Tuesday, April 28, 2009

"சாரல் 414"

சிறிது போராட்டத்திற்குப் பின் காதல் கை கூடும் வாய்ப்புக்கள் உள்ளன.
(இராமாயண வகுப்பில்) ராமன் ஏன் காட்டுக்கு சென்றான் தெரியுமா? மூலிகை பெட்ரோல் தேடிச் சென்றான் சார்.
நேரத்தில் கணீரென்ற குரலில் ருத்ரமும், சமகமும் சொல்லி சாளக்கிராமத்திற்கு அபிஷேக ஆராதனை செய்வார்
ஓடிடும் வானத்தில் உற்கைகள் பற்பல உன்னொளிர் மேனியின் கண் ணிருந்து
தெரியலை! ஐயம் லாஸ்ட்! ஒண்ணு இவன் பேசற வரைக்கும் வெயிட் பண்ணணும்! இல்லே முதல்லேர்ந்து எல்லாத்தையும் ஆரம்பிக்கணும்
அப்படியே வேகமாகப் போய் சுவேலம் என்ற குன்றின் மேல் ஏறி அங்கிருந்து லங்கையைப் பார்த்தார்கள். அப்பொழுது சூரியன் அஸ்தமித்து விட்டார். அன்றிரவு பூர்ண சந்திரன் இருப்பது போல பிரகாசமாயிருந்தது.
அதற்கு ஆதாரமாக அரசியல்வாதிகளைச் சமாளிப்பது, மாநாட்டில் கலந்து கொள்வது அவர் பொறுப்பு
சுவை புதிது; நயம் புதிது; வளம் புதிது; சொற் புதிது; ஜோதி கொண்ட நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை
கல்வி அறக்கட்டளைக்கு உதவி கேட்டு நேருவிற்கு எழுதிய கடிதமும், அதற்கு நேரு எழுதிய பதில் கடிதங்களும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன
 
எவ்வளவோ முயன்றும் கடைசியில் தோற்றுப் போகிறது என்னிடம் குடையைப் பறிக்க முயற்சித்த காற்று......
 
நம்மால எது முடியுமோ அதச் செய்ய முயற்சி செய்யலாம்ல? எத்தனையோ தடவ இந்த நோட்டீஸப் பாத்ததாச் சொல்றீங்களே, ஒரு தடவையாவது இந்த ஃபோன் நம்பர நோட் பண்ணீங்களா?
அவன் ஒரு சினேகா ரசிகனாம்; அவங்க கனவுக்கன்னி சினேகா சொல்லிருக்காங்களாம், "எடுத்துக்கோ, எடுத்துக்கோ, அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ" அப்படினு.
கச்சிதமா செய்யணும். சொதப்பக் கூடாது. ஞாபகம் வச்சுக்கோ. எதுலயுமே டைமிங் தான் ரொம்ப முக்கியம். எதிரியை எந்த நேரத்துல எப்படித் தாக்கணும்கிறதுல எப்பவுமே தெளிவா இருக்கணும்.
"அந்தத் திருடன் நான்தான். பாபாவின் அந்தச் செயல், அந்த மனித நேயம், அந்தப் பணிவு என்னை மாற்றி விட்டது. என் திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு, நானும் பாபாவைப் போல ஆத்ம ஞானத் தேடலில் இறங்கிவிட்டேன்" என்றார்.
பயற்றம்பருப்பு சேர்த்துத் தயாரிக்கப்படும் மணத்தக்காளிக் கீரை கூட்டு, வயிற்றுப்புண்ணையும், வாய்ப்புண்ணையும் குணப்படுத்தக்கூடியது.

Tuesday, April 21, 2009

"சாரல் 413"

பணிக்குத் துணை புரியும் துறைகளில் தங்களின் கவனத்தை செலுத்தி வர, நல்ல முன்னேற்றம் அடையலாம்.
அதுவரை சிரித்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த கதாநாயகி அல்லது நாயகனுக்கு ரத்தப் புற்று நோய் - அதாவது 'ப்ளட் கான்சர்' என்பார்கள்
 
இருட்டாக இருந்ததால், கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், ஒரு உருவம் நகர்வது மட்டும் தெரிந்தது.
 
ஆன்மீகத்தில் இயல்பாகவே ஈடுபாடு கொண்ட அவருக்கு இது கை வந்த கலையாக ஆனது! சுமார் 2000 பாடல்களையும் கிருதிகளையும் தமிழில் எழுதி தமிழ் தியாகய்யா என்று போற்றப்படும் பெரிய புலவர் ஆனார்
வானத்தை விட உயர்ந்ததாய், நிலத்தை விடப் பெரியதாய், கடலை விட ஆழமாய் எண்ணிய என் காதல்... என்னவாகும்?
ஆக்கத்தின் சுனைப்பெருக்கே! அன்பறத்தின் உருவகமே! அப்பாவே! அருளாளா! அழுகின்றோம்; - உனைக் காணோம்
உலக அமைதியை அழகாய் வலியுறுத்துகின்றது இந்தப்பாடல். நன்று!
நானோ, அன்னையெனக் காண்பது, என் அன்புத் தோழியை அன்றோ!
சத்தியமா தெரியாது. அம்மாவைப் பொறுத்த வரை நான் பலவீனமானவள். அதனால் என் கிட்ட எதுவும் சொல்றதில்லை. நீ எதிர்த்துப் பேசறவன்னு உன் கிட்டயும் சொல்ல மாட்டாங்களே. பிறகு உனக்கெப்படி தெரியும்
தொத்தாங்கொட்டை என்னும் கொட்டையை அடியில் தேய்த்த ஒரு பாத்திரத்தில் இப்படிச் சேகரிக்கப்பட்ட நீரை எடுத்து வந்தால், வீடு வருவதற்குள் சுத்தமான குடிநீர் ரெடி!
கும்பலில் பாதிக்குமேல் கோழியைப் பின்தொடரும் குஞ்சுகள்போல் சின்னஞ்சிறு குழந்தைகள். அவர்களும் சக்கரம் வைத்த சிறுபெட்டிகளை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தார்கள்.
சிறை அதிகாரிகளுடன் பேச்சுக் கொடுத்ததில் அவர்களும் இத்தகைய புதிய சிந்தனைகளுக்குப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே" என்றும் பாரதி சொன்ன வார்த்தைகள் நினைவில் இருந்தால் எந்தத் தோல்விகளும், தடைகளும், தடங்கல்களும் நம்மை ஒன்றும் செய்யாது.
நான் கொஞ்சம் குண்டுதான், ஆனால் என் குடும்பத்தில் எல்லோருமே சற்று பருமன்தானே! அது குடும்பவாகு!
பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கீரையை நன்றாக சிறு தீயில் கிளறி விடவும்.கசப்பு சுவை இல்லாமல் கீரையை நன்றாக வதக்க வேண்டும்.

Tuesday, April 14, 2009

"சாரல் 412"

செவ்வாய்க் கிழமை தோறும் முருகனை வழிபட்டு வாருங்கள். விரைவில் நல்ல வேலை கிடைக்கும்.
ஆமாம்! பயங்கர அவசரம்தான்! கொஞ்சம் இருங்க அங்கிள்! என்று சொல்லி உடனே கோர்ட்டுக்குள் ஓடினாள்
தங்கமே காய்ச்சினாலும் தன்மையில் உயர்தல் போல மங்கிடாக் கீர்த்தி பெற்றாய்
ஒரு முறை திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும்போது கார் ஒரு ரெயில்வே லெவல் கிராஸிங்கில் நிற்க வேண்டியதாயிற்று. வழக்கம் போல அவரைப் பார்க்க அங்கே ஒரு கூட்டம் குழுமி விட்டது
 
விற்பனையை எக்கச்சக்கமாக அதிகரித்துக் கணக்குக் காட்டியிருந்தால், நடக்காத விற்பனைக்கு வரி கட்டியிருக்க வேண்டுமே? கட்டினார்களா? எப்படிக் கட்டினார்கள்?
 
நம்முடைய இன்றைய நிலை நம் எண்ணங்களைச் சிறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது. மாறாக நம் பெரிய கற்பனைகள், பெரிய திட்டங்கள், நம்மை இன்றைய நிலையில் இருந்து சிறை மீட்கும்
நீங்கள் ஏதேனும் கடை வைத்திருப்பவராய் இருந்தால் வாடிக்கையாளருக்குத் திரும்ப பயன்படுத்தும்படியான பைகளை ஒரு சிறுவிலை வைத்து பாலிதீன் கவர்களுக்குப் பதில் தரலாம்
சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரி!
நான் அந்த விம்பிள்டன் கோப்பையை கையில் வைத்துக் கொண்டிருந்த போது "ஏன் எனக்கு மட்டும்?" என்று இறைவனைக் கேட்கவில்லை, இப்போது வலியால் தவிக்கும் போது மட்டும் "எனக்கு மட்டும் ஏன்.. என்று கேட்கலாமா?"
நீ இங்கே வந்தது உங்கம்மாவுக்குத் தெரியுமா? அவன் குரலில் பீதி இருந்தது.
உறவுகளை இரவல் பெற்று வாழும் பரிதாபகர வாழ்க்கை! இதுதான் உண்மை!
இவ்வளவு தூரம் சிரமப்பட்டு. . வெளியே போய். . ரகசியமாய் வாங்கி . . இத்தனை படியேறி. .
 
நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையில வச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார்.
 
தலைவன் அவன் தன் தாள் பற்றினேன் நாளும் பொழுதும் ஒவ்வொரு கணமும் தடம் பதிக்கும் ஒவ்வொரு அடிக்கும் துணையிருக்கும் ஆசான் அவனே
சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றமையுடன் இருப்பார்கள்.

Tuesday, April 07, 2009

"சாரல் 411"

எல்லாவற்றிலும் அருணுக்குதான் முதலிடம்....முன்னுரிமை....யாவும்! இப்போதோ......அருண் அவன் அம்மாவின் கைகளை விலக்கிக்கொண்டு ஓடத் துவங்கிவிட்டான், அவளை விட்டும், அவள் வரைந்த அன்பு வட்டத்தை விட்டும்!
நுண்கலைகளில் ஆர்வம் உள்ள தங்கள் மகளின் ஜாதகத்தில் புதன் 10-ல் நன்றாக உள்ளதால், நல்ல கல்வி உண்டு.
எதுக்கு மேலே பார்த்துக்கிட்டு ‏ இருக்கீங்க? மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்‎னு சொன்னாங்க.. அதான்
துப்பாக்கியின் ஸ்கோப்பினுள்ளே விஜயன் தெரிந்தான். கையை ட்ரிக்கரின் மேல் வைத்து அழுத்த முடிவு செய்தான் ஸ்நைப்பர்
உங்கம்மாவுக்கு ஒரு வருத்தம். இதை பத்து வருஷம் முன்னாடியே செஞ்சிருந்தா அவன் இந்த பத்து வருஷம் நல்லா வாழ்ந்திருப்பானேன்னு சொல்றா. கடவுள் இவளுக்குன்னு இப்படி ஒரு தங்கமான மனசைக் கொடுத்திருக்கிறார் பார்
சின்னப் பெண்ணான போதிலே! அன்னையிடம் நான் ஒரு நாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? - அம்மா நீ சொல் என்றேன்!
 
தப்பா எடுத்துக்காத, எதனால இப்படி ஒரு மாதிரியா யோசிச்சு, உங்கள நீங்களே ஒரு வட்டத்துக்குள்ள அடைச்சுக்கிறீங்க. சுதந்திரமா இருங்க
களைப்பாக இருக்கும் போது இடது நாசியை மூடி வலது நாசியினால் சுவாசித்தால் மனம் புத்துணர்ச்சி பெறுவது நிச்சயம்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை விடவும். எண்ணை காய்ந்தவுடன் கடலை பருப்பு, வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.
மனிதர்கள் புகழ் அடைய முயற்சிப்பதே நிறையப் பெண்களைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் என்று "பெட்ஸிக்" சொல்கிறார்
உண்மையான தலைவர்கள், தான் தலைவனாக வேண்டும் என்று முயற்சிப்பதில்லை. யார் தடுத்தாலும் நிற்காத சூரிய உதயம் போல் உண்மையான தலைவர்களை இயற்கை வெளிக்கொணர்ந்து விடுகிறது
அந்திவரும் வேளையிலே அடுத்ததினம் மாலையிலே, சுந்தரமாம் யமுனைநதிச் சூழலிலோர் மேடையிலே
தன்னிடம் கிடைப்பதை விட்டுவிட்டு தானையமாய் திரிவதில் நாம் தீவிரவாதிகள்...
அவள் பிறந்தது ஒரு மானின் வயிற்றில்! அந்த மான்தான் வல்லிக்கொடியின் கீழ் இருந்த ஒரு குழியில் தன் குட்டியை ஈன்றது. தன் குட்டி மிகவும் வித்தியாசமாக தன் இனத்தைப் போல் இல்லாமல் இருந்ததால் அங்கேயே விட்டு விட்டுப் போய்விட்டது . அப்போதுதான் குழந்தை இல்லாத ஏக்கத்துடன் நம்பிராஜன் அங்கு வர, அந்தக் குழியில் குழந்தைச் சத்தம் கேட்க, கடவுள் அருளால் கிடைத்த குழந்தை என்று மகிழ்ந்து அவளுக்கு வள்ளி என்று பெயரிட்டு வளர்க்கலானான்.
ஒரே அளவு நீர் தேவைப்படும் செடிகளை ஒரு குழுவாக அமைப்பதன் மூலம் தண்ணீரைச் சேமிக்கலாம்

Wednesday, April 01, 2009

"சாரல் 410"

முகமறியா தோழமைக்காய் முத்தெடுக்க நீ குதித்தாய்.. மூழ்கியதை மறந்து விட்டாய்! கரையினையும் துறந்துவிட்டாய்!
தங்களின் ஜாதகத்தில் குரு 9-ம் இடத்தில் அமர்ந்து கொண்டு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், தங்களின் எதிர்கால வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.
ஏங்க.. நாளைக்குத்தான் நம்ம கல்யாண நாள். எப்படிக் கொண்டாடலாம்? ரெண்டு நிமிஷம் மவுன அஞ்சலி செலுத்துவோம்!
எனக்கு உடனே ஒரு பெரிய பேப்பரும் பேனாவும் வேணும்! சுவரில் சாய்ந்து, கண்களை மூடிக் கொண்டு தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்
ஒரு புது சட்டையை வாங்கிப் போட்டுக்கறாய்னு வச்சுக்கோ. அது உன்னோடது தானே. இதுவும் அப்படித் தான். புது முகத்தை வாங்கியிருக்கிறாய். இனி உன்னுடையது தான்.... வா. உட்கார்
 
'உன்னால்தான் யாவும்' என்றே இருவரும் இணைந்து எட்டி உதைத்தபோது, ஏதும் பேச இயலாமல் திகைத்து நின்றது!
என்னை ஆளாக்கின தெய்வங்க, பெத்தவங்க. அவங்களுக்கு செலவு செய்யறதைக் கணக்கு பார்க்கலாங்களா? சொல்லுங்க.
இவ்வளவு கதை பேசுகிறீர்களே? இனிமேல் இப்படி தவறுகள் நடக்காமல் கண்காணிக்க உருப்படியான யோசனைகள் ஏதாகிலும் உண்டா என்கிறீர்கள்தானே?
அதற்கு ஒரு படி மேலே போய், இதைச் சில காலம் செய்து விட்டு, என்ன முன்னேற்றம் என்று மீண்டும் எழுதச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறார்
சீதா கல்யாணம் படம் பார்க்க வருபவர்கள் கையில் வெற்றிலை, பாக்கு, பழம், சூடங்களோடு வருவார்கள் என்றும் குறிப்பிட்டார்
என்னவோ தெரியவில்லை, இவருக்கும் பழைய பாடல்களின் மீது அத்தனை மோகம்.
அது போல வேறு வேறு தன்மைகளைக் கொண்ட நாம் இருவரும் ஒருவரோடு ஒருவராய், ஒருவரில் ஒருவராய் மாறி விட்டோம். சரியா?
ஒரு பக்க சிங்கில் சோப்பு நீரை நிரப்பி அதில் பாத்திரங்களை போடுவதன் மூலம் எல்லா பாத்திரத்திலும் குறைவான அளவு சோப்பே படும், அதை கழுவுவதற்க்கும் குறைவான நீரே தேவைப்படும்
நானும் வந்ததிலிருந்து அங்கும் இங்கும் இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாராவது ஒருத்தராவது சிரத்தையோடு சாமியைப் பார்கிறார்களோ! ஊஹூம்! நம்ப கோயில்களில்தான் இப்படி!
தமிழில் திரைப்படங்கள் தோன்றி வெளி வர ஆரம்பித்து ஆண்டுகள் பல கடந்து விட்டன! நூற்றுக்கணக்கான படங்கள்! ஆயிரக்கணக்கான பாடல்கள்!!