Tuesday, July 01, 2008

சாரல் 371

வெற்றிக்கலை (22); நேரத்தைப் பயன்படுத்தல்(3)
'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து' என்று வள்ளுவர் கூறியது உரிய காலத்திற்காக காத்திருந்து செயலாற்றி வெற்றி பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தியேயாகும்.

மனிதரில் எத்தனை நிறங்கள்! (52)
"பாட்டி, என்னைக்கானாலும் சரி எங்கப்பா அம்மாவைக் கொன்ன அந்த சிவகாமியும் அந்த நேபாளமும் என் கையால தான் சாகப் போறாங்க..."

கரும்பூனைகள்
வேஷ்டியையும் துண்டையும் சரி செய்து கொண்டு, கிராமத்திலிருக்கிற குலதெய்வத்தை ரகசியமாய் மனசுக்குள் தொழுது கொண்டு தலைவர் வலதுகாலை வாசலுக்கு வெளியே வைத்தபோது..

வெள்ளெருக்கும் சூரியனார் கோவிலும் (2)
அகஸ்தியரும் அந்த தேவ ரகசியத்தைச் சொன்னார். "எருக்கிலையில் தயிரன்னம் புசிப்பதால் அதன் சாரம் அன்னத்துடன் கலந்து தொழுநோய்க்கு மருந்தாகும்"

மின் விசிறிகள்
மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஸ்கைலர் வீலர் (Schuyler Wheeler) என்பவர் 1886ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மின் விசிறியைக் கண்டுபிடித்தார்.

காதல்.. காதல்.. காதல் (7)
'பழகிரும்'என்ன அற்புதமான வார்த்தை. 'பழகிரும்' எதுவுமே பழகி விடுகிறது காலப் போக்கில். துயரமும் சரி, இன்பமும் சரி. நிகழ்கிற நேரம் கிடைக்கிற அதிர்வுகள் தற்காலிகம் மட்டுமே.

சிகரத்தை எட்டிய சிறிய தவளை
ஒரே ஒரு தவளை மட்டும் தொடர்ந்து மேலே மேலே ஏறிக்கொண்டே இருந்தது. அது தன் முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை. அது மிகுந்த பிரயத்தனத்துடன் கோபுரத்தின் உச்சியை சென்றடைந்தது.

சின்ன வயசு சிநேகிதி
எங்களுக்குத் தோன்றாத ஒரு வியப்புஊராரிடம்.எப்படி சாத்தியமாயிற்று..

மாகாய்
மூன்று நாட்கள் இதே போன்று செய்து, நான்காம் நாள் துண்டுகளை நன்றாகப் பிழிந்து, ஒரு உலர்ந்த துணியை வித்துக் காய வைக்கவும்.

கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (19)
சிலர் பேசும்போது சொற்களைக் கடித்து விழுங்கி பேசுவார்கள். தெருவில் பண்டங்கள் விற்றுச் செல்பவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

மனிதனின் மூன்று முகங்கள்
அவனுடைய குடும்பத்தினர், உற்றார், உறவினர் மட்டுமல்லாது முன்பின் அறியாதவர்களும் நலமுடன் வாழவேண்டும் என்று எண்ணுகிறான்.

யாதும் ஊரே (1)
சுத்துவட்ட எட்டுபட்டியும் அவரது ஊர். எங்கய்யா செத்துப்போகும் போது, இந்த வீட்டை எனக்கு விட்டுட்டுப் போனார்ன்னானாம் ஒருத்தன். அடுத்தவன் சொன்னான் - போடா எங்கய்யா இந்த உலகத்தை விட்டே போனார்! அந்தக் கதை. உள்ளவனுக்கு உள்ளூர். இல்லாதவனுக்கு யாதும் ஊரே.

இராசிபலன்கள் (30-6-2008 முதல் 6-7-2008 வரை)
விருச்சிக ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரஹமாகும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த பணம் கிடைக்கும். மருத்துவத்துறை சார்ந்தவர்கள், அறிவியல் அறிஞர்கள், பேராசிரியர்கள் நற்பலன் அடைவர்.

வீரத்துறவி விவேகானந்தர் (29)
“துறவு வாழ்க்கையை மேற்கொண்டு விட்டோம்; அதை விடப் போவதில்லை. ஊர் ஊராக சுற்றுவோம். வீடு வீடாகப் பிச்சை எடுப்போம்”

“ம்ம்ம்ம்.. எனக்கு ரசிகர்களின் பல்ஸ் தெரியும்” சென்டிமெண்ட் பேசும் சிம்ரன்
உடம்பை ஷேக் பண்ணினாலே அது டான்ஸ்னு சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தன்னை சந்தோஷமாக்கி தன் நடனத்தால் அடுத்தவர்களையும் சந்தோஷப்படுத்தினால் தான் டான்ஸ்.

சினி சிப்ஸ் (20)
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பணிக்காக, பாராட்ட எண்ணிய மெட்ராஸ் ரோட்டரி சங்கம் அவருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கியுள்ளது.

நகைச்சுவை பிட்ஸ் (22)
குளத்துல 'டபக்'குன்னு ஒரு யானை குதிச்சதாம். குதிச்ச வேகத்துல 24 எறும்புகள் தெறிச்சு வெளியே வந்துடுச்சாம்.

ஆயுர், ஆரோக்கியம், ஐசுவர்யம்! (1)
"இது தான் வியாதி! எனக்கு ஏதாவது வந்துடுமோன்னு பயப்படறே பாரு. அதுதான் வியாதி! முதல்லே அந்த மனப்பிரமையைத் தூக்கி எறி..."

No comments: