with them. Gradually the seekers learn swimming against the current with or without their Master’s physical presence.

( N C Sangeethaa )

பறக்கும் தட்டுகளும் பிறக்கும் கேள்விகளும் (4)

UFO வின் பெரிய ஆதரவாளரான ஹைனிக் என்பவரே ஊடகங்களில் வரும் செய்திகளைப் பற்றிக் குறை கூறியிருக்கிறார். பத்திரிக்கைகள் வியாபார நோக்கத்தோடு வதந்திகளையும் இல்லாதவற்றையும் மிகைப்படுத்தி மக்களைக் கவரவேண்டும் , பத்திரிக்கை அமோகமாக விற்கவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றன. அமெரிக்கர்கள் UFO வை நம்புகிறார்கள் என்பது UFO ஆதரவாளர்களுக்குக் கிடைத்தவெற்றியல்ல- பத்திரிக்கைகளின் வியாபாரத் தந்திரங்களுக்குக் கிடைத்த வெற்றிதான்.

( டி.எஸ்.பத்மநாபன் )

கண்ணுறங்கு

தழையுறங்கத் தரையுறங்க
தாமரைப்பூவும் தானுறங்க
தங்கமே நீ
கண்ணுறங்கு!

கல்லுறங்கக் கரையுறங்க
காத்துங்கூடக் கண்ணுறங்க
காவியமே நீ
கண்ணுறங்கு!

( கவிதா )

பாடம்

" கணேஷ் வேலைக்கு வந்தப்ப நீங்க சொன்ன மாதிரி எஸ்எஸ்எல்சி தான். ஒரு பெண்ணை லவ் பண்ணான்.. நேரே போய் தன்னோட லவ்வை சொன்னப்ப அவங்க இவன் படிப்பு பத்திச் சொல்லி உனக்கெல்லாம் எதுக்கு லவ்வுன்னு கேலி பண்ணிட்டாங்க. அப்ப முடிவு பண்ணியிருக்கான். தன்னோட ஓய்வு நேரத்தை வீணாக்காம கரெஸ்பாண்டென்ஸ்ல படிக்க ஆரம்பிச்சான்.

( ரிஷபன் )

ஜோதிடம் கேளுங்கள்

தங்களின் ஜாதகத்தை ஆராய்ந்தோம். புரட்டாதி நட்சத்திரம் மீன ராஸி விருச்சிக லக்னம் உடைய தங்களுக்கு தற்பொழது புதன் தசை நடந்து வருகிறது. 26 வயது நிறைவு பெற்ற தங்களின் ஜாதகத்தில் களத்திராதிபதி 8-இல் மறைந்து விட்டார். ஏனவே பிரிந்தவரை நினைத்து வருந்திக்கொண்டிருக்க வேண்டாம். உங்களை மறந்த அவரை நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது நியாயம் இல்லை. நல்ல மணவாழ்க்கை உடைய தங்களின் ஜாதகம் எதிர்காலத்தில் நன்றாகவே இருக்கும். கவலைப்பட வேண்டாம்.

( குருஜி கார்த்திகா சித்தார்த் )

இராசி பலன்கள் 19-3-2007 முதல 25-3-2007 வரை

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, வியாழன், ராகு, நன்மை தரும் கிரஹங்களாகும். பிள்ளைகயளால் இருந்து வந்த தொல்லைகள் தீரும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவு உண்டாகும். மனைவி அல்லது மனைவி வழிச் சொந்தங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடம்பில் முதுகு, மற்றும் மார்பு சம்பந்தமான வலிகள் வந்து போகும். தந்தை மகன் உறவில் விரிசல் காணப்படும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

( டாக்டர் ப. இசக்கி )

கவிதைகள்

இத்தனை நாள்
வெள்ளைதான் அழகென்று
நினைத்த நீ கூட
இன்றென்னாட்டு பெண்கள்
கண்மணி நிறம் பார்த்து
கருத்தம்மா ஆனாய்
நிலவே!

அழகு ஓவியம்

அழகு ஓவியம்

( முத்துக்குமார் )

நானென்றும் நீயென்றும் (59)

அதுவும் மருத்துவ மனையில் அவளை அணைத்துக் கொண்டு படுத்த பிறகு. ஆசையாய் உதட்டில் முத்தமிட்டாகிவிட்டது. ஒரு முறை இல்லை. இரு முறை. தன்னை அறியாமல் அவன் விரல்களால் அவன் உதட்டைத் தொட்டுப் பார்த்தன. எத்தனை மென்மையாய், நனைந்த பஞ்சு போன்ற உதடுகள் பூஜாவிற்கு. அவள் அவன் கன்னத்தில் முத்தமிட்ட இடத்தில் இன்னும் ஈரம் காயாதது போல ஒரு உணர்வு. கன்னத்தைத் துடைக்க கையைத் தூக்கினான்.

( சுகந்தி )

கவிதைகள்

தெரியாதது என்பது தெரியாததே
தெரியாததைத் தெரிந்தது போல்
யூகம் செய்யத்
தெரிந்தது என ஒன்று வேண்டும்
எனவே நீ
கற்பனை செய்திருக்கும்
அந்தத் தெரியாதது
ஏற்கனவே உனக்கு
நன்கு தெரிந்ததே

( சரண் )

Wednesday, March 21, 2007

சாரல் 304

சாரல் : 304 பொழிந்தது : மார்ச் 19, 2007

மாலை சூடும் மணநாள்

இண்டர்நேஷனல் லெவலில் யாரும் கிடைக்காததால், நேஷனல் லெவலில் சீதையும், ரீஜினல் லெவலில் கண்ணகியும், ஏகபத்தினி விரதத்தை மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்ட இராமனும் நமக்கு முன் மாதிரிகள். "கற்பின் பெருமையை" இடையறாது போதிக்கும் நமது நாடுதான் உயிக்கொல்லி நோயான எய்ட்ஸில் முன்னால் நிற்கிறது.

( கு.சித்ரா )


உலகக்கோப்பை 2007

இந்தியா ஜிம்பாப்வேயுடன் ஆடிய போட்டி கிரிக்கெட் சரித்திரத்தில் மறக்க முடியாத ஒன்று. ஒரு நேரத்தில் இந்தியா ஜிம்பாப்வேயின் பந்து வீச்சுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் 17 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்துத் தள்ளாடியது. ஆனால் அதிரடியாக, கபில்தேவ் களமிறங்கி ஆட்டமிழக்காமல் 175 ஒட்டங்களைக் குவித்து இறுதியில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 266 ஓட்டங்கள் என்ற நிலைக்கு உயர்த்தினார். அதில் 16 பவுண்டரிகளும் ஆறு சிக்சர்களும் அடக்கம்.

( டி.எஸ்.பத்மநாபன் )

Priya Mani

* Her father owns an automobile factory and mother was an assistant manager in UBI * Belongs to an Palakkad Iyer family * Spoke her own dialogues in Paruthiveeran * Never wore make-up for the films Paruthiveeran and Adu oru kanakalam * Bharathiraja refused to change her name.

( PS )

அழகழகாய்க் கேள்விகள்

ஃபேஷியல் செய்யும் முறை: முதலில் க்ளன்சிங் மில்க் (cleansing milk) கொண்டு முகத்தில் உள்ள அழுக்கை நீக்குங்கள். பின்பு, பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது தக்காளி அல்லது அவ்கோடா பழம் போன்ற பழவகைகளைக் கொண்டு முகத்தை 20-25 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். ஃபேஷியல் மஸாஜ் எப்பொழுதும் மேல் நோக்கியே இருக்க வேண்டும்

( நிலாரசிகை )

காவிய நாயகன் நேதாஜி (42)

தலைவர் தேர்தலில் சுபாஷ் போஸ் வெற்றி பெற்றார். அவருக்குக் கிடைத்த வாக்குகள் 1580. பட்டாபி சீதாராமையா பெற்ற வாக்குகள்:1375. தேர்தல் முடிந்த இரு தினங்களில், "என் தோல்வியில் களிக்கிறேன்!" என்ற தலைப்பில் காந்திஜி ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் சொன்னது: "சுபாஷ் போஸ் தமது எதிர்ப்பு வேட்பாளர் பட்டாபி சீதாராமையாவை வென்றுள்ளார். ஆரம்ப முதலே, சுபாஷ் போஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்று நான் எதிர்த்து வந்திருக்கிறேன். அதற்கான காரணங்களை நான் இப்போது சொல்ல வேண்டியதில்லை.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

சர்தார் தி கிரேட்! (2)

வேலைக்கான விண்ணப்பம் ஒன்றை வாங்கி நிரப்பிக் கொண்டிருந்தார் சர்தார்ஜி. பெயர், வயது, முகவரி உள்பட அனைத்துக் கட்டங்களையும் விரைவாக நிரப்பிய அவர், சம்பள எதிர்பார்ப்பு என்னும் கட்டத்தில் எதை எழுதுவது எனக் குழம்பிப்போனார். தீவிர யோசனைக்குப் பின் எழுதினார் : "சம்பளம் வேண்டும்"

( ரிஷிகுமார் )

செய்தித் துளிகள்

கே.எஸ். நாகலட்சுமி (83 வயது) தன்னலமில்லாத சேவையாக இந்தப் பள்ளியை நடத்தி வருகிறார். இங்கு காந்தீயக் கொள்கைகள் இன்னும் உயிர் பெற்றுள்ளன. இங்குள்ள ஆசிரியைகள் கதர்ப் புடைவைதான் கட்டுகிறார்கள். இந்தப் பள்ளியை வாங்குவதற்காகத் தனது சொந்தக்காரர்களிடமிருந்தும் தன் நிலங்களை விற்றும் பணம் புரட்டியிருக்கிறார்.

( ஜ.ப.ர. )

நான் ரசித்த பாடல் (11)

இனிமையான வீணையிசையுடன் துவங்கி மற்ற தென்னிந்திய இசைக் கருவிகளின் பின்னணியில் சீராக ஒலிக்கும் இப்பாடலுக்கு திரு.யேசுதாஸ் அவர்களின் பண்பட்ட குரலும், இளைய ராஜா அவர்களின் அருமையான இசை அமைப்பும் கவிஞரின் கற்பனை வளத்திற்குப் பெருமை சேர்க்கும் முறையில் அமைந்துள்ளது. 'ஈரைந்து மாதங்கள் கருவோடு சுமந்த' தாயின் கடனை ஈரேழு ஜன்மங்கள் எடுத்தாலும் தீர்க்க இயலாது' என்பது சத்திய வாக்கு.

( பிரேமா சுரேந்திரநாத் )

பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட், ஜாலிவுட்

நவராத்திரியில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்தது பிரபலமாகியது. ஆனால் அதற்கு முன்பே சுலோசனா என்ற நடிகை பம்பாய் கி பில்லி (பம்பாயின் பூனை) என்ற படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்திருக்கிறார்.

( ஜன்பத் )

தோல்விகளைத் தோரணங்களாக்கி...

"பாலத்துல யாரோ விஷமிகள்.. தண்டவாளத்தைச் சேதப்படுத்திட்டாங்க. தற்செயலாத் தகவல் தெரிஞ்சு ஓடினேன்.. எக்ஸ்பிரஸ்ஸை நிறுத்தி அத்தனை பேரையும் காப்பாத்தியாச்சு. ஆனா நான் பிடி தவறிக் கீழே விழுந்துட்டேன். ரெயில்வேல இருக்கேன்பா.. பிழைச்சது புனர்ஜென்மம்.. இன்னிக்கு என் இரண்டு பசங்களும் நல்ல நிலைமைல இருக்காங்க. எனக்கு ஆபீஸ்ல டூட்டி போட்டாங்க.. இதோ பார்" வேட்டியை விலக்கிக் காட்டினார். இரு கால்களும் செயற்கை.

( ரிஷபன் )

His Name is Siva Shankar..(239)

Why is it such a determination that one has in matters of war is not forthcoming in service to the society? There is none to risk his life for establishment of Dharma. What is our contribution to world progress? Why are you not prepared to give up everything you have for doing good to society? You must become a soldier in some form in the establishment of Dharma.

( N C Sangeethaa )

நானென்றும் நீயென்றும் (58)

ஊன்று கோலை ஊன்றி விந்தி ட்ராவிஸின் தாயாரைச் சந்திக்க சென்று கொண்டிருந்தாள் பூஜா. அவர் தன்னை எப்படி எதிர் கொள்வார் என்ற பயமும் தயக்கமும் அவள் வயிற்றைக் கலக்கின. ஏற்கனவே வாண்டாவிடமும் அவினாஷிடமும் அடி பட்டவளாயிற்றே. தயக்கமாகவே சென்று அவருடைய கதவைத் தட்டினாள்.

( சுகந்தி )

நீ நான் தாமிரபரணி (62)

"இது நம்ம குடும்பம் சம்பந்தப்படற விஷயம்னு ஆன பிறகு நானும் நேரில் வராட்டி என் மண்டை வெடிச்சுடும். அதனால் நான் வர்றேன்" என்று உறுதியாகச் சொல்லி அவன் மேற்கொண்டு மறுப்பு சொல்லாதபடி முற்றுப் புள்ளி வைத்தாள். தன்னுடைய காரையே எடுத்துக் கொண்டு வருவதாக சொன்னாள். இருவரும் மாற்றி மாற்றி ஓட்டினால் களைப்பு தெரியாதென சொன்னாள். பழகிய சில நாட்களிலேயே அவள் தைரியமாக தொலைதூரப் பயணத்திற்கு தன்னுடன் தனியாக வர தீர்மானம் செய்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

( என்.கணேசன் )

இராசி பலன்கள் 19-3-2007 முதல் 25-3-2007 வரை

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, வியாழன், ராகு, நன்மை தரும் கிரஹங்களாகும். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் தீரும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவு உண்டாகும். மனைவி அல்லது மனைவி வழிச் சொந்தங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடம்பில் முதுகு, மற்றும் மார்பு சம்பந்தமான வலிகள் வந்து போகும். தந்தை மகன் உறவில் விரிசல் காணப்படும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள்.

( டாக்டர் ப. இசக்கி )

பறக்கும் தட்டுகளும் பிறக்கும் கேள்விகளும் (3)

1970 ஆண்டிற்குப் பிறகு இந்த அன்னியர்களை இயற்கையை மீறிய சக்தி (supernatural power) மற்றும் டெலிபதி போன்ற உளவியல் அறிந்தவர்களாகவும் உருவகப்படுத்தினர். 70களில் வந்த புத்தகங்களில் பல இந்தப் புதிய யுகத்தையும் வெளி கிரகவாசிகளான அன்னியர்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. கடவுளின் ரதங்கள் (Chariot of the Gods) என்ற புத்தகம் வெளியுலகக் கிரகங்கள் பல நூற்றாண்டுகளாகவே பூமிக்கு வந்திருக்கின்றன எனப் பல உதாரணங்களுடனும் அடையாளம் காணப்படாத பொருட்களின் படங்களைக் கொண்டும் விவரித்தது

( டி.எஸ்.பத்மநாபன் )

பகிர்வு

காலூன்ற முடியா வயதில்
தத்தித் தாவும் அணில்
மனக் கதறல்கள்...

பார்வை
உணவு
பரிசம்
தினவு
தொட்டும் தொடாத கூந்தல்
படுகையில் கபளீகரம் செய்யும் சாகச இரவுகள்...

( ராசி அழகப்பன் )

காதல் தியாகி. . . .

உன் பக்கமாகவே
திரும்பிய பார்வையைக்
கட்டுப்படுத்தி திரும்பி நின்றேன்
எதிர்ப்பக்கமாய். . .

உன் பெயர் தெரிந்தும்
"எக்ஸ்கியூஸ் மி" என்று நீ
பேசுகையில்
பிரிந்தேன் அவசரமாக . . .

( கு.திவ்யப்பிரபா )

இரவல்

மணமக்களுக்குப் பரிசு கொடுத்துவிட்டு மேடையில் இருந்து இறங்கும் போது மின்சாரம் போய் அடுத்த நிமிடம் ஜெனரேட்டர் மூலம் வந்து விட்டது. அதற்குள் யாரோ அவள் கழுத்தில் இருந்த நகையைத் திருடி விட்டார்கள். மீனாட்சிக்குத் தலையில் இடி இறங்கியது போல் ஆனது. பங்கஜத்திடம் ஓடி வந்து கதறினாள். பங்கஜம் அன்று திட்டமிட்டே போலி நகையைக் கொடுத்ததோடு இரண்டு திருடர்களையும் ஏற்பாடு செய்து நகையைத் திருடச் செய்தாள் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. மீனாட்சியை வலையில் சிக்கிய மீன் போல் ஆக்கி விட்டாள்.

( P.நடராஜன் )

டிஸ்மிஸ்

'இன்று காலை முதல் எவ்வளவு கதை படித்தாய்? எவ்வளவு ஜோக்குகள் படித்தாய்? அதைப்பற்றி உண்மையான விபரங்கள் கூறவும்' என மிரட்டினார். விசாரணையின் முடிவில், புதிதாக வேலைக்குச் சேர்ந்த ரவிகுமார் மட்டும், காலை முதல் எந்த ஒரு கதையோ, கட்டுரையோ, ஜோக்குகளோ படிக்கவில்லை என்ற உண்மை மேனேஜருக்குப் புலப்பட்டது.

( வை.கோபாலகிருஷ்ணன் )

Wednesday, March 14, 2007

சாரல் 303

சாரல் : 303 பொழிந்தது : மார்ச் 12, 2007

ஜோதிடம் கேளுங்கள்

நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவரை நான் திருமணம் செய்துகொள்வேனா? எனக்கு நல்ல பதில் தாருங்கள். எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?. எனது தெய்வம் என்ன? மறுபிறவி ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

( குருஜி கார்த்திகா சித்தார்த் )

அன்றாடக் கவலைகளைத் தூளாக்கி ஆன்மீக சிகரத்தில் ஏற்றும் பாரத ஸாவித்ரியும் அரவிந்த ஸாவித்ரியும்

பாரத ஸாவித்ரீ எனப்படும் இந்த நான்கு சுலோகங்கள் சுவர்க்காரோஹண பர்வத்தில் ஐந்தாவது அத்தியாயத்தில் வருகின்றன. ஸவித்ரு தேவதையைக் குறிக்கும் ஸாவித்ரியை தினசரி சந்தியாவந்தனத்தில் துதிப்பது மரபு.அந்த ஸாவித்ரியை தினமும் துதிப்பது போல இந்த பாரத ஸாவித்ரியையும் தினமும் காலையில் எவன் படிக்கிறானோ அவன் மகாபாரதம் முழுவதும் படித்த பயனை அடைவதோடு பரப்ரஹ்மத்தையும் அடைவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. (இமாம் பாரத ஸாவித்ரீம் ப்ராதருத்தாய யஹ படேத், ஆஸ பாரத பலம் ப்ராப்ய பரம் ப்ரஹ்மாதி கச்சதி)

( ச.நாகராஜன் )

அரசியல் அலசல்

உச்ச நீதி மன்றத்தின் நீதிபதி தனது உரை ஒன்றில் இங்கு அங்கு எனாதபடி பரவி இருக்கும் லஞ்சத்தைப் பற்றிக் கவலை தெரிவித்து அதை ஒழிப்பதற்கு லஞ்சக் குற்றம் புரிந்தவர்களை, சட்டம் அனுமதிக்காவிட்டால் கூட விளக்குக் கம்பத்தில் தூக்கிலிட வேண்டுமெனக் கூறியிருக்கிறார். நாட்டில் உள்ள விளக்குக் கம்பங்கள் போதுமா என்று கவலை தெரிவிக்கிறார் பாமரன். அப்படித் தொங்கவிட்டால் நமது அரசியல்வாதிகளுக்குப் பஞ்சம் எற்பட்டு விடுமே என்பது இன்னொரு கவலை.

( ஜ.ப.ர. )

மனசே சுகமா? (4)

குழந்தையாக இருக்கும்போது எல்லாரும் ஒரே போல்தானே இருக்கிறோம் - பசியென்றால் வெட்கப்படாமல் அழுது தேவையானதைப் பெறுகிறோம்; பொம்மையைப் பார்த்தால் மெய்மறந்து சிரிக்கிறோம். வாழ்க்கையில் சோகமென்று ஒன்றுமில்லை. ஆனால் வளர வளர அடுத்தவர்களின் கருத்துக்கள் நமக்குள் புகுந்து தேவையில்லாத தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்திவிடுகின்றன.

( நிலா )

உலகக்கோப்பை 2007

இங்கிலாந்து இந்தியாவுக்கிடையே நடந்த போட்டிதான் முதல் உலககோப்பைப் பந்தயம். இங்கிலாந்து முதலில் விளையாடி அறுபது ஓவர்களில் 332 ரன்களைக் குவித்தது. இந்தியாவோ என்ன செய்வது, எப்படி விளையாடுவது என்று புரியாமல் தட்டுத் தடுமாறியது. இறுதியாக 60 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களே எடுத்தது. இந்தப் போட்டியில் தான் கவாஸ்கர் தொடக்க ஆட்டக்காரராகக் களத்தில் இறங்கி 60 ஒவர்களும் ஆடி அவுட்டாகாமல் 36 ரன்கள் எடுத்த பரிதாபம் நிகழ்ந்தது.

( டி.எஸ்.பத்மநாபன் )

செய்திகள் அலசல்

அமெரிக்காவின் நெவேடா மாநிலத்தின் சட்டசபைப் பேரவை (1864க்குப் பின்) 143 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக அதன் துவக்க நாளில் ஒரு இந்திய (இந்து) பிரார்த்தனையுடன் துவங்க இருக்கிறது. ரிக் வேதத்திலிருந்து ஒரு சுலோகத்துடன் இந்தப் பிரார்த்தனையைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். நம்மவர்களுக்குப் புரிந்தால் சரி.

( ஜ.ப.ர. )

His Name is Siva Shankar..(238)

Love is a living energy, a live vibration. What you expect from others, is very much within you. When you express your love, the recipient will be motivated to reciprocate, It is a mirror image concept, but it must be a genuine and sincere expression of what you feel.

( N C Sangeethaa )

வலைத் தளம்

நுனி நாக்கு மொழியில்
யதார்த்தம்
அன்னியப்பட்டு
மௌனம் காக்கிறது.

தகவல் பரிமாற்றம்
வரப்புகளின் நுனிப்புல் சுகத்தை
ஸ்கேன் செய்து விற்கிறது.

( ராசி அழகப்பன் )

நீ நான் தாமிரபரணி (61)

"அந்த லாஜிக் சரியாய் இருந்தால், அந்த விஞ்ஞானி கதைப்படியே செத்திருக்கணும் அருண். ஏன்னா என் மாமா அவரோட தங்கையோட சந்தோஷத்துக்காக எதையும் செய்யக் கூடிய ஆள். அவரால் தன் தங்கைக்கு அந்த விஞ்ஞானியைக் கல்யாணம் செய்து கொடுக்க முடியாமல் போகணும்னா அந்த மனிதர் செத்துப் போயிருந்திருக்கணும். வேற எந்தக் காரணமும் என் மாமாவைப் பின் வாங்க வச்சிருக்க முடியாது"

( என்.கணேசன் )

காவிய நாயகன் நேதாஜி (41)

ஜனவரி 28 ஹரிஜன் இதழில் "உள்ளூரச் சீரழிவு" என்ற தலைப்பில் காந்திஜி எழுதியதன் சாராம்சம்: "காங்கிரஸ்காரர்களிடையே ஊழல் மலிந்து விட்டது. ஆள் மாறாட்டம், போலி உறுப்பினர் சேர்க்கை இவை ஏகப்பட்ட அளவில் பெருகியுள்ளன. தேர்தல்களில், சச்சரவுகள் மிகுந்து விட்டன. காங்கிரஸ்காரர்களிடையே ஒழுங்கீனம் அதிகம் ஆகிவிட்டது. இந்தச் சீரழிவைத் தடுத்து நிறுத்துவதே நம் முன்னுள்ள முக்கிய கடமை.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

சாதுர்யம்

"பறவைகளாகிய நீங்களும் மிருகங்களாகிய நாங்களும் இப்பொழுது நண்பர்கள் ஆகி விட்டோம். அதனால், இப்போது நாங்கள் சைவமாகி மாமிசம் சாப்பிடுவதையே விட்டு விட்டோம். கீழே இறங்கி வாங்க விளையாடலாம். அந்த புதருக்குப் பக்கத்தில் ஓடிப் பிடித்து ஒளிந்து விளையாட நிறைய இடம் இருக்கு." நரியின் பேச்சைக் கேட்ட குஞ்சுகள் தங்களுக்குள் பேசிக் கொண்டன. அவைகளுக்கும் விளையாட ஆசைதான். திரும்பி வரும் வரை எங்கும் போகக் கூடாது என்று அம்மா சொல்லி இருந்ததால் கீழே வர தயக்கம் காட்டின

( P.நடராஜ‎ன் )

சினி வம்பு

செல்வராகவன் தயாரித்து ஜவஹர் டைரக்ட் செய்யும் படத்தில் தனுஷ் நயன்தாராதான் நாயகியாக நடிக்க வேண்டும் என்று சொல்கிறாராம். பகைவனுக்குப் பகைவன் நண்பன் என்ற விதிதான். சிம்பு வந்த வம்பை விடுவாரா? தன்னுடைய படத்தில் தனுஷுக்கு எதிரான பஞ்ச் வசனங்களை வைத்திருக்கிறாராம்.

( ஜன்பத் )

Mozhi – Music Review

Melody lovers can give a standing ovation to Vidyasagar for this musical treat, which is soothing to listen. Hats off to Radhamohan-Prakashraj-vairamuthu team, whose hard work and involvement is obvious in each and every song.

( Vignesh Ram )

இராசி பலன்கள் 12-3-2007 முதல் 18-3-2007 வரை

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். செய்யாத குற்றங்களுக்காகப் பழிச்சொல் ஏற்படலாம். எனவே புதிய நண்பர்கள் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களும், பரிசும், பாராட்டுதல்களும் பெறுவார்கள். அழகுசாதனப் பொருட்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், பொதுநலத் தொண்டு நிறுவனத்தார்கள் நற்பலனடைவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தூரத்து நற்செய்திகள் கேட்பீர்கள். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தனவரவு உண்டாகலாம். காதல் விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.

( டாக்டர் ப. இசக்கி )

பறக்கும் தட்டுகளும் பிறக்கும் கேள்விகளும் (2)

ஒரு தட்டைத் தண்ணீரில் வேகமாகவிட்டால் அது எப்படித் தாவித்தாவி விரைந்து செல்லுமோ அதுபோலிருந்தது தான் பார்த்த தட்டுபோன்ற அந்த பொருட்களின் பயணம் எனச் சொல்கிறார். இவர் கூறியவை ஊடகங்களில் பெரும் செய்தியாயின. மக்களிடையே இது பற்றிப் பரபரப்பாகப் பேசப்பட்டது. தான் பார்த்த பொருட்கள் ஒரு தட்டைப் போல் இருந்தன- பிறைநிலவுபோல் இருந்தன என்றெல்லாம் விவரித்தார் ஆர்னால்ட்.

( டி.எஸ்.பத்மநாபன் )

VANNA KOLANGAL

வண்ணக்கோலங்கள்

( G.Divya praba )

அஸ்தமனம்

ஓயாமல் பேசிய வாய்தான்... இன்று ஒரு் வார்த்தை பேச ஒன்பது நிமிடங்கள் எடுத்துக் கொள்வதும் எதுவும் தெளிவாய்த் தெரிவதில்லை மரணம் உட்பட...

( சரண் )

ரூபாவை நாய் கடிச்சிருச்சி...

"டேய், சாயங்காலம் உங்க டிஸ்பென்சரிக்கு வரேன்னு சொன்னேன்ல... ரூபாவ நம்ம நாய் கடிச்சிடுச்சு. அதனால உங்க டிஸ்பென்சரிக்கு அருகில் உள்ள பேங்கிற்கு போயிட்டு உடனே உன்ன பாக்க வரேன்"னு செல்போனில் மாமா சொல்ல எனக்கு மிகவும் பதட்டமாகிவிட்டது. நல்லவேளை டாக்டர் இருக்கிறாரே எனற தெம்பில் "உடனே ரூபாவ கூட்டிக்கிட்டு வந்துடுங்க மாமா" என்றேன் கம்பவுண்டரான நான்.

( லால்குடி வெ. நாராயணன் )

ஒளிமயமான எதிர்காலம்

என்னிடம் காலையில் வாங்கிச் செல்லும் பணத்தையும் திரும்பக் கொடுப்பதுடன், தன் இலாபத்தில் கால் பகுதிக்கு குறையாமல் மாலையில் ஒழுங்காகச் செலுத்தி வந்தான். எங்கள் இருவர் வாழ்வும் இதனால் வளம் பெறத் தொடங்கியது. இன்று நானும் அவனும் தொழிலில் பங்குதாரர்கள் ஆகி விட்டோம். எங்கள் பெயரில், எங்களின் முதலீட்டில், அவன் தொடங்கவிருக்கும் நிரந்தர மளிகைக் கடையின், திறப்புவிழா இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது.

( வை.கோபாலகிருஷ்ணன் )

நானென்றும் நீயென்றும் (57)

திடீரென்று அவினாஷ் மேல் வந்த பிரியம் ஒரு கானல் நீரோடை இல்லை. இது நிஜம். இப்போது அவள் மனம் எப்படி வலிக்கிறதோ அதே போல அவள் அன்பும் நிஜம். அவினாஷிற்குத் தான் செய்த துரோகத்தை நினைத்து மறுகும் ஒவ்வோரு வினாடியும் அவன் மேல் கொஞ்சம் கொஞ்சமாக அன்பும் நாட்டமும் வளர்ந்திருக்கின்றன. அவன் காதலோடு அணுகிய ஒவ்வோரு சந்தர்ப்பத்தையும் நினைத்து நினைத்து மனம் ஏங்கியது. ஒன்றா, இரண்டா? எத்தனை முறை இவள் முட்டாள்தனமாய்த் தவறு செய்திருக்கிறாள்.

( சுகந்தி )

Tuesday, March 06, 2007

சாரல் 302

சாரல் : 302 பொழிந்தது : மார்ச் 5, 2007

கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரி சேஷாத்ரியுடன் மின்னுரையாடல்

ஆரம்பித்த மூன்றே வருடங்களில் 200க்கும் மேற்பட்ட தலை சிறந்த நூல்களை வெளியிட்டு தமிழ் பதிப்புலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது கிழக்குப் பதிப்பகம். கிழக்கு என்றால் தரம் என்ற எண்ணத்தையும் பெரிய எதிர்பார்ப்பையும் தமிழ் வாசகர்களிடம் இவ்வளவு குறைந்த அவகாசத்தில் ஏற்படுத்தியிருப்பது பெரிய சாதனையே. ஆனால் போக வேண்டிய தொலைவு மிக அதிகம் என்கிறார் இந்த சாதனையைச் செய்த பத்ரி சேஷாத்ரி.

( நிலா )

மொழி - திரை விமரிசனம்

படத்தின் பெயர்தான் மொழி. ஆனால் படம் முழுவதும் மவுனம்தான் பேசுகிறது. எளிமையான ஒரு கதையை எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் காட்சிகளில் அமைத்திருக்கிறார் இயக்குனர். விஜியின் வசனங்களில் காமெடியும் கவிதையும் இணந்து கைகோர்க்கின்றன. "காற்றின் மொழியே ஒலியா இசையா" என்பது போன்ற வைரமுத்துவின் கவிதை வரிகளுக்கு வித்யாசாகரின் இசையில் மனத்தை வருடுகின்ற சுகமான ராகங்கள்.

( ஜம்பு )

லாலுவின் ரயில் பட்ஜெட்டும் சிதம்பரத்தின் பொது பட்ஜெட்டும்

லாலுவின் பட்ஜெட் அனைவரின் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சிதம்பரத்தின் பொது நிதி நிலை அறிக்கை குறையா அல்லாது நிறையா என்று சொல்ல முடியாதபடி இருக்கிறது என்பது நிபுணர்களின் கணிப்பு. கூட்டணி (அ)தர்மங்கள், அடிக்கடி வருகின்ற தேர்தல்கள், எதிர்க்கட்சிகளின் உண்மையான அல்லது அரசியல் நோக்கான எதிர்ப்புக்கள், பலதரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு பட்ஜெட் தயாரிக்கப்பட வேண்டிய நிலையில் எந்த பட்ஜெட்டும் ஒரு பரிபூர்ண திருப்தியை அளிக்க முடியாது என்பது நிதர்சனம். ( ஜ.ப.ர. )

சர்தார் தி கிரேட்! (1)

இங்க்லீஷ் டீச்சர் சொல்கிறார், "எல்லோரும் கிரிக்கெட் மேட்ச் பத்தி ஒரு கட்டுரை எழுதுங்க". சிறுவர்கள் பரபரவென எழுத ஆரம்பிக்க, சர்தார்ஜியின் பையன் மட்டும் டக்கென எழுதிவிட்டு அமைதியாய் உட்கார்ந்திருந்தான். என்ன எழுதியிருக்கிறான் என இங்க்லீஷ் டீச்சர் ஆர்வத்துடன் பார்க்க, அதில் எழுதியிருந்தது. "தொடர் மழையின் காரணமாக இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது"

( ரிஷிகுமார் )


பறக்கும் தட்டுகளும் பிறக்கும் கேள்விகளும் (1)

பறக்கும் தட்டுக்கள், அயல் கிரகவாசிகளின் வருகை போன்றவை நிஜம்தானா அல்லது பார்த்ததாகக் கூறுபவர்களின் கற்பனையா என்று இன்னமும் அறுதியிட்டுத் தீர்க்கமாகக் கூற முடியவில்லை- இது போல் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத, ஆராய்ச்சியினாலும் உறுதி செய்யப்படமுடியாத அன்னியத் தோற்றங்களை UFO ( Unidentified Flying Objects) என்று சொல்கிறார்கள் ( டி.எஸ்.பத்மநாபன் )

Helen Mirren - Profile

Oscar winning actress Helen Mirren, "I don't mind if I don't have any lines as long as I get to wear a crown."

( PS )

மெய்ப்பொருள்

ரெண்டு ஆம்பளப்புள்ளங்க இருக்கயில இவரு இந்த வயசுல என்னத்துக்கு இப்பிடி அலையணும்னு தங்கம்மாவுக்குத்தேன் வெசனமா கெடக்கும். குமாரவேலு என்ன ஏதுன்னு எப்பவும் கேக்கதில்ல. வேலைக்குப் போன நாளுலர்ந்து ஒத்தப்பைசா குடுத்ததில்ல. ஆனா ராசவேலு அயல்நாடு போனதிலருந்து வருசம் தவறாம ஒரு லச்ச ரூவா அவங்கய்யாகிட்ட குடுக்கான்.

( நிலா )

சினி மினி

பெரியார் படத்தை வெளியிடுவதற்கு முன் கலைஞருக்குப் போட்டுக் காண்பித்தார்கள். பல காட்சிகள் அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. காட்சிகள் முழுமையாக இல்லையென சொல்லிவிட்டதால் மீண்டும் அந்தக் காட்சிகளை எடுக்கிறார்களாம்.

( ஜன்பத் )

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நொய்டா குழந்தைகளின் கொலைகளைக் கண்டிக்கப் போகிறார்களா? மெகா-மகா சீரியல்களைப் போலத் தொடரும் விதர்ப்ப தேசத்து விவசாயிகளின் தற்கொலைகள் இவர்கள் நெஞ்சங்களைப் புண்ணாக்கிவிட்டதா? பழங்குடி மக்களின் பட்டினிச் சாவுகள் இவர்களைப் படுத்தி எடுக்கிறதா? ஈழத்தின் பச்சைப் படுகொலைகள் இவர்களை பாதித்துவிட்டதா? நமது நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களை அரசாங்கத்தின் ஆதரவோடு, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, இடையறாது உறிஞ்சி வரும் கோக், பெப்சி ஆலைகளை எதிர்த்துப் போர்க் கொடி ஏற்றிவிட்டார்களோ?

( கு. சித்ரா )

உணவே மருந்து - மருந்தே உணவு (1)

இரண்டு பெரிய துண்டு சுக்குடன் இரண்டு ஏலக்காய் முதலியவற்றை நசுக்கிக் கொண்டு ஒரு தேக்கரண்டி ஜீரகம் இரண்டு கப் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க வைத்து முக்கால் கப்பாக நீர் குறைந்தவுடன் பனை வெல்லம் அல்லது வெல்லம் சேர்த்துக் குடித்தால் அஜீரணம், பசியின்மை, உடல் வலி நீங்கும்.

( பிரேமா சுரேந்திரநாத் )

Chennai 600028 – Music Review

This is Yuvan Shankar Raja’s debut in penning lyrics and undoubtedly he has done a good job compared to the junk some lyricists churn out nowadays. This bit song has wonderful strings and it is all about friendship and the pain in parting a friend. Yuvan has written, composed and sung the song.

( Vignesh Ram )

His Name is Siva Shankar..(237)

People have certain expectations about life. Misery does not befall one who is devoid of expectations. The world does not affect him. Only those who anticipate a particular result, suffer when their dreams do not materialize. And they become the root cause of others' miseries. ( N C Sangeethaa )

சந்'தோஷம்'

கட்டம் போட்டுக் கணித்துச் சொன்னான்
காவி கட்டிய கோவில் சோதிடன்
பிறைநிலவாய் வளர்ந்த எங்கள் சந்தோஷம்
பொருந்தாது பிள்ளைக்கு செவ்வாய் தோஷமென்று!

( கவிதா )

நீ நான் தாமிரபரணி (60)

அன்று உறங்காதது அவள் மட்டுமல்ல, அருணும் தான். அம்பலவாணன், தாரா அவனைப் பார்த்ததும், கண்களைத் துடைத்துக் கொண்டு சென்றதும் பற்றி சொன்னதை நினைக்கையில் அதன் பொருள் என்ன என்று அவன் ஊகிக்க முடியாமல் தடுமாறினான். அவர் சந்தேகப்படுவது போல் நிஜமாகவே அவன் ஈஸ்வரன், தாராவுடன் ஏதாவது வகையில் சம்பந்தப்படுகிறானா என்பதை அவனால் தீர்மானிக்க முடியவில்லை. அவனும் அவன் தாயும் இந்தக் கதையிலோ, கதாபாத்திரங்களின் வாழ்க்கையிலோ எப்படி சம்பந்தப்படுகிறார்கள்?..... நினைக்க நினைக்கக் குழப்பமே மிஞ்சியது...

( என்.கணேசன் )

பவழம்

கடைக்குப்போன பின் தான் எனக்குத் தெரியும் - பவழத்தின் மேல் மூணே முக்கால் பவுன் தங்கம் போடப்பட்டுள்ளது என்று. அட்வான்ஸ் ஆயிரம் போக கூலி, சேதாரம், வரி, சேவை வரி அது இது என்று சுளையாக முப்பத்து நாலாயிரம் தரணும் என்றார் கடைக்காரர். பவழம் வாங்கி வந்த மச்சானை மனதிற்குள் திட்டியவாறே ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எல்லாவற்றின் மூலமும் நகைக்கடைக்குத் தர வேண்டியதைப் பட்டுவாடா செய்து விட்டு, பவழ மாலையுடன் வீட்டுக்கு வந்தேன்.

( வை.கோபாலகிருஷ்ணன் )

தேடல்

பிறப்பு கொடுத்த உறவை
இறப்பு முத்தமிட்டதால்
வறுமை உறவானதோ? - இல்லை
திசை மாறிய உறவுகள்
பிறப்பளித்ததால்
வறுமை உறவானதோ? - இல்லை
பெண்முகம் கண்டு பொன்முகம் காணா
உறவுகள் கைவிட்டதால்
வறுமை உறவுக்கை நீட்டியதோ?
பதில் தேடி எனக்குள் ஒரு தேடல்.

( ஆண்டெனி )

காவிய நாயகன் நேதாஜி (40)

இந்த மகாசபையில் சுபாஷ் ஆற்றிய தலைமை உரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த உரையில் அவர் எத்தனையோ அரசாங்கங்களும் நாகரிகங்களும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனதைச் சரித்திரச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்னார். பிரிட்டனின் அசுர சக்திக்குக் காரணம் பல நாடுகளை பிரிட்டன் அடிமைப் படுத்தி வைத்திருந்ததுதான் என்று லெனின் சொன்னதை நினைவுபடுத்தினார். பிரிட்டன் பல நாடுகளில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டதையும் அதனால் தானே விழி பிதுங்கி நிற்பதையும் சான்று காட்டி விளக்கினார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

இராசி பலன்கள் 05-3-2007 முதல் 11-3-2007 வரை

அன்பார்ந்த கடகராசி வாசகர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் மன நிம்மதியும் பணவரவும் உண்டாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் வந்து போகும். தாயின் உடல் நிலைப்பாதிப்படைவதால் மருத்துவச் செலவு மேலோங்கும். வெளிச் செல்லும் முயற்சிகளைத் தள்ளிப் போடுதல் நல்லது. வீடு மாற்றம் மற்றும் புதிய வீடு வாங்குவீர்கள். வாகனங்யளைப் பழுது பார்ப்பதால் செலவுகள் ஏற்படும். உடம்பில் நரம்பு மற்றும் தலை சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். கண்களில் கவனம் தேவை.

( டாக்டர் ப. இசக்கி )

மனசே சுகமா? (3)

மன்னிப்பது பலவீனமான செயல் என்பது போலவும் மன்னிக்காததன் மூலம் தமது கௌரவத்தை நிலை நிறுத்திக் கொள்வது போலவும் ஒரு மாயையை பலர் தமக்குள் உருவாக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் செய்வதெல்லாம் தம்மைத் துன்புறுத்தியவர்களை ஜென்மம் முழுவதும் மனதில் மூச்சிறைக்கச் சுமந்து, தமது வாழ்க்கையைப் போராட்டமாக்கிக் கொள்வதுதான

( நிலா )

நானென்றும் நீயென்றும் (56)

இவன் வாழ்க்கையை இவர்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டார்களே, இவனும் அப்படிச் செய்தால் இவர்களுக்குத் தெரியும் இவன் படும் வேதனை! இடது பக்கக் கன்னத்தை சவரம் செய்து கொண்டிருந்த கைகள் அப்படியே நின்றன. கண்கள் பளபளக்க தன்னையே ஒரு முறை கூர்மையாகப் பார்த்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். மனதில் ஒரு திட்டம் உருவானது. இனிமேல் தானே இருக்கிறது.

( சுகந்தி )