Friday, October 24, 2008

"சாரல் 387"

லாவண்யாவின் முக ஜாடை அம்மாவிடம் இருந்தது. இன்னும் முப்பது வருஷங் கழித்து இவனுடைய லாவண்யா இப்படித்தான் இருப்பாள்.
துன்பத்தைக் கண்டு அழுதால் சோர்ந்து போவோம். சிரித்தால் புது வலிமை பெறுவோம்.
"இவங்க அப்பா எப்ப சொந்தமா முடிவெடுத்திருக்கார். அக்கா சொல்ற முடிவு தான் அவரோடதா இருக்கும். அந்த மகராசி டேப் செய்யறதெல்லாம் என்னத்துக்குன்னு சொல்வாள். வேணும்னா பார்த்துக்கோயேன்"
'கடைசி காலத்துல என்னைய கஷ்டபடுத்தாதடா... பொட்டுனு ஒரு ஊசிய போட்டு கொன்னுபுடுடா, உனக்குப் புண்ணியமாப் போவும்!'
உயிரணுக்கள் வாழ்வதற்கு உணவு, உயிர்வளி, நீர்மச் சூழல் ஆகியன இன்றியமையாதன. இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் உணவையும் நீர்ப்பொருளையும் அளிக்கின்றன.
"இதோ வருகிறேன்" என்று மரம்தழுவிச் சென்ற காற்று போன இடம் தெரியவில்லை
கடைக்காரரிடம், ஜோ : "நேத்து வாங்கும் போது ஜப்பான்ல செய்த ரேடியோனு சொன்னீங்க. ஆன் பண்ணினா 'ஆல் இண்டியா ரேடியோ'னு சொல்லுது"
அழிந்துவரும் கடல்வாழ் உயிரினங்களைப் பிடிப்பதைத் தவிர்க்கவும். ஏற்கனவே அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இம்மீனினங்களை விரைவில் இல்லாது போகச் செய்து விடாதீர்கள்.
இதன் புராணக் கதை என்னவென்றால், ருத்ர தாண்டவத்தி‎ன்போது சதிதேவியின் உடலைச் சுழற்றினாராம் சிவபெருமான். அந்த உடல் பல துண்டுகளாக பூமியில் பல இடங்களில் விழுந்து சிதறியது
நம்மிடம் உள்ள சொத்து மதிப்பை அல்ல; ஆனால் நாம் அவற்றுக்கு அடிமையாகி விட்டோமா என்றுதான்.
முகம் சுழிப்பதிலும்
"பரவால்லை.. எ‎ன் பென்சிலை வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறே‎ன் டாக்டர்"
மனதை அடக்க வெகுவாய் முனைந்து பார்த்துத் தோற்றுப் போய் 'இந்தக் குரங்கு அலைந்து திரும்பி அடிபட்டுத் திரும்பி வரட்டும்' என்று விட்டுவிடத்தான் தோன்றியது அவளுக்கு.
ஆம். சகோதரி கேரக்டரேதான். மணிரத்னம் இயக்கத்தில் ராவணனாக விக்ரம் நடிக்கும் 'அசோகவனம்' படத்தில், விக்ரமின் தங்கையாக சூர்ப்பனகை பாத்திரத்தில் பிரியாமணி நடிக்கிறார்.
சொந்தமாகத் தொழில் செய்கிறவர்கள் உண்மையாகவும் எளிமையாகவும் இருப்பது என்பது நடவாத காரியம். இந்த உலகச் சூழலில் இருந்துகொண்டு பணி செய்யும் போது அறநெறி வழுவாமல் இருப்பது என்பதற்கெல்லாம் சாத்தியமே இல்லை

"சாரல் 386"

நன்றாக, கலகலப்பாக எல்லோருடனும் பழகுகிற மாணவ மாணவிகளுக்கும், நன்றாக அழகாக உடை உடுத்திக் கொண்டு தலைசீவிக் கொண்டு வருகிற மாணவ மாணவிகளுக்கும் பரிசு கொடுத்தால் என்ன என்று யோசித்தேன்.
''சாப்பிடட்டும் சாப்பிடட்டும்'' என்றார். ''கடைசிச் சாப்பாடு'' என்று முடிக்குமுன் கண் கலங்கினார். ''ஷ்'' என்றான் ரமணி அவர் கையை அழுத்தி.
கேட்டு விட்டு பார்வதி தனக்குத் தானே சத்தமாகச் சொல்லிக் கொண்டாள். "அப்படின்னா பாண்டிச்சேரி ஆஸ்பத்திரில நான் பார்த்ததும் தற்செயலா நடந்ததில்லை"
தனிமையில் கழிக்கப் போகும் வார இறுதி, வெள்ளியன்றே அவளை பயமுறுத்த ஆரம்பிக்க, மதிய உணவு இடைவேளையில் கவனத்தைத் திருப்பலாமென்று கல்லூரியின் வடகோடியிலிருந்த பூங்காவில் உலவி வரக் கிளம்பினாள் அஞ்சனா.
இன்னொரு அதிசயம் - அங்கே தூசு, குப்பை எதுவும் இல்லை என்பதுதான். மரங்களின் இலைகள் உதிர்ந்து குப்பையாகக் காணோம்.

Thursday, October 09, 2008

"சாரல் 385"

பலரும் கேட்கிறார்கள் - "எப்படி ஐயா! நீங்கள் தஞ்சையின் தலைசிறந்த ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் விற்பனையாளராக இருக்கிறீர்கள்?" என்று. எனது பதில் ஒரு புன்முறுவல்தான்!
'தண்ணீர் தண்ணீர்' புகழ் அமரர் கோமல் சுவாமிநாதன் எழுதி பத்மஸ்ரீ மனோரமா முக்கியப் பங்கேற்று நடித்துள்ள 'ஆட்சி மாற்றம்' என்ற நகைச்சுவை நாடகத்தை ஒளித்தகடாக வெளியிட்டிருக்கிறது. இதன் வெளியீட்டு விழா சமீபத்தில் மைலாப்பூரிலுள்ள சீனிவாச சாஸ்திரி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங்களை மாற்ற முயலுங்கள்.
"தமிழ்நாட்டுக்காரனாத் தெரியலை. பார்த்தா வடநாட்டுக்காரனா இருக்கலாம்னு தோணுது. ஆனா தமிழைத் தப்பில்லாம பேசறான்...நல்லாப் படிச்சவன் மாதிரி தான் இருக்கு. பார்த்தா அவன் இந்தத் தொழில் செய்யறவன்னு யாரும் சொல்ல முடியாது...."
திடுதிப்பென்று ஒரு கணக்கில் அவன் வீட்டில் தங்காமல் வெளியே திரியப் பிரியப் பட்டான். எதோ புண்ணியத்துக்கு என்று இடுப்பில் சுற்றிய வேட்டி. தாடியும் மீசையும். வாரம் ஒருமுறை, பத்துநாள் ஒருமுறை நாவிதனை வீட்டுக்கு வரவழைத்து சிச்ருஷை செய்ய வேண்டும்.
சாக்லெட்டை... முழுவதுமாய் நானே சாப்பிட்டு விட.. 'கண்ணாவுக்குக் கொடுக்கவில்லையா...". அம்மாதான் ஏசினாள்....
டாடி எனக்கு ஒரு ட்டாய் கன் வாங்கிக் குடுத்தாங்க அங்க்கிள். என்னோட டெடிபேரும் நானும் அந்த கன்ன வச்சு வெளயாடிட்டிருந்தோம்.
இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களி‎ன் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி ‏இங்கு வருகின்றனர்.
 
ஒரு கிராமத்தை உருவாக்குவது ஓர் ஆயுட்கால வேலையாக இருக்கலாம். உண்மை ஜனநாயகத்தையும் கிராம வாழ்க்கையையும் நேசிக்கிற ஒருவர், இதைத் தன் ஆயுட்கால லட்சியமாகக் கொண்டு உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்"
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15அ‎ன்று அதிகாலை 5.30 மணியளவில் ‏ இந்தியா சுதந்திரம் பெற்ற செய்தியை முத‎ன்முதலில் வானொலி மூலம் அறிவித்த பெருமை ‏இவருக்குண்டு.
பாடலின் முடிவில் மௌத் ஆர்கனின் அற்புத உபயோகிப்பு செவிக்கு ஆனந்தம். இசைத்தட்டின் சிறந்த பாடல்.
சில சுவையான சம்பவங்களுடன் சேர்த்து ஒரு நல்ல படத்தைக் கொடுக்க முடியும் எனக் காட்டியிருக்கிறார் டைரக்டர் ஜகன்னாத்.
"அப்போ மீதி 31 பல்லுக்கு டாக்டர் யாருங்கோ?"
அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளைங்க, ஃப்ரண்ட்ஸ் - இப்படி நம்ம வாழ்க்கையில முக்கியமான உறவுகளெல்லாம் இந்த மாதிரி ஒப்பந்தம் போட்டவங்கதானாம்.
இது பிச்சைக்காரர்களின் உடை. நான் வெள்ளை உடை உடுத்திக்கொண்டு போனால், ஏழை எளியவர்கள் என்னிடம் பிச்சை கேட்கக்கூடும். நானோ பிச்சாண்டி! அவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் பைசா கிடையாது. இரப்பவர்களுக்கு இல்லை என்று சொல்வது எவ்வளவு வேதனையானது?

Wednesday, October 01, 2008

"சாரல் 384"

புளி கரைத்த நீரில் அவலை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்.
பறித்தது.... என்னிதயம்.... தா என்கிறேன்...
ஜோ : "டேய் உன்கிட்ட ஃப்யூஸ் போன பல்பு, ட்யூப் லைட்டு இருந்தா எனக்கு குடுடா." நண்பர் : "உனக்கெதுக்கு அது?" ஜோ : "போட்டோஸ் டெவலப் பண்றதுக்கு நான் டார்க் ரூம் கட்டப் போறேன்."
ஆனாலும் உங்க பையன்கிட்ட கிண்டல் ஜாஸ்தி." "ஏன்.. என்ன பண்ணான்? "கரண்ட் கம்பியப் புடிச்சி விளையாடிக்கிட்டு இருந்தான். கேட்டா.. இதுல எப்போ சார் கரண்ட் வந்திச்சுன்னு கேட்கறான்!"
ஏழாம் கட்டத்தில் "செவ்வாய் " இருப்பதால் என் வாழ்வில் "கணவன்" கட்டம் வெறுமையாய்!!!
கடல் பார்க்க அப்படியே உட்கார்ந்திருந்தான். ஓ..ஓவென்று கடலின் பேச்சு. வார்த்தைகளை விட ஒலிகள், ஒலிக்குறிப்புகள் சிலாக்கியம். சொற்கள் அல்ல, சமிக்ஞைகளின் நேர்மை நல்ல விஷயம்.
"கவலை வேண்டாம்; நான் சாக மாட்டேன், சகோதரர்களே!" அரையுணர்வு நிலையில் தமக்கு மகத்தான ஒரு உண்மை புலப்பட்டதாக சுவாமிஜி பின் ஒரு சமயம் சொன்னார்.
இந்தக் கருப்புசாமி முன் பொய் பேசினால்.. அவ்வளவுதான்! தண்டனை கடுமையாக இருக்குமாம். கருப்புசாமி இந்தப் பகுதியைச் சேர்ந்தவருக்கும் அக்கம் பக்கத்து கிராமத்தினருக்கும் ஒரு நீதிமன்றமாக இருக்கிறாராம். எல்லோருக்கும் இவர்மேல் ஒரு பயம் கலந்த மரியாதை.
நண்பர்களோடும், உறவினர்களோடும் மனம் விட்டுப் பழகுங்கள். துயரங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். கோபம், பழிவாங்குதல் போன்ற தீய உணர்ச்சிகளை விட்டொழியுங்கள்! வாழ்வே சொர்க்கமாகும்!
வண்ணக் கோலம்
தடைகள் ஏற்படும்; ஏற்பட்டால் நின்று நிதானிக்க வேண்டும். தடைக்கல் மீது ஏற முடியுமா? தடைக் கல்லைத் தாண்ட முடியுமா?
அப்பறம், இந்த வில்லன் விக்ரம் நடுவுல புகுந்தான். சாதனாவோட அப்பா மனசக் கெடுத்து, என்னோட சாதனாவக் கட்டாயக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.
விஜய் ரசிகர்களுக்கு கசப்பு மருந்தைத் தந்திருக்கிறது 'வில்லு'. ஆம்! தீபாவளிக்குப் படம் வரவில்லையாம்; பொங்கலுக்குத்தா‎ன் ரிலீஸ் ஆகுமாம்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் பலரது வாழ்க்கையில் மலர்ச்சியைக் கொண்டு வர முடியும். நீங்கள் மிகவும் முக்கியமானவர்.
கன்னி ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.