சாரல் : 313 பொழிந்தது : மே 21, 2007
கொஞ்சம் சிணுங்கல், கொஞ்சம் சீண்டல், கொஞ்சம் சீறல்!
ஒரு கடல் நண்டு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் நெளிகிறது. அதை ரோடு ஓரமாக வந்து நிற்கும் காரின் உரிமையாளரிடம் காண்பிக்க அவர் திகைக்கிறார். திடீரென்று திரும்பி அந்த பிளாஸ்டிக் டப்பாவை காத்திருக்கும் இன்னொருவர் கொண்டு வந்த டப்பாவில் வைத்துவிட்டு வேறோரு புதிய டப்பாவை எடுத்து காருக்குள் "தவறிப்" போட்டு விடுகிறார் நிகழ்ச்சியாளர். காரில் உள்ளவரின் ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்? சிலர் வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடி வருகின்றனர். சிலர் அலறுகின்றனர்.
( ச.நாகராஜன் )
Dayanidhi Maran
* Was the youngest cabinet member.
* Has attended various Seminars, Conferences and Expositions in the field of Political Economy, Management, Visual and Print Media.
* Used to accompany Dr. Karunanidhi for all functions.
* He initially found it difficult to address voters in Tamil and it was M K Stalin who spearheaded his election campaign.
* Resigned his cabinet post due to the fallout between Dr.Karunanithi's family and the Maran brothers.
( PS )
உள்ளம் கேட்குதே More
மார்ச் 15! பக்கம் பக்கமாய் அலுவலகக் கணக்கை எண்களில் அடித்து அடித்து (ஃபிகரைப் பார்த்துப் பார்த்து என் ஃபிகரே போச்சு?!) 'போதும்டா சாமின்னு' ரிலாக்ஸ் ஆக நினைச்சப்ப.. மானிட்டர்ல கீழே ஒரு சிவப்புக் கொடி ஆடியது.
ஏதோ மெயில் வந்திருக்கு. 'ப்ச்.. வேறென்ன.. அலுவலக சகா ஏதோ டிடெய்ல் கேட்கறார்.. என்று ஓபன் செய்தால் மெசேஜ் ஃப்ரம் நிலா டீம்!
வாவ்.. படித்ததும் ரெக்கை கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள். "ஏப்ரல் 15 ஒரு கெட்டுகெதர் வச்சுக்கலாமா? குடும்பத்தோடு வரவும்"
( ரிஷபன் )
செய்திகள் அலசல்
15.5.2007 அன்று மாலை தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவைக் காட்சியைக் காண நேர்ந்தது லோக்சபா சேனலில் ஒரு அங்கத்தினர் கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு ஆக்ரோஷமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். அவைத் தலைவர் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு வரிசையில் நிதி மந்திரி சிதம்பரம் தேமேன்னு கன்னத்தில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். தேடித் தேடிப் பார்த்தோம். மருந்துக்குக் கூட வேறு ஒரு அங்கத்தினரும் கண்ணுக்குப் படவில்லை
( ஜ.ப.ர )
சினி மினி
மு.க. ஸ்டாலின் மகன் உதய நிதி தயாரிக்கும் படத்தில் த்ரிஷாவும் விஜயும் நடிக்கிறார்கள். இதில் ஒரு ஆண்டிஹீரோ (anti-hero) பாத்திரத்திற்கு ஒரு ஆல் டைம் சூப்பர் ஹீரோவை அணுக இருக்கிறார்களாமே. அவர்தான் அமிதாப் பச்சன் என்று பட்சி சொல்கிறது.
( ஜன்பத் )
எல்லாம் ஒரு பேச்சுக்கு
"நான் பசித்த வயிறுகளை பார்க்காதவள் இல்லை. உணராதவள் இல்லை. எனது பள்ளி மற்றும் கல்லூரித் தோழிகளின் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டு எனது பாக்கெட் மணியை மிச்சம் பிடித்து அவர்களின் ஸ்கூல் பீஸ் கட்ட உதவியிருக்கிறேன். இதை நான் பெருமைக்காக இங்கே சொல்ல வரவில்லை. இந்த பிளவுபட்ட சமுதாயத்திலே எனது பொறுப்பான பங்கை நிறைவேற்றியிருக்கிறேன் என்பதையே தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
( எம்.ஆர்.நடராஜன் )
அதீதாவுக்கு... (மடல் - 23)
அலமாரியில் கிடந்த நெளிநெளியாய் நெளிந்திருக்கும் உன் அந்த கருப்பு ஹேர்பின் ஒரு பாம்பென விரிந்து என் உடல் பொருள் ஆவியை அப்படியே ஆக்ரமித்துக் கொள்வதையும், சீப்பில் சிக்கியிருந்து என்னுடன் மௌனமாய் மென்மையாய் உரையாடல் நிகழ்த்தும் உன் அந்த நீண்ட சிறு முடிக்கற்றையும், அலமாரியில் வாடிக்கிடந்த அந்த ஒற்றை மல்லிப்பூச்சரமும் எனக்களித்துவரும் அனுபவங்களை எவ்விதம் வார்த்தைகளில் உரைப்பேன்?
( நட்சத்ரன் )
வாய் விட்டு சிரிச்சா...!
டாக்டர்: இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க.
அவன்: ஸ்பூன் ரொம்ப நீளமா இருக்குமே டாக்டர், எப்படி முழுங்கறது?
( ஜன்பத் )
Pallikoodam - Music Review
Unlike a few music directors who always have at least one song per album in their voices, Bharadwaj rarely lends his voice. Both his "Avaraval vaazhkaiyil" and "Gnabagam varudhe" songs were nostalgia-feel songs. His recent "Meendum Pallikku" is in the league of the aforementioned songs, with the sounds of school bell, thamizhthaai vaazhthu and the students reciting Tamil verses add to the feel of sitting in a classroom. Snehan has given some memories-evoking lines and Bharadwaj has done justice to them by his flawless rendering and soul-stirring interludes.
( Vignesh Ram )
வித்யாரம்பம் அறக்கட்டளை
தரமான அடிப்படைக் கல்வி பெறாமல் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் 6ஆம் வகுப்பு படித்தாலும் 60 என்று கூட சொல்லத் தெரியாமல், தன் தாய் மொழியை வாசிக்கக் கூடத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்க, அப்பள்ளி ஆசிரியர்களோ காற்றின் அற்புதங்களையும் கடல் கடந்த தீவுகளையும் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் தனது தாய்மொழியில் அமைந்த பாடப் புத்தகங்களைக் கூட வேற்று மொழியைக் காண்பது போன்ற கலவர முகத்துடன் பயந்து பார்க்கும் கொடுமை நமது நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
( கார்த்திகா )
Win Scholarship
Nandini Voice For The Deprived, a Chennai based NGO is offering 200 scholarships to school students from lower income group in Tamil Nadu for the academic year 2007-2008.
தாயுமானவள்
"நாகப்பட்டிணம்! அப்பாவும், அம்மாவும் சுனாமி வந்தப்போ கடல் தண்ணீரிலே அடிச்சுட்டுப் போய்ட்டதாச் சொன்னாங்க" "இப்போது கூட்டியாந்த மாமா யாரும்மா?" முனியாண்டி அவள் கண்களைத் துடைத்து விட்டுப் பரிவுடன் வினவினான்.
( வை. கோபாலகிருஷ்ணன் )
His Name is Siva Shankar..(248)
Mahaans who have conquered themselves are Mahaviras; they have gained control of their senses. If you decide to observe fasting, then no feast will tempt you. You must form a decision. Then, nothing can tempt you. By God's Grace, I have absolute control over my senses.
( N C Sangeethaa )
காவிய நாயகன் நேதாஜி (51)
1940 டிசம்பர் 24 க்குப்பிறகு சுபாஷை வெளியார் யாரும் சந்திக்க முடியவில்லை. குடும்பத்தினர் கூட அவருடன் பேச முடியவில்லை என்கிறார்கள். ஒரு தனி அறையில் தம்மைச் சிறைப்படுத்திக் கொண்டு விட்டதாகக் கூறப்படுகிறது. உணவைத் திரைக்கு வெளியே வைத்து விடுவார்களாம். கையை வெளியே நீட்டி உணவுத் தட்டை இழுத்துக் கொள்வாராம் சுபாஷ்.
( டி.எஸ்.வேங்கட ரமணி )
நானென்றும் நீயென்றும் (67)
எத்தனை பிரியம் இருந்தால் அத்தனை அக்கறையாய் அவளைக் காப்பாற்றி கண்காணித்து இருப்பான். 'என் அவினாஷ்' மனதுக்குள் முணுமுணுத்தபடியே கலைந்திருந்த அவன் கேசத்தைத் தன்னை அறியாமல் மென்மையாய் கோதிவிட்டாள். அவளையும் அறியாமல் அவள் விரல்கள் அவனது இடது புருவத்தை நீவி விட்டன. நீவி விட்ட விரல்கள் அவனது எடுப்பான முகத்தில் கோடுபோட்டன.
( சுகந்தி )
An Ashram for Comprehensive Development of Society–Part 2
“Balak Sangh” is a forum run for young village children. This provides value education through various play way method. Also nutritious food is provided. The whole philosophy behind providing value education to young children is to properly rear the children, who would become great assets for the nation when they grow up. In this small way, Ashram tries to safeguard the future generation from the obnoxious clutches of mass media and corruption of the impressionable young minds by useless trivial matters.
( Dr.Rajan )
நீ நான் தாமிரபரணி (71)
சேதுபதி கடைசியில் உடைந்த குரலில் சொன்னார் "....எனக்கு ஒரு ஆசை ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. நான் எழுதற முதல் நாவலே பெரிய அளவில் பிரபலமாய் விடணும்கிறது தான் அந்த ஆசை. எத்தனையோ கதைகள் ஆரம்பத்தில் எழுதி இருக்கேன். ஆனாலும் அது மனசுக்கு திருப்தி தரலை. பிரசுரிக்க அனுப்பவும் இல்லை. பிறகு இவங்க கதை எழுதலாமேன்னு தோணி, எழுதினேன். பிரசுரமாகி பிறகு பிரபலமும் ஆச்சு. எனக்குப் பெரிய பாராட்டு விழா நடத்துனாங்க.
( என்.கணேசன் )
மனசே சுகமா? (14)
உங்களுக்கு 'எனக்கு எதையுமே சரியாகச் செய்யத் தெரியாது' என்ற மைய நம்பிக்கை இருக்குமாயின், அந்த நம்பிக்கையை உறுதிப் படுத்தும் நிகழ்வுகளையும் மனிதர்களையுமே உங்கள் ஆழ்மனம் தேடும். கடுமையாக விமரிசிக்கும் மேலாளர், எப்போதும் குறை கண்டுபிடிக்கும் மனைவி, உங்களுக்குப் பிடிக்காத வேலை - இப்படி உங்கள் நம்பிக்கையை வலுவாக்கும் சூழலை நீங்கள் உருவாக்கிக் கொள்வீர்கள். உங்கள் நம்பிக்கைக்கு மாறான, உங்களுக்குப் பாராட்டுப் பெற்றுத் தரும் சூழலில் நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள்.
( நிலா )
மவுனம்
உன் மவுனத்திற்கும்
என் மவுனத்திற்குமான
வேறுபாட்டினை நுகர நுகர
வார்த்தை செலவின்றி
இலக்கணத் திருத்தமொன்றை நீ
அரங்கேற்றியிருப்பது புரிகிறது.
( லேனா.பழ )
இராசிபலன்கள் (21-5-2007 முதல் 27-5-2007 வரை)
விருச்சிக ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். நெருப்பு, ராணுவம், போலீஸ் துறை சார்ந்தவர்கள், இனையதளத்தவர்கள் நற்பலன் அடைவார்கள். உடம்பில் நரம்பு, வாயு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். தீர்த்தயாத்திரை சென்று வருவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம் உண்டாகக் கூடிய காலமாகும். கமிஷன் தொழில் செய்வோர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.
( டாக்டர் ப. இசக்கி )
கவிதைப் பூக்கள்
வா...
நமக்குள் சாதி, மத, இன
பேதங்களை வைத்து
சண்டை இட்டுக்கொள்வோம்.
அப்போதுதான்
அரசியல்வாதிகள் நிம்மதியாய்
கொள்ளை அடிக்க முடியும்.
( ரிஷபன் )
No comments:
Post a Comment