Tuesday, December 19, 2006

சாரல் 291

சாரல் : 291 பொழிந்தது : டிசம்பர் 18, 2006

முல்லைப் பெரியாறு - ஓர் உரத்த சிந்தனை

முல்லைப் பெரியாறு தீப்பற்றி எரிகிறது. இந்தப் பிரச்சினையைப் பற்றிச் சற்று உரக்கச் சிந்திக்கலாமே? பென்னி க்விக் என்ற ஆங்கிலேய இஞ்சினீயர் நம் மக்களின் நலனுக்காக தம் மனைவியின் உடைமைகளையெல்லாம் விற்றுக் கட்டிய அணை இது.

( ஜ.ப.ர. )

ஜ.ப.ர.வின் செய்திகள் அலசல்

டிஸ்கவரி ஓடத்தில் வானில் பறந்து செல்லும்போது தன்னுடன் பகவத் கீதை புத்தகம், ஒரு பிள்ளையார் படம் மற்றும் சமோசாக்கள் எடுத்துச் சென்றிருக்கிறாராம் அமெரிக்க இந்தியரான சுனிதா வில்லியம்ஸ்..

( ஜ.ப.ர. )

விண்மீனுக்குப் பெயரிடுங்கள்

உங்கள் நண்பருக்கு 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'கருத்து கந்தசாமி, 'லார்டு லபக் தாஸ்' இப்படி ஏதாவது செல்லப் பெயர் வைத்திருப்பீர்கள்தானே! அசத்துங்கள் அந்தப் பெயரை ஒரு விண்மீனுக்கிட்டு.

( நிலா )

உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (8)

அவர்கள் உடனே அந்த உணவு விடுதியின் சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்தனர்.அப்போது அங்கே இருந்த 'தந்தூரி'ல் ( ஒரு வித மண் அடுப்பு) எதோ ஒன்று பெரிதாகக் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது ஒரு மனித உடல்.

( டி.எஸ் பத்மநாபன் )

"கவிதைகள் எழுத ஊடுருவிப் பார்க்கும் ஒரு மூன்றாவது பார்வை அவசியம்" - யுகபாரதி

திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களெழுதி வருகிறீர்கள். மெட்டுக்கேற்றவாறு பாடல்கள் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது உங்களுக்கு நெருடல் ஏற்படுமா?

( ஜம்புநாதன் )

ஜ.ப.ர.வின் அரசியல் அலசல்

கலாம் அவர்கள் தலைமை ஏற்றால் கோடிக்கணக்காண இளைஞர்கள் அவர் தடம் பற்றிக் கரம் கோர்த்து வரக் காத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் கைகளில் அடிமையாக உள்ள பாரதத்தின் தளைகளை விடுவிக்க இன்னொரு சுதந்திரம் தேவை.

( ஜ.ப.ர. )

சின்னச் சின்ன சினி செய்திகள்

பிரபுதேவாவின் டைரக்ஷனில் வளரும் போக்கிரி படத்தில் விஜய், நெப்போலியன் லடாய் முற்றிக் கொண்டே போகிறதாம். இதனால் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கிறாராம் அந்த ஆடல் டைரக்டர்.

( ஜன்பத் )

Rajasthan Chalo

The general impression about Rajasthan is that it is a desert state and quite unattractive for tourists. But the fact is that it is one of the most attractive tourist destinations. The State has no major rivers flowing through it and the rainfall is very scanty.

( T.S.Krishnamurthi )

நான் ரசித்த பாடல் (1)

கனக சுப்புரத்தினம் என்ற பாவேந்தர் பாரதிதாசன் தமிழின் பால் அருங்காதல் கொண்டவர் என்றால் சற்றும் மிகையில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் பல சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்ட அவர் ....

( பிரேமா சுரேந்திரநாத் )

நீ நான் தாமிரபரணி (49)

எதற்குமே அசராத ராஜராஜன் நிமிர்ந்து தன் மனைவியைப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஒரு கணம் எத்தனையோ உணர்ச்சிகள் தோன்றி மறைந்தன. மறுபடி அந்த சலனமே இல்லாத வெறுமை அவர் முகத்தை மூடியது. தனது அப்பாயின்மென்ட் புத்தகத்தை எடுத்தபடி "என்ன தேதி வருது?" என்றார்.

( என்.கணேசன் )

விடுதலை

உன்னை விடுதலை செய்யக்கோரி என் கனவுகளையும், காதலையும் பணயக்கைதியாய்ப் பிடித்து வைத்திருக்கும் காதலியே!

( சிலம்பூர் யுகா )

His Name is Siva Shankar..(226)

Prayer is a psychological self-introspection listing our problems and seeking God’s help to overcome them. When you have absolute faith that God knows your needs and grants them even before you are aware of your needs, there is no need to pray.

( N C Sangeethaa )

இறைவனைக் காண்போம்

ஆகமங்கள் எண்ணிலாதனவாகும். இவற்றைப் பெருமான் உமாதேவிக்கு உபதேசித்தார். இப்போதுள்ள ஆகமங்களின் எண்ணிக்கை இருபத்தெட்டாகும்.

( E.S. ஏகாம்பர குருக்கள் )

நானென்றும் நீயென்றும் (45)

மருந்து உள்ளே செல்லச் செல்ல அமைதியானாள் பூஜா. கட்டிலின் பாதுகாப்பிற்க்காக உயர்த்தி வைக்கப்பட்டிருந்த கம்பிச் சட்டத்தை இறக்கிய அவினாஷ் அப்படியே பூஜாவின் எதிர்த்தோளை அணைத்தபடி அவன் கன்னம் அவள் தலையில் அழுத்த தன் உடலை வளைத்து பூஜாவை ஓட்டிக் கொண்டு படுத்தான். மெல்ல அவன் உதடுகளை மென்மையாகப் பதித்தான்.

( சுகந்தி )

சந்தேகம்

விமானம் இந்திய மண்ணைத் தொட்டதும் தர்மராஜ் மனதில் ஒரு கிளர்ச்சி உண்டாயிற்று. சும்மாவா பின்னே, திருமணமானபின் வெளிநாடு சென்றவன் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மனைவி, அம்மா, அப்பாவை பார்க்கப் போகிறான்.

( லால்குடி வெ. நாராயணன் )

முதுமையில் தனிமை

என் கை தாங்கிய தாயின் கடைசித்துளிக் கண்ணீரில் உண்ர்ந்தேன் அவள் தனிமையின் வலியை...... நீ அங்கிருந்து வரும்போது எஞ்சியிருக்கும் என் சாம்பலில் ஏதேனும் உணர்வாயா?

( அறிவுச்செல்வி )

காவிய நாயகன் நேதாஜி (29)

நாடெங்கும் சுபாஷ் பற்றி பல வதந்திகள் பரவின. அவர் இறந்தே விட்டார்; அரசாங்கம் இந்தச் செய்தியை வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கிறது என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். வங்காளத்தில் பெரும் கொந்தளிப்பு. அரசாங்கம் நிலைமையைப் புரிந்துகொண்டு வளைந்து கொடுத்தது.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

நாயகன் ஒரு நங்கை (21)

"என் அக்கா கலியாணம் நல்லா தாம் தூம்னு நடக்கணும். அதுனால அத்திம்பேர், நீங்க அன்னிக்கு சொன்னதெல்லாம் செல்லாது. பெரிய மண்டபம். நமக்குத் தெரிஞ்ச அத்தனை பேரையும் இன்வைட் பண்ணணும். அந்தாளை ஒரே ஒரு தடவை பார்த்துருந்தாலும் சரி. கூப்பிடணும், என்ன ஓகேவா?"

( நரேன் )

மீனாக மாறியவன்

வருஷா வருஷம் ஊர்ப் பொதுவில், அந்த மீன்களுக்குக் குத்தகை விடுவார்கள். இந்தப் பிள்ளையார் மேடைப்பக்கம்தான் ஊர் கூடி ஏலம் நடக்கும். அநேகமாக அதுவும் ஒரு பெளர்ணமி ராத்திரியாகத்தான் இருக்கும். ஆடும் மாடும் மீன்களும் காற்றும் நடமாடித் திரியும் அந்தப் பிரதேசம் வெறிச்சிட்டு விடும்.

( எஸ். ஷங்கரநாராயணன் )

தற்காலிக தவம்

நான் பூத்த பூ தான் ஆனாலும் காத்திருக்கிறேன் குளிர்சாதனத்தில் வைத்த ஆப்பிள் போலவே!

( சிலம்பூர் யுகா )

பிஞ்சுக் கத்தரிக்காய் ரசம்

கத்தரிக்காய்களை நன்றாகக் கழுவிக்கொண்டு காம்பை வெட்டி விட்டு நான்காகப் பிளந்து கொண்டு அரைத்த விழுதை தேவைக்கேற்ப காய்களில் திணித்துக் கொண்டு ஒரு கடாயில் நெய் விட்டு காய்களை கடுகைத் தாளித்துக் கொண்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

( பிரேமா சுரேந்திரநாத் )

No comments: