Tuesday, December 05, 2006

சாரல் 289

சாரல் : 289 பொழியும் நாள் : டிசம்பர் 4, 2006

ஹாரிஸ் ஜெயராஜுடன் ஓர் இனிய சந்திப்பு
இசையின் வெற்றி இயக்குனரைப் பொறுத்தே இருக்கிறது. நல்ல தரமான டேஸ்ட் உள்ள டைரக்டரால்தான் தரமான இசையுள்ள படங்களைக் கொடுக்க முடியும்- இசைஅமைப்பாளரால் நல்ல இசையைத்தான் தரமுடியும் . ஆனால் நல்ல படத்தைக் கொடுக்க முடியாது.
( ஜன்பத் )

ஹாப்பி க்ளப்
ஹாப்பி க்ளப்பில் சேர்ந்து மகிழ்ச்சியில் திளையுங்கள்!
( நிலா டீம் )

அரசியல் அலசல்

இந்த வாரம் இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுமாறு முக்கிய நீதிமன்ற தீர்ப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. ஜனநாயகத்தின் ஆணிவேர் நீதிமன்றங்கள். எங்கேயும் சரியான நீதி கிடைக்காத நேரத்தில் சாமன்யன் நீதிமன்றத்தின் வாயிலைத்தான் தட்டுகிறான்.

( ஜ.ப.ர. )


கொட்டும் கோடிகள்

கொடுக்கின்ற தெய்வம் எப்படியும் கொடுக்கலாம். உங்கள் வீட்டுக் கூரையைப் பிய்த்துக் கொண்டும், அதிர்ஷ்டம் கொட்டலாம். இந்தப் பெண்ணுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, 77 மில்லியன் பவுண்ட்ஸ் தொகை, இந்தப் பெண்ணின் வீட்டுக் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியிருக்கின்றது.

( ஏ.ஜே.ஞானேந்திரன் )


உலகை ஆளும் ரொபாட்!

இன்றைய உலகின் சூடான விவாதப் பொருள் ரொபாட் தான்! ரொபாட் என்ற வார்த்தை இன்று அனைவராலும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு வார்த்தையாக ஆகி விட்டது. இந்த வார்த்தை தோன்றியது எப்படி? இதை உருவாக்கியவர் யார்?

( ச.நாகராஜன் )


மகிழ்ச்சியைத் தேடி...

உன்னுடைய உழைப்பும் சொற்களும் உனக்கும் பிறர்க்கும் பயனுள்ளனவாயிருக்கையில் மகிழ்ச்சி வருகிறது. - Buddha

( ஆ.கி.ராஜகோபாலன் )


கவிதைப் பூக்கள்

இருக்கும் போது... வெத்தல பாக்குக்கு பத்து ரூவா கேட்டா பத்துத் தினுசா பாத்தீங்க பத்துத் தினுசா வஞ்சீங்க

( சரண் )


சித்தீஸ்வரர்கள்

சித்தர்கள் சிவபூஜையின் மேன்மையும் சிவமந்திரத்தையும் உணர்ந்து கடைப்பிடிப்பவர்கள். சிவதீஷையை உரியமானவர்களுக்கு வழங்கி சித்தநெறியும் சிவநெறியும் தழைத்தோங்க வகை செய்பவர்கள். சித்தர்கள் விஞ்ஞானிகளுக்கும் மேலான மெய் ஞானிகள்.

( E.S.ஏகாம்பர குருக்கள் )


காய்கறி புதினா துவையல்

செய்முறை: 1. காரட்டை நன்றாகக் கழுவி துண்டுகளாக்கி சற்று வேக வைத்துக் கொள்ளவும். 2. சிறிது எண்ணெயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சிகப்பு மிளகாயை சிவக்க வறுத்துக் கொள்ளவும்..

( பிரேமா சுரேந்திரநாத் )


நீ நான் தாமிரபரணி (47)

அம்பலவாணன் பெரும் வியப்புடன் அருணையும் தாமிராவையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் பல காலமாக பழகியவர்கள் போல பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் ஏதோ ஈர்ப்பு சக்தி இருந்தது போல் அவருக்குப் பட்டது.

( என்.கணேசன் )


சின்னச் சின்ன சினி நியூஸ்

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வருவதாக இருந்த சிவாஜி மீண்டும் ஒரு மாதம் தாமதமாக வருமாம். ஸ்பெயினில் படமாக்கப் பட்ட ஒரு பாடல் காட்சியில் ரஜனிக்கு ஏழு கெட் அப்.

( ஜன்பத் )


இரகசிய தீர்க்கதரிசி வைரமுத்து

தமிழிடம் எதை எதையெல்லாம் எதிர்பார்த்தாயோ அதையெல்லாம் தமிழ் இன்று உன்னிடமே எதிர்பார்த்து நிற்கிறது!

( சிலம்பூர் யுகா )


நள்ளிரவில் கற்ற தொழில் ரகசியம்

"சம்பளம்னு எதுவும் தனியாகக் கிடையாது, ஐயா! எங்களுக்குள் முதலாளி, தொழிலாளி என்ற வித்யாசமும் கிடையாது. முதல் போட்டவர் முதலாளி தான். அவரையும் சேர்த்து நாங்கள் மொத்தம் ஆறு பேர் தான் இந்தக் கடையை நிர்வகித்து நடத்தி வருகிறோம்.

( வை. கோபாலகிருஷ்ண‎ன் )


இராசி பலன்கள் ( 04.12.2006 முதல் 10.12.2006 வரை )

ரிஷபம்:- ரிஷப ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். வீடுகளைத் திருத்திக் கட்டத் திட்டம் போடுவீர்கள். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படலாம். வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். நீர்வளம், நிலவளத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள்.

( டாக்டர் ப. இசக்கி )


செய்திகள் அலசல்

ஐக்கிய நாடுகள் சபையின் 2006 ஆண்டிற்கான மனித வள மேம்பாடு அறிக்கை மனித வளர்சிக் குறியீட்டில் - 177 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அட்டவணையில் இந்தியா பரிதாபகரமாக 126வது இடத்தைப் பெற்றிருக்கிறது

( ஜ.ப.ர. )


உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (6)

ஊடகங்களும் மக்களும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கத் துவங்கினால் தங்கள் பதவியைப் பயன்படுத்திப் பல கொலைகளையும் குற்றங்களையும் மறைக்கும் பெரிய மனிதர்கள் அந்தப் போர்வையிலிருந்து வெளிப்படுவார்கள். நீதி நிச்சயம் வெல்லும் என்ற தெம்பையும் நம்பிக்கையையும் ஊட்டுகிறது.

( டி.எஸ் பத்மநாபன் )


நானென்றும் நீயென்றும் (43)

தன் கை அசைப்பால் அனைவரது ஓட்டத்தையும் நிறுத்திய அவினாஷ். குனிந்து அவள் மூச்சு விடுவதை சோதித்தான். அவளது வலப்பக்கத்திலிருந்து மூச்சுக் காற்று வரும் அசைவுகள் எதுவுமே புலப்படவில்லை. மெதுவாய் விலாப்புறத்தில் கை வைத்து சோதித்தான்.

( சுகந்தி )


His Name is Siva Shankar..(224)

We have learnt many things from you as a student in Ramarajya campus. But after we left the campus, we have learnt about the outside world, but miss all the serenity and beautiful atmosphere and surroundings. Now we want to know how to get God’s blessings and God’s grace from the one and only form, You, Baba.

( N C Sangeethaa )


அறியாமை

வேகமாக வந்தவனுக்கு பிரதான சாலையில் இருந்த பூங்கா தென்பட்டது. மண்டை குடையும் போதெல்லாம் தென் கோடி சிமெண்ட் பெஞ்ச்தான் அவனுக்குத் தஞ்சம் கொடுக்கும். அவன் அந்த நிலையில் வரும் பொழுதெல்லாம் சொல்லி வைத்தாற்போல் காலியாகவே கிடக்கும்.

( P. நடராஜ‎ன் )


காவிய நாயகன் நேதாஜி (27)

"தொண்டுபட்டு வாடும் என்றன் தூய பெருநாட்டில் கொண்டு விட்டு அங்கு எனைக் கொன்றாலும் இன்புறுவேன். எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையில் இட்டாலும் தத்துபுனல் பாஞ்சாலம் தனில் வைத்தால் வாடுகிலேன்."

( டி.எஸ்.வேங்கட ரமணி )


நாயகன் ஒரு நங்கை (19)

நிவேதாவின் வெற்றுக்கையைப் பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கும். தன் தங்கைக்கு மட்டும் மண் வளையல். அவள் அதைப்பற்றியெல்லாம் ஒரு நாளாவது என்னிடம் பேசவேண்டுமே, ஹும்...! அது தான் நிவேதா!

( நரேன் )


No comments: