Monday, April 30, 2007

சாரல் 310

சாரல் : 310 பொழிந்தது : ஏப்ரல் 30, 2007

காவிய நாயகன் நேதாஜி (48)

காங்கிரஸில் போலி உறுப்பினர்கள், பதவி சுகம் காண விழைபவர்கள் சேர்ந்து விட்டது குறித்து காந்திஜி அங்கலாய்த்தார். அவர் மேலும் சொன்னது: "நீங்கள் என்னை உங்கள் தளபதியாக எண்ணுகிறீர்கள். அதற்கு எனக்கு இருக்கும் தகுதி உங்கள் அன்பும் பாசமுமே. ஆனால் உங்கள் அன்பு செயல் வடிவம் பெற்றுள்ளதா?

( டி.எஸ்.வேங்கட ரமணி )

மனசே சுகமா? (11)

சுய உதவிப் பயிற்சிகள் எதுவுமே பயனளிக்காமல் போகையில் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள யாரையேனும் நாடுதல் நலம். அப்படி நாடுபவர்கள் உங்களின் மனநிலையை உயர்த்துபவராக இருக்க வேண்டுமே ஒழிய இன்னும் தாழ்த்துபவராக அமைந்துவிடுதல் கூடாது. எப்படிப்பட்டவர்களை அணுகலாம்?

( நிலா )

ரெஸில் மேனியா! ரெஸில் மேனியா! ரெஸில் மேனியா!

ஷுய் ஜினோ என்று சீன மல்யுத்தக்கலை 4000 ஆண்டுகளுக்கு முன்பே கொடி கட்டிப் பறந்திருக்கிறது. ஆனால் இன்று எல்லா நாடுகளிலும் வீட்டிலேயே தொலைக்காட்சி மூலம் இந்த மல்யுத்தத்தை அனைவரும் கண்டு களிக்க வாய்ப்பை அளித்துள்ளது டபிள்யூ.டபிள்யூ. ஈ. எனப்படும் வோர்ல்ட் ரெஸிலிங் என்டெர்டெயின்மெண்ட்!

( ச.நாகராஜன் )

பதிவுகள்

"காப்பாத்துங்க.. என்னைக் காப்பாத்துங்க.. யாராவது என்னைக் காப்பாத்துங்க." மொட்டைக் கிணற்றின் மேல் பாகத்தில் முளைத்திருந்த, ஏதோ ஒரு மரத்தின் வேரைப் பிடித்தபடி, சிறுமி விஜயா கத்துகிறாள். அதோ... அதோ... கோதண்டம். இவளின் முறைப்பையன்.. அத்தை பையன்.. தலைதெறிக்க இவளை விட்டுவிலகி, ஓட்ட ஓட்டமாக ஓடுகிறான்.

( விமலா ரமணி )

உலகப்புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் - ரப்பர் (Rubber)

ரப்பர் இயற்கையாக மரங்களிலிருந்தே பெறப்பட்டது; பின்னர் அதன் தேவை மிகுதியானதன் காரணமாக ரப்பர் உற்பத்தியில் முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; புதிய வகைச் செடிகொடிகளை வளர்ப்பதற்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்கப் பழங்குடி மக்கள் 11ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே ரப்பர் பற்றி அறிந்திருந்தனர்.

( டாக்டர்.இரா.விஜயராகவன் )

அதீதாவுக்கு... (மடல் - 22)

பூமிக்கு கடவுள் வந்தால் அவரும் மனிதரோடு மனிதராய் ஒரு வாய் சோற்றுக்கும் லாட்டரிதான் அடித்துக்கொண்டுதான் திரிவார்! அல்லது மனிதனால் மாற்றியமைக்கப்பட்ட இந்த அதிசெயற்கையான உலகைக் கண்ணுற்று பைத்தியமாகிவிடுவார், பாவம்! மனிதனின் அரசியல் ஆட்டங்களும் திருட்டுத்தனங்களும் தில்லுமுல்லுகளும் கடவுளை நேரடியாகக் கீழ்ப்பாக்கத்துக்கே அனுப்பிவைத்துவிடும்!

( நட்சத்ரன் )

அரசியல் அலசல்

இதுவரை நமது எம்.பி.க்கள் லஞ்சம், கொலை போன்ற வழக்குகளில்தான் தொடர்பு கொண்டிருந்தார்கள். இப்போது கடத்தல் வேலையிலும் தங்கள் திறமையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. பாபுபாய் கடாரா என்ற பா.ஜ.க. எம்.பி. முதலில் தான் சிக்கி மற்ற பல எம்.பி.க்களையும் சிக்க வைத்துவிட்டார்.

( ஜ.ப.ர )

Richard Gere

The other aspects of Richard Gere apart from kissing Shilpa Shetty ...

( PS )

சர்தார் தி கிரேட்! (6)

சர்தார் புனேயிலிருந்து சண்டிகர் செல்லும் விமானத்தில் ஏறுகிறார். மூன்று சீட் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அது ஒரு வயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அந்தப் பெண்மணி தன்னுடைய சீட்டை தனக்கு விட்டுத்தருமாறு கேட்கிறார்.

( ரிஷிகுமார் )

ராகி கீர்

ஐந்து பேருக்கு கீரைத் தயாரிக்க இரண்டு கப் தண்ணீரில் பொடியைக் கரைத்துக் கொண்டு அடுப்பின் மீது வைத்து வேக விடவும். வெந்து கஞ்சி போன்றானதும் தேவையான பாலை ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிது நேரம் கொதித்த பின்னர் இறக்கி வைக்கவும்.

( பிரேமா சுரேந்திரநாத் )

His Name is Siva Shankar..(245)

In one birth cycle, one of the Seven Rishis, Gautama Rishi cursed his wife Akalya turning her into a stone. He himself specified a redemption, that Rama would come to earth, go to the forest on exile and in the course of his wanderings would step on the stone and thus grant her relief from her curse. Regardless of whether Rama wanted or not, he passed through that way and freed her from her curse, because he was ordained to do so.

( N C Sangeethaa )

கவிதைகள்

உனக்கே உனக்கான
நூலொன்றை உருவாக்கு:
உன்னால் மட்டுமே
உருவாக்கிட இயலும்
உனக்கான நூலை
அது வேறு நீ வேறு அல்ல என்றாகும்படி
...
...

( நட்சத்ரன் )

My dad - A mystery?

I was inspired to write this poem after reading a metaphor poem on the family. It was quite interesting that made my imagination run wild, placing the members of my family in different roles and characters. However, my imagination about my father's role seemed to blend with reality, like a glove in a hand.

( Arvind )

நீ நான் தாமிரபரணி (68)

மாதுரிக்குத் திருமணம் முடிந்த சில மாதங்களில் தன் தவறு புரிய ஆரம்பித்தது. ஒவ்வொரு நாளும் அலங்கரித்துக் கொண்டு ஊர் சுற்ற அவள் ஆசைப்பட்டதற்கு ராஜராஜன் ஒத்துழைக்க மறுத்தான். வாழ்க்கை தெய்வம் மனிதனுக்கு அளித்த வரப்பிரசாதம் என்றும் வாழ்ந்ததற்கு அடையாளமாக பெரும் சாதனைகள் படைத்து சாக வேண்டும் என்றும் ஆசைப்பட்ட ராஜராஜன் அனுபவிக்கத் தெரியாதவன் என்பதை திருமணத்திற்குப் பின்பு தான் மாதுரி கண்டுபிடித்தாள்.

( என்.கணேசன் )

A Numbness

He said – Sit, be quiet, observe I sat down cross-legged The lizard on the wall, the kitchen aroma, The butterfly around, the crevices and mounds abound

( A. Thiagarajan )

அழகு ஓவியம்

ஸ்ரீலட்சுமியின் அழகு ஓவியம்

( முத்துக்குமார் )

செய்திகள் - அலசல்

உலகமே ஆவலோடு எதிர்பார்த்த ஐஸ், அபி திருமணம் ஏப்ரல் 20ஆம் தேதி சிறப்பாக நடந்து முடிந்தது. வரலாற்றின் ஏட்டில் பொறிக்கப்படவேண்டிய செய்தி. டெக்னிகலாகப் பார்த்தால் ஐஸூக்கு அபிஷேக் நாலாவது கணவர். இது என்ன புதுக்கதை என்கிறீர்களா?

( ஜ.ப.ர )

இராசிபலன்கள் (30-4-2007 முதல் 6-5-2007 வரை)

ரிஷபராசி அன்பர்களே! புதன் நன்மை தரும் கிரகமாகும். சகோதர சகோதரிகளுக்குள் பொருள் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய தொழில் முயற்சிகளை தள்ளிபோடவும். தாய்வழி மாமன் மூலம் சிற்சில நன்மைகள் ஏற்படும். கூட்டு முயற்சிகள் வெற்றியளிக்காது. உடம்பில் இரத்தம், இதயம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.

( ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி )

தகவல் தொடர்பு

வேறு ஒன்றும் இல்லை. நகராட்சிப் பூங்காதான் கதி என்று ஆகிவிட்ட விஆரெஸ் ஆத்மா நான். ஓய்வு பெற்ற நாளில் எனக்கு மலர்க் கிரீடம் என்ன.. மாலைகள் என்ன.. 5000 வாலா வெடிச் சத்தம் என்ன.. பாண்டு வாத்தியம் முழங்க என்னை வழி நடத்தி அழைத்துப் போனபோது ஒரு அரசியல் கட்சியே ஆரம்பித்து விடலாம் என்கிற நப்பாசை வந்தது. (வந்த கூட்டம் பிரியாணியைத் தின்றதும் கலைந்து போய் விட்டது)

( ரிஷபன் )

நானென்றும் நீயென்றும் (64)

"என்ன நடக்குது இங்கே? அவ முகம் ஏன் ஒரு மாதிரியா இருக்கு? ஏதாவது லொள்ளுன்னு விழுந்தியா அவகிட்டே? அவளை ஏதாவது சொல்லி அழ வைத்து இருந்தாய், கொன்னுடுவேன் கொன்னு ராஸ்கல்", தோழி பேசப் பேச சாவதானமாய் சமையலறை மேடையில் சாய்ந்து கொண்டு மௌனமாகக் குழந்தையின் பட்டு முடியைத் தடவிக் கொடுத்தான் அவினாஷ்.

( சுகந்தி )

No comments: