Thursday, February 09, 2006
தேவ புரோகிதர்
ஆதி சிவன் உலகைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொண்டார். அந்த வேளையில் அவருடைய அருள் தன்மை அவா¢டமிருந்து பெண்ணுருக் கொண்டு வெளிப்பட்டு அவரது இடப்பாகத்தில் பராசக்தியாக அமர்ந்து அவர்கள் இருவரும் சேர்ந்து உலகத்தையும் அதில் உயிர்த் தொகுதிகளையும் உண்டாக்கினர்.தொடர்ந்து உலகம் தொழிற்பட ப்ரம்மா, விஷ்ணு, உருத்திரன், மஹேசன், சதாசிவன் என்ற ஐவரைப் படைத்து அவர்களுக்கு முறையே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களையும் அளித்தனர்.இதில் முதலாவது மூர்த்தியாகத் திகழும் ப்ரம்மதேவன் யாகங்கள் செய்விப்பதில் தலைவனாகவும், அறிவின் கடவுளாகவும், படைப்புக் கடவுளாகவும் தனிச்சிறப்புடன் போற்றப்படுகிறார். இவர் தேவர்களுக்கு வழிகாட்டியாகவும், சிறந்த சிவபக்தராகவும் திகழ்கின்றார். மேலும் ப்ரம்மா சிவ வழிபாட்டில் ஒரு முக்கிய தேவதையாகப் போற்றப்படுகிறார். சிவாலயங்களில் அவருக்குக் கருவறையின் வடக்குக் கோட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. நித்ய சிவ வழிபாட்டிலும் ப்ரம்மனுக்கு மந்திர பூர்வமாக பூஜை செய்யப்படுகிறது. ..... மேலும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment