Wednesday, December 30, 2009

"சாரல் 449"

பிறவா வரம் தாரும் (3)
உம்.. நாம கொடுத்த பணம்தான் அவர்களைப் போய்ச் சேர்ந்திருக்கு. ஆனா நாம கொடுத்த பாசமும், பண்பும் அவர்களைத் தொடவே இல்லை!
 
சிரிக்க மட்டும்
மாப்பிள்ளை உலக வங்கியின் வைஸ் –பிரசிடெண்ட்
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (40)
சீர்காழி கோவிந்தராஜனின் அபூர்வமான குரல் வளத்தையும் தமிழ் உச்சரிப்புத் திறனையும் உணர்ந்து கொள்ள இந்த ஒரு பாடலே போதும்!
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (7)
புவனா முன்னும் பின்னுமாய் நடந்தாள். 'வாழ்க்கை இவ்வளவு பாரபட்சமாய் இருக்கக் கூடாது' என்று மனம் கதறிற்று
 
சங்கம் காண்போம் (12)
பாலும், பழமும் உண்டு, பந்து வைத்து விளையாடும் சிறு பெண்ணான தலைவி இக்கொடிய பாலை வழியில் சென்றுள்ளாளே
 
அமானுஷ்யன்-(21)
ஒளிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒருவன் ஒரு உயிருக்கு ஆபத்து என்று வந்த போது கொஞ்சம் கூட யோசிக்காமல் திரை மறைவிலிருந்து வெளியே வந்து காப்பாற்றுகிறான் என்றால் அவன் கண்டிப்பாக தீவிரவாதியாக இருக்க முடியாது
 
கொலை கொலையா....
ஃபேன்சிக்காய் பொருத்தப்பட்ட வண்ணக் கண்ணாடி ஜன்னல் வழியே சிவப்பு கலர் துணியைக் கிழித்து ஸைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி அமைதியாய் தன் வேலையைச் செய்தது.
 
எல்லை கடந்தால்...
நீதி மன்றங்கள் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவும் சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட வேண்டும். மற்ற நாடுகளைப் போல் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க இந்திய சட்டத்தில் இடம் இல்லை என்பதே காரணம்.
 
ரிஷி ராக்ஸ்..!! (24)
நாம் யார்? நம் ஆன்மா என்பது என்ன? இந்த உலகில் நமது பணிதான் என்ன? நமது குறிக்கோள் என்பது எதுவாக இருக்க வேண்டும்? என்பதை எடுத்துரைக்க, உணர வைக்க இருக்கும் வழிகள்தான் எத்தனை! எத்தனை!
 
வண்ணக் கோலம்
 
சில்லுனு ஒரு அரட்டை
என் மனைவிகிட்ட ஐ லவ் யூ சொல்லணும். என் பிள்ளைகள வெளில கூட்டிட்டுப் போய் வேணுங்கிறத வாங்கிக் கொடுக்கணும். என் ஃப்ரண்டு கிட்ட மன்னிப்புக் கேட்கணும்
 
காதல்
 
பஞ்ச பூதங்கள்
நீரெனும் அன்னை அமுதூட்ட நினைத்து சுரப்பது கருணைமழை;
 
ரிஷபன் கவிதைகள் (5)
சுற்றி நின்றவர்கள் மிரண்டு ஓடினார்கள். தன்னைக் கண்டு ஏன் ஓடுகிறார்கள் என்று புரியாமல் தவித்துப் போனது.
 
பதவி உயர்வு 2010 மே மாதத்திற்கு மேல் கிடைக்கும். வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வரவும்.
 
உறுதுணை தேடுமின் (3)
அப்போது நடைவழியில் அவளைக் கடந்து சென்ற இளஞ்சோடியைக் கண்டு நின்றாள். மாலை வெளிச்சத்தில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது.
 
விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்!
ஆறு வருடங்களாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பல்வேறு வியாதிகளை அக்னிஹோத்ரம் குணமாக்க வல்லது என்பதை உறுதி செய்வதாக ரத்னர் கூறினார்.
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஒரு பழத்துக்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன என்று எண்ணிச் சொல்லி விட முடியும்;. ஆனால், ஒரு விதைக்குள் எத்தனை பழங்கள் இருக்கின்றன என்று யார் சொல்ல முடியும்?
 
இராசிபலன்கள் (28-12-2009 முதல் 3-1-2010 வரை)
ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும், வீண் பிரச்சனைகளும் ஏற்படும்.

Tuesday, December 22, 2009

"சாரல் 448"

பிறவா வரம் தாரும் (2)
"என் தலை எழுத்து. எனக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைச்சீங்க?" என்று கேட்டபடி மனைவியின் பின்னே விரைந்து விட்டான்
 
அன்புள்ள அம்மா
அநாவசியக் கற்பன எதுக்குண்ணே. நீங்க கவலையேப் படாதீங்க. அல்லாவும் அம்மாவும் நம்மளக் கைவிட மாட்டாங்க
 
உதிரிப்பூ
மொட்டாய் கட்டிக் கொடுத்த சரம் விலைக்கு வாங்க, கடைசி வரை மலராமலே வாடிப் போகும்
 
மாந்துளிர் துவையல்
மாந்துளிரை மேற்கூறியவற்றுடன் சேர்த்து வதக்கிக் கொண்டு புளி, உப்புடன் சேர்த்து அரைக்கவும். சுவையான மாந்துளிர் துவையல் ரெடி
 
ஞான ஸ்நானம்
கருவரையுள் புகுவதற்காய் காமத்தைத்தேடி உயிர் காற்றுவெளி அலைகிறது
 
அமானுஷ்யன் (20)
சஹானா நான் வெளியே போக வேண்டும். எனக்கு வாசற்கதவின் சாவியைத் தர முடியுமா? நான் எப்போது வருவேன் என்று சொல்ல முடியாது
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்! (39)
எட்டாம் வயதிலேயே திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் பாட ஆரம்பித்தார். கர்நாடக சங்கீதத்தில் மட்டுமின்றி மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதிலும் வல்லவரானார்
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (6)
அந்த ஊர் மனிதர்கள் பொறுப்பில்லாமல் இருப்பதாக புவனாவும் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தவர்களென சிந்தியாவும் வாதம் செய்தார்கள்
 
உறுதுணை தேடுமின் (2)
''பயலாஜிகல் கெமிஸ்ட்ரியா?'' என்ற கேட்டவுடன் சிறுதடுமாற்றம், மறுபடி பழைய புன்னகை. ''ரொம்ப சந்தோஷங்க!'' என்று திரும்பினாள். ''மோகன்! வீட்டுக்குப் போக நேரமாச்சு.''
 
பையா - இசை விமர்சனம்
பீட்ஸை கம்ப்யூட்டரில் ப்ரொக்ராம் செய்துவிட்டு, பாடல் முழுவதும் ஓடட்டும் என்று விட்டுவிட்டார் யுவன்!
 
வண்ணக்கோலம்
 
அழகுக்கு நல்ல அகமே முக்கியம்!
ஒரு கருணை நிறைந்த பார்வையானது, பார்க்கும் எல்லோரையும் வசியப் படுத்தும் திறன் வாய்ந்தது
 
இராசிபலன்கள் (21-12-2009 முதல் 27-12-2009 வரை)
கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும்.
 
சில்லுனு ஒரு அரட்டை
2012 பற்றிய இன்னொரு முக்கிய விஷயம், பண்டைய மாயன் இன மக்களின் காலண்டர் முற்றுபெறும் வருடமும் 2012. ஹு..ம் இப்படியே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சொல்லிக்கிட்டே போறாங்க, என்ன நடக்க போகுதோ தெரியல!
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஆயிரந்தான் கவி சொன்னேன்; அழகழகாப் பொய் சொன்னேன்! பெத்தவளே, ஒம் பெரும ஒத்த வரி சொல்லலியே!
 
என்னருகே நீயிருந்தாய்!
அரைகுறை ஆடையுடன் அனுதினமும் உலாவரும் பால்நிலா
 
ஜோதிடம் கேளுங்கள்
தாங்கள் சிறிய சுவாமி சிலைகளை வைத்து, தினமும் மலர்களைத் தூவிவழிபடலாம்
 
நத்தை
கொம்பிரண்டின் உதவியால் குறிப்பறிந்து கொள்ளுது
 
ரிஷி ராக்ஸ்..!! (23)
இந்த ஆலமரத்திற்கான விதையை உருவாக்கி, வளர்த்து, தமிழ் ஜனங்க வந்து தாராளமா தங்கிட்டுப் போகட்டும் என்று, இன்றும் மரத்தின் ஆணிவேராய் நின்று ஊட்டம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் ஆசிரியர் நிலாவிற்கு மகுடமே சூட்ட வேண்டும்.
 
நகைச்சுவைத் துணுக்குகள்
நான் நியூஸ் பேப்பராக இருந்தால் உங்க கையில நாள் பூரா தவழும் பாக்கியம் கிடைத்திருக்குமே


Monday, December 14, 2009

"சாரல் 447"

சிவாஜியும் பத்மினியும் (2)
"அந்த விதிவிலக்குக்கு நா விதிவிலக்கு வாங்கிட்டேன். நம்ம ப்ராஞ்ச்ல வாச்மேன்கூட கம்ப்யூட்டர் படிச்சிருக்கணும்."
 
அமானுஷ்யன் (19)
பள்ளிக் குழந்தைகள் மற்றும் வேலைக்குப் போகிறவர்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அது வெடித்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் உண்டாகி இருக்கும்
 
அதில்லைம்மா. இந்த வீடு... நம்ம பூர்வீக வீடு. ரொம்பப் பழசாயிட்டது.ரிப்பேர் பண்ணினாக்கூட நிறையச் செலவாகும். பேசாம இதை வித்துட்டு... அழகா ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிட்டு..
 
மண்ணைப் பாடினான் விண்ணைப் பாடினான் மனிதம் சிறக்கும் மாண்பினைக் காட்டினான்
 
நெருப்பு
தாயார் உடலைக் கருக்கிடவே தாவி உயர்ந்த தீக்கொழுந்தை
 
ஜோதிடம் கேளுங்கள்
வெள்ளிக்கிழமை தோறும் நாக தெய்வத்தை வழிபட்டு வருவதோடு, தங்களின் குல தெய்வத்தையும் வழிபட்டு வாருங்கள்.
 
திருவண்ணாமலை ஸ்ரீ பச்சை அம்மன்
திருமணம் நடக்க, குழந்தைச் செல்வம் பெற, தோஷங்கள் நீங்க மக்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?(5)
இவ்வளவு பெரிய நடிகை பார்த்த உடனே இமெயில் ஐடி கொடுத்தாள்னா ஒண்ணு அது பொய்யா இருக்கணும் இல்லை உன்னை டீஸ் பண்றாளா இருக்கும். நீயா ஏதாவது கற்பனையை வளர்த்துக்கிட்டு தேவதாஸ் ஆயிடாதே
 
இனிய மகளே!
இன்னா கொடுமை இவ்வுலகில் இல்லா தாக்க எழுவாயே!
 
நாணயம் - இசை விமர்சனம்
பாடலின் ஆரம்பத்திலேயே ஒரு ஜாஸ் வாசனை - பாடல் முழுவதும் அதே உணர்வு தொடர்கிறது. ட்ரம்பெட்டையும், கிடாரையும் அழகாக பயன்படுத்தியிருக்கிறார்கள்
 
நாய்ப் பிழைப்பு
தெருவில் நடந்து ஒரு சாலையைக் கடக்கும் இடத்தில் வந்து சிக்னலில் பச்சை விளக்கு வரும் வரை காத்திருந்து சாலையைக் கடந்து பஸ் நிறுத்தத்திற்கு வந்து பஸ்சுக்காகக் காத்திருந்தது. அந்த ஹோட்டல்காரர் ஆச்சரியத்துடன் நாயைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்
 
இராசிபலன்கள் (14-12-2009 முதல் 20-12-2009 வரை)
விருச்சிகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேரும் காலமாகும்.
 
உறுதுணை தேடுமின்! (1)
கல்லூரிகளில் சொல்வது போல செமஸ்டர் என்ற வார்த்தையைக் கேட்டதும் சாமிக்குப் புல்லரித்தது, மேதாவியான தன் மகனை அப்படிப்பட்ட இடத்தில் சேர்த்துவிட வேண்டியதுதான்.
 
ஆயுளை நீடிக்க வைக்கும் நவீன மருத்துவ ஆய்வுகள்
தினமும் ஒரே மாதிரியான உணவு சாப்பிட வேண்டாம். நாளுக்கு நாள் வித்தியாசமான உணவு உட்கொள்வது நல்லது. தினமும் பழமும் காய்கறிகளும் அதிகமாக சாப்பிடுவது மிகச் சிறந்தது.
 
நீங்கள் கடைசியாக எப்போது நடனமாடினீர்கள் ?
ஒரு பிரச்னையில் உள்ள உருப்படியில்லாத விஷயங்களையெல்லாம் தள்ளி விட்டுப் பார்த்தால் அதில் இருக்கிற வாய்ப்புகள் தெளிவாகத் தெரியும்
 
ரிஷி ராக்ஸ்..!! (22)
வாஸ்துப் படி வீடு இருக்கவேண்டும் என்றில்லை, நமது 'தோது'ப்படி இருந்தாலே போதும்.
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஒருத்தர் காய்ச்சலால் அவதிப்படுகிறபோது மருத்துவரும் அவர் அருகில் படுத்துக்கொண்டு அவதிப்படவா வேண்டும்?
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (38)
மீள முடியாத கடன் சுமை, குடிப்பழக்கம் வேறு. தோல்வியில் துவண்டார். அவரது பல பாடல்கள் அவரது வாழ்க்கையையே பிரதிபலிப்பதாக அமைந்து விட்டது ஆச்சரியமான ஒற்றுமையோ!
 
சில்லுனு ஒரு அரட்டை
பனியைத் துளைத்து முளைத்த புற்களா? புற்கள் போட்டிருக்கும் புது உடையான்னு வியக்க வைக்கும் இயற்கையின் அற்புதமாய் ஆலங்கட்டி மழை
 
முளைக்கீரை புளிக்கடைசல்
சுடு சாதத்துடன் நெய் விட்டு கலந்து சாப்பிடவும், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளவும் அருமையாக இருக்கும்


Tuesday, December 08, 2009

"சாரல் 446"

மனதைக் கவர்ந்த சில பொன் (!!!) மொழிகள் (2)
என்னுடைய மெக்கானிக் சொன்னான். "உங்கள் காரின் பிரேக்கை சரி செய்ய முடியவில்லை. அதனால் ஹாரன் சத்தத்தை இரண்டு மடங்கு கூட்டிவிட்டேன்"
 
காவலர் குடியிருப்பு - இசை விமர்சனம்
எல்லாம் மனதை மயக்கும் மெலடிகள், காதிரைச்சல் இல்லாத இசை. ஒவ்வொரு முறையும் கிடைக்கும் வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார் மனிதர்.
 
மின்காந்த அலைகளுமிழும் அவளினிரு கண்களைத் தவிர்க்க வேண்டி தலை கவிழ்ந்தேன்...
 
ரிஷபன் கவிதைகள் -4
கடிதங்கள் சுமந்து வருவது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல !!
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
இந்தக் குழந்தை சாப்பிடாமல், சரியான உடை இல்லாமல் இப்படிக் காசு சம்பாதிக்க உழைக்கிறதே என்ற எண்ணத்தை நேரடியாகச் சொல்லாமல் உணர வைப்பது
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (37)
வாத்யார், தலைவர் என்று கோடானு கோடி மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்த மூன்றெழுத்து உயிரான எம்.ஜி.ஆர் இவரைப் பொறுத்தவரையில் சாதாரணமான மிஸ்டர் எம்.ஜி.ஆர்.தான்!
 
வண்ணக்கோலம்
 
சிவாஜியும் பத்மினியும் (1)
முருகையன் தொண்டையைச் செருமிக் கொண்டு மெல்ல மெல்ல தன்னுடைய சுய திருமணத் திட்டத்தை மகளின் முன்னே வைத்தான்.
 
நர்மதாவிற்காக..
"நர்மதாவுக்கு எப்படி அலைஞ்சு வேலை வாங்கிக் கொடுத்தேன். இப்ப பாரு.. ஆபீஸ்ல என்னைத் தவிர மத்தவன் கூடத்தான் ரொம்ப இழையறா.." சட்டென்று ஒரு முகமூடி கழன்று விழுந்தது. சுயம் பளிச்சிட்டது.
 
நேந்திரம்பழ அல்வா
வாணலியில் அரைத்த விழுதைக் கொட்டி, சர்க்கரை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும்.
 
ஜோதிடம் கேளுங்கள்
"தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த சேமம் திருவடிச் செங்ககைகள் நான்கு ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே"
 
குருடனின் நுண்ணறிவு
"சரியாகச் சொல்! தவறாக இருந்தால் உனக்குத் தண்டனை கிடைக்கும்" என்றான். ஆனால் குருடனோ தன் பதிலை மாற்றிக் கொள்ளாமல், "தங்கள் தாயாரிடம் கேட்டுப் பாருங்கள்" என்றான்.
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (4)
மொட்டைத் தலையுடன் கடைசி பஸ்ஸுக்குக் கிளம்பியபோது புவனாவுக்குத் தன்னந்தனியாகத் தன் தலைவிதியை மாற்றி எழுதிவிட்ட களிப்பு இருந்ததே ஒழிய முடி போன வருத்தம் சற்றுமில்லை
 
போரும் யோகாவும்!
கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல உள்ள மனத்தை ஒரு நிலைப் படுத்த வல்லது யோகாஎன்பதை மேலை உலகம் அறிவியல் பூர்வமாகவும் அனுபவ பூர்வமாகவும் கண்டு பிடித்து விட்டது!
 
பாரதி கையில் விலங்கு!
'சிறிய தானியம்போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகியப் பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்...
 
பாட்டுப் பாடு !
பாப்பா பாப்பா பாட்டுப் பாடு பழகு தமிழில் பாட்டுப் பாடு
 
அமானுஷ்யன் (18)
"உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் முதுகில் மேற்பகுதியில் நாக மச்சம் இருக்கும் மனிதர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்?"
 
ரிஷி ராக்ஸ்..!! (21)
மறுபடியும் ஊசி போட்டவர், குடுத்த மாத்திரையை சாப்பிடுங்க. சரியாகலேன்னா வேற மாத்திரைகளை டெஸ்ட் பண்ணிப் பார்ப்போம்னார். அவர் யதார்த்தமாத்தான் சொன்னார்.
 
சில்லுனு ஒரு அரட்டை
பெண்களோட மனநிலையை ஒரு சமனத்தில் வைக்கவும் மருதாணி உதவுங்கறது புதுத் தகவல்,மருதாணியை தமிழ்நாட்டு வழக்கப்படி, கைவிரல்கள் மேல் குப்பி மாதிரி வைக்கணுங்க!!"

Monday, November 16, 2009

"சாரல் 443"

வளைக்காதே, ஒடிஞ்சி போகும் (2)
அம்மாக்கு இன்ஸுலின் போடறது தான் ப்ராப்ளம். போய்ட்டு ரெண்டு நாள்ல வந்துருவியா?"
 
"ஹலோ.. லைன்ல இருக்கியா.." சியாமளியின் குரல் கீச்சிட்டது.
 
"உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும்"
 
"கொள்ளேன் மனத்தில்நின் கோலமல்லாதன்பர் கூட்டந்தன்னை விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன்மூவுலகுக்கு அள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளதே விளைந்த கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே "
 
"உன் சந்ததிக்களுக்கேனும் இன்றே சொல்லிவிடு இந்த ரகசியத்தை…"
 
புரிதலுக்கும் அறிதலுக்கும் இடையிலான கால இடைவெளி இப்போது நமக்குள்ளும்..
 
கடிகாரத்தை இடுப்பில் பார் கைத்தடி ஒன்றைக் கையில் பார்
 
"மகனே! நீ சொன்னது சரிதான். தேசத்தின் பொருளாதாரம் ரொம்ப மோசமாக இருக்கிறது. அதன் விளைவு நம் கடையிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது!"
 
"என்னெளவு பேசுத நீ? சமைஞ்ச அடுத்த வாரம் கலியாணம் பண்ணிக் கூட்டிட்டுப் போறானுக, இங்க ஆறு மாசம் பொறுத்தாச்சி. ஒம்புள்ளைக்கு புத்தி சொல்லுத வழியப் பாராம என்னமோ அவளுக்கு வக்காலத்து வாங்குத"
 
"என்ன சொல்கிறாய்? நீ கண்ணால் பார்த்தாயா? எப்போது வந்தார்?"
 
மெல்ல விடிந்து கொண்டிருந்த நேரத்தில், மெல்ல பரவிக் கொண்டிருந்த வெளிச்சத்தில் அது தெரிந்தது.
 
"என்னை டெல்லிக்கு நுழைவதற்கு முன்னாலேயே ஆள் நடமாட்டமில்லாத ஓரிடத்தில் இறக்கி விடுங்கள்" என்றான் அவன்.
 
எதிராளி திருப்பித் தாக்க எந்த முறையைப் பயன்படுத்துவதற்குத் தயங்குவானோ அந்த முறையை அவன் கையிலெடுப்பதற்கு உந்திக் கொண்டிருக்க வேண்டும்
 
ஞாயிற்றுக் கிழமை காலை உணவுக்கு முன்னால் நீங்கள் மூன்று முறை தும்மினால் அந்த வாரத்தில் உங்களுக்கு ஏதோ ஒரு லாபம் கிடைக்கும்.
 
சில்லுனு ஒரு அரட்டை
அந்தப் படத்தில் உள்ள வண்டி ஓட்டுபவர் அந்த நாய் செல்லும் வழியை நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார். அடடா! இது நல்ல ஐடியாவா இருக்கே! என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டோம்.
 
 
முட்டைக்கோஸ் பக்கோடா
மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும்.
 
விஜய் ஏசுதாஸ் மனதை நெகிழ வைக்கும் குரலில் அற்புதமாக பாடியிருக்கிறார். மனிதர் பாடியிருக்கும் விதமும், காட்டியிருக்கும் பாவமும் அப்பப்பா!!
 
தரமற்ற வாழ்க்கைமுறையே தூக்கமின்மைக்குக் காரணம்!
சரியான உடல் தகுதிக்கு உகந்த உணவை மேற்கொள்ள வேண்டும். நல்ல மனம் அமைய மனத்தை மேம்படுத்தும் வாழ்க்கை முறைகளைக் கைக் கொள்ள வேண்டும். பிறகென்ன, நன்கு இரவில் தூங்கலாம்
 
விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பெண்களால் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

Sunday, November 08, 2009

"சாரல் 442"


ஜோதிடம் கேளுங்கள்
தங்களின் ஜாதகத்தில் 7-ல் இருக்கும் கிரகங்களோடு குருவும் சேர்ந்துள்ளதால் அது தோஷமல்ல
 
ஏனோ?
இமயப் பனியின் தூய்மைதனை இழைத்துரு வாக்கிய பதுமையிவள்
 
பழமொழிகள் (3)
தாய்க்குக் கெடுதல் செய்தாலும் தண்ணீரின் தூய்மையைக் கெடுக்கக்கூடாது
 
சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.
 
 கேரட் குல்ஃபி
சற்று இறுகியதும் சர்க்கரை , ஏலப்பொடி சேர்த்து குல்ஃபி மோல்ட்களில் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்
 
சத்தியத்திற்கு சோதனை இல்லை
படிக்கவே வேண்டாம். புரியும். தெரிந்த விஷயம்தான். "கடவுளே... என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்..."
 
வளைக்காதே, ஒடிஞ்சி போகும் (1)
"பெரியம்மாவுக்கு இன்ஸுலின் இஞ்ஜக்ஷன் போடறதுக்கு நர்ஸ் எதுக்குண்ணே அநாவசியமா, இன்ஸுலின் நானே போடறேன். நர்ஸ நிப்பாட்டிரலாமே"
 
மலரோடு உறவாடும் கவிதைகள்
காய்க்க முடியாத காகித மலர்கள்... விலை மகளிர்!
 
"அதேமாதிரி இது ராஜம்மாவின் பெஸ்ட் ஃப்ரென்ட், ராஜப்பா"
 
மனித உடலியல் (29)
நாம் உறக்கத்திலிருக்கும்போதும் நமது உடல் பசி, குளிர், ஈரம் போன்றவற்றை உணர்கிறது; அச்சம், மகிழ்ச்சி போன்ற உள்ளத்து உணர்ச்சிகளையும் கூட நம் உடல் அனுபவிக்கிறது
 
அமானுஷ்யன் (14)
"அவன் உயிரோடிருக்கிறான். அவனை நம் ஆள் ஒருவன் பார்த்திருக்கிறான்."
 
ஜக்குபாய் - இசை விமர்சனம்
சுனிதா சாரதியின் குரலோடு கலந்த வயலினும் பியானோவும் பாடலின் ஆரம்பத்திற்கு இதம் தருகின்றன
 
தன் அழகை ரசித்து விட்டு, ஒரு பர்தாவை எடுத்து மாட்டிக்கொண்டு முகத்தையும் மூடிக்கொண்டு புறப்படுகிறாள்
 
காற்றினிலே வரும் கீதம்!
மழை பெய்தால் வீட்டு மொட்டைமாடியில் ஏறி நின்று மழை நீரில் நனைவான்!
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்! (33)
'என்னை நிலாவினில் துயர் செய்தான்' என்ற வரி மகிழ்ந்து பாராட்டுதற்கான அற்புதமான கவிதை வரி!
 
வயிற்று வியாதி உள்ள குழந்தைகளுக்கு பேஸ்மேக்கர்!
"இது குழந்தையின் வயிறை சீக்கிரம் காலி செய்கிறது. வாந்தி, உப்பிய உணர்வு ஆகியவற்றை நீக்குகிறது"
 
சங்கம் காண்போம் (8)
"தலைவி! என்ன இது விபரீதமாகப் பேசுகிறாய்?"
 
இராசிபலன்கள் (9-11-1009 முதல் 15-11-2009 வரை)
விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள்.
 
ரிஷி ராக்ஸ்..!! (17)
நீங்க சொன்னதை வீட்டில போயி நினைச்சுப் பார்த்தேன்னா, நாளையில இருந்து வண்டி தள்ள முடியாது. உடம்பு பலவீனம் ஆன மாதிரி தெரியும். நான் என்னைக்கும் இளமையானவன்க்கா.."
 
சில்லுனு ஒரு அரட்டை!
கையிலிருந்த பிஸ்கட்டும் தீர்ந்த நிலையில் சற்று தூரம் நடந்தால் இருக்கும் இந்திய உணவகம் நினைவிற்கு வர நடக்க ஆரம்பித்தேன்.

Monday, November 02, 2009

"சாரல் 441"

அக்னி பிழம்புகள் (4)
உனக்கு எவ்வளவு பெரிய மனசுடா! அப்பன் பேரே தெரியாத ஒரு பிள்ளையை உன் பிள்ளையா ஊரறிய வளர்க்கறியே? இந்தப் புரட்சி..
 
இவன் ஒரு விதம் (2)
"ஆச்சுங்கய்யா...எடுத்தாச்சு...இதோ, இந்தப் பைக்குள்ள போட்டிருக்கேன்யா..."-சாக்கடை தோண்டும் கொண்டியின் நுனியில் பை குத்தித் தொங்கிக் கொண்டிருந்தது.
 
அமுதென்றும் நஞ்சென்றும் - பயணம் (2)
நம்மேல் நீர் பீய்ச்சும், தலைக்கு மேல் வாய்பிளக்கும் டயனோசர்கள், திடீர் இடி, வெள்ளம், புகை, சட்டென்று தோன்றும் மம்மிகள் என்று திகிலுக்கொன்றும் குறைவில்லை
 
திடீரென்று...(29)
"நம் அம்மா ஏதோ சொன்னதற்காகத்தான் அப்பாவும் அவர் நண்பரும் சிரிக்கிறார்கள்"
 
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்!
ஓ என்ற வார்த்தை உச்சரித்தவுடன் ஒரு முழு வட்டம் தோன்றியது. ம் என்று முடிக்கும் போது சிக்கலான ஸ்ரீ யந்திரம் உருவானது
 
நகைச்சுவை துணுக்ஸ் (11)
"இப்ப இல்ல, எப்ப வந்தாலும் நான் ஃபீஸ் வாங்குவேன்!
 
பழமொழிகள் (2)
"வெண்ணெயைக் கொண்டுபோய்க் கொக்கின் தலையில் வைத்துவிட்டால் வெயிலில் உருகி வழிந்து அதன் பார்வையை மறைத்துவிடும். பின்பு பிடித்துவிடலாம்"
 
அமானுஷ்யன் (13)
"எனக்கு நான் யார், என்னை ஏன் சிலர் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அதைத் தெரிந்து கொள்கிற வரை உயிரோடு இருக்க வேண்டும்"
 
எல்லை இல்லை
"என்னப்பேன்! பழங்கதையா? எரித்துவிடு இதனைஉடன்!"
 
ஜோதிடம் கேளுங்கள்
 
கண்ணன் பிறந்தான்!
எழிலார் தாமரையாள் என்றுமவன் பக்கத்தில் எல்லோர்க்கும் அருள்செய்பவள்!
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (32)
'ப' வரிசை படங்களாக எல்லா தலைப்புகளும் ஏன் 'பா' என்றே ஆரம்பிக்கிறது என்று கேட்கக் கூடாது!
 
சங்கம் காண்போம் (7)
"என்னம்மா இது! ஏன் கலங்குகிறாய்? ஒன்றும் ஆகி விடாது. சரி! நீ நல்ல முறையில் பயிற்சி அளித்திருக்கலாமே?"
 
இராசிபலன்கள் (2-11-2009 முதல் 8-11-2009 வரை)
தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும்.
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?
 
யோக வழி யோகம்!
மதம், மொழி, நாடு, இனம் இவை அனைத்தையும் கடந்து மனிதனை மனிதனாக வாழ வழி காட்டும் கலை "யோகக் கலை".
 
சில்லுனு ஒரு அரட்டை
'என் பொண்ணுக்குக் கல்யாணம் செய்யப் போறேன். அதனால அத்தன பேரும் உங்க பேங்க் பேலன்ஸ் சொல்லுங்க'
 
வண்ணக்கோலம்
 
தீக்குள் மனம்
யூ மஸ்ட் ஹேவ் பிளானிங்... என்ன தேவைன்னு முன்கூட்டியே தீர்மானிச்சு ஸ்டாக் பண்ணிக்கணும். நானும் மனுஷன்தான். ரோபோ இல்லே."
 
மகிழ்ச்சியான வாழ்வு - எங்கே கிடைக்கும் ?
"இந்தக் கணக்கெல்லாம் எனக்கு சரியாக வராது. மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் வாழ்ந்த திருப்தியான வாழ்வே போதும். அதுவே என் மகிழ்ச்சி"

Monday, October 26, 2009

"சாரல் 440"


திடீரென்று...(28)
 
"என் அம்மாவின் ஆதரவு இருப்பதால்தான் முடிகிறது. அதோடு சுமுகமாகப் பிரிகிறோம். அவன் விருப்பப்படி வீடும் பையனும். எனக்குக் கம்பெனியும் பெண்ணும்."
 
 
"ஏன்னா.. நீங்க ரொம்ப அழகு.. எத்தனை சிகப்பு.. ஏன்னா.. மோதிர விரல்லே போட்டுண்டு இருக்கேளே, ஒரு சிகப்புக்கல் மோதிரம், அதை கழட்டித் தரேளா? எண்ணெய் இறங்கி அசிங்கமா இருக்கு! அதை புதுசு பண்ணிப் போட்டுண்டா ஜம்னு இருக்கும்..."
 
 
ஏற இறங்க அவர் முகத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர், 'சரி, உன் பாட்டையே இசையமைக்கச் சொல்லு' என்றார்
 
 
'தலைவியின் முகச்சோர்வெல்லாம் எங்கே போயிற்று? இத்தனை அழகாக இருக்கிறாளே! என்ன மாயம் செய்தார் தலைவர்?' என்று வியந்தாள் தோழி!
 
 
கணினி !
 
படிப்பதற்குப் பாடங்கள் பக்குவமாய்த் தந்திடும்...
 
 
கை அசைக்கும் ரயில் பெட்டிக் குழந்தைகளின் உற்சாகத்தைப் போலவே
 
 
"பாவம்டா அவன், கால்ல செருப்பில்லாம, வெயில்ல நிக்ய முடியாமத் துடிச்சிட்டிருந்தான். அவனுக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் குடுத்துட்டுப் போவோம்டா."
 
 
"ஏலே பேராண்டி, ஒரு புத்தகம் வாங்கிட்டுப் போலாம் வாடா! "
 
 
"வாக்களிக்கும் மக்களிடமிருந்து வலுவான கோரிக்கை வந்தால் அது அரசியல் சக்திகளால் புறக்கணிக்கப்பட மாட்டாது
 
 
"மயிலே, மயிலே, இறகு ஒன்றைப் போடேன்" என்று கெஞ்சிக் கேட்டால், "இந்தா, எடுத்துக் கொள்" எனச் சொல்லித் தன் இறகையொடித்து அது போடுமா?
 
 
"அய்யோ! அந்தப் பாகற்காய் கறி எனக்குக் குமட்டிக் கொண்டு வரும்"
 
 
அதுக்காக இப்டியா? அதை யாராச்சும் ஆளைக் கூப்பிட்டு அப்புறப்படுத்தாம இப்படியா மொத்தமாத் தள்ளி விடுவாங்க? யாரும் பார்க்கமாட்டாங்கன்னு நினைக்கிறாங்களா? அல்லது யார் கேட்கப் போறாங்கன்னு நினைச்சிட்டாங்களா?
 
 
"அவன் உயிரோடு இருக்கிறான்" என்று மீண்டும் சொன்ன அவன் தொடர்ந்தான். "என் ஆள் ஒருவன் அவனை நேரில் பார்த்திருக்கிறான்."
 
 
"என்ன மார்க் வாங்கி என்ன பிரயோசனம்! சமூகம் வாரியான இட ஒதுக்கீட்டுல நாம அடிபட்டுப் போறோமே! மறுபடியும் கடனை வாங்கி ஏதாவது காலேஜ்ல டொனேஷன் கொடுத்தாதான் சீட் கிடைக்கும்
 
 
"வானவெளிச் சுடரே!நீ வர்ஷிப்பாய் ஒளிஎன்மேல்;
 
 
ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார். அப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன
 
 
"அமெரிக்கர்கள் எங்களைப் போல கனிவாக இருக்க மாட்டார்கள். திரும்பும்போது சரியான நேரத்தை அனுசரியுங்கள்"
 
 
வியாழன் கிரகம் எப்பவுமே மகிழ்ச்சியா இருக்கும்போல. அதனோட முணுமுணுப்பைக் கேளுங்களேன்.

Tuesday, October 20, 2009

"சாரல் 439"

2RSS
அமானுஷ்யன்
ஜெயினும் அவனும் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்கள். ஆனால் ஏதோ கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாய்த் தெரிகிறது. நாம் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும்...
 

என் காதல்…

'ஒரு' என்ற வார்த்தைக்குள் ஒன்றாகவே இருந்திடுவோம்.
 
 
அவ எம்.எஸ்ஸி. படிக்கும்போது மத்த பெண்களெல்லாம் பி.எஸ்ஸி.லே ராமானுஜத்துக்கு ஒருவாரிசு இருக்கான்னு பேசிப்பாங்களாம்."
 
 
அஜினொமோட்டோ அல்லது விருப்பப்பட்டால் சூப் ஸ்டாக் சேர்க்கலாம்.
 
 
காதோரமாய் வந்தோர் உரைசொன்ன மென் காற்றோ இக்கருவுக்கு விதையிட்டது?
 
 
என்னிடம் வந்தான். "நா.. பிச்சக்காரன் இல்ல சாமி."சொல்லிவிட்டு கோணியைத் தோளில் போட்டுக் கொண்டு நடந்தான்
 
 
உயர்வும் தாழ்வும் சேர்கையில் உண்மையிலே இனிக்குமாம்!
 
 
"இரண்டு நாட்களாக உன் தலைவி ஆனந்தக் கூத்தாடுகிறாள். என்ன மாயம் என்று தெரியவில்லை!" என்று கேலியாகக் கூறினாள்.
 
 
வியர்வை உடலில் இருந்தவாறே, உடலைக் கழுவதற்கு உதவும் ஷவர் போலப் பணியாற்றுகிறது
 
 
"ஏய் சங்கர்.. என்னைத் தெரியல? நான் தாண்டா விஸ்வம்.. எங்கிட்ட எத்தனை அடி வாங்கி இருக்கே? மன்னிச்சுடு."
 
 
நீங்க பார்த்த முதுகெலும்பில்லாத வரனைக் காட்டிலும், என்னை, எனக்காகவே தேடி வந்த மனோகர் நல்ல கணவராத் தெரியறார் அப்பா!...
 
 
பிள்ளைகளை அதீத பாதுகாப்புணர்வுடன் பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோருக்கும் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்காத ஆசிரியர்களுக்கும் பெரும் பங்குண்டு
 
 
இரவு பூஜையின் போது, பல தேவர்கள் இந்தக் கோவிலுக்கு வருவதால் பக்தர்களை நடுவில் வெளியேற அனுமதியில்லை
 
 
"உண்மையாகவா கூப்படறீங்க? நான் உங்க கூட வர சம்மதமா?" என மனைவி அப்படி வியப்போடு கேட்ட கேள்விதான் ஒரு புகழ் மிக்க பாட்டாக என்னுள் பரிணமித்தது.
 
ஆசைகளில்லாத சித்தம் அதிலென்றும் காயங்கள் நேராது மாசேதும் இல்லாத புத்தி மற்றோரைக் காயப்படுத்தாது
 
 
உடல் பருமனாகாமல் தடுக்க! வேலைக்குச் செல்வோர் சைக்கிளில் சென்றாலும் இதே விளைவைப் பெற முடியும்.
 
 
எப்படியும் 2 படம் முடிஞ்சதும் தமிழுக்கு வந்துருவாங்க. அப்ப நீங்கல்லாம் இவங்க யாரு, எந்த ஊருன்னு தவிக்கக் கூடாது பாருங்க, அதுக்காகத்தான்.
 
பக்குவமான பேச்சு என்பது வயது ஏற ஏற, பணிப் பொறுப்புகள் கூடக் கூட அவசியம் வரவேண்டிய ஒன்று.
 
 
தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்




Wednesday, September 16, 2009

"சாரல் 434"

"நா பெரியவனானப்பறம் மம்மி, ஃபாதர்ஸ் டே அன்னிக்கி, புது டிரஸ்ஸும் ஒரு வாக்கிங் ஸ்டிக்கும் வாங்கிக்கிட்டு, ஓல்ட் ஏஜ் ஹோம்க்குப் போவேன், டாடியப் பாக்க."
தொடுதல், அழுத்தம், வலி, வெப்பம், குளிர்ச்சி ஆகியவற்றை அவை அவ்வப்போது மூளைக்கு அனுப்பி உடலின் சுற்றுச்சூழலைப் பற்றித் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.
"பழசையெல்லாம் மறந்துட்டு புதுவாழ்க்கையை ஆரம்பிக்காம என்னைப் பழிவாங்கறியோன்னு உன்மேல எனக்கு வருத்தம்தான்"
'அப்பாவுக்கு அறுபதினாயிரம் மனைவிகள் இருந்தும் சந்தேகமில்லை; ராமனுக்கு ஒரு மனைவி ஆயிரம் சந்தேகங்கள்!
ஹோ ஹோ வென இறைந்திடும் விண்ணகம் மறைந்த தாயை வா வா வென அழுது விளித்திடும் பிள்ளை
தங்களின் உள்ள பிரதிபலிப்புதான் தங்கள் வாழ்க்கை. ஆக்கபூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்
கண்ணதாசன் பாடல்கள் எழுத அதை டி.எம்.எஸ் பாட டூயட்டில் பி.சுசீலா இணைய அந்தப் பாடல்கள் இன்றளவும் விரும்பிக் கேட்கப்படும் பாடல்களாக ஆகி விட்டன
நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் –என்னை நல்கும் உரிமை அவர்க்கில்லை
என் முயற்ச்சியில் கிடடாத வெற்றி. ஒரு பெரியவரைக் கால்களில் விழ வைத்து குரூர திருப்தியில் சமாதானம் அடைந்த மிருகம்
வண்ணமிகு காட்சியாம் இயற்கைஎழில் சொற்களால் வருணிக்க வியலாது காண்!
பொதுச் சொத்தைச் சேதப்படுத்தலாம் என்கிற 'அறிவு' யாருக்கும் உண்டாகாத காலம்!!
பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை
'இதுவும் கடந்து போகும்'னு துன்பம் வரும்போது நினைச்சுக்கோங்க, எல்லாமே நல்லதுக்கா மாறும்.
இந்திய உணவுவகைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் மஞ்சள் அல்சைமர்ஸ் நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று தெரிவித்த கலிஃபோர்னியா பல்கலைக் கழக ஆய்வு ஒன்று, இதனால்தான் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகமில்லை என்று அடித்துச் சொல்கிறது
மென்மையான காதல் பாடலை சின்மயியும் உன்னிகிருஷ்ணனும் பாடியிருக்கிறார்கள். தமிழ் நன்கறிந்த பாடகர்கள் பாடும்பொழுது கேட்பதற்கு எத்தனை அழகாக இருக்கின்றது!!

Thursday, September 10, 2009

"சாரல் 433"


ஆரஞ்சு, பிற பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றிலிருந்து இந்த வைட்டமினை நாம் பெற இயலும்.
என் அம்மாவும் நானும் எவ்வளவோ உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கோம். நான் மனசார எந்தத்தப்பும் பண்ணலை. இனிமே அவனுக்கா தோணினாத்தான் உண்டு, நான் எதாவது சொன்னா அவனுக்கு வைராக்கியம் இன்னும் ஏறத்தான் செய்யும்'னேன்.
"அந்தக் கடக்கிப் போங்க. பொடவயச் சேய்ஞ்ஜ் பண்ணிரு வோம். ஒரு நூறு எரநூறு கூட இருந்தாலும் பரவாயில்ல, பொடவ பாக்க லட்சணமாயிருக்க வேண்டாமா?"
என்னைப் பத்தியோ, உங்க மகளைப் பத்தியோ, எப்படி சமாளிச்சோம்.... எப்படி வாழறோம்னு புரிஞ்சுக்கிற இயல்பான கணவனா... தகப்பனா.. மாறின மன நிலை இன்னமும் வரலே உங்களுக்கு
சிறப்புறு மணியே செவ்வாய் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள் செவ்வாய் மலரடி போற்றி! - அங்காரகனே அவதிகள் நீக்கு
நவரசங்களுக்கும் ஏற்றபடி காதல், கோபம், பயம், சோகம் என வெவ்வேறு உணர்ச்சிகளுக்கான வெற்றிப் பாடல்களைப் பாடியவர் என்ற சிறப்பிலும் அவர் தனியிடம் பெறுகிறார்
வளமை மிகு தமிழ் மொழியின் இனிய பல குண நலனை வாழ்த்தி உல(கு) உய்ய மகிழ்வோம் !
நம்ம அரசு கொண்டு வரப்போற சமச்சீர் கல்வி பற்றி என்ன நினைக்கிறீங்க? ஒருபக்கம் வரவேற்கத்தக்கதுதான். இதனால் கிராமப்புற மாணவர்களும் தங்கள் அறிவை நிரூபிக்க முடியும்
வெள்ளை நிறத் துணிகளை துவைக்கும் முன் எலுமிச்சைச் சாறு கலந்த வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து துவைக்க, துணிகளின் நிறம் பளிச்சிடும்.
விண்டோவைக் குளோஸ் பண்ணிடுங்க.. பிரவுசர் விண்டோவைச் சொன்னேன்; ஜன்னலைப் போய்க் க்ளோஸ் பண்றீங்க..?!
'வாழ்க்கை நிகழ்கணத்தில் மட்டுமே. நிகழ்கணத்துக்கு வெளியே இதுவரை வாழ்க்கை இருந்ததுமில்லை; இனி இருக்கப் போவதுமில்லை.'
எளியவர் யாரும் எளியவராய் நின்றிடவே வல்லமையுடன் திகழ்கிறோம் நாம்
"வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாமா? இந்தப் பாண்டவர்களை உன் தந்தை கண்ணுக்குக் கண்ணாகக் கருதவில்லையா? இவர்கள் உங்கள் சகோதரர்கள்தாமே? இவர்களை நாணி வெட்கப் பட வைக்கலாமா?"
"அந்தப் போலீஸ்காரருடன் யாராவது பேசிக் கொண்டிருந்தே இருந்து விட்டு திடீர் என்று அவர் எதிர்பார்க்காத போது அடித்திருக்கலாம்...."

Tuesday, September 01, 2009

"சாரல் 432"


"அம்மா, ஒங்க மாதர் சங்கத்துல சொல்லி, செல்லப் பிராணிகளோட பிறப்புரிமையையும் சுதந்திரத்தையும் நிலை நாட்டக் கூடாதா அம்மா, இதுகூட ஒரு சமூக சேவை தானே."
 
இவை தீவிரமாகப் பணியாற்றினால் நமது கைகள் மற்றும் கால்கள் ஆகியவை நீண்டும் பெரிதாகவும் வளர்ச்சியுறும்
சம்பிரதாயமாய் என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லாதே. நீ சொல்லாமலேயே எனக்குத் தெரியும்..."
இந்தக் காலம் தங்களுக்கு, வெளிநாட்டுக்கு செல்லுதல் மற்றும் திருமண பாக்கியம் ஆகிய இரண்டையும் தந்துவிடும்
எம்.ஜி.ஆர் சுழன்று சுழன்று தான் ஆணையிட்டால் என்ன என்ன நடக்கும் என்பதைப் பாடியவாறே தெரிவித்தபோது ஜனங்கள் சொக்கிப் போனார்கள்
மனிதத் தத்துவத்தின் மகோன்னத நிலைகளால் ஆன தெய்வ நாட்டிற்கும், அதன் மிகத் தாழ்ந்த படிகளால் சமைந்த நரகத்திற்கும் இலக்கியம் நம்மை அழைத்துச் செல்கிறது
வனத்திற்கு நடுவில் மலைகள் சூழ எங்கும் பசுமைதான்! நம் மனதிலும் சொல்ல முடியாத ஒரு உணர்வும் மன அமைதியும் ஏற்படுகின்றன
நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று சொல்கிறாயே என்பதற்கு,"காது காது என்றால் லேது லேது என்கிறாயே" என முணுமுணுப்பவர்கள் உண்டு.
"அதனாலென்ன? எவ்வளவுநாள் நீ தனியாக இருக்க முடியும்? நீ என்னையே நினைத்துக்கொண்டிரு என்று க்ரிஷ் எப்போதும் சொன்னதில்லையே."
உன் ஒவ்வொரு அடியிலும் இடதுபுறம் உடைந்து கொண்டு நான்!
ஒரு கணம் உற்றுப் பார்த்து விட்டு அலறினான், "அட, வெங்கட்ரமணியாடா நீ? எப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டே? கன்னம் எல்லாம் குழி விழுந்து.. அந்த நாளில் ஜெமினி கணேசன் மாதிரி இருப்பியேடா?!"
கலாசாரப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் அடக்குமுறையோ வன்முறையோ இத்தகைய விவகாரங்களுக்கு என்றும் தீர்வாக முடியாது. மாறாக, விளைவுகள் குறித்த விழிப்புணர்வும், தனிமனித பொறுப்புணர்ச்சியுமே இப்பிரச்சினை வேரூன்றாமல் தவிர்க்க உதவும்.
"அவர்கள் உள்ளே வந்து தேடக் கூடும் என்ற சந்தேகம் வந்த போது அந்த அறையில் மடித்து வைத்திருந்த இந்த உடையை உங்கள் அனுமதியில்லாமல் எடுத்துப் போட்டுக் கொண்டேன். மன்னிக்கணும். நான் இதைத் துவைத்து உங்களுக்குத் தந்து விடுகிறேன்...."
"ஒருவன் ஆடப் பணயம் இன்னொருவன் வைப்பது எப்படி சரியாகும்?" என்று யுதிஷ்டிரன் கேட்ட கேள்விக்கு, "மாமன் ஆடப் பணயம் மருகன் வைக்கொணாதோ? இதில் வந்த குற்றமேதோ?" என்று ஒரே அடியாக அடித்து விட்டான் துரியோதனன்.
பூர்வீகச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்த பிரச்சனைகள் மாறி மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ள காலமாகும்.


Monday, August 17, 2009

"சாரல் 430"

'உன் கோபம், வருத்தம் இதெல்லாம் கூட நீ ஷேர் பண்ணிக்கறே மறைமுகமா. யாரோடவும் பேசாம.. விஷ் பண்ணாம சைலண்ட்டா இருக்கறப்ப..'
"யாருமில்லை." 'ஒருவன் இருக்கிறான். ஒருவேளை, சிலகாலம் என்னைப் பார்க்காமலிருந்தால் வெறுத்துப்போய் மறந்தாலும் மறந்துவிடலாம். அப்படிச் செய்தால் அவனுக்கு எவ்வளவு நல்லது!'
இந்த ஆண்டு இறுதிக்குள் கை கூடி விடும். தங்கள் நட்சத்திர நாயகனான சந்திரனை திங்கள் கிழமை தோறும் வழிபட்டு வர, வளம் பல கூடும்
இதற்கிடையிலும் இவர்களுக்கு இடையே இருந்த நட்பு அத்தி பூத்த ஒன்றா? அபூர்வமான ஒன்றா! திரை இசைப் பயணத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய நட்பு இது!!
உன்ன விட்டு விலகி விலகி போனேன்டா! என்னால முடியலை! உன்கிட்ட பேசாம இருக்க என்னால முடியலை! நான் தோத்துப் போயிட்டேன்.
அடங்குகையில் கடலுக்குள் அமிழ்ந்திடும் பேராறு அதுபோன்றே நம்வாழ்க்கை அதையறிந்து கொள்வாய்
5 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவுங்கள். முகத்தில் சூடு குறைந்து குளுமையை உணர்வீர்கள்
தேடுதல் என்னவோ விடைகளுக்காகத் தான் கிடைத்ததோ மேலும் சில நூறு வினாக்கள்!
தன்னைத் தின்ன வரும் தவளையைக் கண்டு சிங்கம் சிரித்துக் கொண்டே அருள் செய்வது போலல்லவா அவர்கள் இவனை மன்னித்து அன்பு செலுத்துகிறார்கள்
என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அன்பு, பாசம் எல்லாமே இவ்வளவுதானா? ஈருடல், ஓருயிர் என்பது எல்லாம் வெறும் கதைகளில் மட்டும்தானா?
 
வான் முழுவதும் மஞ்சள் அல்லது சிவப்பு நிற விண்மீன்களும் விண்மீன் கூட்டங்களும் பொரியவையும் சிறியவையுமாய் நிறைந்து கண் சிமிட்டும்
 
விழாவில் கலந்து கொண்ட கே.எஸ்.ரவிகுமார், கௌதம் மேனன் போன்ற பிரபலங்கள், தாங்கள் திருதிருவென்று விழித்த அனுபவங்களையும், துறுதுறுப்பாக செயல்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.
"இந்தியாவின் சிந்தனை ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து வெளிவந்து வாழ்க்கையோடு மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டும். இந்தியாவின் ஆன்மீக வாழ்வு மலைக் குகைகளிலிருந்தும், கோயில்களிலிருந்தும் வெளி வந்து புதிய உருவங்களுக்கேற்பத் தன்னை சரி செய்துகொண்டு உலகைக் கைப்பற்ற வேண்டும்
எங்களுக்குத் திருமணமாகி இருபத்தி எட்டு வருடங்கள் ஆகின்றன. என் மனைவி இன்னும் இருக்கிறார்.....என்னை அதிகாரம் செய்து கொண்டு"

Monday, August 10, 2009

"சாரல் 429"

உமையே! தாயே! உலகம் போதும் உயிரைத் தந்தேன் உனதடி தஞ்சம் அமைதி இல்வாழ்வை அடையப்பெற்றிலை;
 
நன்மலரைச் சூட்டியே நா மணக்கச் செப்பினேன் பொன்பொருளை ஈந்திடுவாய் வெள்ளியே எந்தனுக்கு இன்பத்தைத் தந்து எழில்வழியே நீ காட்டி, அன்பான ஆசி கொடு
மனதை வருடும் மெட்டு, நெஞ்சைப் பிழியும் வரிகள். ரொம்பவும் வாத்தியங்கள் பிரயோகிக்காமல், மெட்டை மட்டுமே நம்பினால் போதும் என்று நினைத்து ஒரு நல்ல பாடலைத் தந்திருக்கிறார்
முதுமையினில் மனைவிதுணை இலையெனில் வாழ்க்கையொரு முட்புதர் போலாகுமோ
சம்பூர்ண ராமாயணத்தில் எல்லாப் பாடல்களையும் அமைத்து இதிஹாஸ கதைக்கு ஏற்றவாறு சாமான்யரின் உள்ளம் கொள்ளை கொள்ளும் விதத்தில் எழுத முடியும் என்று நிரூபித்தார்.
சாதாரண கூச்சத்திற்கு ஒரு மனிதனையே ஆட்டிப் படைக்கும் அளவிற்கு சக்தி உண்டா! அவன் ஆளுமையை நிர்ணயிக்கும் அளவு பவர் உண்டா!
அவனுடைய ஒவ்வொரு அசைவையும் என்னையறியாமல் நேசிக்க ஆரம்பித்தேன். நானா? நான் எப்படி காதலில் விழுவது? எனக்குத்தான் அது போன்ற உணர்வுகள் வரவே கூடாது என்று நான்கு வருடங்களுக்கு முன்பே தடை விதித்திருந்தேனே!
நல்ல முடிவு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. ஒரு தகுந்த முடிவு எடுப்பதற்கு நமது அறிவு துணை நிற்க வேண்டும்
பொறாமையினால் என்ன ஆகும்? "நெஞ்சத்துள்ள பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்" போகும். ஆண்மை, மறம், திண்மை, மானம், வண்மை யாவும் மறந்து போகும்.
காட்டு வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த வாசுவின் வாழ்க்கையில் பத்மா இணைந்தபின், வெள்ளத்தின் வேகம் சற்றே மட்டுப்பட்டது.
மலயுச்சில அவனைத் துப்பாக்கில சுட்டுருக்காங்க. குண்டு பட்டவுடனே அவன் பேலன்ஸ் தவறி உச்சியில் இருந்து கீழே விழுந்துட்டான். அந்தப் பக்கம் பெரிய பள்ளத்தாக்கு.
அவ்வாறு எடுத்து வரும் எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ வைப்பது மிகுந்த பலன் தரும். எதிர் மறை சக்திகளை அறவே நீக்கும் சக்தி கொண்டதாகக் கூறப்படுகிறது.
"என்ன எமா.. அப்போ வேற காமிச்சியே"ங்கறார் வியாபாரி. எமன் சிரிச்சிக்கிட்டே சொன்னார்... "அது நரகத்தோட அட்வர்டைஸ்மென்ட்!"
"ஆர்லான்டோ வந்ததிலேர்ந்து பிரசன்னா என்னை ஒரு டைம்மெஷின்லே உக்காத்திவச்சு முப்பது வருஷத்துக்கு முன்னாடி கூட்டிண்டு போயிட்டான். அந்தக் காலத்திலே நடந்ததெல்லாம் நேத்திக்கி நடந்தமாதிரி இருக்கு."
 
பச்சை மிளகாய்க்குப் பதிலாக ஒரு மோர்மிளகாயை வறுத்தும் சேர்க்கலாம்.
மகளுடைய அந்நியமாதல் அம்மாவுக்கு உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவள் பக்கவாட்டில் கையைச் செலுத்தி மகளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்
குடிகாரன் பேச்சுன்னு ஏதோ சொல்வாங்களே.. அது மாதிரி ஆயிடப்போவுது. அப்புறம் உங்க பொண்ணு அவரைத் திருத்தலேன்னு கெட்ட பேர் வந்திடப் போவுது
கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது
மெட்டுக்குப் பாடல் எழுதச் சொல்லி கவிஞர்களைக் கேட்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சிக்கு பாடல் அமைத்த செய்தியையும் இப்போது அறிகிறோம்!
தீங்கு கண்டு வாய்ப்பேச்சில் "த்சொ, த்சொ," சொல்லி அத்தோடு கடமையை முடித்துக் கொள்கிற சாதாரணர்களின் பால் அவனுக்குள்ள ஏளனம் வெளிப்படுகிறது

Tuesday, August 04, 2009

"சாரல் 428"

மகளுடைய அந்நியமாதல் அம்மாவுக்கு உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவள் பக்கவாட்டில் கையைச் செலுத்தி மகளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்
குடிகாரன் பேச்சுன்னு ஏதோ சொல்வாங்களே.. அது மாதிரி ஆயிடப்போவுது. அப்புறம் உங்க பொண்ணு அவரைத் திருத்தலேன்னு கெட்ட பேர் வந்திடப் போவுது
கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது
மெட்டுக்குப் பாடல் எழுதச் சொல்லி கவிஞர்களைக் கேட்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சிக்கு பாடல் அமைத்த செய்தியையும் இப்போது அறிகிறோம்!
தீங்கு கண்டு வாய்ப்பேச்சில் "த்சொ, த்சொ," சொல்லி அத்தோடு கடமையை முடித்துக் கொள்கிற சாதாரணர்களின் பால் அவனுக்குள்ள ஏளனம் வெளிப்படுகிறது
கமாண்டர் ஒரு வீரனைக் கூப்பிட்டு, "ஒரு அமெரிக்கன் ஒரு ரஷ்யன் இருவரைப் பார்த்தால் முதலில் யாரைச் சுடுவாய்?" என்று கேட்டார்
'இளைய நிலா'வோடும், 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலோடும்' ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள், ஏமாற்றந்தான் அடைவீர்கள். வார்த்தைகளே புரியாமல் இன்று வெளிவரும் பல பாடல்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆல்பம் தனித்து சுகமாகவே இனிக்கிறது.
கண்முடித்தனமான காதல் என்று தன் நண்பர்களை எப்பொழுதோ கிண்டல் செய்த அவன், அதே போன்ற காரியங்களில் தானும் இறங்கிவிட்டது அவனுக்குப் புரியவில்லை
வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது
தொலைக்காட்சி சப்தமில்லா தொ(ல்)லைபேசி அலறலில்லா மின்சாரமில்லா ஓரிரவில் என்னுடன் நீ பேசும் வார்த்தைகளைக் கோர்த்து கவிதையாய்த் தொடுக்க ஆசை
மெல்ல மெல்ல ஊர்ந்து, கட்டப்பட்ட கையை லாவகமாய் பயன்படுத்தி, சாவியை உருவினாள். பின், பலம் கொண்ட மட்டும் அதனை ஜன்னலின் வழியே வீசி அருகிலிருந்த புதருக்குள் எறிந்தாள்.
 
தந்தை மகன் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்
சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அ‎ந்தக் காலத்துல ஏற்படுத்தி வச்ச சில விஷயங்கள் இன்னிக்கும் அதை சரியாப் புரிஞ்சிக்காமலே தொடருது.
வண்ணக்கோலம்
அவர் சிறந்த கலாரசிகராக இருப்பதோடு, நல்ல கல்வித் தகுதியும் உடையவராகவும் இருப்பார். நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்

Tuesday, July 28, 2009

"சாரல் 427"

வியாழக்கிழமை தோறும் தாங்கள் வழிபடும் தெய்வத்திற்கு முன் தீபம் ஏற்றி வாருங்கள். பதவி உயர்வும், கூடுதல் சம்பளமும் பெற நிலாச்சாரலின் வாழ்த்துகள்.
 
கண்ணீர் வரும் நேரம் ஈரம் காய வைத்து துடைத்தெறியும் அன்பாய்.. மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் ஜீவனாய் எனக்கே எனக்காக காற்று!
பேச்சு சக்தி கடவுள் கொடுத்ததே அவசியத்துக்கு பேசித்தான் ஆகணும்னு.. இல்லேன்னா இன்னொரு ரக மனுஷனா.. பேச்சு வராத மாதிரி படைச்சிருக்கலாமே
அப்போது அவர் ஆழ்மனத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. "உன் தோத்திரப் பாடல்களில் மகிழ்ச்சி அடைவதைப் போலவே அந்தத் தவளைகளி‎ன் கத்தலிலும் கடவுள் மகிழ்ச்சி அடைந்திருக்கலாமல்லவா?"
தினம் தினம் அன்பையும், மருந்தையும் ஆகாரத்தையும் இவளுக்குத் தாரை வார்த்து இவளுக்கு உயிர்ப் பிச்சை தந்திருக்கிறாள். இவள் வேண்டாமென்று ஒதுக்கிய உறவை ஆண்டவனே முழுவதுமாக ஒதுக்கி விட்டான்.
உலகின் பெரும் மதங்களில் ஹிந்து மதம் ஒன்றே ஒன்றுதான் பிரம்மாண்டமான முடிவில்லாத பிரபஞ்சம் உருவாகி பிரளயகாலத்தில் அழிந்து மீண்டும் உருவாவது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது
அங்கிருந்து அவர் தீபக்கை பாட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவர் உடல் வெப்பமானது. உடல் எரிய ஆரம்பிக்கும்போது அவர் ஏரியில் குதித்தார். உயிர் தப்பினார். அக்பர் வியந்து போனார்.
 
அன்பைப் பகிர்ந்து பெறும் அழகான குழந்தைகளில் அவள் சுற்றம் விரிவாகுமாம் அல்லும் பகலுமவர் முன்னேற்றம் கண்டிடவே அரும்பாடுகள் படுபவள்
பின்பு, வேக வைத்த பட்டாணியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். கடைசியில் கருவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கவும்
சாதாரணமாக நாம் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்வதில்லை. நடக்கப்போகும் அல்லது செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கிறோம்
அவர்களை விட நாம் கிட்டத்தட்ட 200 மடங்கு பலம் பொருந்தியவர்கள். அவர்களின் பிரதான இனத்தை விட நாம் உருவத்திலும் மூன்று மடங்கு அதிகம். அதனைக் கைப்பற்ற நமது சிறு படையே போதுமானது
போர்வையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு பாயில் படுத்த செல்லம்மாவுக்கு உறக்கம் வரவில்லை. அழுகை தான் வந்தது.
நீங்க உங்க வாழ்நாள்ல இன்னும் நான்கு நாள் அதிகமா, சந்தோசமா இந்த உலகத்தில வாழ கடவுள் நண்பர்கிட்ட விண்ணப்பிச்சு வேண்டிக்குவேன்
கையைத் தொட்ட கொக்குக்கு ஒரு மெல்லிய சிலிர்ப்பு! உடனே பாட ஆரம்பிச்சதாம். "கருப்பான கையாலே எ‎ன்னைப் புடிச்சான்...". காதல் ஸ்டார்ட்ஸ்....!
காவ்யா சமயோசிதமாக தாம் இருக்குமிடத்தையும் செல்லும் ஊரையும் கூட அவருக்குத் தெரிவித்துவிட்டாள் என்பது அவருக்குத் தெம்பைத் தந்தது.