Tuesday, November 28, 2006

சாரல் 288

சாரல் : 288 பொழியும் நாள் : நவம்பர் 27, 2006

ஜோதிடம் கேளுங்கள்

ஜாதக ரீதியாக புத்தகம், எழுத்து போன்ற துறையை தாங்கள் ஜீவனத்திற்காக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் பொழுதுபோக்காகவும் பொதுச் சேவையாகவும் கருதி சிறு லாபத்தை மட்டுமே எதிர்நோக்கிச் செய்தால் இத்துறை தங்களுக்குச் சிறப்பாகவே அமையும்.

( குருஜி கார்த்திகா சித்தார்த் )

ஜென் குட்டிக் கதைகள்!

ஜென் புத்தமதப் பிரிவில் கோயன்கள் எனப்படும் உபதேசங்கள் ஏராளம் உள்ளன. கேள்வி - பதிலாக அமைந்திருக்கும் இந்த உபதேசங்களைப் புரிந்து கொள்வது எளிதல்ல. தவத்தில் ஆழ்ந்து உள்ளுணர்வைப் பெற்றவர்களால் மட்டுமே இதன் சரியான அர்த்தத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

( ச.நாகராஜன் )

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்

"போ.. பாட்டி.. நீ பொய் சொல்றே.. அப்பா சொல்லியிருக்கார்.. கடல்ல தான் இவ்வளவு ஜலமும் இருந்தது. அப்புறம் வெய்யில்ல ஆவியாகி வானத்துக்குப் போயி இப்ப மழையாக் கொட்டறது.."

( ரிஷபன் )

சாதனை மேல் சாதனை போதுமாடா சாமி

முன்பொரு காலத்தில், தொடர்ந்து 160 வாரங்கள் டென்னிஸ் உலகின் தரப்படுத்தலில், முதலாம் இடத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தவர்தான் Jimmy Connors என்ற அமெரிக்க வீரர். ழுது அந்தச் சாதனையை உடைப்பாரா, Roger Federer என்பதுதான் இன்றைய கேள்வியாகி இருக்கின்றது.

( ஏ.ஜே.ஞானேந்திரன் )

அரசியல் அலசல்

தாம் சீனாவில் தூதுவராகப் பணி புரிந்தபோது எழுதி வைத்த டைரிக் குறிப்புகளை பீக்கிங் டைரி என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் நட்வர் சிங். ஈராக் டைரி என்று ஏதாவது எழுத உத்தேசம் உண்டா என்று வினவுகிறார் எடக்கு மடக்கு ஏகாம்பரம்.

( ஜ.ப.ர. )

நடிகன் (2)

''என்ன சொல்றேள்?'' என்னுமுன் கூட்டம் முடிந்து நடராஜன் கிழே இறங்கியிருந்தான். முட்டி மோதிக்கொண்டு கும்பல் காரைநோக்கிப் பாய்ந்தது. வெறிகொண்ட கூட்டம். நானொரு பக்கம், அவளொரு பக்கம் தள்ளப்பட்டோம். அவசரம். வேகம். என் காதில் கிரியின் அழுகை கேட்டது.
( எஸ். ஷங்கரநாராயணன் )

நானென்றும் நீயென்றும் (42)

வாசலை நெருங்க நெருங்க நெஞ்சம் கலங்கியது. வயிறு பிசைந்தது. பெரிதாய் தவறு நடந்திருக்கிறது. உள்ளிருந்து ஏதோ ஒன்று தள்ள தன்னைக்கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக ஓடினான். ஆம்புலன்ஸ் நிற்கும் முன்னால் பின்னாலேயே ஓடி கதவைத் திறந்து உள்ளே பாய்ந்தான். உள்ளே முகம் மூடப்பட்டு ஒரு சடலம்.

( சுகந்தி )

இருமுறை வேண்டாம்...ஒரேமுறை வா!

மனித உறவுகள்
மனதில் நீர்த்தபின்
உடல் உலகம் சுற்றுவதில்
அர்த்தமுமில்லை.
அன்புமில்லை!

( சிலம்பூர் யுகா )

காவிய நாயகன் நேதாஜி (26)

"ஸ்வாமி விவேகானந்தரின் நூல்களைப் படியுங்கள். அவருடைய கடிதங்களும் உரைகளும் இப்போது உங்களுக்கு மிகவும் தேவையானவை. "பாரத தேசமும் விவேகானந்தரும்" என்ற புத்தகத்தில் இவையெல்லாம் வருகின்றன

( டி.எஸ்.வேங்கட ரமணி )

நாயகன் ஒரு நங்கை (18)

கதவை அவள்தான் திறந்தாள். நான் உள்ளே புக வழிவிட்டு நின்றாள். எதுவும் பேசவில்லை. என் கையை கதவின் மேல் வைத்தேன். என் விரலைக் கண்டு, ஒரு முறை என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, உள்ளே சென்றாள்.

( நரேன் )

Interview with Violin Duo Sisters Dr. Lalitha and Nandini

Dr. M. LALITHA and M. NANDINI have been widely acclaimed as `VIOLIN VIRTUOSOS and QUEEN'S OF INDIAN MUSIC' of the present generation. They are applauded as the only violin duo sisters to perform the Indian Classical, World music, Fusion, and Western Classical music in ASIA.

( Annapurna Panchanathan )

செய்திகள் அலசல்

ஆசிரியரா ஆ! சிறியரா?: தமது மோட்டார் சைக்கிளைத் தொட்ட குற்றத்துக்காக சென்னையில் ஒரு தலைமை ஆசிரியர் ஒரு மாணவனை மிருகத்தனமாகத் தாக்கி, அவன் குற்றுயிரும் குலை உயிருமாக இருக்கும் செய்தி பத்திரிகைகளில் பரபரப்பாக அடிபடுகிறது.

( ஜ.ப.ர. )

உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (5)

மே மாதம் 1992ல் உர்நோசுக்கு மேலும் மூன்று கொலைகளுக்காக மரண தண்டனை வழங்கப்பட்டது. ஜூன் மாதத்தில் இன்னுமொரு கொலைக்காக மேலும் ஒரு மரண தண்டனை அவளது பட்டியலில் சேர்ந்தது. நவம்பரில் மற்ற ஒரு கொலைக்காக இன்னுமொரு மரணதண்டனை.

( டி.எஸ். பத்மநாபன் )

Profile of Marilyn Monroe

"I knew I belonged to the public and to the world, not because I was talented or even beautiful, but because I had never belonged to anything or anyone else."

( Aarthi Shankar )

இராசி பலன்கள் ( 27.112006 முதல் 3.12.2006 வரை )

மிதுனம்:- மிதுன ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். இளையதளங்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினர்கள், கம்ப்யூட்டர் சாதன வியாபாரிகள் நற்பலனடைவார்கள். தடைப்பட்ட திருமண காரியங்கள் நிறைவேறும். பெண்களால் ஆதாயம் உண்டு. தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கலாம்.

( டாக்டர் ப. இசக்கி )

His Name is Siva Shankar..(223)

We are subject to various emotions and we have set notions about the capabilities of our parents and their worth and worthlessness. Unless a person is really spiritual and he is able to or willing to see parents as God and Goddess this question will remain always.

( N C Sangeethaa )

சகுனம்

நான் அதிர்ச்சி ஆனேன். நல்ல வேளையாக இது என் மனைவி காதிலோ மாமியார் காதிலோ விழவில்லை. என்னைப்போல அவர்கள் இதை சுலபமாக எடுத்துக் கொள்ளாமல் சண்டை போட்டு மண்டையை உடைத்து இன்றைக்கே இன்னொரு சாவு ஏற்படுமாறு செய்து விடுவார்கள்.

( வை.கோபாலகிருஷ்ண‎ன் )

பூஜாரியை விரட்டிய பேய்

இந்த கதையிலிருந்து என்ன புரிந்து கொண்டாய் சந்தர்?" " பேய் பூதமுன்னு ஒண்ணும் கிடையாது. மனபயத்தினாலும் மற்றவர்கள் அதை தூண்டி விடுவதாலும் மடத்தனமாக பயப்பட வேண்டியதாகி விடுகிறது."

( P. நடராஜ‎ன் )

இளநீர்

கோடையில் எம்மை, நாடுவோர் நீங்கள். எங்கள் சேவை ! என்றுமே தேவை !! தென்னம் பிள்ளையை நடுவீர் ! தெவிட்டாத இன்பம் பெறுவீர் !!
( கோ. சங்கர் )

நீ நான் தாமிரபரணி (46)

"உன் மகள் ஒரு விஞ்ஞானியான மாதிரி, என் வாரிசு இருந்ததுன்னா அதுவும் ஏதாவது உருப்படியா வந்திருக்கும்னு நினைக்கிறியா தாரா. அது ஒரு ரௌடியா, தாதாவாய் வந்திருக்கும். அதனால நான் கல்யாணம் செய்துக்காததில் நாட்டுக்கு நல்லது தான் நடந்திருக்கு"

( என்.கணேசன் )


A few products @ nilashop

Vibrant Veena - Audio CD (GSA 221)

Tamizh Maalai - Sudha Raghunathan

Inspire Your Child, Inspire the World - VCD (AMVC 6034)

Y.Gee. Mahendra's Thanthramukhi

No comments: