Wednesday, April 16, 2008

சாரல் 360


மனிதரில் எத்தனை நிறங்கள்!(41)
கணவன் தன்னிடம் பேசியதைக் கேட்டு ஏதோ உலுக்கியதைப் போல பதறி இயல்பு நிலைக்குத் திரும்பிய மேரி "என்ன கேட்டீங்க" என்றாள்.


"எஸ்.. எம்...எஸ்!" (4)
பாயசம் ரசிக்கிற மூடில் நான் இல்லை. ஒரு அண்டா பாய்சன் இருந்தால் மெசேஜ் அனுப்புகிற தடியனுக்கு ஊத்திக் கொடுத்து விடுவேன்.


நிறைவு
மாமி சொன்னபடியே வந்து விட்டாள். மடியாகச் சமையலும் ஆரம்பித்து விட்டது. ரொம்பவும் இயல்பாகச் செய்தாள். சர்வீஸ்தான்!


குழந்தை வளர்ப்பு (2)
உணவைத் தட்டிலிட்டு உங்கள் குழந்தைகளிடம் கொடுக்கவும். அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதற்காக மாற்று உணவு அளிக்காதீர்கள்.


தொலைநகலி
அவரது சோதனைகளுக்குத் தேவைப்பட்ட கருவிகள் இரண்டு பேனாவும் செம்புக் கம்பிச்சுருளால் கட்டி இணைக்கப்பட்ட இரண்டு ஊசல்களுமே (pendulums) ஆகும்.


கனவுகள் (4)
துரிதக் கண்ணசைவு நேரங்களில் ஒருவர் நாலு அல்லது ஐந்து முறை கனவு காண்கிறார்கள் என்று சொல்லும்போது இது எப்படி சாத்தியம் எனத் தோன்றலாம்.


அறிவியல் அதிசயங்கள் (1)
வெறும் கறிகாய் வகைத் தாவரம் தானே என்று செடிகொடிகளை அனைவருமே அலட்சியம் செய்கின்றனர். அவற்றிற்கு உரிய மரியாதையைத் தருவதில்லை.


சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (9)
சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதென்ற அவருடைய நீண்ட நாள் கனவு இவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறுமென எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் இவர்.


இராசிபலன்கள் (14-4-2008 முதல் 20-4-2008 வரை)
கடக ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். வாகனங்களைப் பழுது பார்ப்பதால் பொருட் செலவு உண்டாகும். அந்நிய நாட்டுப் பயணங்களைத் தள்ளிப் போடவும்.


கருணை கந்தன்
அந்த நாட்டு வழக்கப்படி, யார் வேண்டுமானாலும் தங்களிடமுள்ள எந்தப் பொருளையும் தேவதைகளிடம் கொடுத்து பண்டமாற்று செய்து கொள்ளலாம்.


வீரத்துறவி விவேகானந்தர் (18)
அவர்கள் எல்லாம் ஆழமில்லாத குட்டைகள் மாதிரி. கொஞ்சம் தெய்வ சக்தி உள்ளே போனதும் உணர்ச்சிப் பிரவாகம் ஏற்படுகிறது. நீயோ மஹாநதி.அமைதியாக இருப்பாய்.


கழனி (2)
வரப்பில் பெட்ரோமாக்சுக்குக் கொஞ்சம் காத்து ஏத்தி சுடரை உசுப்பேத்திக் கொள்ளலாம் என நின்றான். ஆ..அங்க பார்றா, வாளை! எலேய் உள்ளங்கைத் தண்டி!


எது தேசபக்தி?
கண்மணி கருகிய
மின்மினிக் கூட்டம் இந்த
வெளிச்சத்தின் புதல்வனை
விமர்சிக்கிறது.


வெற்றிக்கலை (18) : இறை நம்பிக்கை (1)
பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை ஜெயிப்பதற்குப் பதிலாக, நம் மனதின் ஆழத்தைக் கண்டு அகவுலகை ஜெயித்தால் அதுவே உண்மை வெற்றி என்றார் அவர்.


நகைச்சுவை பிட்ஸ் (16)
வக்கீல் : விபத்து நடந்தபோது நீ எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தாய்?
சாட்சி : 40 அடி, 11 அங்குலம், ஒன்றரை செமீ.


கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (9)
பாகிஸ்தானை உருவாக்கி அதன் கவர்னர் ஜெனரலாகவும் பொறுப்பேற்ற ஜின்னா மரணத் தறுவாயில் கூறியது : "நான் வாழ்க்கையில் செய்த மாபெரும் தவறே இந்தியாவை இரண்டாகப் பிரித்ததுதான்."


திருவக்கரை வக்கிர காளியின் மகிமை
இந்தக் காளியைத் தரிசித்தால் வக்கிர கிரஹங்களினால் ஏற்படும் தொல்லைகளும், வக்கிர சக்தியால் ஏற்படும் இன்னல்களும் அறவே நீங்குகின்றன.


அடிச்சுவடு அறியாமலே...
கற்பனையாம் நூலெடுத்து பாமாலை கட்டி
கவினுலகம் காண கவிக்கு சில நொடிகள்
கனவிலேயே காலம் கழித்து கரையேறுகையில்

Thursday, April 10, 2008

சாரல் 359

மனிதரில் எத்தனை நிறங்கள்! (40)
அவள் முக வாட்டத்தைக் கண்ட மேரி சமாளிக்கும் விதமாகச் சொன்னாள். "அவருக்கு ஆனந்தின்னா உயிரு. மகள் போன துக்கத்துல அப்படி நடந்துகிட்டார்..."


"எஸ்.. எம்...எஸ்!" (3)
"என்ன எப்ப பாரு அக்காவோட செல்லையே கையில வச்சுகிட்டு இருக்கீங்க" புனிதா போட்டு உடைத்து விட்டாள்.


வெற்றிக்கலை (17) : உடல்நலமும், ஓய்வும் (2)
இன்றே எல்லாவற்றையும் பரபரப்புடன் அனுபவித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவேசத்தை விட்டு விடுங்கள் என்கிறார் அவர்.


மலரின் கவிதைகள்
தாங்கும் கொடியும்
முள்ளாய்த் தோன்றும்
உலவும் பொன்வண்டும்
தனியே விலகும்


மின்வெட்டு
விஞ்ஞானம்
நிம்மதி தேடிப் போய்
விண்ணப்பிக்கிறது இயற்கையிடம்.


நகைச்சுவை பிட்ஸ் (15)
கால்மணி நேரத்திற்கு முன்னாடிதானே சொன்னேன்.. உடனே வந்துடுவேன்னு. அதுக்குள்ள என்ன அவசரம்?


சுருக்கெழுத்து
இவரது கோட்பாட்டின்படி 26 ஆங்கில எழுத்துகளும் சிறு சிறு கோடுகள், வட்டங்கள் மற்றும் புள்ளிகள் என மாற்றி எழுதப்படுகின்றன.


கனவுகள் (3)
நாம் காணும் கனவுகள் நேரில் நடப்பதைப்போல அவ்வளவு தெளிவாகவும், விரிவாகவும் இருப்பதுதான் இந்த சந்தேகத்திற்குக் காரணம்.


வீரத்துறவி விவேகானந்தர் (17)
ஒரு நாள் குருதேவர் நரேந்திரனை நேரடியாகக் கேட்டே விட்டார், நீ ஏன் இங்கு வருகிறாய், நான்தான் உன் கூடப் பேசுவது கூட இல்லையே?


முகப் பொலிவிற்கு சில குறிப்புக்கள்
ஒரு வாழைப்பழம், ஒரு மேஜைக்கரண்டி தேன், இவையிரண்டையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த சருமம் மிருதுவாகும்.


குழந்தை வளர்ப்பு
அதுபோல் நீங்களும் உங்கள் குழந்தைகளை எளிதாக அழிக்கக்கூடிய பேனாக்களைக் கொண்டு படுக்கையறை ஜன்னல்களில் எழுத அனுமதிக்கலாம்.


பிலிம் காட்றோம்! (4)
நாயகன் தேடிச் செல்லும் இடங்களில் அவரது விசாரிப்புகளுக்கு மற்றவர்கள் காட்டும் அதிர்ச்சியும் தயக்கமும் கதையின் விறுவிறுப்பைத் தூண்டுகின்றன.


சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (8)
'பில்லா'வை அடுத்து ரஜினியின் மற்றொரு படமான 'தம்பிக்கு எந்த ஊரு' ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.


ஆடிப்பட்டம் (2)
இவனோடு இந்தப் பெண்ணை அனுப்பி வைத்தால் இவளைக் கொலை செய்தால் கூட கேட்க ஆளில்லை என்ற உண்மை எனக்குக் கசந்தது.


இராசிபலன்கள் (7-4-2008 முதல் 13-4-2008 வரை)
விருச்சிக ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். வெளிநாட்டுப் பயணம் வெற்றி தேடித் தரும். வீடு மாற்றம் ஏற்படலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.


கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (8)
உன் அடிமனதில் எழும் எண்ணங்கள் உன்னைப் பணக்காரனாகவோ, ஏழையாகவோ ஆக்கும்! அதனால் நேசிக்கவும், வெறுக்கவும் முடியும்!


கழனி (1)
அத்தியாவசியப் பொருள்தான். நினைச்சி நினைச்சி அயர்ந்துபோய் சர்றா, நமக்குக் கொடுப்பினை இல்லைபோல என கைவிட்ட சாமான்.

Thursday, April 03, 2008

சாரல்358

மனிதரில் எத்தனை நிறங்கள்! (39)
ஆகாஷின் வெறுப்பை நினைக்கையில் அவள் மனம் வாடியது. அதனை அப்போதைக்கு மறக்க வேண்டி டேவிட்டை ஆர்த்தி கேட்டாள். "அங்கிள், எங்கம்மா எந்த மாதிரி டைப்?"


"எஸ்.. எம்...எஸ்!" (2)
"டேய்.. செல்லம்.. உனக்கு என்ன வேணும்டா.. சொல்லு.. உன் அட்ரஸ் கூட எனக்குத் தெரியாதுடா.. பிளீஸ்.. உன்னை நேர்ல பார்க்கணும்போல இருக்குடா.. உன் வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்ரா.."


வெற்றிக்கலை (17) : உடல்நலமும், ஓய்வும் (1)
மனிதனின் உடல் 140 வயது வரை வாழ்வதற்குரிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ஜாக் லாலான்.


ஆடிப்பட்டம்
"தாலி ஏறின பிறகு பிரிச்சு என்னங்க ஆகப் போகுது?" சாக்கு சொன்னாள். அவள் அன்பழகனோடு தன் பெண்ணை அனுப்ப முடிவு செய்துவிட்டள் எனத் தெளிவாகத் தெரிந்தது.


வீரத்துறவி விவேகானந்தர் (17)
கண நேரத்தில் நரேந்திரனுக்கு ஒரு விசித்திர அனுபவம். எல்லாமே மாறி விட்டது. பிரபஞ்சத்தில் கடவுளைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்ற உணர்வு ஏற்பட்டு விட்டது.


சிரிப்பு (2)
ஓரு முறை ஜோ மற்றும் அவருடைய நண்பர் "Jurassic Park" படம் பார்க்கச் சென்றனர். படம் ஆரம்பித்த பிறகு ஜோ சீட்டின் அடியில் மறைந்து கொண்டார்.


அவருக்கு இனி முகவரி தேவையில்லை!
நூறு நபர்களை விசாரித்து
அலுத்துப் போனதில்
வந்த கடிதத்தைக்
கிழித்துப் போட்டேன்.


இவன் மனிதனா? சிஸ்டமா?
அவனுடைய
எல்லாம் ஒழுங்காய் இருக்கின்றன
நகரும் படிக்கட்டுகளைப் போல


பேச்சும் தீர்வும்
ஒருவர் சாமர்த்தியமான பேச்சு, செயல் ஆகியவற்றைப்பெற தகவல்கள், நேரம், வலிமை என மூன்றையும் தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும்.


சாக்லேட்
பிரான்சு நாட்டில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அவர்கள் அதனை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை.


கடவுள் எங்கே இருக்கிறார்?
யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?"


கனவுகள் (2)
துரிதக் கண்ணசைவு இல்லாத, மூளை சாதாரணமாக இயங்கத் துவங்கும் விடிகாலை நேரங்களிலும் கனவுகள் வருகின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (7)
ஐந்து வயதேயான பரத் அந்த மரத்தைச் சுற்றி சுற்றி விளையாடுவான். அந்த மரத்திற்கும் பரத்தை மிகவும் பிடிக்கும்.


இராசிபலன்கள் (31-3-2008 முதல் 6-4-2008 வரை)
அன்பார்ந்த கடக ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். வீடு மாற்றம் உண்டாகும். உத்தியோக விஷயமாகப் பணம் சொத்து ஏமாறாமல் இருக்கவும்.


சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (7)
"என் மகன் நடித்த படத்தைப் பார்க்க வந்தேன். இப்போது உங்கள் மகனின் படம் பார்த்த திருப்தியுடன் செல்கிறேன்" என்றாராம்.


கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு
சுவையான கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு.


பிலிம் காட்றோம்! (3) - மூலமந்திரம்
ஆனால் ஆன்மிகத்தில் நாட்டமில்லாதவர்களைக் கூட கவர்ந்து இழுத்துக் கொள்ளும் வசீகரம் டி லீவாவின் இசைக்கும் குரலுக்கும் இருக்கிறது.