Wednesday, December 22, 2004

காலம் (கவிதை)

துயில் கலைந்தெழுந்தேன்
கண்ணெதிரே கணக்கிலடங்கா காலப்பெருவெளி
துள்ளலும் துயரமுமாய் மனிதர்கள் அதில் நீந்தியபடி
சிறிதும் பெரிதுமாய்....இவர்களுடன் நானுமாய்...
காலம் என்பது பேருண்மையோ?
காலம் தொடங்கிய பொழுதென்ற ஒன்று
இருந்தே ஆகவேண்டும்.
மனிதர்களோ, மலைகளோ, நதிகளோ...
அக்காலத்தில் இல்லாதிருந்திருக்கலாம்

கருவறைக் கடன் (சிறுகதை)

அம்மாவுடன் பேசி இரண்டு மாதங்களுக்கு மேலாயிற்று. ஏனோ அம்மாவின் நினைவு ஒரு மாதமாய் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. நினைத்தவுடன் பட்டனைத் தட்டிப் பேசுகிற நிலை இருந்திருந்தால் நன்றகத்தானிருந்திருக்கும். அமெரிக்காவில் கிடைக்கிற வசதிகளை நத்தம்பட்டியில் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் அம்மாவுக்குத் தொலை பேசி இணைப்புக்கூட அமைத்துக் கொடுக்காததில் மனசு குறுகுறுக்கத்தான் செய்கிறது.
எத்தனை பணம் இருந்து என்ன! அமெரிக்காவிலிருந்து கொண்டு இந்தியாவில் ஒரு காரியம் ஆகவேண்டுமென்றால் எவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கிறது! எப்படியாவது என் சித்தப்பா மகன் பவுண்ராஜிடம் பேசி ·போனுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று நூறாவது முறையாக நினைத்துக் கொண்டேன்....