Wednesday, May 18, 2005

நம்ம ஊர்ல இது சாத்தியமா?

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் டோனி பிளேயரை நார் நாராய்க் கிழித்துத் தொங்கவிட்டார்கள் பொது மக்களும் எதிர்க்கட்சியினரும். ஆனாலும் கண்ணியம் மாறாமல் பதிலளித்து வெற்றியும் பெற்றுவிட்டார் அவர். தேரிதலில் தோல்வியுற்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி விலகி விட்டார். இதெல்லாம் நம்ம ஊர்ல எப்ப நடக்கும்னு ஏங்க வைக்கும் கட்டுரை:
http://www.nilacharal.com/news/specials/eng_UKelection_208.html

1 comment:

மாயவரத்தான் said...

அதெல்லாம் நடக்காம இல்லை. ஆனா இங்கே, தான் சார்ந்திருக்கும் கட்சி தலைவரின் மூன்று (நாலு?! ஐந்து?!) திருமணங்களைப் பற்றியெல்லாம் கண்டுக்காத பேச்சாளர் எதிர்கட்சித் தலைமையின் அந்தரங்க வாழ்க்கையை நார் நாராக கிழிக்கத் தவறுவதேயில்லை. நன்னிலம் நடராசன், தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான், எஸ்.எஸ். சந்திரன் போன்றோர் ஸ்டார் பேச்சாளர்களில் சிலர். ஆனால் என்ன? தேர்தலுக்கு முன் (அது இடைத்தேர்தலாக இருந்தாலும் கூட) 'இந்த தேர்தலில் மக்களே நீங்கள் செலுத்தும் ஓட்டு, இந்த ஆட்சியின் ஆயுளுக்கு வைக்கும் வேட்டு' என்றெல்லாம் டயலாக் பேசுவார்கள். முடிவு வந்த பிறகோ, அட, இதெல்லாம் இடை தேர்தல் தான். இதுக்கும் ஆட்சியோட செயல் பாடுகளுக்கும் சம்பந்தமேயில்லைன்னு அறிக்கை விட்டு மீசையிலே மண் ஒட்டவேயில்லைன்னு (மஞ்சள்/பச்சை) துண்டு போட்டு தாண்டி சத்தியம் பண்ணுவாங்க. (எல்லா அரசியல் வா(ந்)திகளையும் தான் சொல்றேன்!)