Thursday, December 20, 2007

சாரல் 343

மனிதரில் எத்தனை நிறங்கள்! (24)

சிவகாமி என்னை யோசிக்க வைக்கிறாள் மூர்த்தி. எதையோ அந்த பீரோல இருந்து எடுத்துட்டுப் போனதை நான் என் கண்ணால் பார்த்தேன். எதை எடுத்திருப்பாள்னு யோசிக்கிறேன்.

சூரியனுக்கு சுப்ரபாதம் : 7. மனதைக் கட்டுப்படுத்துதல்
மனக்குவிப்பு பயிற்சியை விடாமல் தொடர்ந்து செய்துவந்தால், உங்களின் மனதை நீங்கள் அடக்கி ஆளலாம். இதில் எந்தவிதமான ரகசியமும் இல்லை. விடாமுயற்சியின் பலன்தான் இது.

வெற்றிக்கலை (8) : சேமிப்பு (2)
கூடுதல் பணவரவு, கூடுதல் செலவுக்கே இடமளிக்கிறது என்பது ஆய்வின் மூலம் தெரிய வரும் முடிவு. வரவு அதிகரிக்க அதிகரிக்க ஆடம்பரங்களும், அதிகரிக்கின்றன என்பதை நம்மைச் சுற்றி இருப்பவர் வாழ்க்கையிலிருந்தே உணரலாம்.
எழுதப்படாத விதிகள்
எந்தப்பொருளைக் கீழே தவறிப்போட்டுவிட்டலும் சரி, அது நம்மால் எடுக்கமுடியாத ஏதோ ஒரு மூலையில்தான் ஒளிந்துகொள்ளும்

கடலில் கிளைத்த நதி (1)
பெரிய திருவடியின் காலடிகளைப் பின்பற்றிச் சிறிய திருவடிகள் நடந்தாற் போலவே சில தருணங்கள் அமைந்தன. ஞானப்பிள்ளைக்கு அது பெரிதும் வியப்பாயிற்று.

கை நீட்டி...!
முடிவின்றித் தொடரும்
இலக்கை நோக்கிய
தொலைதூர ஓட்டத்தால்
இயந்திரமாகிப் போனாலும்

கவிதை
நிதமும் விழுங்கிக்கொண்டிருக்கும்
நிமிடங்களே கருவாய்
நீ உருவாகிட

இஞ்சி புதினா தேனீர்
சளிக்கும், இருமலுக்கும் நிவாணமளிக்கும் இதை தேவையான பொழுது செய்து பருகலாம்.

ஊமைச் சாமி
ஊமைத்துரைக்கு இரத்தம் கொதித்தது. எப்படியாவது ஆங்கிலேயன் மண்டையில் உறைக்குமபடி ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று எண்ணினான்.

கீரிப்பிள்ளை
பிள்ளைன்னு எல்லாத்தையும் சொல்ல மாட்டோம். பொதுவாக் குழந்தைங்களையும், குழந்தைங்க மாதிரி கூடவே வளர்க்கிற பிராணிகளயும் மட்டுந்தான் பிள்ளைன்னு சொல்லுவாங்க.

அரசியல் அலசல்
தமிழகத்தில் 40 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் மற்ற கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் கட்சியாக தியாக காங்கிரஸ் உள்ளது - மத்திய அமைச்சர் வாசன்

கொடூரம்
"இருப்பா... மல்லிகா வர்ற நேரம்தான். வந்துடுவா... இவ்வளவு தூரம் எங்களையா பார்க்க வந்திருப்பே..." என்றுவிட்டுக் கண் அடித்தார், மாமா வேடிக்கையான மனிதர்.

ஆதித்ய ஹ்ருதயமும், ராம ஹ்ருதயமும்!
ராவணன் மீது பலம் பொருந்திய பாணங்கள் பாய்ந்தாலும் அவன் சமாளித்து மீண்டும் மீண்டும் எழுவதைக் கண்டார் ராமர். அருகில் இருந்த விபீஷணன் ராமரைக் குறிப்பாகப் பார்த்தார்.

வீரத்துறவி விவேகானந்தர் : 2. பாருக்கெல்லாம் அது சுப தினம்
மனித வாழ்க்கையில் ஏற்படக் கூடிய கஷ்டங்களைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவர்களது கடுமையான துன்பங்களை நீ புரிந்து கொண்டால், கொஞ்ச நேரத்துக்காவது போதையில் தங்கள் துயரங்களை மறக்க முயலும் இந்த துரதிருஷ்ட ஜீவன்களைப் பார்த்து நீ பரிதாபம்தான் படுவாய்

இராசி பலன்கள் (17-12-2007 முதல் 23-12-2007 வரை)
கடக ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். கூட்டுத் தொழில் ஆகாது. பெண்களால் ஆதாயம் உண்டு.

செய்திகள் அலசல்
சன் டி.வி.யில் கோலங்கள் தொடர் இழு இழு என்று இழுத்துக் கொண்டு போகிறது. தொல்ஸைத் தேடுவதிலேயே இரண்டு மூன்று எபிசோடை ஓட்டி விட்டார்கள்.

பாதை தெரியுது பார்!
கிராமப்புறத்தில் ஓராண்டு தங்கியிருந்து பணி புரிய வேண்டுமானால் அங்கு என்ன வசதிகள் இருக்கின்றன என்று ஒரு கேள்வி எழுப்பப் படுகிறது. இதற்குப் பதிலாக, கிராம மக்கள் அங்கேதானே நிரந்தமாக வசிக்கிறார்கள்?

Tuesday, December 11, 2007

சாரல் 342

மனிதரில் எத்தனை நிறங்கள்! (23)

சிவகாமி தன் தம்பியின் முகத்தில் தெரிந்த உணர்வுகளையும், தன் மகன் முகத்தில் தெரிந்த ஆர்வத்தையும் கவனிக்கத் தவறவில்லை. ஆகாஷின் ஆவல் அவள் புன்னகையை அதிகரித்தது என்றால் சந்திரசேகரின் ஆவல் அவள் புன்னகையை உறைய வைத்தது


வெற்றிக்கலை (8) : சேமிப்பு (1)
தாமாஸ் ஆல்வா எடிசன் உலகின் தலைசிறந்த விஞ்ஞானி. பல விஞ்ஞான சாதனங்களைக் கண்டு பிடித்தவர். அவர் தனது சக்திகளை ஒருமுனைப்படுத்தியதோடு, பணத்தை சேமிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டவர்.

உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் : மின் அஞ்சல்
ரே டோம்லின்கன் எனும் அமெரிக்கர் 1971ஆம் ஆண்டு இம்முறையைக் கண்டறிந்தார். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் கணினித் தொழில் நுட்ப வல்லுனராகப் பணியாற்றியவர் இவர். பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க தம் உடன் பணியாற்றுவோரிடம் அவ்வப்போது இவர் தொடர்பு கொள்ள வேண்டி இருந்தது.

மனிதனின் வெற்றி அவன் மனோபாவத்தில்! (2)
மனப்பான்மை என்பது பரம்பரைச் சொத்து அல்ல, ஊழ்வினையின் ஆக்கமல்ல, ஆனால் முயன்று பெறும் பண்பு எனப்பார்த்தோம். நேர்மறை மனப்பாங்கை முயன்று பெறலாம். முயற்சி செய்யும் முன்னர் நேர்மறை மனப்பாங்கின் இயல்பு

பறவைகளும் துப்பாக்கி ரவைகளும் (3)
ஜனங்கள் அடிவயிற்றில் பயநெருப்புடன் நடமாடினார்கள்.அடடா, எல்லைக்கப்பாலும் இதே கதைதானே. மனிதர்கள் இப்படியே கவலை சுமந்து தளர்ந்து திரிவார்களே என்றிருந்தது. ஓய்வு நேரங்களில் வீதிகளில் திரிகிற அவனது தினவு இங்கே அடிபட்டாற் போல ஏமாற்றமாய் உணர்ந்தது.

சூரியனுக்கு சுப்ரபாதம் : 6. மனித இயல்பை மறக்காதே
வாரத்து ஏழரை மணிநேரத்தை உணர்ந்து உற்சாகத்தைக் கூட்டும் இந்தப் பயிற்சியை மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தால் கிட்டத்தட்ட வெற்றி பெற்றவர் ஆவீர்கள். நிச்சயம் நீங்கள் மகிழ்ந்து கூத்தாடலாம்! கற்றுக் கொண்ட, சாதித்த அரிய புதிய விஷயங்களை நீங்கள் பட்டியலிட்டும் மகிழலாம்.

நான் ரசித்தவை… உங்கள் ரசனைக்கு
உன்னைக் காணாதபோது
கண்ணீர் சிந்தும்
என் கண்களையே
நேசிக்கிறேன்.

தர்மசங்கடம்
"அப்போ ஏன் அதை மனசிலே போட்டு வச்சிருக்கே அனந்து? ஸ்ரேயா சொல்றாப்லே இதைத் தள்ளி விட்டுட்டுப் புதுசா வாங்கிடு."
சுற்றி வந்த கோவில்
சிலைகளின் மீது
எல்லாமே தடவப்பட்டு..
எண்ணைக் கறை….
மஞ்சள் பொடி..
சுண்ணாம்பு..

மிஞ்சியிருக்கும் கேள்வி
பேசுவது நானென்பதும்
கேட்பது நீயென்பதுவும்
முற்றிலும் சரிதானா
அதன் உண்மையான உண்மையில்?

வீரத்துறவி விவேகானந்தர் : 1. உற்சாகப் பயணம்
அவரது வீர உரைகளைப் படித்தால் கோழையும் வீறு கொண்டு எழுவான். சோர்வு நிலையின் அடி பாதாளத்தில் உள்ளவன் கூட உற்சாகத்தால் துள்ளி எழுவான். செயல் வீரன் ஆவான்.

இராசிபலன்கள் (10-12-2007 முதல் 16-12-2007 வரை)
மகர ராசி அன்பர்களே, செவ்வாய், சந்திரன் நன்மை தரும் கிரகங்களாகும். செய் தொழிலை மாற்றி அமைக்கத் திட்டம் போடுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு.

அரசியல் அலசல்
கிலோவுக்கு 2 ரூபாய் அரிசித் திட்டம் விவசாயக் கூலிகளின் குடிப்பழக்கத்தை ஊக்குவித்துள்ளது. இப்படி ஸேம் ஸைட் கோல் போட்டவர், ஆற்காடு வீராஸ்வாமி

செய்திகள் அலசல்
2006-2007ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் 7450 கோடி. இந்த வருடம் �பத்தாயிரம் கோடிக்கு இதை உயர்த்த வேண்டும் என்பது அரசின் இலக்காம்.

கோலம்
வண்ணக் கோலம்
(10 x 10) நேர்புள்ளி

"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம் (2)
'அடுத்த 50-ஆவது ஆண்டிற்குள், நான் சொன்னவற்றுள் ஏதேனும் ஒன்று நடக்காது போனாலும் நான் என் தலையை மொட்டை அடித்துக்கொள்கிறேன், அப்போது என் தலையில் முடி இருந்தால்' என்று முடித்திருந்தேன். கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.




Wednesday, December 05, 2007

சாரல் 341

இச்சா மிருத்யு (2)

"என்னம்மா நீ! அமெரிக்காவிலிருந்து அங்கே வரது அத்தனை சுலபமா? லீவு கிடைக்க வேண்டாமா? 'ப்ளைட்' கிடைக்க வேண்டாமா? வந்து தான் என்ன பண்ணப் போறோம்?

கதகளி

கேரளத்து கதகளி

வெற்றிக்கலை (7) : ஒத்துழைப்பு (2)

எதிர்ப்பை அகற்றிவிட்டால் அது தரும் தடைகளைச் சிறிதளவு சக்தி மூலம் அழித்து விடலாம். தடைகளை அகற்றாமல் அதிகமாக நமது சக்தியை செலவழிப்பதில் அர்த்தமே இல்லை.

காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்!

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்

சோழன் காதலுக்கு ஒரு போட்டி வைக்கிறான். நூறு கவிதை காமரசம் இல்லாமல் அடுத்தடுத்து பாடவேண்டும், நடுவில் காமரசம் வந்தால் மரணதண்டனை என்று அறிவிக்கிறான்.

காவல்

அடுத்தவர் காலை வாரிடும்
மானுஷ்யக்குணம்
நாய்களுக்கில்லாததை
அறிந்துணர்ந்து
நாயொன்றைத் தன்
குருவாய் ஏற்கணும் அவன்

எழுதப்படாத விதிகள் (1)

கடன் கிடைக்கவேண்டுமா? அப்படியென்றால் உங்களுக்குக் கடன் தேவையில்லை என்பதை முதலில் நிரூபிக்க

உயர்ந்த உள்ளம்

ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

மனிதரில் எத்தனை நிறங்கள்! (22)

இப்ப எல்லாம் மனுஷன் சீக்கிரமே களைச்சுப் போறார். முன்ன இருந்த சக்தியெல்லாம் இந்த ஹார்ட் அட்டாக்கில் போயே போயிடுச்சு. பாவம்.....

மனிதனின் வெற்றி அவன் மனோபாவத்தில்!

மகிழ்வான, ஆக்கபூர்வமான, அறிவார்ந்த, அமைதியான, உயர்ந்த, நல்ல சூழ்நிலை நேர்மறை எண்ணத்தை உருவாக்குகிறது. எதிர்மறை சூழ்நிலை எதிர்மறை எண்ணத்தை உருவாக்குகிறது.

செய்திகள் அலசல்

இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தன் மனைவி நிடாவிற்குப் பிறந்த நாள் பரிசாக ரூபாய் 240 கோடி மதிப்பு வாய்ந்த ஏர் பஸ் விமானத்தைப் பரிசாக அளித்திருக்கிறார்.

"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம்

அச்சு நேரம் நெருங்க, நெருங்க, பக்கங்களை விரைவில் முடிக்க வேண்டும் என்ற அவசரம் உண்டாகும். அது 20-20 கிரிக்கெட் பந்தயத்தில் கடைசி ஓவர்களை ஆடுவது போல் பரபரப்பாக இருக்கும்.

அரசியல் அலசல்

இருக்கும் வீட்டிற்கே வாடகை கொடுக்காத அரசியல்வாதிகள் ரயில்களுக்கா கொடுக்கப் போகிறார்கள், இல்லை அதைக் கேட்கும் துணிச்சல்தான் அதிகாரிகளுக்கு உண்டா? எல்லாம் காந்தி கணக்குதான்!

சூரியனுக்கு சுப்ரபாதம் : 5. டென்னிஸ் விளையாட்டும் அழிவற்ற ஆன்மாவும்

நினைவில் கொள்ளுங்கள். துவக்கத்தில், வாரத்தில் மூன்று முறை இரவில் கிடைக்கும் தொண்ணூறு நிமிடங்கள் தான் பத்தாயிரத்து எண்பது நிமிடங்களிலேயே மிக முக்கியமானது. அவை ஒருவகையில் புனிதமானதும் கூட.

பறவைகளும் துப்பாக்கி ரவைகளும் (2)

தன்முன் குனிந்து பேசிய அந்த உதடுகளை இழுத்து அழுத்திக் கொள்கிறான். ஆணின் கனவுகளை பெண்ணிடத்தும் பெண்ணின் கனவுகளை ஆணிடத்தும் ஒப்படைத்த இயற்கையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

கவிதைகள்

பற்றற்றிரு!
சாமியார் பேச்சுக்கு
மயங்கினார்கள் பக்தர்கள்
அன்றைய கலெக்ஷன்
அரை கோடி!

இராசி பலன்கள் (3-12-2007 முதல் 9-12-2007 வரை)

கும்ப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கம். யாத்திரைகளை விலக்குதல் நல்லது.

நிலாவட்டம் (24)

"உங்களை மன்னிக்க மாட்டேன். புரபசர்."
"நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை... சிவராம்." என்றார் அவர் மனத்தைப் படித்தவர் போல.
"என்வரை... உன் அம்மா எனக்கு மனைவியாய் அமைந்திருந்தால் ஜொலித்திருப்பேன். போகட்டும். அடுத்த பிறவியில் எட்டி விட மாட்டேனா..."
"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம்
அச்சு நேரம் நெருங்க, நெருங்க, பக்கங்களை விரைவில் முடிக்க வேண்டும் என்ற அவசரம் உண்டாகும். அது 20-20 கிரிக்கெட் பந்தயத்தில் கடைசி ஓவர்களை ஆடுவது போல் பரபரப்பாக இருக்கும்.