Thursday, January 17, 2008

சாரல் 347

மனிதரில் எத்தனை நிறங்கள்! (28)

"உடம்புக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மனசு தான் ரணமாய் இருக்கு. பிடிக்காத இடத்தில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். வேற வழியில்லாமல் இங்க இருக்கேன். அதனால நான் இந்தப் படியைத் தாண்டாமல் ஒரு ஜெயில் வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன்"


வீரத்துறவி விவேகானந்தர் : 6. அந்த நாளிலேயே அதிசய ஆற்றல்கள்
பல அறிவார்ந்த விஷயங்களைப் பற்றி நரேன் சம நிலையில் அமர்ந்து அவருடன் விவாதிப்பதுண்டு. தந்தைக்கும், படிப்பைக் கரைத்துப் புகட்டுவதை விட, சுய சிந்தனையைத் தூண்டி விடுவதுதான் கல்வி என்ற நம்பிக்கை இருந்தது. இது நரேனின் அறிவு வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலையாக அமைந்தது.


மோகனம்
எதையும் சற்று ஊன்றிக் கவனித்து, அலசிப் பார்த்து, மனசில் அசைபோட்டு வாழ்கிறவன் அவன். இவள், மோகனவல்லி, சற்று பரபரப்புக்காரி என்றிருக்கிற.


சூரியனுக்கு சுப்ரபாதம் : 11. தீவிர வாசிப்பு
கவிதைதான் இலக்கியத்தின் உச்ச வடிவம் எனக் கருதப் படுகிறது. நாவல்களை விட கற்பனைக் கவிதையுலகம் உண்மையில் மூளைக்கு மிகுந்த அழுத்தத்தைக் கொண்டுவரக் கூடியது.


வாதாபி கணபதிம்
பிள்ளையார் இவளின் இஷ்ட தெய்வம். ஒரு கப்போர்டில் பிள்ளையாருக்கு என்று இடம் ஒதுக்கி இருந்தாள். நடுவில் ஒரு பீடத்தில் பிள்ளையார் இருபுறமும் குத்து விளக்கு. மேலே தோரணம், மாவிலை என்று ஏதோ அலங்காரம் செய்திருந்தாள்.


வான்வெளித் தேவதை
வான வெளியின் ஊர்தியிலே - அவள்
ஒரு தேவதையாய் வலம் வந்தாள்,
எண்ணக் குவியலினால் ஈர்த்து விடலாமென்று
வண்ணக் கனவுகளால் வதனம் பார்த்திருந்தேன்;


வண்ணக் கோலங்கள் (2)
வண்ண வண்ணக் கோலங்கள்


நம்பிக்கை
கந்தசாமி முருக பக்தன். புத்தியை மறைக்கும் அளவுக்கு தீவிர பக்தன். ஒவ்வொரு ஆண்டும் விதவிதமாக அலகு குத்திக் கொண்டு காவடி எடுப்பான். அவனுக்கு நல்ல குரல் வளம்.


சேது தரிசனம் பாப விமோசனம்!
பாரம்பரியமான யாகங்களைச் செய்தல், புண்ய தீர்த்தங்களில் நீராடுதல், அனைத்து விரதங்களையும் அனுஷ்டித்தல் ஆகியவற்றால் ஏற்படும் பலன்கள் அனைத்தும் ராம சேதுவின் ஒரு தரிசனத்தால் பெறலாம் என்று அது மேலும் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.


வெற்றிக்கலை (10) : ஒருமுனைப்படுத்தல் (2)
வில்லியம் ஆஸ்லரின் தந்தை இந்தக் கிளியைப் பற்றிக் குறிப்பிட்டு, "மகவே, எந்தப் பிரச்சனைக்கும் இப்படித்தான் தீர்வு காண வேண்டும். ஒவ்வொன்றாகத் தீர்க்க வேண்டும். ஒவ்வொன்றாக" என்பார்.


கமான்.. கிலி.. கிலி..
சும்மா வேடம் போட்டால் போதுமா. சில மேஜிக்கும் செய்தால் நன்றாக இருக்குமே என்பதற்காக அது பற்றி விசாரித்து 2 மேஜிக்குகளைக் கற்றுக் கொடுத்தேன். அப்போது சொல்லிக் கொடுத்த மந்திரம்தான் 'கமான் கிலி கிலி'.


நினைவுத் தீண்டல்கள் (2)
"தாத்தா…இங்கன ஒரு பாம்பு" அபயக்குரலைக் கண்டதும் சின்னச்சாமி ஓடி வந்தார். ஒரு நீண்டக் கம்பைத் தூக்கியபடி. பாம்பை எடுத்து வெளியே தூக்கிப்போட, பயந்து கொண்டு ஓடி விடுமென்று பார்த்தால்…


பொங்குக பொங்கல்!
எங்கள் சகோதரர் வீடுகளில்
என்றென்றும்
பால் மட்டும் பொங்க..
பரவசம் பொங்க..
அன்பு பொங்க..

No comments: