Saturday, April 21, 2007

சாரல் 308

சாரல் : 308 பொழிந்தது : ஏப்ரல் 16, 2007

ஜபரவின் அரசியல் அலசல்

உத்தரப்பிரதேசத்தில் வாக்குப் பதிவுகள் நடந்துவரும் இந்த வேளையில் சில நிருபர்கள் தங்களைத் தனியார் அமைப்பைச் சார்ந்தவர்களாகக் கூறிக்கொண்டு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் கன்னோஜ் தொகுதி வேட்பாளரிடம் 'நாங்கள் சொல்லும் ஒருவரைக் கொன்றால் உங்கள் தேர்தல் செலவுக்குப் பணம் தருகிறோம்' என்று சொல்ல, அதற்கு, 'நான் இதுவரை ஐந்துபேரை போட்டுத்தள்ளியிருக்கிறேன் இது எந்த மூலைக்கு? ஆள் யாருன்னும் அட்வான்சும் கொடுத்துட்டுப் போங்க, காரியம் கச்சிதமா முடிஞ்சுடும்' என்றாராம்! இவர்கள்தான் மக்களின் பிரதி நிதிகள்! இது எப்படி இருக்கு?

( ஜ.ப.ர )

ஹா..ஹா..ஹா..ஜோக்ஸ்

நபர் : ஜோசியரே, நம்ம ஜாதகத்துல ஏதும் தோஷம் இருக்கா பாருங்க. ஜோசியர் : தம்பி, உனக்கு ஒரு தோஷம் இருக்குப்பா. கல்யாணம் பண்ணா தோஷம் போயிடும்.
நபர் : என்ன தோஷம்?
ஜோசியர் : சந்தோஷம்

( ரிஷிகுமார் )

எழுத்தாளர் விமலா ரமணியுடன் ஒரு சந்திப்பு

வில்லிலிருந்து விடுபடுகிற அம்பு தன் இலக்கை நோக்கிப் பாய்வதைப்போல் சிறுகதை வடிவம் இருக்க வேண்டும். குறைந்த கதை மாந்தர் குறைந்த சம்பவம் மனதில் தைக்கும் முடிவு. இது தான் சிறுகதை வடிவம். சிறுகதை மன்னனான ஓ ஹென்றியின் டெக்னிக்கும் இது தான். எடுப்பு தொடுப்பு முடிப்பு இவைகளில் நேர்த்தி வேண்டும். ஒரு சிறுசம்பவம் அதன் பாதிப்பு வாசகனின் உள்ளத்தைத் தாக்க வேண்டும்.

( ஜம்பு )

ஸ்டார் வார்ஸ் - புதிய தொடர் வருகிறது!

ஸயின்ஸ் ஃபிக்ஷன் எனப்படும் அறிவியல் புனைக் கதையான 'ஸ்டார் வார்ஸ்' வெளிவந்த காலம் தொட்டு இப்போதும் பல சேனல்களில் சக்கைப் போடு போட்டு வரும் விஷயம் அனைவரும் அறிந்ததே! இந்த விண்வெளித் தொடரின் ரசிகர்கள் மனம் குளிரும் புதிய செய்தி ஒன்று இப்போது வந்திருக்கிறது!

( ச.நாகராஜன் )

வாஜி..வாஜி..சிவாஜி!

மே 17 ந் தேதி ரீலிசாகும் இப்படத்தில் பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இயக்குனர்,பழமையான ஏவிஎம் தயாரிப்பு,ராகத்திற்கு தன்னிகரில்லாத ரஹ்மான் இசையென பல முத்துக்கள் இருப்பது தெரிந்த விஷயம்.இப்படத்தின் தயாரிப்பிலும் சில சாதனைகள் உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி.அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

( கவிதா )

மனசே சுகமா? (9)

ஒவ்வொரு முறை எதிர்மறை சிந்தனையை உணரும்போதும் ஒரு சிறிய தண்டனையைத் தந்து கொள்வது சிலருக்கு வேலை செய்யலாம். லேசான கிள்ளல், செல்ல அடி, தலையில் குட்டு போன்று விளையாட்டாக ஏதேனும் செய்து கொள்கிறபோது அந்த எண்ணத்தை மேலும் வளரவிடாமல் அறுத்தெறிகிறீர்கள்.

( நிலா )

இது எங்கள் காலம்

"டேய்.. அரையாண்டுத் தேர்வு முடிஞ்சு ரொம்ப நாளாச்சே.. பிராகிரஸ் ரிப்போர்ட் எங்கேடா" "ஏம்பா.. உங்களுக்கே ஒரு நாள்தான் லீவு கிடைக்குது. வாரம் பூரா உழைச்சு அலுப்பா வரீங்க. இன்னிக்காச்சும் நிம்மதியா இருக்கலாம்ல"

( ரிஷபன் )

திருவாளர் பிச்சை

கடுமையான வார்த்தைகள். ஒரு ரெண்டு மூணு வாரம் வெளிய வர முடியாமப் பூட்டப் போகிறாப் போல இருந்தது. ரிச்சர்ட் செருரும்பேல்... அவனும் என்கூட இதை அனுபவிச்சாகணும், என்கிறதுதான் வருத்தம். எங்களைப் போல ஒட்டுண்ணி வம்சம் அல்ல அவன். நீதிபதி அறிவாரா? அவன் பிச்சைத்தொழிலில் நிர்ப்பந்திக்கப்படுகிறவன். ஒரு வாகன விபத்தில் காலிழந்து, அந்த நாள் முதல் அவன் அப்பா அம்மாவுக்கு அதுவே மூலதனமாய் ஆகி, மொத்தக் குடும்பமும் அவனைச் சுரண்டி வாழ ஆரம்பித்திருந்தது.

( எஸ். சங்கரநாராயணன் )

செய்திகள் - அலசல்

பாட்னா பல்கலைக்கழகம் பரீட்சைகளில் பிட் அடிப்பவர்களைப் பிடிப்பதற்குப் புது வழிமுறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. கிரிமினல்களைப் பிடிப்பதுபோல இவர்களைப் பிடிப்பதற்கு மோப்ப நாய்களை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தேர்வு அரங்கில் இந்த நாய்கள் மோப்பம் பிடித்தபடி செல்கின்றனவாம். பிட் அடிப்பவர்களை மோப்பம் பிடித்து அவர்களை லபக் எனப் பிடிக்கின்றனவாம். மோப்ப நாய் வருவது தெரிந்ததும் பல மாணவர்கள் பிட் பேப்பரை சுருட்டி வெளியே எறிந்து விட்டார்களாம்.

( ஜ.ப.ர. )

Profile of Namitha
Name : Namitha Kapoor Profession : Actress, Model, Entrepreneur Date of Birth : May 10, 1981 Awards : 1998 - Miss Surat title 2001-came third in the Miss India event

( PS )

His Name is Siva Shankar..(243)

Frankly speaking, there are no problems in anybody’s life. Look at this situation : In the interior parts of the villages in Tamil Nadu, wild and violent cows are tied up in their sheds. They are fed with fodder and grass but cannot wander out. The owners fear that if let free, these cows will wander to other fields and create havoc there. And then the field owners would hurt the cows. Once the cows tame down, they are unchained, they no longer cause any harm!

( N C Sangeethaa )

மருந்துக் குழம்பு

ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி விழுதாக்கிய பூண்டைச் சேர்த்து வதக்கி ,நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலைச் சேர்த்து ,உப்பு போட்டு கொதிக்க வைத்து வறுத்து இடித்த பொடியைப் போட்டு மூன்று நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். சளிக்கும், உடல் நலக்குறைவிற்கும் மிகவும் நல்லது.

( பிரேமா சுரேந்திரநாத் )

நீ நான் தாமிரபரணி (66)

அருண் தர்மசங்கடத்துடன் என்ன சொல்வதென்று யோசித்து விட்டு கவனமாய் சொன்னான். "நான் எல்லாத்தையும் நேரில் வந்து சொல்றேன், காவ்யா. இப்ப எனக்கு சேதுபதி இருக்கிற இடமும் தெரிஞ்சுடுச்சு. அங்க போகலாம்னு இருக்கோம். பிறகு பேசலாம். ஓ.கே?" செல்போனை அவசரமாக ஆஃப் செய்த போது அவன் மனதில் குற்ற உணர்ச்சி இருந்தது. தாமிராவிடம் வேதனையுடன் சொன்னான். "நான் இதுவரைக்கும் காவ்யா கிட்ட எதையும் மறைச்சதே இல்லை. ஆனால்.... இதை.... இதை அவள் கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை"

( என்.கணேசன் )

இராசி பலன்கள் 16-4-2007 முதல் 22-4-2007 வரை

மீன ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் மேலிடும். உற்றார் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உடம்பில் வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். இரசாயனத் தொழில், மற்றும் கமிஷன், கன்ஸ்டிரக்ஷன் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவர். அரசு சம்பந்தமான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களில் ஏமாற்றம் அடையாதீர்கள். வீடுகளைத் திருத்திக் காட்டுவீர்கள்.

( ப. இசக்கி )

நானென்றும் நீயென்றும் (62)

முன்னறைக்கு வந்து கதவைத் திறந்தவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவளை அடையாளம் கண்டுபிடிக்கக் கொஞ்ச நேரம் ஆனது. கையில் ஒரு கைக் குழந்தையும், அவள் காலைக் கட்டிக் கொண்டு மூன்று வயது பையனுமாக நின்று கொண்டிருந்த அந்தப் பெண் சுவாதீனமாக உள்ளே நுழைந்தவள், திகைத்து நின்றவளைப் பொருட்படுத்தாமல் அவரை அமெரிக்க பாணியில் அணைத்து முத்தமிட்டாள்.

( சுகந்தி )

Indian Income tax Queries (2)

As per the provisions of the Income Tax Act, Non Residents are not required to obtain a PAN (Permanent Account Number). This is on account of Rule 114(C) (1) of I T Rule, which says that Section 139 A of the I T Act is not applicable in the case of Non-Residents. Secondly, proviso to Rule 114B states that such persons who are not required to have PAN should make declaration in Form 60 for entering into any transaction which requires mandatory mention of PAN.

( NM.Ilangumaran )

சோறு கண்ட இடமே சொர்க்கம்

நானே ஒரு பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்து, மணிக்கு ஒரு மொபைல் ஓட்டல் நடத்தத் தேவையான, மூன்று சக்கர வண்டி ஒன்றும், சமையல் எரிவாயு அடுப்புகள், பாத்திரங்கள் முதலியனவும் வாங்கிக் கொடுத்தேன். எங்கள் வீட்டிலேயே ஒரு தனி அறையில், மணி தங்க இடமும் கொடுத்தேன். தினமும் என் தொழிற்சாலை அலுவலகத்திற்கு அருகிலேயே, ஒரு மிகப்பெரிய மரத்தடியில், மொபைல் ஓட்டல் மணியால் நடத்தப்பட்டது. ஏற்கனவே மணியுடன் பழகிய என் நண்பர்களும், தொழிலாளத் தோழர்களும், மணியின் புதிய தொழிலை விரும்பி வரவேற்றதுடன், பலத்த ஆதரவும் அளித்தனர்

( வை.கோபாலகிருஷ்‎ண‎ன் )

அழகு ஓவியம்

( முத்துக்குமார் )

காவிய நாயகன் நேதாஜி (46)

இங்கிலாந்து வாழ்வா சாவா என்று தடுமாறிக் கொண்டிருக்கிற நிலையில், எதிரியையும் நண்பனைப் போலப் பாவிக்க வேண்டும். யுத்த முயற்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர வேண்டும் என்று அவர் பேசினார். நேதாஜியின் கருத்து வேறு விதமானது. இந்த வாய்ப்பை நழுவ விடாமல் போர் தொடங்கி விடுதலையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "காந்திஜி அர்ஜுனக் குழப்பத்தில் ஈடுபடாமல், கீதை உபதேசித்த கிருஷ்ண பரமாத்மாவாக செயல்பட வேண்டும்" என்று ஒரு போடு போட்டார் அவர்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

கவிதைகள்

எல்லாக் கஷ்டத்துக்கும்
குருடாய் இருத்தலே
ஆதிகாரணமென்பதை அறிந்திருக்கிறாயா நீ
எதையும் மேலோட்டமாய்ப் பார்த்து
மிதப்பாய் திரிந்தால் போதுமா உனக்கு?
உன்னை நீயே ஹீரோவாய் பாவித்து
தோள்களை விடைப்பது,
உன் சுமையை நீயே சுமந்து மூச்சுத்திணறுவது-
இதெல்லாம் தேவையா
யோசி:

( நட்சத்ரன் )

No comments: