உமையே! தாயே! உலகம் போதும் உயிரைத் தந்தேன் உனதடி தஞ்சம் அமைதி இல்வாழ்வை அடையப்பெற்றிலை;
நன்மலரைச் சூட்டியே நா மணக்கச் செப்பினேன் பொன்பொருளை ஈந்திடுவாய் வெள்ளியே எந்தனுக்கு இன்பத்தைத் தந்து எழில்வழியே நீ காட்டி, அன்பான ஆசி கொடு
மனதை வருடும் மெட்டு, நெஞ்சைப் பிழியும் வரிகள். ரொம்பவும் வாத்தியங்கள் பிரயோகிக்காமல், மெட்டை மட்டுமே நம்பினால் போதும் என்று நினைத்து ஒரு நல்ல பாடலைத் தந்திருக்கிறார்
முதுமையினில் மனைவிதுணை இலையெனில் வாழ்க்கையொரு முட்புதர் போலாகுமோ
சம்பூர்ண ராமாயணத்தில் எல்லாப் பாடல்களையும் அமைத்து இதிஹாஸ கதைக்கு ஏற்றவாறு சாமான்யரின் உள்ளம் கொள்ளை கொள்ளும் விதத்தில் எழுத முடியும் என்று நிரூபித்தார்.
சாதாரண கூச்சத்திற்கு ஒரு மனிதனையே ஆட்டிப் படைக்கும் அளவிற்கு சக்தி உண்டா! அவன் ஆளுமையை நிர்ணயிக்கும் அளவு பவர் உண்டா!
அவனுடைய ஒவ்வொரு அசைவையும் என்னையறியாமல் நேசிக்க ஆரம்பித்தேன். நானா? நான் எப்படி காதலில் விழுவது? எனக்குத்தான் அது போன்ற உணர்வுகள் வரவே கூடாது என்று நான்கு வருடங்களுக்கு முன்பே தடை விதித்திருந்தேனே!
நல்ல முடிவு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. ஒரு தகுந்த முடிவு எடுப்பதற்கு நமது அறிவு துணை நிற்க வேண்டும்
பொறாமையினால் என்ன ஆகும்? "நெஞ்சத்துள்ள பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்" போகும். ஆண்மை, மறம், திண்மை, மானம், வண்மை யாவும் மறந்து போகும்.
காட்டு வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த வாசுவின் வாழ்க்கையில் பத்மா இணைந்தபின், வெள்ளத்தின் வேகம் சற்றே மட்டுப்பட்டது.
மலயுச்சில அவனைத் துப்பாக்கில சுட்டுருக்காங்க. குண்டு பட்டவுடனே அவன் பேலன்ஸ் தவறி உச்சியில் இருந்து கீழே விழுந்துட்டான். அந்தப் பக்கம் பெரிய பள்ளத்தாக்கு.
அவ்வாறு எடுத்து வரும் எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ வைப்பது மிகுந்த பலன் தரும். எதிர் மறை சக்திகளை அறவே நீக்கும் சக்தி கொண்டதாகக் கூறப்படுகிறது.
"என்ன எமா.. அப்போ வேற காமிச்சியே"ங்கறார் வியாபாரி. எமன் சிரிச்சிக்கிட்டே சொன்னார்... "அது நரகத்தோட அட்வர்டைஸ்மென்ட்!"
"ஆர்லான்டோ வந்ததிலேர்ந்து பிரசன்னா என்னை ஒரு டைம்மெஷின்லே உக்காத்திவச்சு முப்பது வருஷத்துக்கு முன்னாடி கூட்டிண்டு போயிட்டான். அந்தக் காலத்திலே நடந்ததெல்லாம் நேத்திக்கி நடந்தமாதிரி இருக்கு."
பச்சை மிளகாய்க்குப் பதிலாக ஒரு மோர்மிளகாயை வறுத்தும் சேர்க்கலாம்.
மகளுடைய அந்நியமாதல் அம்மாவுக்கு உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவள் பக்கவாட்டில் கையைச் செலுத்தி மகளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்
குடிகாரன் பேச்சுன்னு ஏதோ சொல்வாங்களே.. அது மாதிரி ஆயிடப்போவுது. அப்புறம் உங்க பொண்ணு அவரைத் திருத்தலேன்னு கெட்ட பேர் வந்திடப் போவுது
கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது
மெட்டுக்குப் பாடல் எழுதச் சொல்லி கவிஞர்களைக் கேட்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சிக்கு பாடல் அமைத்த செய்தியையும் இப்போது அறிகிறோம்!
தீங்கு கண்டு வாய்ப்பேச்சில் "த்சொ, த்சொ," சொல்லி அத்தோடு கடமையை முடித்துக் கொள்கிற சாதாரணர்களின் பால் அவனுக்குள்ள ஏளனம் வெளிப்படுகிறது
No comments:
Post a Comment