Tuesday, December 30, 2008

"சாரல் 397"

 
மீட்டர் திருத்தப்பட்டதுன்னு எழுதியிருக்கீங்க?" "நாம திருத்தலாம் சார், அது திருந்தணும்ல?"
"தாத்தா தான் செலக்ட் செஞ்சிருப்பார். எனக்குத் தெரியும்" என்று தாத்தாவின் கையைப் பிடித்து முத்தமிட்டு மகிழ்ந்த போது கண்களில் பெருகிய நீரைக் கட்டுப்படுத்துவது கிழவருக்குப் பெரும்பாடாக இருந்தது
உயிரை ஏந்தும் காலத்தைப் போல..கைகளில் ஏந்திக் கொண்டது - நழுவிப் போய்க்கொண்டிருக்கும் உறவுகளின் மீதான நம்பிக்கைகளை..!
கடந்த வருடத்தின் கசப்பான நினைவுகளை நெஞ்சம் மறக்கட்டும். அவற்றில் நாம் கற்ற பாடம் மட்டும் நினைவில் என்றும் இருக்கட்டும்!
அந்தப் புற்றைச் சுற்றி வர தீராத வியாதிகள் குணமாவதையும் கண்டனர். இந்தப் புற்று இயற்கையின் சீற்றத்தில் அழியாமல் இருக்க, அதைச் சுற்றிசெங்கல் சுவர் எடுக்க எண்ணிய போது புற்று மேலே திறந்து இருந்ததைக் கண்டனர்.
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்களிலிருந்து இப்போது கணினியில் நிச்சயிக்கப்படும் கல்யாணங்கள் வரை காலம் எவ்வளவோ மாறி விட்டது. பழைய இலக்கியங்களில் திருமணங்களை எட்டு வகையாகப் பிரித்திருக்கிறார்களாம்.
மூளை மனித உடலின் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படுகிறது எனலாம். எண்ணங்கள் உணர்வுகள் மற்றும் நினைவாற்றல் ஆகிய மூன்றிலும் தொடர்பு கொண்டு மனித உடல் இயல்பாகச் செயல்பட மூளை உதவி புரிகிறது
"நான் மாமிசமும் சாப்பிடுவேன்" என்று அவர் சொன்னதும் எல்லாரும் திடுக்கிட்டுப் போனார்கள்.
இட்லி மாவுடன் வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், கருவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
வண்ணக் கோலம்
எந்தப் பெரிய பிரச்சனைக்கும் ..ப்பூன்னு ஊதித் தள்ளிடற மாதிரி சின்ன தீர்வு இருக்கத்தான் செய்யிது. நாமதான் அதைத் தேடிக் கண்டுபிடிக்கணும்.
மனைவி: "ரெண்டு பேருக்கு எதுக்குங்க 3 டிக்கெட்?" கணவன் : "டிக்கெட் உனக்கும், உங்க அப்பா அம்மாவுக்கும்."
இந்த நேரத்தில் கூட எத்தனை பரபரப்பு.. எத்தனை மனிதர்கள்.. இரவு நேர உணவுக் கடைகள்.. வீடியோ கோச்சிற்கு வரச் சொல்லும் தரகர்கள்..

Tuesday, December 23, 2008

"சாரல் 396"

உடலின் சிறுநீரகங்கள் பழுதடைந்து தமது பணிகளைச் செய்ய இயலாத நிலையில், சிறுநீரகத்திற்குப் பதில் எந்திரத்தின் வாயிலாக இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறையே டயாலிசிஸ் எனப்படுகிறது.
நீங்கள் உலகைத் துறந்து கல்கத்தாவுக்கு வந்து என் வேலையைச் செய்யுங்கள். நான் மஹாராஷ்டிரத்துக்கு வந்து அதையே செய்கிறேன். யாருக்கும் அயல் மாநிலங்களில் இருப்பது போல சொந்த மாநிலத்தில் செல்வாக்கு இருப்பதில்லை
 
ஆண்டுகள் உருண்டாலும் - எங்கள் விடியல் கனவின் ஈரம் மட்டும் இன்னும் காயாமல்
மனதில் நினைக்கும் வரிகளை தானாகவே தட்டச்சு செய்யும் இயந்திரம் தொலைவில் இல்லை!!
எங்கக்காவை மிஞ்சி எதுவுமே இல்லைன்னு தம்பட்டம் அடிச்சுக்குவீங்க. இந்த தைரியம் யாருக்கு வரும்னு கேட்பீங்க. ஆனா நீங்க கட்டிகிட்டு வந்தவ பேசினா மட்டும் வாயாடின்பீங்க. திமிர்ம்பீங்க. ஏங்க இப்படி ஆளுக்கொரு அளவுகோல் வச்சு அளக்குறீங்க
"பின் ஏன் அவர்களை மூளையே இல்லாதவர்களாகப் படைத்தீர்கள்? " "அப்போதுதானே அவர்கள் உங்களைக் காதலிப்பார்கள்! "
சிவபெருமானைப் பாண்டியன் பிரம்பால் அடித்ததும், சாக்கிய நாயனார் கல்லால் அடித்ததும், கண்ணப்பர் செருப்பால் உதைத்ததும், இந்திரன் இடியால் அபிஷேகம் செய்ததும் அவைகளை அவர் பொறுமையாகப் பொறுத்துக் கொண்டதும் பாடப்படுகின்றன
வாணலியில் எண்ணை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்தவுடன் உருண்டைகளைப் போட்டு சிவப்பாக வறுத்து எடுக்கவும்.
கேமராவிற்குப் பின் நின்று அனைவரையும் ஆட்டுவித்த இரு பெரும் இயக்குனர்களை இயக்கும் பெருமை கிடைத்திருக்கிறது தாமிராவிற்கு. முக்கிய வேடங்களில் இயக்குனர்கள் பாலசந்தர் மற்றும் பாரதிராஜா நடிக்கின்றனர்.
விருச்சிக ராசி அன்பர்களே சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகள் பலப்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும்.
சில தவறுகள் திருத்தப்பட வேண்டும். சில தவறுகள் மன்னிக்கப்பட வேண்டும். சில தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும்.
தரிசு நிலக் காட்டில் தவறி விழுந்த காகிதத்தில் அறுவடைக் காலக் கவிதைகள்
ஆனா குறிப்பிட்ட தொகைதான் இருக்கு. நீங்க அந்தப் பணத்தில் ஒருத்தரை இஞ்சினியரிங் படிக்க அனுப்புவீங்களா, அல்லது அஞ்சு பேருக்குத் தொழிற்கல்வி கத்துத் தருவீங்களா?
"இத பாருங்க, நீங்க என்ன நினைச்சாலும் சரி, ஒரே குழந்தைதான். நீங்களும் இதுக்கு ஒத்துக்கிட்டீங்க. இப்ப ஆபீசுல எவனோ கிளப்பி விட்டான்னு இங்கே வந்து வம்பு பண்றது கொஞ்சங்கூட நல்லா இல்லே."
இவனுக்குள் நியாயமாகவோ அநியாயமாகவோ ஒரு சங்கடம் பரவியது. தான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதை ஒப்புக் கொள்ள இயலவில்லை. தலை கவிழ்ந்து, பருக்கைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான்.

Monday, December 15, 2008

"சாரல் 395"

ஷேக்ஸ்பியரைப் புத்தகம் இல்லாமலே கற்பிக்கும் பெருமை கொண்டவர் ஒருவர். எந்த இடத்தில் எந்த வார்த்தையை ஷேக்ஸ்பியர் உபயோகித்தார்.
ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வாழ்வது எளிது உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்து வாழ்வது கடினம்
மிளகளவு தங்கமணி குடிகொண்ட செவிகளையும் பற்றியொரு கவி எழுத, கம்பனது கவியரங்கில் கலந்திடவும் வேண்டுமன்றோ?!
அவர்களின் சினிமாவிலும், சின்னத்திரைகளிலும் வன்முறை கிடையாது. சமூகத்திலும் வன்முறைகளும் கொலைகளும் மிகவும் குறைந்தே காணப்படுகின்றன
அவரது அற நிலையங்கள், வடக்கே இமயம் முதல் தெற்கே கன்னியாகுமாரி வரையிலும், மேற்கே சோம்நாத் ஆலயத்திலிருந்து, கிழக்கே ஜகன்னாதர் ஆலயம் வரை விரிந்திருந்தன.
நானிழந்ததோ, எனையிழந்ததோ, ஏதோவொன்று ஏக்கத்துடன் கடந்து போகிறது, என்னை!
போலீஸ் : "ரெண்டு நாளா காணலை, இப்ப வந்து புகார் குடுக்கறீங்க?" கணவன் : "சந்தோஷத்துல ரெண்டு நாள் போனதே தெரியலை சார்"
நீ ஒரு தமிழ்க் கவிஞன். நீ ஒரு தமிழெழுத்தாளன். நீ சராசரிக்கு மேம்பட்டவன். நீ வித்யாசமானவன்
குடும்பத் தேவைகளுக்கு நான் சம்பாதித்துக் கொள்ளுவதாகவும், எந்தக் கவலையுமின்றி லட்சியத்தை நோக்கி அவர் செல்லலாம் எனவும் சொன்னேன்.
நன்றியுள்ள நாய் வாலை ஆட்டியது திருடனுக்கு
ஆயிரம் தான் சொன்னாலும் சில சந்தர்ப்பங்களில் ஏழ்மை ஒரு மனிதனை நிறையவே தர்மசங்கடப்படுத்துகிறது
'புதிய பாதை' - திரைப்படத்தில் வருவது போல் கற்பழிக்கப்பட்ட பெண் கற்பழித்தவனையே திருமணம் செய்து கொள்வது ஒரு தீர்வு! ஓர் ஆயுட்காலத் தண்டனை! ஆனால், அவன் நாலைந்து பெண்ணைக் கற்பழித்திருந்தால் அதற்குத் தீர்வுதான் என்ன?
உடல் வேதியியலில் பல்வேறு வகையான, முக்கியமான, குறைந்தது 500 பணிகளை இவ்வுறுப்பு கொண்டுள்ளது.
நீங்கள் இதுவரை பேசிக்கொண்டிருந்தீர்களே அந்தத் தொலைபேசிக்கு கனெக்ஷன் கொடுக்க வந்திருக்கிறேன்
கமலா, ராணி எல்லோருமே தங்களுக்கென்று சில நியதிகள் வைத்து இயங்குகிறார்கள். மனதை அமைதியாக வைத்திருக்கிறார்கள். சிந்தனை தறிகெட்டு ஓடுவதில்லை. படுத்தவுடன் தூங்கிப்போகிறார்கள்

Wednesday, December 10, 2008

"சாரல் 394"

"வாயில் உணவு துண்டுகளாக்கப்பட்டு பற்களால் நன்கு மென்று அரைக்கப் பட்டு உமிழ்நீருடன் கலக்கிறது."
மாப்பிள்ளை என்று அவளுக்கும் ஒருத்தனைப் பார்த்து கையைப் பிடித்துக் கொடுத்தால் நன்றாய்த்தான் இருக்கும். எட்டாவது வகுப்போடு நின்றுகொண்டாள்.
எனக்காக ஒ‎ன்னும் வேண்டிக்கிடலம்மா.. எ‎ன் அம்மாவுக்கு மட்டும் கொள்ளை அழகோட மருமகள் அமைஞ்சாப் போதும்னு வேண்டிக்கிட்டே‎ன்!
ஆனால் அவர் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் 200 பேர் அதற்கு உரிமை கோரி கல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். சொத்து எவ்வளவு தெரியுமா?
* நீங்கள் விரும்புகிறவர்களை மணப்பதைவிட உங்களை விரும்புகிறவரை மணந்திடுங்கள். * உங்களுக்கென தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
இன்று நான் பல ஆதரவற்றோர் இல்லங்களைத் திறந்திருக்கிறேன். 25 வருடங்களுக்கு முன்னர் மூர்த்தி செய்ய நினைத்ததைத் தற்போது சாதித்து உள்ளோம்.
நரேந்திரநாத்தைப் பார்த்ததும் எனது சந்தோஷத்துக்கு அளவே இல்லை. வருணிக்க வார்த்தைகளே இல்லை. அவர் முழுவதுமாக மாறி விட்டதைக் கண்டேன்.
வண்ணக் கோலம்
பெயரிலிருந்தே தெரியவேண்டாமா யார் கதாநாயகன் என்று! இத்திரைப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு.
".... நான் நேத்தே சொல்லணும்னு நினைச்சேன். நீங்க பிசியா இருந்ததால் சொல்ல முடியலை. அது ஆணா, பெண்ணான்னு கூடத் தெரியலை. ஆனா ஓடுனது என்னைப் பார்த்துதான்கிறதில் சந்தேகமில்லை."
"குமுதம், ஆனந்த விகடன்ல எல்லாம் எழுத மாட்டியா நீ? சரி அத எடுத்துட்டு வாயேன். வரதட்சணை அசிங்கத்தப் பத்தி நறுக் நறுக்னு எழுதியிருக்காம்மா. ரியலி ஸூப்பர்ப்."
மாற்று அறுவை சிகிச்சை செய்து முடித்தார் மருத்துவர் நோயாளியை மாற்றி!
கைகள் தழுவினாலும் கால்கள் உரசினாலும் பொறுத்துக் கொண்டு புறப்பட்டது பஸ்...
கடக ராசி அன்பர்களே, உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக வேண்டிய முயற்சிகளில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவீர்கள்.
 
"எனக்குப் பாராட்டு வந்தா நீ சந்தோஷமா வாழ்த்துச் சொல்லலாம். உனக்குப் பிரச்சினைன்னா நான் முதல் ஆளா உதவலாம்... ஏனிப்படியெல்லாம் நாம நேர்மையா இருக்கக் கூடாது?"

Monday, December 01, 2008

"சாரல் 393"

நான் அழுததைப் பின்னர் நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பு வரும். ஆனால் நான் சிரித்ததை நினைத்துப் பார்க்கும்போது ஏனோ அழுகை வருவதில்லை!
இன்சுலின் தனது விளைவினால் சர்க்கரையை இரத்த ஓட்டத்திலிருந்து உடலின் உயிரணுக்களில் ஓர் எரிபொருளாகப் பயன்படுத்த வழிவகுக்கிறது.
ராத்திரி உணவுக்குப் பின்னால், காலையில் அரியர்ஸாய்ப் போன ஹிண்டு தலையங்கங்களை ஆறுதலாய் மேய்ந்து கொண்டிருந்தபோது, மெல்ல சமீபித்து சரோஜினி தொண்டையைச் செருமினாள். மறைவாய் மாலா
மாவுக் கலவையுடன் ஆறிய வெல்லநீரை சிறிது சிறிதாகக் கலக்கி சப்பாத்தி மாவு பதத்தில் தயார் செய்யவும்.
வாருங்கள், இந்த வாரம் நமக்குப் பிடித்த ஒருவரைப் பற்றி எழுதுவோம். அவரை ஏன் நமக்குப் பிடிக்கும், அவரிடம் உள்ள நல்ல குணங்கள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுவோம்.
உன்னைவிட எல்லாம்... உன்னைவிட பலரும்..- ஆனால் உன்னைப்போல ஒருத்தியும் இங்கில்லையே...!
அருவியில் குளிக்கும் மக்கள் வியர்வையில் காவலர்
இப்படி மற்றவரைப் பற்றி வம்பு பேசி வந்ததால்தான், அது நம்மைக் குழுவாக தொடர்ந்து இருக்க வைத்து சந்ததியினரை வளர்த்து இன்றும் மனித குலம் வாழும்படி செய்த காரணங்களில் ஒன்றாக இருக்கிறது!
இந்தியாவின் பாரம்பரியக் கலாசாரத்தைப் பண்பட்டவர்களும் படித்தவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், அவை மேல் நாட்டுக்கு ஏற்றுமதியாகி, அங்கிருந்து மீண்டும் இங்கு வந்தால்தான் செலாவணியாகும்
பூமியில் சலனங்கள் அடங்கியபோது காட்சிகளுக்கு ஓவியத்தன்மை அருளப்படுகிறது. ஒலிகளுக்கு இசைப்பிறவி கிடைக்கிறது அப்போது. இரைச்சல்கள் ஒலியாகக் குறைந்து போன அளவில் இருளில் ஒலிகள் கொண்டாடப் படுகின்றன
நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை நீங்களாக அடுத்தவருக்குச் சொல்லும் வரை எவராலும் சரியாகக் கணிக்க முடியாது.
"புள்ளி விவரப்படி இந்த வியாதி வந்தா 10-ல ஒருத்தர் கண்டிப்பா பொழைச்சிருவாங்க. இதுவரை 9 பேர் இறந்துட்டாங்க. அதனால நீங்க தைரியமா இருக்கலாம்."
இவனுக்கு இரண்டு மூளை - ஒன்றைக் காணோம் - இன்னொன்று காணாமற்போன மூளையைத் தேடிக் கொண்டிருக்கிறது.
கண்ணன், ராதா மற்றும் கோபியர்களுடன் ஆடும் இதில் காமத்திற்கு இடமில்லை. உடல் உணர்ச்சியைத் தூண்டும் நடனமும் இல்லை.
அவள் வார்த்தைகளால் சொல்லாததை அவள் உடல் மொழி காட்டிக் கொடுத்துவிட, அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், "ஒரு குழந்தையை உனக்குப் பிடிச்சிருந்ததுன்னா இப்படித்தான் சங்கடப்படுவியா, அஞ்சு?" என்றான் மென்மையான குரலில்.
மிதுன ராசி அன்பர்களே, உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பொது நலத் தொண்டுகளில் தன்னைப் பிரியமுடன் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலம் எதிர்பாராத தன வரவுகள் உண்டாலாம்.
அலுவலகத்துல வேலை பார்த்துட்டுருந்தப்போ (அலுவலகத்துல வேலைதான பார்க்கணும், அதைப் போய் பெருசா சொல்றதா நீங்க முணுமுணுக்கறது காதுல விழுகுது. என்னங்க செய்யறது, நான் தூங்கறதால்ல ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.)
அனாதைகளுக்கு ஆதரவாக இல்லம் அமைக்க விரும்பும் கம்யூனிஸக் கொள்கைகளில் பிடிப்பு கொண்ட, அரசியல்வாதியாக விரும்பும், நிலையற்ற வேலையையுடைய மூர்த்திக்கு என்னைத் திருமணம் செய்து கொடுக்க என் தந்தை விரும்பவில்லை.
ஆர்த்தி நீ என்ன முடிவெடுத்தாலும் பரவாயில்லை. ஆனா இந்த அனாதைப் பையன் என் கிட்ட எப்படி இப்படிக் கேட்கலாம்னு மட்டும் நினைச்சுடாதே ப்ளீஸ்.