சாரல் 311
சாரல் : 311 பொழிந்தது : மே 7, 2007
கேளுங்கள் தரப்படும்
நிலாச்சாரல் எப்பொழுதுமே புதுமையான கருத்துக்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறது. புதிய பகுதிகளை துவங்கத் தயங்கியது இல்லை. பல நேயர்களின் விருப்பப்படி கேள்வி பதில் பகுதி துவங்கி இருக்கிறது. உங்கள் கேள்விகளுக்கு நிலாச்சாரல் நிபுணர் குழு பதில் அளிப்பார்கள். இன்னும் ஏன் தயக்கம்? உங்கள் 'மவுசை'த் தட்டுங்கள், கேள்விக் கணைகளைத் தொடுக்கத் துவங்குங்கள்.
(நிலாடீம்)
கனவு நாயகன் லாரா
15 வயதாகும்போது மேற்கிந்தியத் தீவுகளின் 19 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான கிரிக்கெட் பந்தயங்களில் பங்குபெற்றார். இவர் தனது 20வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முதலாக இடம் பெற்றார். அன்று முதல் இன்று வரை கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நாயகனாகவே திகழ்ந்த இளவரசன் லாராவின் சாதனைகள் சிலவற்றை சற்றே புரட்டிப் பார்ப்போம்.
( டி.எஸ்.பத்மநாபன் )
செய்திகள் அலசல்
இந்த வருடம் +2 மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு உண்டா இல்லையா என்பது புரியாமல் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருந்தவர்களுக்கு ஒரு நற்செய்தி, ஒரு வழியாக நுழைவுத் தேர்வை ரத்து செய்து அரசு சட்டம் பிறப்பித்தது சரிதான் என்று தீர்ப்பாகி விட்டது. 27 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தடை செய்த நீதிபதிகளை விமரிசிக்கும்போது கலைஞர் 100 கோடி மக்களின் விருப்பத்தை இருவர் மட்டும் தீர்மானிப்பதா என்று கேட்டார். இன்றும் இரண்டு நீதிபதிகள்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். இப்போது என்ன சொல்கிறார்?
( ஜ.ப.ர )
மனசே சுகமா? (12)
அவருக்குக் குடிசையைக் கண்டவுடன் ஆனந்தம். அதில் நெருப்பைக் கண்டவுடன் பேரானந்தம். அருகில் சென்றமர்ந்தவுடன் அவரும் கவனிக்கிறார் நெருப்பு சற்று நேரத்தில் அணையப் போகிறதென்று. ஆனால் அவரைப் பொறுத்தவரை, அந்த நொடியில் அவர் வசதியாக இருக்கிறார்; அவருக்குத் தேவையான வெப்பம் இருக்கிறது; ஓய்வு கொள்ளக் குடிசை இருக்கிறது. நன்கு ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார்.
( நிலா )
சர்தார் தி கிரேட்! (7)
சர்தார் 20 ரூபாய் லாட்டரி டிக்கெட் வாங்கியதில் நம்பர் குலுக்கலில் விழுந்து 20 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. 4 கோடி ரூபாய் வரி பிடித்தம் போக கடைக்காரர் மீதம் 16 கோடியைக் கொடுக்க, காதுகள் 'ஜிவ்'வென விடைக்க கோபமானார் சர்தார். "யோவ்…எனக்குச் சேரவேண்டிய 20 கோடியை மரியாதையா முழுசாக் கொடுய்யா…இல்லாவிட்டால் நான் கொடுத்த 20 ரூபாயைக் திரும்பக் கேட்பேன்.
( ரிஷிகுமார் )
உலகக்கோப்பை 2007
ஆஸ்திரேலியர்கள் சிறந்தவீரர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் விளையாட்டுகளுக்கென்று ஒரு பண்பாடு உண்டு - அதை மூட்டை கட்டி வைத்தவர்கள் அவர்கள். ஏற்கெனவே நமது மத்திய அமைச்சர் சரத் பவாரை ஐ. சி. சி பந்தயக் கோப்பையை வென்றபோது சுட்டு விரலால் தள்ளி கோப்பையைப் பெறுவதற்கு ஆலாய்ப் பறந்தவர்கள்.
( டி.எஸ்.பத்மநாபன் )
உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் "எண்ணெய் வளம்"
சோதனைக்குப் பின்னர் பேராசிரியர், "இந்த எண்ணெயைச் சரியான முறையில் தூய்மைப் படுத்திப் பயன்படுத்தினால் நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு மாற்றாக விளக்கு எரிக்கப் பயன்படுத்தலாம்" என்று பிசெலிடம் உறுதியாகக் கூறினார். திமிங்கில எண்ணெய், மெழுகு ஆகியவற்றின் பற்றாக்குறை காரணமாக நிலக்கரியிலிருந்து எண்ணெய் எடுக்கும் பரிசோதனை அக்காலத்தில் மிகுதியாக மேற்கொள்ளப்பட்டது.
( டாக்டர் இரா விஜயராகவன் )
Indian Income tax Queries (3)
Profits earned by an NRI out of business carried out in India will also be taxable in India. Any rental income received by an NRI from a property in India will be taxable under the head Income from House Property, while the profit earned on sale of capital assets in India will attract tax under the head Capital Gains.
( NM.Ilangumaran )
நான் ரசித்த பாடல் (12)
அதே ஆண்டில் வெளியான 'அலை பாயுதே' என்ற திரைப்படத்தில் அவர் 'ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ' என்ற வைரமுத்துவின் பாடலைப் பாடி ரசிகர்களை தம் பாட்டின் இனிமைக்கு செவி கொடுக்கச் செய்து தமக்கு ஸ்நேகிதர்களாக்கிக் கொண்டு அழுத்தமாகத் தம் முததிரையைப் பதித்துக் கொண்டார்.
( பிரேமா சுரேந்திரநாத் )
முடிவில்லா கதை
மன்னனின் இந்த விசித்திரப் போக்கு மந்திரி மதிவாணருக்கு கவலை தந்தது. நாட்டின் நிலவரத்தை ஒற்றர்கள் மூலமாக அறிந்து கொண்ட அண்டை நாட்டு மன்னன் பராந்தகன் படையெடுக்க தக்க தருணத்தை எதிர்பார்த்து ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விட்டான். மந்திரியால் இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ராணியிடம் வந்து நிலைமைகளைச் சொன்னார். இருவரும் நாட்டைக் காப்பாற்றத் திட்டம் தீட்டினார்கள்.
( P.நடராஜன் )
தங்கமே தங்கம்
கை கூப்பி நன்றி கூறிய பெரியவர் "தம்பி உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா" என்று பரிவுடன் கேட்டார். "என் மனைவியாக வரப்போகிறவளுக்குப் போட அரைப்பவுன் தங்கமும், புதுச்சேலையும் வாங்க பணம் சேர வேண்டும். அதற்காகத்தான் காத்திருக்கிறேன்" என்றான். "உனக்கு அந்தக்கவலையே வேண்டாம், நான் தருகிறேன்" என்றார் பெரியவர்.
( வை.கோபாலகிருஷ்ணன் )
கவிதைகள்
நீயும் பேசாதே
நானும் பேசாதிருக்கிறேன்
நாட்கள் மட்டுமல்ல
வருடங்களும் ஓடின
நீ பார்க்கும்போதெல்லாம்
எனக்குள் இன்னும்
அதே வலி!
( ஸ்திரன் )
His Name is Siva Shankar..(246)
Never commit the blunder of discussing your personal problems with a third person. In any conflict between two individuals, how can any third person resolve the situation, unless the conflicting parties consent? If you understand this, you will realize that it is very easy to resolve disputes, the solution comes from you only!
( N C Sangeethaa )
நீ நான் தாமிரபரணி (69)
"அப்பா அவரும் நானும் எல்லா விதத்திலும் எதிர்மறையாய் இருக்கோம். இதில் ரெண்டு பேரும் சந்தோஷமாய் இல்லை. இன்னும் எங்க முன்னாடி எத்தனையோ காலம் இருக்கு. இப்படியே அத்தனை காலத்தையும் கழிக்கப் பிடிக்கலை. அதனால் தான் இந்த முடிவெடுத்தோம். ஆனா நான் இது வரைக்கும் அவருக்கு துரோகம் செய்ய மனசளவில் கூட நினைச்சதில்லை...."
( என்.கணேசன் )
கண்ணுக்குத் தெரியா கடவுள்
மண்ணுயிருள் மாண்புமிகு மானிடன் எனலாம் நுண்ணுயிரை
விருந்தினன் போல் மெல்ல நுழைந்து பின் அடிமை சாசனம் நீட்டுவதாலும்
மற்றொரு உயிரை உறிஞ்சி உடல் வளர்த்து உயிர் வாழ்வதாலும்
தன் இனத்தினை கூண்டோடு அழிக்க தானே விஷம் சுரப்பதாலும்
அப்பாவி, சந்தர்ப்பவாதி, கொடூர ஆட்கொல்லி எனப் பல வேடம் பூணுவதாலும்
( விக்னேஷ் ராம் )
நானென்றும் நீயென்றும் (65)
அழுது முடித்த பூஜா முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். அவினாஷ் அவளை ஒரு அற்பப் புழுபோல் நடத்துவதை அவளால் தாங்க முடியவில்லை. மனம் வலித்தாலும் அவினாஷை குறை கூற அவளால் முடியவில்லை. இன்று அவளுக்கு நடந்தது போல எத்தனை முறை அவினாஷை உதாசீனப்படுத்தியிருப்பாள்.
( சுகந்தி )
Beauty of Maths!
1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
( Kavitha )
ஒரு தொலைபேசி பேசுகிறது
"கடவுள் ஒவ்வொருவருக்கும் திறமையைத் தந்திருக்கிறார். உழைப்பின் மூலம் சிகரம் தொட வேண்டிய மனிதன் சோம்பிக் கிடந்தால் அது இறைவனுக்குச் செய்யும் அபச்சாரம்தானே.. நன்றாக யோசித்துப் பார். ஏதோ ஒரு காரணத்தினால் என் மூச்சு நின்று போனால் எப்படித் தவிக்கிறாய்?
( ரிஷபன் )
அழகு ஓவியம்
அழகு ஓவியம்
( முத்துக்குமார் )
இராசி பலன்கள் 7-5-2007 முதல் 13-5-2007 வரை
விருச்சிக ராசி அன்பர்களே, புதன் கேது நன்மை தரும் கிரஹங்களாகும்.
பெரிய மனிதர்கள் சந்திப்பால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். காண்டிராக்ட் தொழில், மற்றும் ரியல் எஸ்டேட் தொழிற் செய்வோர்கள், அரசியல் வாதிகள் ஆதாயம் அடைவார்கள். பொருளாதாரம் சுமாராக இருக்கும்.
( டாக்டர் ப. இசக்கி )
காவிய நாயகன் நேதாஜி (49)
ஆங்கிலேயர்களுக்கும் வங்காள மன்னர் சிராஜ்-உத்-தெளலாவுக்கும் 1757 மார்ச் மாதம் 17 ம் தேதி கடுமையான யுத்தம் நடந்தது. அதில் சிராஜ்-உத்-தெளலா வெற்றி பெற்றார். போரில் சிறைப் பிடிக்கப்பட்ட ஆங்கிலேய வீரர்களுக்கு மன்னிப்புத் தந்து அவர்களை விடுதலை செய்தார்.
( டி.எஸ்.வேங்கட ரமணி )
No comments:
Post a Comment