Monday, April 24, 2006

நிலவுச் சுடர் 2006 - உங்கள் படைப்புத் திறனுக்கு சவால்!

நண்பர்களே, நலம்தானே? வரும் மே பதினெட்டாம் தேதி நிலாச்சாரல் தனது ஐந்தாவது ஆண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது. இந்தப் பயணத்தை மிக இனிதாக அமைத்துக் கொடுத்த தங்கள் அனைவருக்கும் எங்கள் பணிவான நன்றிகள் பல. ஐந்தாமாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக மே மாத இதழ்கள் அனைத்துமே விசேஷமாக அமையும். குறிப்பாக சாரல் 260 பல பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி அதிவிசேஷ இதழாக வெளிவரும்.

இச்சிறப்புக்களோடு வாசகர்களின் படைப்புத் திறனைத் தூண்டிவிடும் நோக்குடன் நிலவுச் சுடர் 2006 என்ற போட்டியை நடத்த விழைந்துள்ளோம். நிலாச்சாரல் வாசகர்கள் அனைவரையும் இந்தப் போட்டியில் பங்கு கொண்டு ஊக்கமளிக்கும் பலவித பரிசுகளை அள்ளிக் கொள்ள மனதார அழைக்கிறோம்.

இந்தப் போட்டியில் பங்கு கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் படைப்புகளை விரைவாக எங்களுக்கு அனுப்ப வேண்டியது தான். படைப்புக்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மே 7. படைப்புக்களின் உட்கருத்துக்கும் வடிவுக்கும் வரைமுறை இல்லை. படைப்புகளை அனுப்பும்போது நிலவுச் சுடர் 2006 போட்டியில் கலந்து கொள்ள உங்கள் ஒப்புதலைச் சேர்க்க மறந்து விடாதீர்கள்!

இப்போட்டியில் பங்குபெரும் படைப்புகளில் மிகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு ட்ரை ஸ்டார் வழங்கும் ரூ3000 மதிப்புள்ள பரிசு காத்திருக்கிறது. மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படைப்புக்களுக்கு நிலா ஷாப் வழங்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு. இவை மேமாத இதழ்களிலேயே பிரசுரமாக வாய்ப்புண்டு. பரிசு பெறாத படைப்புகளும் நிலாச்சாரலில் பிரசுரமாகலாம்.

மேல் விபரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள சுட்டிக்குச் செல்லவும்:
http://www.nilacharal.com/notice/nilacharal_contest.asp

Friday, April 21, 2006

'குட்டி நிலவு 2006' போட்டி - பூஞ்சிட்டுப் பிள்ளைகளே!

பூஞ்சிட்டுப் பிள்ளைகளே,

நலம்தானே?

வரும் மே பதினெட்டாம் தேதி நிலாச்சாரல் தனது ஐந்தாவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறதல்லவா? அதற்காக உங்களுக்கெல்லாம் ஒரு போட்டி நடத்தி பரிசுகள் தரலாம் என்றிருக்கிறோம். ஆவலாக இருக்கிறீர்கள்தானே? மேலே படியுங்கள்


இந்தப் போட்டியில் நீங்கள் எப்படி பங்குகொள்ளலாம்?

* படம் வரைந்து அனுப்பலாம்

* கதை எழுதி அனுப்பலாம்

* கவிதை எழுதலாம்

* பாட்டுப் பாடி அல்லது நடனமாடி பதிவு செய்து அனுப்பலாம் (அப்பா அம்மாகிட்டே கேளுங்க எப்படி செய்யறதுன்னு)



எப்படி அனுப்புவது?

* Chittu@nilacharal.com என்கிற மின்னஞ்சலுக்கு உங்கள் கோப்புகளை அனுப்ப வேண்டும்.

* அனுப்பும்போது உங்களுடைய பிறந்த தேதியையும், பெயர் மற்றும் முகவரியைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.

* 'குட்டி நிலவு 2006' என்று மின்னஞ்சலுக்குத் தலைப்பிட்டு அனுப்புங்கள்.

நீங்கள் என்ன செய்தாலும் உங்களுடைய ஆக்கங்கள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி மே 7, 2006..


பரிசுகள்:

மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்படும்:

முல்லைப் பிரிவு: மே 18,1999 க்குப் பின் பிறந்த குழந்தைகளின் படைப்புகள்.

மல்லிகைப் பிரிவு: மே 19,1996 - மே 18, 1999 க்கு இடையில் பிறந்த குழந்தைகளின் படைப்புகள்.

தாமரைப் பிரிவு: மே 19,1993 - மே 18 , 1996க்கு இடையில் பிறந்த குழந்தைகளின் படைப்புகள்

மூன்று பிரிவிலும் ஒவ்வொரு பரிசுகள் வழங்கப்படும். பரிசுகள் நிலாஷாப் சார்பில் வழங்கப்படும். சில ஆறுதல் பரிசுகள் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம்.


விதிமுறைகள்:

1. போட்டியில் பங்கேற்கும் படைப்புகள் வேறு எந்த ஊடகத்திலும் வெளிவந்திருக்கக் கூடாது.

2. குழந்தைகளின் முயற்சியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.

3. மேற்கண்ட இரு உறுதிமொழிகளையும் பெற்றோர்கள் தரவேண்டும்.

4. படைப்புகளின் மீதான வாசகர்களின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படுமானாலும்
நிலாக்குழுவின் முடிவே இறுதியானது.

5. படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் மே 7, 2006. போட்டியின் முடிவு ஜுன் முதல் வார இதழில் வெளியாகும்.

6. போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் பெறாத படைப்புகளைப் பிரசுரிக்க நிலாச்சாரலுக்கு
உரிமை உண்டு. இப்படைப்புகளுக்கு வழக்கம் போல சன்மானம் வழங்கப்படமாட்டா.

உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

அன்புடன்
நிலாக் குழுவினர்

..........................................................................................................................

மற்ற குறிப்புகள்:

போட்டிகளுக்குப் பரிசுகள் வழங்க விரும்புபவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

வாசகர்கள் இந்தப் போட்டியில் பங்கெடுக்கவில்லை என்றாலும் படைப்புகளை விமரிசித்து பரிசுகளை வெல்லலாம். விவரங்களுக்கு கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்:

http://www.nilacharal.com/notice/feedback_contest.asp

நிலாச்சாரலுக்கு படைப்புகளை அனுப்பும் பொது விதிகளுக்கும், வழிமுறைகளுக்கும் கீழே உள்ள தொடர்புகளைச் சொடுக்கவும்.
http://www.nilacharal.com/write.html
http://www.nilacharal.com/notice/copyright.asp



யோகா, கர்நாடக சங்கீதம், தமிழ் நாடகங்கள்,வேத மந்திரங்கள், பரதநாட்டியம் - இவை பற்றிய குறுந்தட்டுக்கள் வாங்க நிலாஷாப்புக்குச் செல்லுங்கள்:
http://www.nilashop.com/
அண்மையில் தமிழ் மின் நூல்களும் நிலாஷாப்பில் விற்பனைக்குச் சேர்க்கப்பட்டுள்ளன.

Monday, April 17, 2006

நிலவுச் சுடர் 2006 - உங்கள் படைப்புத் திறனுக்கு சவால்!

நண்பர்களே,

நலம்தானே?

வரும் மே பதினெட்டாம் தேதி நிலாச்சாரல் தனது ஐந்தாவது ஆண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது. இந்தப் பயணத்தை மிக இனிதாக அமைத்துக் கொடுத்த தங்கள் அனைவருக்கும் எங்கள் பணிவான நன்றிகள் பல.

ஐந்தாமாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக மே மாத இதழ்கள் அனைத்துமே விசேஷமாக அமையும். குறிப்பாக சாரல் 260 பல பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி அதிவிசேஷ இதழாக வெளிவரும்.
இச்சிறப்புக்களோடு வாசகர்களின் படைப்புத் திறனைத் தூண்டிவிடும் நோக்குடன் நிலவுச் சுடர் 2006 என்ற போட்டியை நடத்த விழைந்துள்ளோம். நிலாச்சாரல் வாசகர்கள் அனைவரையும் இந்தப் போட்டியில் பங்கு கொண்டு ஊக்கமளிக்கும் பலவித பரிசுகளை அள்ளிக் கொள்ள மனதார அழைக்கிறோம்.

இந்தப் போட்டியில் பங்கு கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் படைப்புகளை விரைவாக எங்களுக்கு அனுப்ப வேண்டியது தான். படைப்புக்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மே 7. படைப்புக்களின் உட்கருத்துக்கும் வடிவுக்கும் வரைமுறை இல்லை. படைப்புகளை அனுப்பும்போது நிலவுச் சுடர் 2006 போட்டியில் கலந்து கொள்ள உங்கள் ஒப்புதலைச் சேர்க்க மறந்து விடாதீர்கள்!

இப்போட்டியில் பங்குபெரும் படைப்புகளில் மிகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு ட்ரை ஸ்டார் வழங்கும் ரூ3000 மதிப்புள்ள பரிசு காத்திருக்கிறது. மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படைப்புக்களுக்கு நிலா ஷாப் வழங்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு. இவை மேமாத இதழ்களிலேயே பிரசுரமாக வாய்ப்புண்டு. பரிசு பெறாத படைப்புகளும் நிலாச்சாரலில் பிரசுரமாகலாம்.

விதிமுறைகள்:

1. போட்டியில் பங்கேற்கும் படைப்புகள் வேறு எந்த ஊடகத்திலும் வெளிவந்திருக்கக் கூடாது.

2. படைப்புக்கள் உங்கள் சொந்தக் கற்பனையில்/ படைப்புத் திறனில் உருவானவையாக இருக்க வேண்டும்.

3. மேற்கண்ட இரு உறுதிமொழிகளையும் படைப்பாளிகள் தரவேண்டும்

4. படைப்புகளின் மீதான வாசகர்களின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படுமானாலும் நிலாக்குழுவின் முடிவே இறுதியானது

5. படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் மே 7. போட்டியின் முடிவு ஜுன் முதல் வார இதழில் வெளியாகும்.

6. போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் பெறாத படைப்புகளைப் பிரசுரிக்க நிலாச்சாரலுக்கு உரிமை உண்டு. வழக்கமான படைப்புகளைப் போலவே இவற்றுக்கு சன்மானம் கிடையாது

போட்டியில் பங்குபெற இயலாத வாசகர்கள் படைப்புகளை விமரிசித்து பரிசுகளை வெல்லலாம். விவரங்களுக்கு கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்:
http://www.nilacharal.com/notice/feedback_contest.asp


நிலாச்சாரலுக்கு படைப்புகளை அனுப்பும் பொது விதிகளுக்கும், வழிமுறைகளுக்கும் கீழே உள்ள தொடர்புகளைச் சொடுக்கவும்:
http://www.nilacharal.com/write.html
http://www.nilacharal.com/notice/copyright.asp

உங்கள் படைப்புகள் நிலாச்சாரலின் மே மாத இதழ்களை சிறப்படையச் செய்யும் என்பதில் எங்களுக்குச் சிறிதும் சந்தேகமில்லை.
உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

அன்புடன்

நிலாக் குழு