Wednesday, May 16, 2007

சாரல் 312

சாரல் : 312 பொழிந்தது : மே 14, 2007

ஜெயா டிவியில் நிலாவின் நேர்முகம் - Watch Nila's interview

பெயராலும், நிலாச்சாரல் ஆசிரியர் என்ற பொறுப்பாலும் மட்டுமே அறிந்திருந்த தங்களை ஒரு மனிதராக நேரில் பார்த்த திருப்தி தங்களை தொலைக்காட்சியில் பார்த்து ஏற்பட்டது. தங்களை இயக்கிய எண்ணங்களையும், தேடல்களையும் மிக அழகாகப் பேட்டியில் சொல்லியிருந்தீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கும், தங்கள் செயல்களுக்கும் இடையே இடைவெளிகள் இல்லை என்பதை நிலாச்சாரலுக்கு வந்தவர்கள் இந்தப் பேட்டியையும் பார்த்திருந்தால் நிச்சயம் உணர முடியும்.

An Ashram for Comprehensive Development of Society–Part 1

Today, it has another campus adjacent to it, which is Sri Sarada Ashram run under the stewardship of Rev. Yatiswari Ramakrishna Priya Amba. Sri Sarada Ashram is established for the cause of spiritual development and for uplifting the poor village community. The Sarada Ashram is run by forty well educated Graduates and Post-Graduates including engineers who have become sanyasins renouncing everything for the revival and upliftment of dharmic principles in our society.

( Dr.Rajan )

நதி போல் செல்

மனிதனே நீ நதியைப் போல் இரு. உன் ஆரம்ப நிலையை எடை போட்டுக் குறுகிய வாழ்க்கை வாழ்ந்து விடாதே. ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறு. வழியில் கண்டிப்பாக வாய்ப்புகளைக் காண்பாய். சிறிய சாதனைகளிலேயே பெருமிதம் அடைந்து நின்று விடாதே. தொடர்ந்து சிறந்து செயல் புரி. தடைகள் வரத்தான் செய்யும். தடைகளுக்குக் காரணங்களையும், காரணமானவர்களையும் பட்டியல் போடாதே. பயனில்லை.

( என்.கணேசன் )

அரசியல் அலசல்

கலைஞர் தலைமையிலுள்ள காவல் துறை மவுனமாக இருந்து வேடிக்கை பார்த்தது என்று சொன்னது சன் டி. வி. கலைஞரோ தினகரன் பத்திரிகை நிர்வாகிகளிடம் இம்மாதிரி, கருத்துக் கணிப்பு வெளியிடவேண்டாம் என்று சொன்னதை அவர்கள் கேட்கவில்லை என்று சொல்கிறார். செய்திகளையும் வன்முறையையும் ஏதோ ஜெயா டி.வி. ஒளிபரப்புவதுபோல விஸ்தாரமாகக் காண்பிப்பதைப் பார்க்கும்போது கருணாநிதி குடும்பத்திற்குள் நிலவும் பூசலின் வெளிப்பாடுதான் இந்தக் கருத்துக்கணிப்பும் வன்முறையும் எனத் தோன்றுகிறது.

( ஜ.ப.ர )

காவிய நாயகன் நேதாஜி (50)

1940 நவம்பர் 26ம் தேதி சிறையில் இருந்தபடியே அவர் அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அது அவருடைய அரசியல் சாசனம் என்றே சொல்லப்படுகிறது. அதில் அவர் எழுதியதாவது: " உடனடியாக கண்ணுக்குப் புலப்படும்படியான பலன் எதுவும் இல்லாவிட்டாலும் கூட எந்த ஒரு தியாகமும் வீண் போவது கிடையாது.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

செய்திகள் அலசல்

ஜார்கண்ட் முதலமைச்சர் கோடாவின் மனைவி கீதா ப்ரூலி அவரை விட்டுப் பிரிந்தே இருந்தாராம். இப்போது கோடா முதலமைச்சரான பிறகு அவர்கள் இணைந்துவிட்டார்கள். இதற்காகப் பெரிய விருந்தே ஏற்பாடு செய்தாராம் முதல்வர் கோடா. "என் பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா" என்று சந்தோஷப்படுபவர்களுக்கிடையே இப்படியும் ஒருவர்.

( ஜ.ப.ர )

மனசே சுகமா? (13)

இந்த சுமைகளை உதறும்போது உங்களது முழு ஆற்றலும் நிகழ்காலத்திற்குப் பயன்படும். எதிர்கால முன்னேற்றத்திற்கான வித்து விதைக்கப்படும். எப்பொழுதெல்லாம் கவனம் நிகழ்காலத்தில் இல்லாமல் இந்த சுமைகளின் மேல் செல்கிறதோ அப்போதெல்லாம் 'இந்த சுமையை நான் உதறுகிறேன்' என்று மனதளவிலோ அல்லது வாய்விட்டோ சொல்வது இத்தகைய சுமைகளை உதற உதவும் என்கிறார்கள் நிபுணர்கள்.

( நிலா )

சர்தார் தி கிரேட்! (8)

சர்தாரும் அவர் மனைவியும் விவாகரத்துக் கோரி மனு செய்கின்றனர். ஜட்ஜ் : உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்களே..அவர்களை எப்படிப் பகிர்ந்துகொள்ளப்போகிறீர்கள்?
சர்தார் : அவ்வளவுதானே..இப்போது போய்விட்டு மீண்டும் அடுத்த வருடம் மனுச் செய்கிறோம். உங்களுக்கும் கஷ்டம் இல்லாமப் போவும்.

( ரிஷிகுமார் )

உலகப்புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் பிளாஸ்டிக் (Plastic)

பினோலிக் மற்றும் அமினோ பிளாஸ்டிக்குகள் சூடாக்கி வார்ப்படம் செய்யப்படுபவை. வார்ப்படமாக உருவாக்கப்பட்ட பின்னர், இவ்வகைப் பிளாஸ்டிக்குகள் உருக்கப்பட முடியாதனவாகும். வார்ப்படங்களாகவும், அச்சுகளாகவும் உற்பத்தி செய்யப்பட்ட இவற்றிலிருந்து பல பொருட்கள் செய்யப்படுகின்றன.

( டாக்டர் இரா.விஜயராகவன் )

என்னை ஏமாற்ற முடியாது

பெஞ்சில் அமர்ந்தேன். ஷூவைக் கழற்றி வைத்தேன். காளியைத் தரிசித்தால் போதும். கடைக்குள் நுழையும் முன்பே பார்த்து விட்டேன். ஏகக் கூட்டம். குனிந்த தலை நிமிராமல் - அர்ச்சனை சாமான் வாங்க வற்புறுத்துவார்களோ என்ற பயம் - வெளியே வந்தபோது கடைக்கார பெண்மணி ஹிந்தியில் வேகமாய் ஏதோ சொல்வது கேட்டது. நான் திரும்பவில்லை.

( ரிஷபன் )

ஊனம்

கிரிஜாவின் கனவில் அந்த மரங்கள் பேசிக் கொண்டன. நல்ல மரங்கள் தங்கள் அழகைப் பெருமையாக வர்ணித்துக் கொண்டு கோணல் மரத்தைக் கிண்டல் செய்ய, அந்த மரம் கோபம் கொள்ளாமல் கடவுளால் படைக்கப்பட்ட எந்த உயிர்க்கும் அர்த்தம் இருப்பதாகப் பொறுமையாக பதில் தந்தது. கனவு கலை‎ந்தெழுந்த கிரிஜா மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

( P.நடராஜ‎ன் )

சினி மினி

100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சென்னை மத்திய சிறைச்சாலை புழலுக்கு மாறிய பின் இப்போது இந்த சிறைச்சாலையை படப் பிடிப்புகளுக்கு அனுமதிக்கிறார்கள். பசுபதி, பகடை போன்ற படங்கள் இங்கே படம் பிடிக்கப்படுகின்றனவாம். சிறைச்சாலைக் காட்சிகள் இனி தத்ரூபமாக இருக்கும்.

( ஜன்பத் )

தமிழா தமிழில் பேசு

நாட்டில் பலமொழிகள் இருக்கு – அதிலே
நம் தமிழுக்கே தனிப்பெரும் சிறப்பு!
வீட்டில் தமிழ்பேசு தமிழா! - நீ
விரும்பித் தமிழ்பேசு தமிழா!

( இராம. வயிரவன் )

கண்டேன் ராகவா!

"ஆமாம்; எப்பவும் உங்களுக்குப் பொழைக்கத் தெரியாது. உங்க ஃப்ரண்ட் செட்டியார் மூணு வட்டி வாங்கறார். ரெண்டு வட்டிக்குக் கடன் வாங்கி மூணு வட்டிக்கு விடறார். இந்த ஒரு 'பர்சன்டிலேயே' அவருக்கு மாசாமாசம் ஆயிரக் கணக்கான பணம் வருது. கணக்குக் காட்ட வேண்டாம். ஒரு ப்ரோநோட் தான்! நம்பிக்கை தான்!"

( விமலா ரமணி )

His Name is Siva Shankar..(247)

If you are able to free yourself from your iron-like heart, cry for the Lord’s Love, join your hands in prayer, be in constant thoughts of Him, sing, dance and revel in the bliss of His Cosmic Presence, then you attain the glorious state of Kannappa Nayanar.

( N C Sangeethaa )

நானென்றும் நீயென்றும் (66)

"கிளம்பிப் போ" என்று சந்தனாவிடம் இரண்டு மூன்று முறை சொல்லியாயிற்று. ஆனால் அந்தப் பெண் காதில் அது விழுந்ததாய்த் தெரியவில்லை. எது சொன்னாலும். "ஆண்ட்டி யூ ஆர் ஸோ ஸ்வீட்" என்று சொல்லி கட்டிக் கொள்கிறது. குழந்தைகள் என்ன என்றால் இவளை நாடி வந்து அன்போடு ஒட்டிக் கொள்கின்றன.

( சுகந்தி )

சேர்ந்து ரசிக்கலாமா?

அவரது கந்தபுராணச் சொற்பொழிவில் காமதகனப் படலத்தில் காமனை(மன்மதன்)ப் பற்றிக் கூறுகையில் (இந்துக்களுக்கு ஒரு காமன், கிறித்துவர்கள், இஸ்லாமியர் ஆகிய மற்ற மதத்தினர் என்று பல காமன்கள் கிடையாது. அனைவருக்கும் ஒரே காமன்தான். அவன் அனைவருக்கும் common(காமன்)" என்றார்

( சிவ.ஜ )

நீ நான் தாமிரபரணி (70)

தாராவின் கழுத்தில் தொங்கிய தாலியைப் பார்த்த பிறகு செல்வரங்கம் தன் நம்பிக்கையைப் பெரிதும் இழந்தார். ஈஸ்வரன் ராஜராஜனை தாராவிடமிருந்து பறிக்க சம்மதிக்க மாட்டார் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் பேரன் பிறந்திருப்பதை மருமகனிடம் கண்ணீருடன் சொன்னார். ராஜராஜன் மகன் பிறப்பில் சந்தோஷப்படுவதா துக்கப்படுவதா என்று தெரியாமல் குழம்பினான்.

( என்.கணேசன் )

அழகு ஓவியம்

அழகு ஓவியம்

( முத்துக்குமார் )

கவிதைகள்

சாப்பிட அமர்கிறேன்; பிடித்த
பதார்த்தம் தட்டில் இல்லை
காபி குடிக்கிறேன்:சர்க்கரை இல்லை
விருந்தாளியுடனான பேச்சும்
சுத்தமாய்ச் சுகிக்கவில்லை!
தொலைக்காட்சி பார்க்கிறேன்
தொலைகிறது நிம்மதி!
பத்திரிக்கை புரட்டினேன்
பயங்கரத் தலைவலி!

( ஸ்திரன் )

இராசிபலன்கள் (14-5-2007 முதல் 20-5-2007 வரை)

துலா ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும் காலமாகும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். செய்தொழில் விட்டுப் புதிய தொழில் தொடங்குவீர்கள்.

( டாக்டர் ப. இசக்கி )

சூழ்நிலை

ஜெயாவுக்கு குரல் நடுங்கியது. அவள் அழுது கொண்டே பதட்டமாகப் பேசுவது இவருக்குப் புரிந்தது. "அப்பா.....தாத்தா சென்னையிலே ஒரு சாலை விபத்திலே இறந்து விட்டாராம். இப்போதுதான் போன வந்தது. அவரின் உடல் 'ஜீ.எச்' இல் உள்ளதாம். அம்மா ரொம்பவும் அழுது புலம்பிண்டு இருக்கா. ஈவினிங "பிளைட்டில் அம்மாவை ஏற்றி அனுப்பட்டுமா?" என்றாள்.

( வை.கோபாலகிருஷ்ணன் )

No comments: