Monday, June 25, 2007

சாரல் 318


சாரல் : 318   பொழிந்தது :  ஜூன் 25, 2007

"நூல் ஆடைகளைத் தயாரிக்கிறது, புத்தகம் மனிதர்களைத் தயாரிக்கிறது" -கவிஞர் இக்பாலுடன் இ-முகம்

"மொழிபெயர்ப்பில் முதலில் காணாமல் போவது கவிதைதான்" என்பதை நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பலமுறை என் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது இதை நான் நேரடியாக அனுபவித்திருக்கிறேன்.

( ஜன்பத் )


Lewis Hamilton - Profile

Michael Schumacher: "Hamilton 's a quality driver, very strong and only 16. If he keeps this up I'm sure he will reach F1. It's something special to see a kid of his age out on the circuit. He's clearly got the right racing mentality"

( Gayathri and PS )


அரசியல் அலசல்

இதுவரை ராஷ்டிரபதி என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இனிமேல் ராஷ்டிரபத்னி என்றுதான் சொல்ல வேண்டும். - பால் தாக்கரே.

( ஜ.ப.ர )


நிலாவட்டம் (1)

பாரப்பட் சுவரை ஒட்டிய கம்பங்களில் இழுத்துக் கட்டப்பட்ட நைலான் கயிறு. ஒரு ஒதுக்குப்புறமாய் மட்டும் அமையாமல் குறுக்கிலும் ஒரு கயிறு கட்டப்பட்டு தழைந்திருந்தது. குறுக்கும் நெடுக்குமாய் ஓடுகிற சிறுவர்களுக்கு நிச்சயம் விபத்து நேரலாம். ஓடி வருகிற அவசரத்தில் தடுக்கி விழலாம்.

( ரிஷபன் )


சிவாஜி - The BOSS

சூயிங்கம்மை ஸ்டைலாக வாயில் தூக்கிப்போட்டுக் கொள்வதும் ஒரு ரூபாயை சுற்றி சுழட்டுவதும் இந்தப் படத்தில் ரஜினியின் ஸ்பெஷல் ஸ்டைல். 'சும்மா அதிருதுல்ல' என்று பன்ச் டயலாக் விடும்போது தியேட்டர் அதிருகிறது.

( ஜன்பத் )


ரிஷி சக்தி!

சுவாமி விவேகானந்தர் தூங்கிக் கிடந்த பாரதத்தை ரிஷி சக்தி மூலமாகவே, 1897 முதல் 1906க்குள் சுமார் பத்தே ஆண்டுகளில் தட்டி எழுப்பினார். இப்படி ஒரு பெரிய சக்தி தனக்கு எப்படி வந்தது என்ற ரகசியத்தை அவரே கூறி இருக்கிறார்:

( ச.நாகராஜன் )


செல்போனும் சிறப்புப் பயன்களும்

செல்லில் பேட்டரி குறைவாக இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். *3370# என்று அழுத்தினால் செல்லில் 50% பேட்டரி அதிகரிக்கும். அடுத்து எப்போது சார்ஜ் செய்கிறீர்களோ அப்போது இந்த 50% வீதமும் சார்ஜ் ஆகிவிடும்.

( கவிதா )


ஜோக்கர் ஜோன்ஸ் (4)

பாண்டுவின் எதிரி, அவர்கள் சென்றபின் பாண்டுவினுடைய குதிரையின் இடது காதை வெட்டிவிட்டுச் சென்று விட்டான். மறுநாள் குதிரையை வந்து பார்த்த இருவருக்கும் அதிர்ச்சி. யாருடைய குதிரை எதுவென்று கண்டுபிடிக்க முடியாததால்....

( ரிஷிகுமார் )


இராசிபலன்கள் (25-6-2007 முதல் 1-7-2007 வரை)

கும்ப ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். மாணவர்களுக்குக் கல்வியில் பரிசுகள் கிடைக்கும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். புதிய வீடு மாற்றம் ஏற்படும். செய்தொழிலில் கவனம் தேவை.

( டாக்டர்.ப.இசக்கி )


குட்டியாய் ஒரு கோடை விடுமுறை

ஜஸ்பீர் அங்கிள் சாப்பிட கூப்பிட்டாரு. பெரிய நாயைப் பார்த்து எனக்கு ஒரே பயம். டைனிங் ரூமுக்கு போகவே கஷ்டப்பட்டேன். உடனே அங்கிள் டைகர் கிட்டே பேசினாரு. 'நீ அங்கேயே இரு. ஆண்ட்டி பயந்துக்கிறாங்க' ன்னதும் சட்டுனு மூலைல உட்கார்ந்திருச்சி. சாப்பிடுற வரைக்கும் எந்திரிக்கவே இல்லை.

( ரஜினிமா )


காவிய நாயகன் நேதாஜி (56)

நேதாஜியின் முக்கிய சாதனை பெர்லினில் ஆசாத் ஹிந்த் வானொலியை அமைத்ததுதான். 1943 மார்ச் 13ம் தேதி இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான நாள்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


நீ நான் தாமிரபரணி (76)

'அம்மா, அம்மா கூட பேசிகிட்டிருக்காங்க' என்கிற வார்த்தைகள் அவரை மனம் குளிர்வித்தன. தாராவைக் கூப்பிடக் கிளம்பியவனை தடுத்து நிறுத்தினார். "அவங்களை எல்லாம் அப்புறம் பார்க்கறேன். நான் முக்கியமாய் வந்தது உன்னைப் பார்க்கத் தான்"

( என்.கணேசன் )


கனவு

அழைக்காமல் வந்தாலும்
அவள்முகத்தை
அழைத்துவந்தாய்!
அறிந்துவந்த விருந்தெவரும்
குறிப்பறிந்து தந்ததுண்டா?

( லேனா.பழ )


சினி மினி - சிவாஜி ஸ்பெஷல்

ஜப்பானிலிருந்து வெளிவரும் டோஷோ என்ற பத்திரிகை ஹாலிவுட் படம் காசினோ ராயல் படத்தைவிட எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும் ஜாக்கிச்சானுக்கு அடுத்தபடி அதிக ஊதியம் பெறும் நடிகர் ரஜினி என்றும் செய்திகள் வெளியிட்டுள்ளது.

( ஜன்பத் )


சிறந்த படைப்புக்கு பரிசு!

எனக்கு பிடித்த கவிதை மொழியில் மனிதனாக பிறந்தது மாபெரும் பாக்கியம் அது.. மேலோட்டமாய் வாழ்ந்து வெளிப்புறமாய் பாய்ந்து அறியாமலே வீழ்ந்து போக அல்ல என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.

( Nilateam )


செய்திகள் அலசல்

பங்களூருவில் ஒரு பரபரப்பு. அங்குள்ள சனீஸ்வரர் கோவில் ஒன்றில் 25 நாய்கள் வரும் வெள்ளியன்று ஹோமத்தின்போது உயிருடன் எரிக்கப்படப் போவதாக நோட்டிஸைக் கண்டபோது பலர் பதறித்தான் போனார்கள்.

( ஜ.ப.ர. )


Alter Ego

My mother never troubled me of all this, she knew that her daughter required some respite from studies and therefore she never disturbed watching me Television after my classes. So I never got to know the goings-on in the kitchen

( Deepa Krishnan )


கருத்தப் புள்ள செவத்த ரயிலு!

முட்டக் கண்ணு சிவந்திருச்சு
கெட்ட கோவம் வந்திருச்சு
தப்புக் கணக்குப் போட்டுப்புட்டா
மைனருன்னு நினைச்சுப்புட்டா
பஞ்சாயத்தக் கூட்டிப்புட்டா
பருத்திபோல வெடிச்சுப்புட்டா

( நிலாரசிகன் )


இறவாக் காவியம் (91)

இரையாவேனென்னும் பயத்தில் மீன்கள் கரையேறலாமோ கடவுளே - என்பதாய் ஒலித்தது பேதுருவின் வார்த்தைகள்.

( சேவியர் )


His Name is Siva Shankar..(253)

Never ever assume you are sacrificing your interests for the sake of your family. Whatever you do for your family is your penance. Whatever you do for the society is your penance.

( N C Sangeethaa )


செருப்பு

அவர் சொன்னது என்னவோ 'நியூட்டன்' விதியை ஞாபகப்படுத்தினாலும், மனம் லேசானதுபோல் ஒரு உணர்வு. ஒரு தெளிவு. அந்த தெளிவான மன நிலையில் வெளியே வந்து பார்த்தபோது... என்னவொரு ஆச்சரியம்!!!

( திரு )


 

Tuesday, June 19, 2007

சாரல் 317

சாரல் : 317 பொழிந்தது : ஜூன் 18, 2007

Add Nilacharal to your Signature

Adding Nilacharal's signature to your email helps introducing nilacharal to many. If you like to help us with this, please read further:

( Nilateam )

ரமண நட்சத்திரம்!

1950ம் ஆண்டு, ஏப்ரல் 14ம் தேதி. ரமண மகரிஷியின் உடல் நிலை கவலைக்கிடமானது. பக்தர்கள் ஹாலின் வெளியிலிருந்த வராண்டாவில் அமர்ந்து அருணாசல சிவ என பாட ஆரம்பித்தனர். இதைக் கேட்ட ரமணரின் கண்கள் மெல்லத் திறந்தன; ஒளிர்ந்தன.

( ச.நாகராஜன் )

தொழில்முனைவோர்க்கு வள்ளுவம் வழங்கும் ஆலோசனைகள்

தொழில் தொடங்க எண்ணங்கொள்ளும்போது ஒவ்வொருவரும் முதன்மையாக கவனத்தில் கொள்ள வேண்டுவது முதலீடு ஆகும் அவ்வாறு முதலீட்டு வினையினை மேற்கொள்ளும் ஒருவர் பல்வேறு காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டுவது அவசியமாகும் .

( முனைவர் பெ.லோகநாதன் )

அரசியல் அலசல்

"ஜாலி கிழவர்" என்று ஒரு பத்திரிகை கிண்டல் செய்கிற அளவுக்குத் தலைவர் கலைஞரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் தரம் தாழ்ந்து போயிருப்பது உண்மையிலேயே வேதனை தரும் விஷயம். பெண் அரசியல் தலைவரைப் பற்றி அவர் வெளியிடும் இரட்டை அர்த்த விமர்சனங்களும் அங்கதங்களும் அவரது வயசுக்கும், பதவிக்கும் பொருத்தமில்லாதவை.

( ஜ.ப.ர. )

நானென்றும் நீயென்றும் (71)

"நான் தான் பூஜா. நீ என்னை விட்டுப் போகிறாய் என்றதும் ஆடிப் போய்விட்டேன். உன்னை விட்டு என்னால் இருக்க முடியாது என்று உனக்குத் தெரியாதா? என்னை விட்டுப் போக முடிவு செய்தாயே.. உன்னை அந்த அளவு நான் வேதனைப்படுத்தி விட்டேனா? சாரிடா.." என்றவன் "என்னை மன்னித்துவிடு" என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

( சுகந்தி )

நகைச்சுவை பிட்ஸ் (1)

(போனில்) மச்சான்..ரொம்ப அர்ஜெண்ட் மேட்டர்டா. நாங்க இங்க சீட்டு விளையாடிட்டு இருக்கோம். ஜோக்கர் கார்டு மட்டும் மிஸ்ஸாகுது. நீ உடனே உன் போட்டோவை யார்கிட்டேயாவது கொடுத்து விட்டா யூஸ் பண்ணிக்குவோம். என்ன சொல்ற?

( ரிஷிகுமார் )

அம்மன்

அம்மனுக்கு ஏதோ கோபம். அபசாரம் ஏதோ நடந்துள்ளது. ஆத்தா மன்னித்தருள வேண்டும் என கூறிவிட்டு கலைந்து சென்றனர். அப்பாவிகளான அந்த ஆடுகளும், குட்டிகளும் அவிழ்த்துவிடப்பட்டன. நடக்கவிருந்த பத்து பற்றி ஏதும் அறியாமல் துள்ளிச்சென்ற அவற்றின் பார்வையில், என்னால் மட்டும் அம்மனின் கருணையைக்காணமுடிந்தது.

( வை. கோபாலகிருஷ்ணன் )

காவிய நாயகன் நேதாஜி (55)

சுபாஷ் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் ஒரு செய்தியைப் பரப்பி விட்டது. சுதந்திர இந்திய காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் டோக்கியோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் பழுதடைந்து விபத்து ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக விரிவான செய்திகள்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட்

கிழவி பஸ்ஸில் ஏறியதிலிருந்து அத்தனை பேரின் கவனமும் அவள் மீதுதான். ஒரு பித்தளை அண்டா, எவர்சில்வர் குடம் இரண்டையும் என்ஜினுக்கு அருகில் காலியாயிருந்த இடத்தில் பத்திரப்படுத்திவிட்டு தானும் மருமகளும் அமர இடம் தேடினாள்.

( ரிஷபன் )

பாரதி இரசித்த இயற்கை!

காலைப்பொழுதினை இரசிக்கும் பொழுது, ஞாயிறின் கேடில் சுடர்தனையும், தென்னை மரத்தின் கிளையிடையே தென்றல் சென்று, மன்னப் பருந்தினுக்கு மாலை இட்டுச் செல்வதையும், அம்மரக்கிளையிலே சிந்தனையோடு ஒரு காகம் அழகாய் அமர்ந்து வானை முத்தமிடுவதையும், காக்கைக் கூட்டமொன்று பறப்பதையும், குருவி, பச்சைக்கிளி, அன்னப் பறவை ஆங்கே வருவதையும் பாரதி இரசிக்கும் இயற்கையை....

( என்.வி.சுப்பராமன் )

Shabana Azmi

"A good actor should be able to prefix the words, "If I were…" to any one of a range of characters (a prostitute, Mother Teresa, Queen Elizabeth) and be able to play each equally well"

( PS )

நீ நான் தாமிரபரணி (75)

அவர்கள் இருவரும் மாதுரியைச் சுற்றி ஓட அவள் சோகம் கலந்த புன்னகையுடன் அவர்களைப் பார்த்தாள். சிறு வயதில் இழந்திருந்த இந்த உறவின் சீண்டல்களையும், சந்தோஷங்களையும் இப்போது தருவித்துப் பார்த்துக் கொள்கிறார்கள் என்று தோன்றியது. மனம் நெகிழ்ந்தது.

( என்.கணேசன் )

யதார்த்தம்

"நந்தினிம்மா, உனக்கு போஸ்ட்!" தபால்காரரின் குரலில் மகிழ்ச்சியும் பரபரப்பும் இருந்தன. ஆச்சரியத்தோடு வாசலுக்கு விரைந்தாள். அந்த தபால்காரர் பல வருடங்களாக அந்த ஏரியாவிலேயே இருப்பவர். நந்தினியை பள்ளியில் சேர்க்கும் பருவத்துக்கு முன்பிருந்தே பார்த்துக் கொண்டிருப்பவர்.

( ஸ்ரீ )

ஈடுபாடு

சென்னைப் பட்டிணத்திலே இருக்கும் கோடீஸ்வரர்களில் கோடியப்பனும் ஒருவர். அவருடைய செல்லக் குதிரை வயதாகி இறந்து விட்டது. அதன் மறைவு அவருக்கு சொல்ல முடியாத துக்கத்தைக் கொடுத்தது. சொந்தபந்தமில்லாத பிரம்மச்சாரியான அவர் குதிரை மேல் உயிரையே வைத்திருந்தார்.

( P.நடராஜ‎ன் )

சலனம்

துரும்பைத் தொலைக்கத்
தூக்கம் அணைக்க;
மனதின் அறிவின்
மகத்துவப் பரல்களில்
புதிதாய்ச் சிந்தனை
புலரச் செய்வோம்!!
யாவும் மாயை
என்றே நினைப்போம்!

( கவி வளவ‎ன் )

His Name is Siva Shankar..(252)

If you want to succeed, talk in terms of what the other person wants from you instead of talking in terms of what you want from the other person. Remember, that to catch a fish, you need to offer worms as the bait, not the dosa or idli that you like.

( N C Sangeethaa )

பட்டியல்

இன்று இவ்வுலகில்
வன்முறையும்
வெடிப்பும்
அடிதடியும்
உயிர்க்கொலையும்
அதிகமாகி
அன்றாட வாழ்வோடு
ஒன்றாகிப் போனதனால் …..

( இராம. வயிரவன் )

வசூல் ராஜாக்கள்

சென்னை மாநகரில் குறிப்பாக இந்த பீக் ஹவர்ஸில் பேருந்துகள் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதில்லை. நடுத்தர மக்களின் வசதிக்காக மீண்டும் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். அதே சமயம் நியாயமான ஆட்டோ கட்டணம் மீட்டரின் வழியே உறுதி செய்யப்பட வேண்டும்.

( திரு )

செய்திகள் அலசல்

வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் லத்திகா சரண். மாதிரிக்கு சில கேள்வி பதில்கள்:

( ஜ.ப.ர. )

இராசிபலன்கள் (18-6-2007 முதல் 24-6-2007 வரை)

ரிஷப ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். பூமி, நிலம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். எழுதுபொருள், நோட்டு, புத்தகம், பிரின்டிங் சம்பந்தமான தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். பெண்களால் ஆதாயம் இல்லை. அடுத்தவர்களுக்காக உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

( டாக்டர்.ப.இசக்கி )

நவதானிய சுண்டல்

பச்சைப் பட்டாணி, வெள்ளைப் பட்டாணி, மொச்சை, துவரை, காராமணி, வேர்க்கடலை,பயறு,கோதுமை,சிறிய சிறிய கொண்டைக்கடலை வகைக்கு ஒரு மேசைக்கரண்டி, துருவிய தேங்காய் – இரண்டு மேசைக்கரண்டி, உப்பு ருசிக்கேற்ப,

( பிரேமா சுரேந்திரநாத் )

Tuesday, June 12, 2007

சாரல் 316

வலிகொண்ட முத்தம்...
தாவணிப் பருவத்தில் தோழி

வீடுசென்று தாமதமாக திரும்பிய

நாட்களில் உன் அவஸ்தையின் வலி

நான் உணரவில்லை...



கல்லூரிப் பருவத்தில் கண்ணாடியுடன்

சினேகித்து பட்டாம்பூச்சியாய்

பறந்த நாட்களில் உன் அறிவுரையின் வலி

நான் உணரவில்லை...


( நிலாரசிகன் )



Kanimozhi Karunanidhi
* as a sub-editor of The Hindu in Chennai in 1992 - 1997. She worked with the arts section of the newspaper, the Friday Review, till 1997. * Was in charge of Kungumam, a Tamil weekly. * Was Features Editor of the Tamil publication, local newspaper, Tamil Murasu, in Singapore


( PS )



ஒரு தலைசுற்றுச் சூழல் விவகாரம்
இன்றைய இளைஞர்கள் அதைரியப்பட முக்கியக் காரணம் நல்வழிகாட்டிகள் தற்காலத்தில் அவர்களுக்கு இல்லை என்பதே. இருக்கற கும்பலில் ஒரு சண்டியர் நான் சொல்றதுதாண்டா இலக்கியம்னு ஆர்ப்பரிக்கிறான். கைல கொஞ்சம் துட்டு புரண்டால் சிற்றிதழ் ஆரம்பிக்க வேண்டியது.


( ஞானவள்ளல் )



பதில் தெரிந்தால் சொல்லுங்கள்
'அவளுக்குப் பிடிக்கும்' என்று

ஒரு பை நிறைய

விளையாட்டு சாமான்கள்..

தின்பண்டங்கள்..

'யாருக்குடி' அம்மா கேட்பாள்.

'பக்கத்து வீட்டு வாலு'

எப்போது மடி கனக்கும் என்று

மனம் கனத்துப் போகும் அம்மா.


( ரிஷபன் )



சிறந்த படைப்புக்கு பரிசு!
ஒவ்வொரு மாதமும் நிலாச்சாரலில் இடம்பெற்ற படைப்புகள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் சிறந்த படைப்புக்குப் பரிசு வழங்கப்படும். சிறந்த படைப்பாளருக்கான நிலாச்சாரல் பரிசினைப் பெறுபவர் லேனா கதிரவன் பழனியப்பன்.


( நிலாச்சாரல் )



இராசிபலன்கள் (11-6-2007 முதல் 17-6-2007 வரை)
மீன ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். பழைய வீட்டைத் திருத்திக் கட்ட வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் நற்பலன் அடைவார்கள். உப்பு வியாபாரம், நீர்வளத்துறை சார்ந்தவர்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் வியாபாரிகள் நற்பலன் அடையக்கூடிய காலமாகும்.


( டாக்டர்.ப.இசக்கி )



சினி மினி
'சிவாஜி' படம் ஒரு வழியாக ஜூன் 15ஆம் தேதி நிச்சயம் வெளிவந்து விடுமாம். இதற்கிடையில் சிவாஜி என்பது தமிழ்ப் பெயரா? வரிவிலக்கு அளிக்க முடியுமா? என்பதில் சின்னப் பிரச்சினை.


( ஜன்பத் )



வல்லமை தாராயோ?
வலம்புரி ஜான் வார்த்தைச் சித்தர். அவரது இளவயதில் அவரது ஆசிரியர் அவரை மாணவிகள் முன் அவமானப்படுத்திய போது நெஞ்சில் கனன்ற நெருப்பு தான் அவரை முன்னேற வைத்ததாகக் கூறுகிறார்.


( தொகுப்பு: வேணி )



அரசியல் அலசல்
நில கையகப்படுத்துதலில் வரவிருக்கும் சீர்திருத்தங்கள்; அண்ணா தி.மு.க கட்டட நோட்டீஸ் விவகாரத்திலிருந்து சூடுபிடித்துள்ள தமிழக அரசியல்; மூன்றாவது அணிக் கனவு; இதுதானா காங்கிரஸ் ஜனநாயகம்?


( ஜ.ப.ர )



செய்திகள் அலசல்
அறம் விழுதல் என்று தமிழில் ஒரு சொற்றொடர் உண்டு. வாயிலிருந்து ஏதோ ஒரு வார்த்தை வரும், அது பின்னால் நிஜமாகப்போய் விடும். உதாரணத்துக்கு, சஞ்சய் காந்தி இறுதியாகத் தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு போன வார்த்தை, "அம்மா, நான் போறேன்."


( ஜ.ப.ர )



"நூல் படிப்போம். . . . . சாதனை படைப்போம்!"
அந்த நடு மண்டபம் குட்டி போட்டு இருக்குமா? அந்தக்குட்டி ஒரே வாரத்தில் இவ்வளவு பெரியதாகி, நகரவும், நீந்தவும், மிதக்கவும் முடியுமா? போன வாரம், தான் குளத்தில் தூக்கிப்போட்ட ஒரு சிறிய கல் மட்டும், மிதக்காமல் குளத்தில் அமுங்கிப்போய் விட்டதே? இவ்வளவு பெரிய தெப்பம், இவ்வளவு பேர்களுடன் ஜாலியாக மிதக்கிறதே? அது எப்படி?


( வை. கோபாலகிருஷ்ணன் )



சுண்டைக்காய் வற்றல் குழம்பு
பெருங்காயத்தைச் சேர்த்து மட்டான தழலில் கொதிக்க விடவும். கொதித்ததும் ஒரு ஸ்பூன் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். சுவைக்கு சுவை. உடலுக்கும் நன்மை.


( பிரேமா சுரேந்திரநாத் )



பேரிழப்பு
நேற்று

உன் கண்களையே

பார்த்துப் பேசிக்கொண்டிருந்த நான்

கையிலிருந்த என்

கவிதைத் தொகுப்பையும்

தவற விட்டேன்


( நவநீ )



நீ நான் தாமிரபரணி (74)
அருண் வந்த கணம் முதல் தாராவின் மீது வைத்த பார்வையை எடுக்கவில்லை. அவன் மனதில் எத்தனையோ எண்ண அலைகள்.... அவன் கண்களில் நீர் கோர்த்து நின்றது. எத்தனை ஜென்மங்கள் எடுத்து சேவை செய்தாலும் இவள் கடனைத் தீர்க்க முடியும் என்கிற நம்பிக்கை அவனுக்கில்லை. மௌனமாகக் கை கூப்பினான்.


( என்.கணேசன் )



His Name is Siva Shankar..(316)
Everyone knows what is good and what is bad. Good is something which will not hurt others; which will not harm others; which will not harm us. If somebody knows that something is good and he is not prepared to follow that, then the wrong is on his part


( N C Sangeethaa )



'சிம்பொனியில் திருவாசகம்'
ஒரு தலைமுறையின் சகல உணர்வுகளோடும் தன் இசையை ஊடுருவ விட்டுப் பதிவு செய்தவர்; காதலைப் பாலியல் வெறியாகவோ, மகிழ்ச்சியைக் களி வெறியாட்டமாகவோ, துயரத்தை விரக்தியாகவோ மாற்றி இசையைக் கொச்சைப்படுத்தாதவர்.


( அருட்தந்தை ஜகத் கஸ்பாருடன் நேர்முகம் )



மதிப்பு
மூட்டை தூக்கி சம்பாதித்துத் தன்னை இஞ்சினியரிங் படிக்கவைத்த அப்பாவுக்கு அமெரிக்காவிலிருந்து எவ்வளவு பணம் அனுப்பினாலும் இந்த மதிப்புக்குரிய விருதினைத் தன் சார்பாகப் பெறச்செய்யும் கௌரவத்துக்கு ஈடாகுமா?


( நிலா )



அத்தை மகள்
"சென்னையில் இருந்து மதுரை வந்து, அப்புறம் பஸ் பிடித்து போடிக்கு வருவதை விட இப்போ அமெரிக்கா போவது ஈசி. அதோட நம்மையும் கூப்பிட்டாங்களே. நீதான் பிகு பண்ணிட்டே." அதிகாலை கதவு தட்டப்படும் சத்தம். கதவைத் திறந்தால் அங்கே சிதம்பரத்தின் அக்காவும் அத்தானும்.


( P.நடராஜன் )



அழகு ஓவியம்
அருப்புக்கோட்டை மாணவர் வரைந்த அற்புத ஓவியம


( முத்துக்குமார் )



வேகம் விவேகம்!
குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...


( நிலா )



ஆபத் சந்நியாசம்
ஆரம்பத்தில் கண்ட சின்னச்சின்ன கனவுகள், சமையலறை சங்கீதத்தில் சிறைபிடிக்கப்பட்டன. குக்கருக்கு வெயிட் போட்டோமா, குழந்தைக்கும், கணவனுக்கும் ப்ரேக் பாஸ்ட் தயாரித்தோமா - என்று ஆலாபனை செய்யவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. இந்த சமையலறை சங்கீதமே வாழ்வின் ராகம், தாளம், பல்லவி ஆயிற்று.


( விமலாரமணி )



நானென்றும் நீயென்றும் (70)
"போதும் அவினாஷ் என்னை வருத்தப்படுத்தனும்னே வீம்புக்காக எதையும் பேசாதே. நீ வாங்காமல் இந்தப் பட்டு வேஷ்டி புடவை மோதிரங்கள் எல்லாம் தானாய் வந்து குதிச்சுடுச்சா?" குரலில் எரிச்சல் காட்டிப் பேசினாள் பூஜா. தான் நினைத்து போல் காதலுடன் பரிசுகளை அவினாஷ் வாங்கவில்லையோ என்ற ஆதங்கம் அவளுக்கு.


( சுகந்தி )



காவிய நாயகன் நேதாஜி (54)
சுபாஷ் ஜெர்மனியருடன் இணைந்து செயல்படவேண்டும், இத்தாலியர்கள் அவரைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. அதற்காகவே மிகவும் சாமர்த்தியசாலியான வெல்லரை அவருடன் அனுப்பி வைத்தார்கள். இத்தாலியரும் ஜெர்மானியரும் என்னதான் நண்பர்களாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்குள் உள்ளூரப் புகைச்சல் இருக்கத்தான் செய்தது.


( டி.எஸ்.வேங்கட ரமணி )



ஜோக்கர் ஜோன்ஸ் பராக்! பராக்!! (3)
நண்பர் : ஆக்சிஜன் உயிர் வாழ மிகவும் அவசியம். அது இல்லாமல் ஒரு நொடிகூட உயிருடன் இருக்க முடியாது. ஆக்ஸிஜன் 1773ல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜோன்ஸ் : அப்படியா!! நல்லவேளை, நான் 1773க்குப் பிறகு பொறந்தேன். அதுக்கு முன்னாடி பொறந்திருந்தா செத்திருப்பேன்.. இல்ல!.


( ரிஷிகுமார் )

Monday, June 04, 2007

சாரல் 315

காவிய நாயகன் நேதாஜி (53)
சுபாஷ் மாஸ்கோவுக்குச் செல்லும் உத்தேசத்தைக் கைவிடவில்லை. ஆனால் ரஷ்யத் தூதுவர் அலுவலகக் கதவு எப்போதும் அடைத்தே கிடக்கிறது. ஒரு வழியாக ரஷ்யத் தூதுவரை அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது மடக்கி, சுபாஷ் பற்றிய விவரத்தைச் சொன்னார் பகத்ராம். எனினும், தூதுவரின் பதில் திருப்திகரமாக இல்லை.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


செய்திகள் அலசல்
"எனது பதினோராண்டுப் பணியில் 3052 பிரசவங்கள் பார்த்திருக்கிறேன். இவற்றில் ஒன்றுகூட உயிர்ச் சேதம் இல்லை" - ஜனாதிபதி கையால் விருது பெற்றிருக்கும் செவிலியர் மகாலட்சுமி.

( ஜ.ப.ர )



Shankar (Director)
* Never releases his films on holidays or festivals
* Always likes 'glitz and glamour' both in his films and in his office
* his script waiting for the daylights is 'Azhagiya Kuyilae'
* is the only director to have a combined gross collection of over Rs. 100 crores
* plans to make lively stories about lifeless objects


( PS )



An Ashram for Comprehensive Development of Society–Part 4
It is not just the skills to manufacture a product which is important to successfully run an economic activity, but equally important if not more is the competency to run the activity. This competency is ‘periodically’ groomed and nurtured in the Entrepreneur Development Training Centre run by the Ashram.

( Dr.Rajan )



Numerology Tips - Part 2
We cannot change our birth number or our fate number. But we can select and change our name number to be lucky. A name number should be friendly and have harmonious vibrations to birth and fate numbers. If any one or both the birth and the fate numbers were weak, we should select a strong name number to overcome the problem.

( Srinivasan Sundarrajan )



மனசே சுகமா? (16)
மைய நம்பிக்கையின் நம்பகத்தன்மையின் சராசரி சதவீதம் குறைந்து கொண்டே வரவர உங்களைக் கட்டுப்படுத்தும் நம்பிக்கையின் வீரியம் குறைந்து கொண்டே வரும். எதிர்மறை மைய நம்பிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் சில வழிமுறைகளும், சோதனைகளும் இங்கே தரப்பட்டுள்ளன.

( நிலா )



அரசியல் அலசல்
"இதற்கு முன்னாலிருந்த தயாநிதி மாறன் ஆங்கில அறிவு படைத்தவர். ஆனால் ராஜாவுக்கு ஆங்கில அறிவு கிடையாதே" என்று யாரோ சொல்ல, "ஆங்கில அறிவுள்ளவர்களெல்லாம் என்ன சாதித்திருக்கிறார்கள் அண்ணாவையும் அம்பேத்காரையும் தவிர" எனப் பொரிந்திருக்கிறார் ராஜா.

( ஜ.ப.ர )



நிசப்த ரீங்காரம் - இசை விமர்சனம்
பிரபலமான பின்னணி பாடகர்களின்றி, சினிமாப் பாடல் மெட்டுகளை நம்பாமல், இருக்கும் இசைச் சாதனங்களைக் கொண்டு மெல்லிய இசையை அளித்துள்ளார் லஹரி. டி.பி. நிஷாந்தின் குரலில் "பாதம் பாதம் அன்னையின் பாதம்" என்று தொடங்கும் முதல் பாடலிலேயே தன் கர்நாடக இசைப் புலமையை வெளிப்படுத்துகிறார்.

( விக்னேஷ் ராம் )



குட்டிக் கதைகள்! அற்புத செய்திகள்! (2)
அரசனை நோக்கிய யோகி, "மன்னரே! நான் விடும் அகாத வட்டிக்கு எந்தக் குடிமகனாலும் கூட அசலையும் வட்டியையும் தர முடியுமா என்ன? அவர்கள் என்ன செய்வார்கள்? அரசன் இறக்கவே கூடாது! நெடு நாள் வாழ வேண்டும். நாங்கள் பணத்தைத் திருப்பி அளிக்கத் தேவையே இருக்கக் கூடாது என்று இறைவனை தினம் தோறும் பிரார்த்தனை அல்லவா செய்வார்கள்."

( ச.நாகராஜன் )



வினிகரின் விந்தைகள்
நீண்ட நாட்கள் கறை படிந்த தண்ணீர்க் குழாய்களின் மீது வினிகரில் நனைத்த சிறு துணிகளைச் சுற்றி ஒரு ரப்பர் பேண்ட் போட்டு விட்டு மறு நாள் காலையில் நீர் விட்டுக் கழுவினால் சுலபமாகக் கறைகளை நீக்கலாம்.

( பிரேமா சுரேந்திரநாத் )



உன்னுடன்
உன்னுடன்

இரவு நீ

தெருவில் நடக்கும்பொழுது

உன் கூடவே வரும் நிலவு

இப்பொழுதெல்லாம் வரவில்லைதானே



( மங்கை )



நீ நான் தாமிரபரணி (73)
ஈஸ்வரன் மருமகள் வந்த கணத்தில் இருந்து அவள் மேல் வைத்த கண்ணை எடுக்கவில்லை. தாய் உள்ளே போன பின் தாமிரா மாமனைப் பார்த்த பார்வையில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. அவருக்கு நினைவு தெரிந்து அவர் தங்கை ஒரு நாள் கூட யாரிடமும் கோபப்பட்டதில்லை. புன்னகையுடன் எதற்குக் கோபம் என்பது போல் மருமகளைப் பார்த்தார்.

( என்.கணேசன் )



A Project that was under Long Scrutiny
The Sethu Samudram project would galvanize Indian shipping as ships from the West Coast and East Coast could move to and from their respective zones through the cheaper and shorter sea routes.

( Dr. Rajan)



நானென்றும் நீயென்றும் (69)
குளித்து விட்டு தன் பிம்பத்தையே கண்ணாடியில் பார்த்தவள் திகைத்தாள். விபத்துக்குப் பிறகு பூஜா தன்னைப் பேணிக் கொள்ளவே இல்லை. எப்போதுமே தன்னுடைய ஆடை அலங்காரங்களில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வாள் பூஜா.

( சுகந்தி )



ஜோக்கர் ஜோன்ஸ் பராக்! பராக்!! (2)
டேவிட் : இன்னிக்கு மெடிக்கல் டெஸ்ட் வேற நடத்தினாங்க. எல்லாப் பசங்களும் என்னை விடக் குள்ளமா இருக்காங்க. நான் மட்டும் ரொம்ப உயரமா இருந்தேன். நான் உங்க பையன் அப்படிங்கறதால தானே?

ஜோன்ஸ் : இல்லடா கண்ணு..உனக்கு 31 வயசு ஆயிடுச்சிங்கறதாலே

( ரிஷிகுமார் )



இராசிபலன்கள் (4-6-2007 முதல் 10-6-2007 வரை)
மகர ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். உடம்பில் தலை, மற்றும் முகம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். நெருப்பு, மின்சாரங்களில் கவனம் தேவை. கார், லாரி போன்ற வாகனத் தொழிற்சாலை நடத்துவோர்கள், இவற்றில் பணி புரிவோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.

( டாக்டர்.ப.இசக்கி )



THE POWER OF 'INFLUENCE' !
It is indeed sickening to observe that this power of influence acts more often than not detrimental to the interest of the individual or the society. One has a number of experiences to quote on the evil effects of "influence" taking different shapes and size, hue and scent – victims being the real worth and merit!


( N V Subbaraman )



ல ப க்
தெருவோரம் கதறித் துடித்து கையைக் காலை உதறியபடி கிடந்தானாம் அவன். பால்மணம் மாறா சிசு! குப்பைத் தொட்டியில் சும்மா கிடந்த குழந்தை, அவள் எட்டிப் பார்த்ததில் அழ ஆரம்பித்தது. சிசுவை அவள் எடுத்து வந்தபோது அந்தப் பகுதியில் சாக்கடை விலகி வழிவிட்டதாகப் புராணம். அப்படி வந்தபோதே ஆயாவின் சுருக்குப் பையை அவன் இறுக்கப் பற்றியிருந்ததாகவும் ஒரு கதை உண்டு.

( எஸ். ஷங்கரநாராயணன் )



His Name is Siva Shankar..(250)
We ourselves know what actions yield what type of results. If someone decides to knowingly fall into a pit, there is no blaming anyone else afterwards. He had the option to fall into the ditch or circumvent it.

( N C Sangeethaa )



நிகழ்கால உதாரணம்
என் ஆசைகளுக்கு அளவு பார்த்த நீங்கள் என் தேவைகளுக்கு வானமாய் நின்றீர்கள். உளுத்துப் போன மரம் என் வாழ்வில் நிழல் தந்த அதிசயம் நிகழ்ந்தது. எனக்குத் தென்றலை மட்டுமே அனுமதித்த நீங்கள் புயல்களின் தாக்குதலைத் தனியாய்த் தாங்கிக் கொண்டீர்கள்.

( ரிஷபன் )



காயங்கள் எவரிடம்தான் இல்லை..
காயங்கள் எவரிடம்தான் இல்லை..

காயமற்ற மனிதர்

உலகில் இல்லை..

வலி உணராத மனிதர்

வாழத் தெரியாதவர்..

வார்த்தைகளினாலா..

ஆயுதங்களாலா..

விபத்தா..

நேரிட்டதா..


( ரிஷபன் )