Wednesday, September 16, 2009

"சாரல் 434"

"நா பெரியவனானப்பறம் மம்மி, ஃபாதர்ஸ் டே அன்னிக்கி, புது டிரஸ்ஸும் ஒரு வாக்கிங் ஸ்டிக்கும் வாங்கிக்கிட்டு, ஓல்ட் ஏஜ் ஹோம்க்குப் போவேன், டாடியப் பாக்க."
தொடுதல், அழுத்தம், வலி, வெப்பம், குளிர்ச்சி ஆகியவற்றை அவை அவ்வப்போது மூளைக்கு அனுப்பி உடலின் சுற்றுச்சூழலைப் பற்றித் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.
"பழசையெல்லாம் மறந்துட்டு புதுவாழ்க்கையை ஆரம்பிக்காம என்னைப் பழிவாங்கறியோன்னு உன்மேல எனக்கு வருத்தம்தான்"
'அப்பாவுக்கு அறுபதினாயிரம் மனைவிகள் இருந்தும் சந்தேகமில்லை; ராமனுக்கு ஒரு மனைவி ஆயிரம் சந்தேகங்கள்!
ஹோ ஹோ வென இறைந்திடும் விண்ணகம் மறைந்த தாயை வா வா வென அழுது விளித்திடும் பிள்ளை
தங்களின் உள்ள பிரதிபலிப்புதான் தங்கள் வாழ்க்கை. ஆக்கபூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்
கண்ணதாசன் பாடல்கள் எழுத அதை டி.எம்.எஸ் பாட டூயட்டில் பி.சுசீலா இணைய அந்தப் பாடல்கள் இன்றளவும் விரும்பிக் கேட்கப்படும் பாடல்களாக ஆகி விட்டன
நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் –என்னை நல்கும் உரிமை அவர்க்கில்லை
என் முயற்ச்சியில் கிடடாத வெற்றி. ஒரு பெரியவரைக் கால்களில் விழ வைத்து குரூர திருப்தியில் சமாதானம் அடைந்த மிருகம்
வண்ணமிகு காட்சியாம் இயற்கைஎழில் சொற்களால் வருணிக்க வியலாது காண்!
பொதுச் சொத்தைச் சேதப்படுத்தலாம் என்கிற 'அறிவு' யாருக்கும் உண்டாகாத காலம்!!
பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை
'இதுவும் கடந்து போகும்'னு துன்பம் வரும்போது நினைச்சுக்கோங்க, எல்லாமே நல்லதுக்கா மாறும்.
இந்திய உணவுவகைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் மஞ்சள் அல்சைமர்ஸ் நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று தெரிவித்த கலிஃபோர்னியா பல்கலைக் கழக ஆய்வு ஒன்று, இதனால்தான் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகமில்லை என்று அடித்துச் சொல்கிறது
மென்மையான காதல் பாடலை சின்மயியும் உன்னிகிருஷ்ணனும் பாடியிருக்கிறார்கள். தமிழ் நன்கறிந்த பாடகர்கள் பாடும்பொழுது கேட்பதற்கு எத்தனை அழகாக இருக்கின்றது!!

Thursday, September 10, 2009

"சாரல் 433"


ஆரஞ்சு, பிற பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றிலிருந்து இந்த வைட்டமினை நாம் பெற இயலும்.
என் அம்மாவும் நானும் எவ்வளவோ உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கோம். நான் மனசார எந்தத்தப்பும் பண்ணலை. இனிமே அவனுக்கா தோணினாத்தான் உண்டு, நான் எதாவது சொன்னா அவனுக்கு வைராக்கியம் இன்னும் ஏறத்தான் செய்யும்'னேன்.
"அந்தக் கடக்கிப் போங்க. பொடவயச் சேய்ஞ்ஜ் பண்ணிரு வோம். ஒரு நூறு எரநூறு கூட இருந்தாலும் பரவாயில்ல, பொடவ பாக்க லட்சணமாயிருக்க வேண்டாமா?"
என்னைப் பத்தியோ, உங்க மகளைப் பத்தியோ, எப்படி சமாளிச்சோம்.... எப்படி வாழறோம்னு புரிஞ்சுக்கிற இயல்பான கணவனா... தகப்பனா.. மாறின மன நிலை இன்னமும் வரலே உங்களுக்கு
சிறப்புறு மணியே செவ்வாய் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள் செவ்வாய் மலரடி போற்றி! - அங்காரகனே அவதிகள் நீக்கு
நவரசங்களுக்கும் ஏற்றபடி காதல், கோபம், பயம், சோகம் என வெவ்வேறு உணர்ச்சிகளுக்கான வெற்றிப் பாடல்களைப் பாடியவர் என்ற சிறப்பிலும் அவர் தனியிடம் பெறுகிறார்
வளமை மிகு தமிழ் மொழியின் இனிய பல குண நலனை வாழ்த்தி உல(கு) உய்ய மகிழ்வோம் !
நம்ம அரசு கொண்டு வரப்போற சமச்சீர் கல்வி பற்றி என்ன நினைக்கிறீங்க? ஒருபக்கம் வரவேற்கத்தக்கதுதான். இதனால் கிராமப்புற மாணவர்களும் தங்கள் அறிவை நிரூபிக்க முடியும்
வெள்ளை நிறத் துணிகளை துவைக்கும் முன் எலுமிச்சைச் சாறு கலந்த வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து துவைக்க, துணிகளின் நிறம் பளிச்சிடும்.
விண்டோவைக் குளோஸ் பண்ணிடுங்க.. பிரவுசர் விண்டோவைச் சொன்னேன்; ஜன்னலைப் போய்க் க்ளோஸ் பண்றீங்க..?!
'வாழ்க்கை நிகழ்கணத்தில் மட்டுமே. நிகழ்கணத்துக்கு வெளியே இதுவரை வாழ்க்கை இருந்ததுமில்லை; இனி இருக்கப் போவதுமில்லை.'
எளியவர் யாரும் எளியவராய் நின்றிடவே வல்லமையுடன் திகழ்கிறோம் நாம்
"வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாமா? இந்தப் பாண்டவர்களை உன் தந்தை கண்ணுக்குக் கண்ணாகக் கருதவில்லையா? இவர்கள் உங்கள் சகோதரர்கள்தாமே? இவர்களை நாணி வெட்கப் பட வைக்கலாமா?"
"அந்தப் போலீஸ்காரருடன் யாராவது பேசிக் கொண்டிருந்தே இருந்து விட்டு திடீர் என்று அவர் எதிர்பார்க்காத போது அடித்திருக்கலாம்...."

Tuesday, September 01, 2009

"சாரல் 432"


"அம்மா, ஒங்க மாதர் சங்கத்துல சொல்லி, செல்லப் பிராணிகளோட பிறப்புரிமையையும் சுதந்திரத்தையும் நிலை நாட்டக் கூடாதா அம்மா, இதுகூட ஒரு சமூக சேவை தானே."
 
இவை தீவிரமாகப் பணியாற்றினால் நமது கைகள் மற்றும் கால்கள் ஆகியவை நீண்டும் பெரிதாகவும் வளர்ச்சியுறும்
சம்பிரதாயமாய் என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லாதே. நீ சொல்லாமலேயே எனக்குத் தெரியும்..."
இந்தக் காலம் தங்களுக்கு, வெளிநாட்டுக்கு செல்லுதல் மற்றும் திருமண பாக்கியம் ஆகிய இரண்டையும் தந்துவிடும்
எம்.ஜி.ஆர் சுழன்று சுழன்று தான் ஆணையிட்டால் என்ன என்ன நடக்கும் என்பதைப் பாடியவாறே தெரிவித்தபோது ஜனங்கள் சொக்கிப் போனார்கள்
மனிதத் தத்துவத்தின் மகோன்னத நிலைகளால் ஆன தெய்வ நாட்டிற்கும், அதன் மிகத் தாழ்ந்த படிகளால் சமைந்த நரகத்திற்கும் இலக்கியம் நம்மை அழைத்துச் செல்கிறது
வனத்திற்கு நடுவில் மலைகள் சூழ எங்கும் பசுமைதான்! நம் மனதிலும் சொல்ல முடியாத ஒரு உணர்வும் மன அமைதியும் ஏற்படுகின்றன
நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று சொல்கிறாயே என்பதற்கு,"காது காது என்றால் லேது லேது என்கிறாயே" என முணுமுணுப்பவர்கள் உண்டு.
"அதனாலென்ன? எவ்வளவுநாள் நீ தனியாக இருக்க முடியும்? நீ என்னையே நினைத்துக்கொண்டிரு என்று க்ரிஷ் எப்போதும் சொன்னதில்லையே."
உன் ஒவ்வொரு அடியிலும் இடதுபுறம் உடைந்து கொண்டு நான்!
ஒரு கணம் உற்றுப் பார்த்து விட்டு அலறினான், "அட, வெங்கட்ரமணியாடா நீ? எப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டே? கன்னம் எல்லாம் குழி விழுந்து.. அந்த நாளில் ஜெமினி கணேசன் மாதிரி இருப்பியேடா?!"
கலாசாரப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் அடக்குமுறையோ வன்முறையோ இத்தகைய விவகாரங்களுக்கு என்றும் தீர்வாக முடியாது. மாறாக, விளைவுகள் குறித்த விழிப்புணர்வும், தனிமனித பொறுப்புணர்ச்சியுமே இப்பிரச்சினை வேரூன்றாமல் தவிர்க்க உதவும்.
"அவர்கள் உள்ளே வந்து தேடக் கூடும் என்ற சந்தேகம் வந்த போது அந்த அறையில் மடித்து வைத்திருந்த இந்த உடையை உங்கள் அனுமதியில்லாமல் எடுத்துப் போட்டுக் கொண்டேன். மன்னிக்கணும். நான் இதைத் துவைத்து உங்களுக்குத் தந்து விடுகிறேன்...."
"ஒருவன் ஆடப் பணயம் இன்னொருவன் வைப்பது எப்படி சரியாகும்?" என்று யுதிஷ்டிரன் கேட்ட கேள்விக்கு, "மாமன் ஆடப் பணயம் மருகன் வைக்கொணாதோ? இதில் வந்த குற்றமேதோ?" என்று ஒரே அடியாக அடித்து விட்டான் துரியோதனன்.
பூர்வீகச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்த பிரச்சனைகள் மாறி மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ள காலமாகும்.