Monday, May 30, 2005

மாநாடு பார்க்கலையோ மாநாடு?

மாநாடு பார்க்கலையோ மாநாடு?
திருமலையின் காரசாரமான மகாநாடுகளின் கட்டுரைநதி மூலம் ரிஷி மூலத்தைப் பார்க்காதே என்றஅறிவுரையையும் மீறி மாநாடுகளின் மூலத்தைப் பார்த்துவிட்டது. பார்த்ததின் பயன் - திடுக்கிடும் உண்மை தான்!தொண்டர்களின் சோகம் சொல்லவும் கொடிதே!
http://www.nilacharal.com/tamil/politics/tamil_politics_210.html

தரித்திரம் போக்க ஒரு சாத்திரமா!
அட, பெங்சுயிக்கு இவ்வளவு மகிமையா! காம்பஸை வைத்து வடகிழக்கு
மூலையைக் கண்டு செலவில்லாத நீர் பாத்திர முறையைக்
கையாள வேண்டியது தான், இனி! ச.நாகராஜன் தன்
பணியைத் தொடரட்டும். இன்னும் வேண்டும் பெங்சுயி
கடல் துளிகள்!!
http://www.nilacharal.com/tamil/specials/fengshui_210.html

கலக்கல் கலெக்ஷன்
கலக்கல் கலெக்ஷன் செம கலக்கலாக இருக்கிறது! அரசியலில்
யாத்திரை கிளம்பி டி.வி சார்ம் சேர்த்து மவுண்ட் ரோடு மஹா
விஷ்ணுவிற்கு ஏற்பட்ட போட்டியைப் பார்க்க வைத்து,
திருச்செந்தூர் முருக தா¢சனத்தால் புண்யம் சேர்த்து,
ஸ்டாக் மார்க்கெட் டிப்ஸ¤டன் எஸ்.எம்.எஸ் குறும்பு கலக்க
- உண்மையில் கலக்கல் கலெக்ஷன் சூப்பர் கலெக்ஷன் தான்!
யார் அந்த கலெக்டர் - பார்க்க வேண்டுமே!

http://www.nilacharal.com/tamil/current/tamil_news_210.html

Monday, May 23, 2005

ரஜினியைத் தாக்கினாரா பாக்கியராஜ்?

தமிழ்த்திரை சேனல் துவக்க விழாவில் யதார்த்தமாக பாக்கியராஜ் ரஜினியை
எடுத்துக்காட்டா சொல்ல உடனே அதுல ஒரு சர்ச்சை கிளம்பிடுச்சுங்க. பாகியராஜ் அதுக்கு விளாக்கம் சொல்லிருக்கார். ரஜினி,சிம்பு, stock market - னு இது ஒரு கலக்கல் collection:
http://www.nilacharal.com/tamil/current/tamil_news_209_1.html

டாலரின் மதிப்புக்குக் காரணம் பிரமிட் படமா?

பிரமிடுகளைப் பார்த்து பிரமிக்காத மனிதர்கள் இருக்க முடியாது. இந்தப்
பிரமிடுகளுக்குள்ள எவ்வளவு சக்தி மறைஞ்சிருக்குன்னு எவ்வளவோ ஆராய்சிகள் நடந்திருக்கு. இன்னும் நடந்துகிட்டே இருக்கு. பிரமிடாலஜின்னு ஒரு தனி துறையே உருவாகி இருக்குன்னா அதில எவ்வளவு ஆராய்ச்சிகள் நடக்கும்!!! பிரமிடுகளின் சக்தி பற்றிய இந்தக் கட்டுரையில் அமெரிக்க டாலர்
நோட்டில் பிரமிட் படம் இருப்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கு:
http://www.nilacharal.com/tamil/specials/pyramid_207.html

கற்பா கத்தரிக்காயா?

கற்பு பற்றி எவ்வளவுதான் பேசினாலும் மேட்டர் இருந்துகிட்டேதான் இருக்கு. உலகம் முழுவதும் தமிழர்கள் பரவி இருக்கும் நிலையில் நமது தமிழ்ப் பண்பாட்டுக்கு அடிப்படையாகக் கருதப் படும் கற்பு என்கிற கான்செப்ட் எந்த நிலையில் இருக்குன்னு தெரிஞ்சுக்க இந்தக் கட்டுரையைப் பாருங்க:

http://www.nilacharal.com/tamil/specials/karpu_190.html

Thursday, May 19, 2005

பானுமதி ஒரு அற்புதமான கலைஞர்

நடிகை பானுமதி ஒரு அற்புதமான கலைஞர். நடிப்பு மட்டுமல்லாமல் இசை, இயக்கம், தயாரிப்பு என்று சகலத்திலும் சிறந்து விளங்குகிறவர். தமிழ்ப் பெண்களுக்கு நல்ல இன்ஸ்பிரேஷன். அவரைப்பற்றிய ஒரு விவரமான கட்டுரை:
http://www.nilacharal.com/tamil/thirai/tamil_bhanumathy_208.html

Wednesday, May 18, 2005

நம்ம ஊர்ல இது சாத்தியமா?

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் டோனி பிளேயரை நார் நாராய்க் கிழித்துத் தொங்கவிட்டார்கள் பொது மக்களும் எதிர்க்கட்சியினரும். ஆனாலும் கண்ணியம் மாறாமல் பதிலளித்து வெற்றியும் பெற்றுவிட்டார் அவர். தேரிதலில் தோல்வியுற்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி விலகி விட்டார். இதெல்லாம் நம்ம ஊர்ல எப்ப நடக்கும்னு ஏங்க வைக்கும் கட்டுரை:
http://www.nilacharal.com/news/specials/eng_UKelection_208.html

காதலைக் காவல் நிலையத்தில் பதிவு செய்யுங்கள்

பெண்கள் காதலரால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க காதலன் பெயரை காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று - இப்படிச் சொன்னது ஒரு ஐ.ஜின்னா நம்ப முடியுதா? நல்ல காமெடியா இருக்கா? சில பேருக்கு இது நியாயமாவும் படுது.

http://www.nilacharal.com/tamil/specials/tamil_love_208.html