Tuesday, March 24, 2009

"சாரல் 409"

கால்கள் கடுக்கிற வரைக்கும் நடப்போம். காந்திமதி ஸ்கூல் வரைக்கும் நடப்போம். காந்திமதி ஸ்கூல் தான் ஊருக்குக் கிழக்கு எல்லை. "கொக்குக் கொத்தி மீனும் பிழைக்குமோ கோழிக்குஞ்சும் பிறாந்தும் இணங்குமோ நாயும் மொசலும் நடுவழி தங்குமோ"
உறவு என்பது மென்மையானது. அதில் சந்தேகம் வந்து விழுந்தால் எல்லாம் நாசமாகிவிடும்.
உப்பும், சிகப்பு மிளகாயும் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தலைவன் என்பவன் ஒரு பெரிய கூட்டத்திற்கு நம்பிக்கை தருபவனாக இருக்க வேண்டும். அவரைப் பார்த்தாலே அனைவரும் தன்னம்பிக்கை பெற வேண்டும்.
டிசம்பர் 2009-க்குப்பிறகு தாங்கள் இப்பொழுது பார்க்கும் துறையிலேயே இன்னும் நல்ல பதவியில் அமர்வீர்கள்.
எ‎ன்னுடைய நாய் ரொம்ப புத்திசாலி தெரியுமா! காலையில பேப்பர்கார‎ன் பேப்பர் போட்டவுடனே எடுத்துக் கொண்டு வந்து எ‎ன் கையில கொடுக்கும்
கவிபாடும் புலவர்கள் கப்பம் சமர்ப்பித்துப் புவிபுரக்கும் சிற்றரசர் புடைசூழ வாழ்ந்திட
ஐயையோ! வாடிக்கையாளர் பற்றிய தகவல்களையெல்லாம் நாங்கள் வெளியிடக்கூடாதே! ரகசியக் காப்புக் கொள்கை இருக்கிறதே!
ஒரு தாத்தாவும் பாட்டியும் என்னைப் பார்த்துவிட்டு குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள். என் கதையைப் பார்த்துவிட்டுத்தான் பேசுகிறார்கள் என்று நினைத்து பக்கத்தில் போய்க் கேட்டேன்.
சிறிய ஏரி ஒன்றும் இருக்கும். இமயத்தின் செடர் மரங்கள் நிறைந்த காடுகள், எங்கு பார்த்தாலும் மலர்கள், மலர்கள், மலர்கள்!
வன்முறை கொண்ட செய்திகளின் மீது மையம் கொள்ள வேண்டாம் எனப் பத்திரிகைகளுக்கும் வேண்டுதல் விடுப்போம்.
அதில் 2.7லி என்னும் மிகச் சிறிய அளவு குறைந்தாலும் டிஹைரேஷன், உடலில் எரிச்சல், நடுக்கம், தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும்.
'நீ மிட் ஆன்ல நில்லு, நீ மிட் ஆஃப் ல" என்றவாறு சொல்லி வந்தவன் என்னிடம் வந்தவுடன், நீ 'சில்லி' என்றான். எனக்கு வந்ததே கோபம். "நீ சொல்லித்தானே நான் ஆட வந்தேன். இப்போது நீ என்னை சில்லிங்கறே? நான் வரமாட்டேன்" என்று அடம் பிடித்தேன்
முதல் நாள் முழுப் பாக்கைப் பூசாரியிடம் கொடுக்க வேண்டும். அதை தேவியின் பாதத்தில் வைத்தபின் பூசாரி அதைத் திருப்பித் தருவார். அதனைவீட்டில் வைக்க, நினைத்த காரியம் நடந்து விடுகிறதாம்! நினைத்தது நிறைவேறியவுடன் அந்தக் கொட்டைப் பாக்கை ஆலயத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின் தேவிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
சத்தியமா சொல்றேன் நான் சினிமால தான் இந்த மாதிரி காதலைப் பார்த்திருக்கிறேனே ஒழிய நிஜ வாழ்க்கையில் அது வரைக்கும் பார்த்ததில்லை.

Wednesday, March 18, 2009

"சாரல் 408"

"அவர் அடிச்சத நீ வேடிக்கை பாத்துட்டு நின்னியாக்கும்? யா அல்லா, சூதுவாது தெரியாத புள்ளய அடிச்சி வெரட்டி வுட்டுட்டீங்களே, எம்புள்ள எங்க போனானோ, என்ன ஆனானோ, ஒனக்குத் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லித் தேடச் சொல்லேம்மா. அதோட போலீஸ்லயும் எழுதி வையி. நா உசிரோட இருக்கப்பவே எம்புள்ளய இந்தப்பாடு படுத்திறியளே, நா போய்ச் சேந்த பெறகு அவன என்னவெல்லாஞ் செய்வீகளோ, நீதான் ஆண்டவனே எம்புள்ளயக் காப்பாத்தணும்."
காலம் கண் திறந்தால், புதிய திறமைகள் வெளிப்பட்டால் தமிழ்த் திரைப்படங்களிலும் நல்ல கதைகளை நாம் காணக் கூடும்! பொறுத்திருப்போம்; காலம் மாறும்!
 
அம்மா என்றே கீழ்வீழ பொங்கும் கருணைத் தேவியளின் பங்கயத் தாள்கள் கரம் பற்றும்
வடக்கே நல்ல பாடல்களை தந்தது போல நமக்கும் சுவை நிறைந்த கானங்களை அள்ளித் தரட்டும்
தேனடை நிறைவதற்காகக் காத்திருக்கிறான், ஒருவன்; அவன் வருகைக்காகக் காத்திருக்கிறது, அவனது குடும்பம், பசித்த வயிறுகளோடு!
இந்த டூயட் ஆராய்ச்சி இது போன்ற வியாதிகள் பரவுவதைத் தடுக்க உதவி செய்யும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
உண்மையான தலைவர்கள் தோல்வியின் போது பொறுப்பைத் தாங்களே ஏற்றுக் கொள்வார்கள்.
 
16 வெள்ளிக்கிழமைகள் தோறும் தொடர்ந்து இல்லத்தில், துளசி பாடலைச் சொல்லி திருமகள் படம் முன் தீபமேற்றி வர, திருமணம் ஜுலை மாதத்திற்குள் கை கூடிவிடும்.
"போலீஸ்கார மடையனுங்களா! எங்க சரக்கை புடிச்சதுக்கு பதிலா உங்களைப் பிடிக்க இது எங்க ப்ளான்டா! ஏன்யா சிங்கப்பெருமாளே, யாருயா இந்த ஏட்டு? இவரும் ஏன் இங்க வந்து மாட்டிக்கணும்?" என்றான் நக்கலாய். விஜயன், "ராத்திரியே வீட்டுக்கு ஆளுங்களை அனுப்பறேன்னு சொன்னீங்களே பாஸ்!"
மிக்சியில் தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலை, உப்பு மற்றும் வதக்கிய பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு அரைத்து எடுக்கவும். கடைசியாக கடுகு, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பைத் தாளித்துச் சேர்க்கவும். புதினா இலைகளையும் விரும்பினால் தாளிக்கையில் சேர்க்கலாம்.
'நான் புனிதமானவன், என்னைத் தொடாதே..' இப்படியே நூறாண்டு காலம் சென்றால் நம்மில் பெரும்பாலோர் பைத்தியக்கார விடுதியில்தான் இருப்போம்!"
 
ஆமாம்; 6400 ஏக்கர் நிலம் மைட்டாஸ் வசம் இருக்கிறது என்றோமே, அதை விற்றவர்கள் நிலத்தின் உண்மை சொந்தக்காரர்கள்தானா? பத்திரங்கள் எல்லாம் சரியானதா?
இங்கு நண்பர்கள் ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டாலும் சரி, தொலைபேசியில் பேசிக்கிட்டாலும் சரி, 'எப்படி இருக்கீங்க' என்று கேட்பதில்லை. 'உங்க கம்பெனி நிலைமை எப்படி இருக்கு? எவ்ளோ பேருக்கு நோட்டீஸ் கொடுத்திருக்காங்க?' என்றுதான் பேசிக்கறாங்க
தனுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பையும் பாராட்டுக்களையும் பெறுவார்கள்.
சில சமயம் மனசுல ஒருத்தர் நுழைஞ்சவுடனே மனசு தானா பூட்டிக்கும். உள்ள இருக்கிறவங்களை வெளியவும் விடாது. வேற யாரையும் உள்ளயும் விடாது.

Tuesday, March 10, 2009

"சாரல் 407"

"என்னோட நாய் மட்டும் இல்லன்னா என்னக் கொலையே பண்ணிப் போட்டுட்டுப் போயிருப்பானுங்க சாமி"
 
நல்லவேளை! "எப்படித் துப்பாக்கியால் சுட்டாய், சுட்டுக் காட்டு" என்று சொல்லவில்லை!
நம்ம உடம்புக்குள்ள இருநூறுக்கும் மேல எலும்புகள் இருக்கு.. தெரியுமா? மெதுவாச் சொல்லுங்க டாக்டர். வெளியே எ‎ன்னோட நாய் உட்கார்ந்திருக்கு
 
அவர் இந்துவல்லர்; துறவியல்லர்; பிராமணர் அல்லர்; சூத்திரரிலும் கடைப்பட்டவர்; மேலை நாடுகளுக்குச் சென்றும் தம்மை இந்து என்று சொல்லிக் கொள்கிறார்
 
'குரங்குகள் சீதையின் ஆபரணங்களை மாறி மாறி அணிந்தது போல என் உறவினரும் மாறி மாறி அணிந்தனர்'
"பேரன் கடுதாசியைப் பார்த்திட்டீல்ல... இனிப் பொழைச்சுக்குவே"
என்னவன் கையாலே என் இறுதிச் சடங்கும் முடியட்டும்!
நமது ஆதங்கம். இந்த நாட்டில், தவறு செய்பவர்கள், தவறைக் கண்டு கொள்ளாமல் விடுபவர்கள், தவறுக்குத் துணை போகிறவர்கள் யாரும் வெட்கப்படுவதில்லை! இறைவா, என் செயக் கருதி இருக்கின்றாய் எம் பாரத நாட்டை?
எப்படி இருந்த ஊர் அது!! சோழ காலத்தில் ராஜேந்திரன் சுமத்ராவை நோக்கிப் படையெடுத்த போது, அவனை வியக்க வைத்த ஊர். கருணாகர பல்லவன் கலிங்கத்தின் மீது படை எடுக்கும் முன்பு வசித்த ஊர்.
உன் வெட்கத்தில் வழிந்த வர்ணம் கொண்டும் நமக்கான வீட்டைக் கட்டுவோம்...
பின் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். விருப்பப்பட்டால் பச்சை மிளகாய் சேர்த்தும் வதக்கிக் கொள்ளலாம்
என்ன வரிகள், என்ன வரிகள் - அப்பப்பா! டோஷிபா என்றொரு பெண் வந்து ஹலோ சொல்கிறாளாம்
உங்க வீட்டு மகளிருக்கு அவங்களுக்கென ஒரே ஒரு மணி நேரமாவது ஒதுக்கிக் கொடுங்கள். பெண்ணாய் இருந்தால் குடும்பத்தினரிடம் புரிய வைத்து, ஒரு மணி நேரம் உங்களுக்காய்ச் செலவிடுங்கள்.
 
நட்சத்திரக் கோலம்
நண்பர் : ஷாப்பிங் செய்ததுக்கா உன்னை அரெஸ்ட் பண்ணினாங்க? ஜோ : ஆமா.. ராத்திரி அவங்க கடையை மூடினப்புறம் ஷாப்பிங் போனேன்

Tuesday, March 03, 2009

"சாரல் 406"

அவ‎ன் உலக மகா கஞ்சனாமே? ஆமாம்.. 'டீ'ல கொசு விழுந்தாக் கூட, அத எடுத்து, அது கிட்ட 'துப்பு.. துப்பு'‎னு சொல்வா‎ன்னா பாரேன்
சித்தர் மார்க்கம் வழி செல்வது என்பதும் அனைவருக்கும் வாய்க்காது. ஆன்மீகத்தொடர்புகள் மூலமும், அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலமும் வாழ்வில் நிறைவு அடையும் வாய்ப்பு தங்களுக்கு உள்ளது.
இறைவன் அவதரித்தது முக்கியமாக பாவிகளுக்காகவே, புண்ணியவான்களுக்காக மட்டுமே அல்ல
சொல்லுக செல்லில் பயனுடைய சொல்லற்க செல்லில் பயனிலாச் சொல்
நம் சந்தேகம் எல்லாம், கம்பெனி ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்துக்கு இவர்கள் ஸ்டேட்மெண்ட் அனுப்ப வேண்டுமே! அனுப்பவே இல்லையா? இல்லை என்றால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?
 
சோதனை யாவும் வென்றிடுவோம் - புது சோபிதம் அன்று வாழ்வுபெறும்.
 
உன்னை மிகவும் பிடிக்கும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் உனக்காகச் செய்ய முடியாது. வேண்டுமானால் நீ இறந்தபின் உன் கர்ம காரியங்களை நான் செய்கிறேன்.
ஒவ்வொரு வர்ணப்பொடிகளிலும் துல்லியமாய்த் தெரிகிறது உன் வெட்கம்..!
ஆஸ்கர் சிலைகள் முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட ஆண்டு 1928. வடிவமைத்தவர் எம்ஜிஎம் கலை இயக்குனரான செட்ரிக் கிப்பன்ஸ் என்பவர்.
விலங்கனைய நாடோடியாய் வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் தனக்கென்ற ஒரு இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு குழுவாக வாழ ஆரம்பித்தான்.
பெரிய அளவில் முதல் போட்டு, பல இயந்திரங்களை ஓட்டி, பல நூறு தொழிலாளர்களை நிர்வகித்து... எப்படி? எப்படி? என்று நீங்கள் மலைப்பது தெரிகிறது.
மற்றவர்களிடம் இல்லாத பல அரிய விஷயங்களை நமக்களித்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்
 
அந்த மெட்டுதான் இந்தப் பாடலுக்கு இன்ஸ்பிரேஷனோ என்று யோசிக்கக் கூட தோன்றுகிறது! ஆம், இன்ஸ்பிரேஷன்தான், நகல் இல்லை
இந்த நாட்டுல பிறந்து வாழ்ந்துட்டிருக்கிற ஒவ்வொரு உண்மையான மனுஷன் ஒடம்புலயும் மத நல்லிணக்க ரத்தந்தான் ஓடுது பாய் சாமி. நீங்க இந்துப் பாட்ட முணுமுணுக்கறீங்க. சாமிப் படங்கள ரசிக்கிறீங்க. நீங்க ஒரு உண்மையான இந்தியன்.
"இப்பவும் நான் தயார். இந்த மாதிரி நல்ல மனசு உள்ளவங்களுக்கு இவங்க நல்ல குணமே அவங்க வாழ்க்கையிலே ஒரு தண்டனையாக ஆகக் கூடாது.