Monday, December 25, 2006

சாரல் 292

சாரல் : 292 பொழிந்தது : டிசம்பர் 25, 2006

கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள்

இத்தாலியில் கிறிஸ்துமஸ் மரங்களுக்குப் பதிலாக மரப் பிரமிடுகளை பழங்களால் அலங்கரிக்கும் வழக்கமுள்ளது. நண்பர்களுக்குக் காயவைக்கப்பட்ட பருப்பு வகைகளை ஒரு பையில் போட்டுத் தருவதன் மூலம் எளிமையை நினைவுபடுத்துகிறார்கள்.

( நிலா )


ஜபரவின் அரசியல் அலசல்

பிரதமரே இந்த ஒப்பந்தத்தில் சில விஷயங்கள் கவலை தருகின்றன என்று சொல்கிறார். ஆனால் ஒப்பந்தத்தில் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும், அமெரிக்க ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருக்கிறார் என்று வாதாடுவது சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகிறது.

( ஜபர )


யானைக்கும்

ஹோவென்று கூட்டத்தில் இரைச்சல். யானையின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. "பாட்டியை நம்ம வீட்டுக்கே வரச் சொல்லுடா. இனிமே எங்கேயும் போக வேணாம்" என்றேன் பாபுவிடம்.

( ரிஷபன் )


முளையில் கருகும் மொட்டுக்களே

இன்று 191 நாடுகளில் தன் சேவையை விஸ்தரிக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள ஐ.நா. சபையின் குழந்தைகளுக்கான இந்தப் பிரிவு, 125 நாடுகளில் தன் பணிமனைகளையும் நிறுவியிருப்பது இமாலய சாதனைதான்.

( ஏ.ஜே.ஞானேந்திரன் )


பரிசு

ஜேன் கனமான இதயத்தோடு சற்று நேரம் அந்த சிறுவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தப் பிள்ளைக்கு இந்தப் பிஞ்சு வயதில் தாயே இல்லாமல் போகப் போகிறாள்; தங்கையின் மரணத்தைத் தாங்க வேண்டிய துர்பாக்கிய நிலை. இதைவிடத் தன் நிலை ஒன்றும் மோசமில்லை என்றே தோன்றியது.

( நிலா )


ஆறு நூறு கோடியில் ஒருத்தியம்மா நீ!

பிரச்சினைகளே இல்லாதவர்கள் உலகில் உண்டா? சிக்கலான இந்தக் கேள்விக்கு நார்மன் வின்செண்ட் பீல் ஒரு முறை பதில் அளித்தார். "அப்படிப் பிரச்சினையே இல்லாதவர்கள் ஏராளமானோரை எனக்குத் தெரியும்.

( ச.நாகராஜன் )


ஒரு வெள்ளாடு துள்ளுகிறது

நமது இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக முதல் டெஸ்டில் மகத்தான சாதனையைப் படைத்துள்ளது. இதைப் பாராட்டி ,'ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது' என்று தலைப்பு கொடுக்கத்தான் ஆசை

( டி.எஸ். பத்மநாபன் )


ஜ.ப.ர.வின் செய்திகள் அலசல்

சாந்தி தனது பதக்கத்தை இழந்தாலும் நமது முதல்வர் மனிதாபிமான அடிப்படையில் அவருக்குப் பதினைந்து லட்சம் பணமுடிப்புக் கொடுத்தது பாராட்டுதலுக்குரியது. தமிழக அரசின் இந்தச் செயல் புண்பட்ட அவரது மனதிற்கு மருந்தாக இருந்திருக்கும்.

( ஜ.ப.ர. )


மீனாக மாறியவன் (2)

மறுநாள் ஊரில் புதுப் பிரச்னை கிளம்பியது. ஊரணிக்கரை முழுக்க நாற்றம் சகிக்க முடியவில்லை. ஊரணியில் கூட்டங் கூட்டமாய் மீன்கள் செத்து மிதந்தன. ஊரணித் தண்ணியில் விஷம் கலந்திருப்பதைக் கண்டு பிடித்தார்கள். யார் இதைச் செய்திருப்பார்கள்?

( எஸ். ஷங்கரநாராயணன் )


ரெண்டு - திரை விமர்சனம்

சுந்தர்.சி - மாதவன் ரெண்டு பேர் இணைந்து வெளி வந்திருக்கும் படம் - தயாரிப்பாளர் குஷ்பூ. படம் சூப்பராகக் கலக்கப்போகிறது என ரெட்டிப்பு எதிர்பார்ப்புடன் சென்றவர்களுக்குக் கிடைத்திருப்பது ஏமாற்றம்தான்.

( ஜன்பத் )


ராசிப் பலன்கள் 25-12-2006 முதல் 31-12-2006 வரை

ரிஷபராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராத கடன் கொடுத்த பொருட்கள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். மனைவியால் தன வரவு உண்டு.

( டாக்டர்.ப.இசக்கி )


சின்னச் சின்ன சினி செய்திகள்

சூப்பர்ஸ்டார் ரஜினி 'சிவாஜி 'படத்திற்காக மொட்டை போட்டது தெரிந்த விஷயம். அந்த மொட்டைக் காட்சிதான் சிவாஜி படத்தின் உச்சக்கட்டமாம். இன்னும் சில முக்கியமான காட்சிகள் பங்களூரில் இந்த மாதத்தில் எடுக்கப்பட்டதும் அமெரிக்காவில் பத்துநாள் ஷூட்டிங்- பிறகு திரையிடத் தயார்.

( ஜன்பத் )


நண்பனுக்கு

என் மரத்துப்போன தழும்பொன்றில் அரூபமாய் ஒழுகும் மெல்லிய கவிதையாய் என் மௌன அழுகையின் துயர இசையாய்

( நட்சத்ரன் )


தொடருவோம தோழமையை

எதை எதையோ பிதற்றிய உன் கடிதத்தின் இறுதி வரி சொன்னது என்னை- நீ நேசிப்பதாய்!

( சிலம்பூர் யுகா )


நான் ரசித்த பாடல் (2)

''மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலைய்யா அய்யா மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் அய்யா உனது மனம் பெற மகிழ்ந்திடவே '

( பிரேமா சுரேந்திரநாத் )


காவிய நாயகன் நேதாஜி (30)

கல்கத்தா எர்ஸ்கின் ரோட்டில் இருந்த அவரது இல்லத்தில் இருந்தபடியே சுபாஷின் சிகிச்சை தொடர்ந்தது. நாட்டு மக்கள் அவர் உடல் நிலை பற்றிக் கலக்கமுற்றிருந்தார்கள். லயங்களில் விசேஷப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. அவர் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்று இறைவன் சித்தம் இருந்ததாலும், “காலா, என் காலருகே வாடா, உன்னை மிதிக்கிறேன்என்ற அவரது மன வலிமையாலும் சுபாஷ் பூரண குணம் அடைந்தார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


நீ நான் தாமிரபரணி (50)

"ஜோக் அடிக்காதே. எனக்கு வயித்தைக் கலக்குது" என்றாள் காவ்யா. ராஜராஜனின் கம்பீரமான தோற்றத்துக்கு அவரை அவளது வீட்டு, அந்தக் குறுகிய களையிழந்த அறையில் இருப்பதாக எண்ணிப்பார்க்கக் கூட அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

( என்.கணேசன் )


ானென்றும் நீயென்றும் (46)

பூஜா ஒரு அழகான நந்தவனத்தில் உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றிப் பல வண்ண ரோஜாக்கள் பூத்துக் குலுங்கின. அவள் யாருக்காகவோ காத்திருக்கிறாள். அவன் கண்டிப்பாய் வந்து விடுவான் அவளுக்குத் தெரியும்.

( சுகந்தி )


His Name is Siva Shankar..(227)

If you are mentally strong, nothing can disturb you; nothing can pollute you. If you have decided to be strong, if you have decided to be a good person, you can protect yourself.

( N C Sangeethaa )


நாயகன் ஒரு நங்கை (22)

ப்ளஸ் டூ ரிஸல்ட் அன்று காலையில். சாக்லேட் வாங்கிக் கொண்டு அவள் வீட்டிற்க்குப் போனேன். அதிர்ச்சியடைந்தேன். ஒரு ஓரத்தில் ப்ரியா முட்டி போட்டுக்கொண்டு, காலிடுக்கில் முகத்தை வைத்துக்கொண்டிருந்தாள். நிவேதா கடுப்பாக இருந்தது தெரிந்தது. அவள் அம்மாவோ புது டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தாள்.

( நரேன் )

No comments: