Tuesday, February 24, 2009

"சாரல் 405"

என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் மனதில்? நானும் ஒரு மனுஷிதானே! எத்தனை இழப்புகளைத்தான் தாங்குவது?
தமிழ் முனைப்புடன் எழுந்தது எதனாலே? அது மொழிக்குள தனிக்குணம் அதனாலே
 
மாமா.. உங்க பொண்ணை சினிமாவுக்கு கூட்டிட்டுப் போவட்டுமா?" "எ‎ன்ன.. திமிரா?" "இல்ல மாமா.. 'தெனாவட்டு'. 'திமிரு' போயி ரொம்ப நாளாச்சு
பணத்தை இன்னொரு பெயருக்கு மாற்ற எலக்ட்ரானிக் வங்கி முறையை விட வேகமானது திருமணம்தான்!
தினமும் பாம்பன் சுவாமிகள் அருளிய ஷண்முகக் கவசம் படித்து வாருங்கள். புத்திர பாக்கியம் உண்டாகும்.
ஆசிரியரின் பாடத்தில் அசோகன் மாணவனின் மனதில்... மரம் வெட்டும் தந்தை
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ் சிறுகதைகள் பேசி... வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
ப்ரணவ் மணமகனுக்கான இடத்தில் கையெழுத்துப் போட்டான். கையிலிருந்த குழந்தையை ப்ரணவ் கைகளில் தந்தாள் ஸ்மிருதி. கையெழுத்துப் போட்டாள்.
புத்தகத்திலும் வரவு இல்லை. பேங்க்கிலும் வரவு இல்லை. எனவே பேங்க் ரிகன்சிலியேஷன் என்ற ஸ்டேட்மெண்டில் இந்தத் தொகை வரவே வராது.
உயிரற்ற சிலை போல் சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். கண்டதை உண்மை என்று நம்ப அவளால் இப்போதும் முடியவில்லை....
உங்களுக்குப் புரியாது பெரியப்பாமாமா.. சில பேரை ரொம்பவும் சேர்த்துக்கக் கூடாது. வைக்க வேண்டிய இடத்துல வச்சிரணும். இல்லே.. நமக்குத்தான் பிரச்சனை...! இப்ப..நான் என்ன பழைய விஜியா.. ஒருத்தரோட மனைவி இல்லியா..?
கணினிப் புரட்சிக்குச் சற்று முன்னால் கூட இந்தியாவை ஒரு பாம்பாட்டிகள் தேசம் என்றுதான் மேலை நாடுகளில் கருதி இருந்தார்கள்.
"அவருடைய பெயரில் வைரமும் முத்தும்தான் இருக்கின்றன. ஆனால், அவர் ஒரு நவரத்தினம்" என்று கூறினார்.
காதை அடைக்காத இசை, நல்ல மெலடிகள், தாளம் போட வைக்கும் பாடல்கள் என்று ஒரு ஃபார்முலாவுக்கு வந்துவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ்! "இதற்கு முன்பு கேட்டது போலவே இருக்கின்றது" என்ற உணர்வை மட்டும் நீக்க மனிதர் பாடுபட்டால், எங்கேயோ போய்விடுவார்.

Wednesday, February 18, 2009

"சாரல் 404"

காதலுக்குக் கண்ணில்லை என்பது உண்மைதான். திருமணம்தான் கண்களைத் திறக்கிறது
குழந்தையின் 'அப்பன்' நான் என்று சொல்லாமல் ஆதரவாளன் நான் என்றானே! அந்த மட்டில் நிம்மதி
அலைமோதும் என் ஆசைகளை அப்படியே சொல்லிவிட, தொலைபேசியில் அழைக்கிறேன், தொலைவில் வாழும் உன்னை!
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, தாய்மாமனைக் கொல்லும் என்று புலம்பும் அறிவிலிகளே! அவன், கண்ணன் போல் கீதை சொல்வான் என்று மகிழ மாட்டீரா?
"சிவா சிவா" என்று இடைவிடாமல் தொடர்ச்சியாக சொல்லிப் பாருங்கள். "வாசி, வாசி" என்று வரும். "வாசி வாசி" என்று சொல்லுங்கள். "சிவா, சிவா" என்று வரும். வாசி என்றால் சுவாசம்
வாழ்க்கையில ஒங்கம்மா எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்காங்க, ஒங்கம்மாவுக்காக நா ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடலை
எதையும் வெளிநாட்டார் ஏற்றுக்கொண்டால்தான் தாமும் ஏற்றுக்கொள்ளும் இந்தியரும் விவேகானந்தரை ஏற்றுக்கொண்டனர்
அறிவு இருக்கிற இடத்துல ஆங்காரம் கண்டிப்பா இருக்கும்டா. அதை விடு. ஆர்த்தியோட பிறந்த நாள் வீடியோவைப் பார்த்தாயா
இரண்டாவது முறையாக, அவருக்கு இருபது வயதானபோது அவரின் உடல் ஒரு புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாம். இப்படி மூன்று முறையாக செத்துப் பிழைத்திருக்கிறார் மூட்டாட்டா! அடாடா
போர்டு மெம்பர்கள் ஒன்று பட்டு நின்று உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். இந்த நெருக்கடி நேரத்தில் அரசாங்க ஆதரவு பெற்றுத் தர, டி.ஆர்.பிரசாத் தகுதியானவர் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
பெரிசா ஒண்ணும் செய்ய வேணாம். அவங்களை அறுபது கி.‏மீ ஓடச் சொல்லுங்க.. போதும்
என்று அவர் சபையினை விளித்ததுதான் தாமதம், அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பேரும் எழுந்து நின்று கைகளைக் கொட்டி முழக்கினார்கள். அமைதி திரும்ப இரண்டு நிமிஷம் பிடித்தது
தேவைப்படும்போதெல்லாம் அப்பு காட்டாமணக்கு வேலியின் இடையில் மண்ணில் பள்ளம் பறித்து, அதன் வழியாக வெளியில் ஓடிவிடும்.
ராமனைப் பிரிந்து சீதை காட்டில் வால்மீகி ஆஸ்ரமத்தில் வாழ்ந்த இடம்தான் இன்றைய கோயம்பேடு. காட்டில் உள்ள கொடிய மிருகங்களின் தாக்குதலில் இருந்து தப்பித்திட ஆஸ்ரமத்தைச் சுற்றி இரும்பாலான வேலி அமைத்திருந்தார்களாம்

Tuesday, February 10, 2009

"சாரல் 403"

தெரியாத நாடு. கையில் அளவான பணம். வந்த காரியம் நிறைவேறுமா என்ற நிச்சயமும் இல்லை.
போக்குவழி ஞானவழி புனிதவழி காட்டுதற்குப் போதிமரத் தோப்புகளோ கோடி - எனில் புத்தனைத்தான் காணவிலை தேடி
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைதிருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. அங்கும் ஒரு புதுமை!
காமடிக்கு தனி டிராக் எடுத்து இணைத்து ஓட்டினால்தான் படம் ஓடும் என்ற அளவு தமிழ் படங்களில் முக்கிய இடத்தை காமடி, பேசும் படம் தோன்றிய காலம் தொட்டு பிடித்து விட்டது
அழகான குழந்தை.. சிவப்பு நிறம்.. சின்னஞ் சிறிய பூப்பொட்டலம்.. புஷ்பக் குவியல்
சாந்தா வாசலுக்கும் சமையல் கட்டுக்குமாக குட்டி போட்ட பூனைபோல் சுற்றி சுற்றி வந்தாள். வாசலுக்கு வருவாள்; கண்களை இடுக்கி தெருக் கோடி வரை பார்ப்பாள்; 'ஹூம், இன்னும் காணும்'
தூங்கும்போது அவன் முகம் இன்னும் விகாரமாய்த் தெரிந்தது. இடுப்பு நழுவிய வேட்டி, கன்னத்தில் கோடு போட்ட உமிழ்நீர்.. பாதி திறந்த கண்கள்.. புஸ்..புஸ்ஸென்ற மூச்சு..
என் குரலை மட்டும் கவனமாய் கேளுங்க ஆர்த்தி....நீங்க இப்ப ரிலாக்ஸ் ஆயிட்டு இருக்கீங்க. உங்களோட உடல் ரிலாக்ஸ் ஆகறதை உங்களால் உணர முடியுது....உங்க மனசும் அப்படியே அமைதியடையறதையும் உங்களால் உணர முடியுது....ஆமா, கொஞ்சம் கொஞ்சமா உங்க டென்ஷன், மன இறுக்கம் குறைஞ்சுட்டே போகுது....
பாதிக் கவிதைக்கு இவ்வளவு பலம் இருக்குமா? கிட்டத்தட்ட வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடிய ஒரு பணிக்கு, இந்தப் பாதி கவிதையே விதையாகுமெனில் அவருடைய அத்தனை கவிதைகளும் எத்தனை வலிமை தரும்! 'கனவு காணுங்கள்'
நமது உடலின் இரத்த ஓட்ட அமைப்புடன், நகரின் போக்குவரத்து அமைப்பின் திறன் எதையும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது; அந்த அளவுக்கு நமது உடலின் இரத்த ஓட்ட அமைப்பு சிறந்து விளங்குகிறது எனலாம்.
வேணாம் அதைக் கிளறினா வேதனைதான். பகவானே, எத்தனை வருஷமாயிடுத்து! இப்ப எங்கேயிருப்பா? எப்படியிருப்பா?
உனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. மாமியாரை தள்ளி விடும் போது கொஞ்சமாவது யோசிச்சியா? அங்க யாராவது இருந்திருந்தா என்ன ஆயிருக்கும்
 
படுத்தவுடன் 30 நிமிடங்களுக்குள் உறக்கம் வராவிட்டால் படுக்கையை விட்டு எழுந்திருந்து தூக்கம் வரும் வரையில் ஏதாவது ஒன்றைச் செய்யவும்.
குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் தங்களின் முயற்சி வெற்றி பெற தங்களின் குலதெய்வத்தை முறையாக வழிபடுவதுடன், வெள்ளிக்கிழமைகளில் திருமகளையும் ஆராதித்து வாருங்கள்.
உதிர்ப்பதால் உயிர் வாழ்கிறேன்; உதிப்பவற்றால் உயிர் வாழ்கிறேன்; உதிர்த்து உயிர்ப்பிக்கிறேன்!

Tuesday, February 03, 2009

"சாரல் 402"

உடல் குளிரால் பாதிக்கப்படும்போது இத்தசைகள் சுருங்கி முடிகள் விரைத்து நிற்கும். இதனால் வெதுவெதுப்பான காற்று அவற்றுள் சிக்கி உடல் வெதுவெதுப்பாகிறது.
''உன் குழந்தையை மட்டும் எடுத்துச் செல்லும் அளவிற்கு நான் கல்மனதுக்காரி இல்லை. என்னோடு நீயும் வா! அந்த வீட்டில் எனக்கென்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமையுடன் உன்னை வாழ வைக்கிறேன்'' என்று கூறி அழைத்தேன்.
வாங்க ராஜன். உங்களுக்காக இல்லாவிட்டாலும், என் கணவருக்காக, அவரோட அன்பு மனசுக்காக, எல்லோரையும் நேசிக்கிற தன்மைக்காக, யாரோடயும் தப்பு கண்டுபிடிக்கத் தெரியாத குழந்தை போல இருக்காரே... அதுக்கு மதிப்பு தரவாவது வாங்களேன்.."
டேகரி என்றால் சிறிய மலை என்று பொருள். டேக் என்றால் அபயம் தந்து ஆதரிப்பது என்று பொருள்.
வாலிபம் நைந்துடல் விந்தைசெலும்----உயிர் வண்டிந்தப் பூவினை விட்டகலும்
முடிவெடுக்கும் முன் அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுப்பது நலம். தங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
எல்லாம் மெலடிகளாக இருக்க வேண்டும். காதை அடைக்கும் வாத்தியங்கள் ஏதும் இருக்கக் கூடாது. பாடல்களைக் கேட்டால் யாரோ தாலாட்டுவது போலவே இருக்க வேண்டும்
மருந்து எடுத்துக் கொள்ளும் எண்ணத்தில் இருந்தால் சபரிமலைக்குப் போகும் பக்தர்கள் போல் கொஞ்சம் உறுதியான நியமங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்
பதவியே இல்லாத ஒருவருக்கு மக்கள் கூட்டம் கூட சாத்தியமா? பணபலம் இல்லாமல் தொண்டர் படை அமையுமா? சாதி மத பலம் இல்லாமல் கூட்டம் சேர்க்க முடியுமா? இதெல்லாம் நடக்கிற காரியமா என்றால், நடந்திருக்கிறது.
சட்டையில் மறந்த பொத்தானிட்டு சகலமும் நான் உனக்கென்று சளைக்கச் சொல்லுகிறாய்
வண்ணக் கோலம்
இந்த சந்தர்ப்பத்தில் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ் வர்த்தகங்கள் நடந்து கொண்டிருந்தன. (நேர வித்தியாசம்) இந்தச் செய்தி தெரிந்ததுதான் தாமதம்.
வீடு கட்ட கடன் வாங்கின நபர் அதிகாரியை இன்ஸ்பெக்ஷனுக்கு அழைத்துச் சென்றார். கட்டிடத்தைப் பார்த்த அதிகாரி திகைத்துப் போனார்.
போன வருஷம் தமிழ்ல மட்டும் 108 படங்கள் வந்துச்சு. அதுல சுமாராக 70% படங்கள் தியேட்டர்ல ஓடினதை விட, தியேட்டரை விட்டு தலைதெறிக்க ஓடின தூரம்தா‎ன் அதிகம்.
நேரம் செல்லச் செல்ல அவனுக்கும் லேசாக அவளுடன் செய்யும் பயணம் ஒருவித ஆனந்தத்தைத் தர ஆரம்பிக்க அவன் எரிச்சலடைந்தான். இவளுக்கு எதாவது வசிய வித்தை தெரியுமோ? கஷ்டப்பட்டு ஆபிசில் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான். ஆனால் இடை இடையிடையே மனம் முரண்டு பிடித்தது.
மனிதர் ஓரிண்டு படத்தில் நடித்திருந்தால் பரவாயில்லை, ஒராயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார்! ஆனால், இதனால் அவர் வெறும் நகைச்சுவை நடிகராகிவிட முடியுமா!
தேசிய அளவில் நாம் நம் தனித்தன்மையை இழந்து விட்டோம். இழந்து போன இந்தத் தனித்தன்மையை மீட்டெடுக்க வேண்டும். பாமரர்கள் நிலையை உயர்த்தியே ஆக வேண்டும்.