Monday, February 12, 2007

சாரல் 299

சாரல் : 299 பொழிந்தது : பிப்ரவரி 12, 2007

சினி வம்பு

போக்கிரி படம் பெற்ற வெற்றியில் பிரபுதேவா துள்ளிக் குதிக்கிறார். அவரது அடுத்த படம் 'சங்கர் தாதா ஜிந்தாபாத்'. இந்த தெலுங்குப் படத்தில் சிரஞ்சீவி தான் கதாநாயகன். அடுத்து பாலிவுட் பக்கமும் அடியெடுத்து வைக்கப்போகிறாராம் பிரபுதேவா!

( ஜன்பத் )

காஸ்மிக் கதிர்கள் அல்லது விண்கதிர்கள் (Cosmic Rays)

இந்தக் கதிர்களை எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளாவது கொண்டுவந்து, எதிர்கால ஆற்றல் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை இதுவரை அறிவியல் அறிஞர்களால் உருவாக்க இயலவில்லை. கட்டுப்பாட்டிற்குள் இக்கதிர்கள் கொண்டுவரப்பட்டால், மின் ஆற்றலுக்கும், எரிபொருளுக்கும் மாற்றாக அது அமையும் எனக் கருதப்படுகிறது.

( டாக்டர் இரா.விஜயராகவன் )

சின்னத்திரையைப் பார்க்க விடாதீர்கள்!

டெலிவிஷனில் 'ரேபிட் இமேஜ் சேஞ்ச்' எனப்படும் துரிதமாக சித்திரங்கள் மாறுபடுவது இந்த நிலையை மோசமாக்கும்! எதையும் ஒருமுகப்படுத்திப் பார்க்க முடியாத நிலை, அமைதியின்மை, எதற்கெடுத்தாலும் குழப்பமுறும் தன்மை ஆகியவை ஏற்பட்டு விடும். அமெரிக்காவில் ஒரு குழந்தை ஒரு ஆண்டில் சராசரியாக 900 மணி நேரம் பள்ளியிலும் 1023 மணி நேரம் டி.வி.பார்ப்பதிலும் தனது நேரத்தைச் செலவிடுகிறது.

( ச.நாகராஜன் )

காவிய நாயகன் நேதாஜி (37)

சுபாஷ் மனம் வெதும்பிப் பேசினார்: " காந்திஜியும் வைஸ்ராயும் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை ஏற்பதன் மூலம், காங்கிரஸ் எவ்வளவு தூரம் மிதவாதக் கட்சியாகி விட்டது என்பது தெளிவாகி விட்டது. இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலும் காந்திஜி தோல்வியைத் தழுவப்போகிறார் என்பது நிச்சயம்" என்று முழங்கினார் சுபாஷ்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

வெற்றிக்கான சிந்தனைகள் (2)

ரால்ப் வால்டோ எமர்ஸன் சொல்வதைக் கேளுங்கள்:
● அடிக்கடி சிரிப்பது, அதிகம் சிரிப்பது
● புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவது
● குழந்தைகளின் பாசத்தைப் பெறுவது
● நேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவது

( ஜபர )

ஜபரவின் அரசியல் அலசல்

விருதுநகரில் பா.ம.க. தலைவர் ஒரு பொதுக்கூடத்தை முடித்துக்கொண்டு முத்து நகர் விரைவு வண்டியில் ஏறுமுன் ரயில் கிளம்பிவிட்டது. அது எப்படி ஒரு மத்திய அமைச்சரின் தந்தை, கூட்டணிக் கட்சித் தலைவர் ஏறுமுன் ரயில் கிளம்பலாம்? தொண்டர்கள் ஆவேசத்துடன் சங்கிலியைப் பிடித்திழுக்க அபராதம் தண்டனை விதிக்கப்படுகிறது. தொண்டர்களுக்கல்ல. ரயிலைக் கிளப்பிய அதிகாரிகளுக்கு!

( ஜபர )

யாருக்கு மாப்பிள்ளை யாரோ!

திருமணம் என்பது ஒரு ஆண் ஒரு பெண்ணோடு இணைந்து வாழ்வது மட்டுல்ல. அதற்கும் மேலான ஒரு பந்தம். வெற்றிகரமான திருமணம் என்பது ஒரு சுவையான சமையல் குறிப்பு போன்றது. அது சுவையாக இருக்க வேண்டுமென்றால் அன்பு, பொறுப்புணர்ச்சி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், அக்கறை, ஒற்றுமை இவ்வளவும் சரியான விகிதத்தில் சேர்ந்திருத்தல் அவசியம்.

( டி.எஸ்.பத்மநாபன் )

பறவை

வானத்தையும் பூமியையும் வட்டமிட்டு இணைக்கும் இயற்கையின் மகுடம்... நினைவுகளில் மட்டும் நீந்திய மனிதனை, வானத்திலும் நீந்த வைத்த வழிகாட்டி...

( கு.ப. அசோகன் )

பாட்டியின் கதைகள் (31) - "வீரன்"

ஊர் திரும்பியதும் நடந்த விபரங்களை ஆசிரியர் தலைமை ஆசிரியருக்குச் சொன்னார். இருவரின் உயிரைக் காப்பாற்றிய சிவாவின் வீரச்செயலை விவரித்து அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தினார். குடியரசு தினத்தன்று சிவாவை அவன் பெற்றோர்களோடு டில்லிக்கு வரவழைத்தார்கள். ஜனாதிபதி அவனுக்கு வீரப்பதக்கம் கொடுத்து கௌரவப்படுத்தினார்.

( P. நடராஜ‎ன் )

நானென்றும் நீயென்றும் (53)

அடி பட்ட சிங்கமாய் வீட்டுக்குள் வளைய வந்தான் அவினாஷ். அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் வீட்டிலிருந்த ஒவ்வொருவரையும் ஒரு விதமாய் உலுக்கி இருந்ததால் அவனை அணுகிப் பேசவே அனைவரும் தயங்கினர். தங்கள் தங்கள் அறைக்குள்ளேயே இருந்தனர். வேரறுந்த கொடியாய்த் துவண்டு கிடந்தார் கமலா.

( சுகந்தி )

வண்ணக் கோலங்கள்

அழகான வண்ண வண்ணக் கோலங்கள்

( G.Divya praba )

His Name is Siva Shankar..(234)

Any spontaneous expression is love.
Any spontaneous expression is poetry.
Love can become poetry if it is spontaneous.

( N C Sangeethaa )

நீ நான் தாமிரபரணி (57)

"ஐயா, எனக்கு உங்க மாதிரி பெரியவங்க கிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாது. ஆனாலும் அடிமனசால உணர்றதை சொல்லாட்டா மனசுக்கு சாந்தி கிடைக்காது. அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்து அநாகரிகமாய் நடந்துகிட்டதுக்கு என்னை மன்னிக்கணும். எதையும் மனசுல வச்சுக்காம என் பொண்ணை ஏத்துகிட்ட உங்க மகனுக்கும், இந்த ஏழையோட குடிசைக்கு வந்து சம்பந்தம் பேசுன உங்களுக்கும் உங்க சம்சாரத்துக்கும் நான் ஏழு ஜென்மத்துக்கு செருப்பா இருந்தாலும் அது ஜாஸ்தியாகாது. ரொம்ப நன்றிங்க ஐயா...."

( என்.கணேசன் )

இராசி பலன்கள் 12-2-2007 முதல் 18-2-2007 வரை

கடகராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரக்கூடிய கிரகம் ஆகும்.குடுமபத்தில் அமைதி உண்டாகும். காய்கறி,உணவுப் பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள் லாபம் அடைவர். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவதற்காக பணத்தைச் செலவு செய்வீர்கள். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

( டாக்டர் ப. இசக்கி )

Beads Work II

Short Fringe
Step 1. : Thread a needle in the fabric.
Step 2. : Insert small glass beads in to the thread.
Step 3. : Finish it by adding a drop bead at the end.
Step 4. : Remember, the fringe should not be much longer or much Shorter.
(Maximum of 10 beads can be inserted to make short fringe).

( Abirami Michael )

மனு!

பெண்ணே! பார்த்துப் பார்த்து வீட்டைப் பராமரிக்கிறாய்.. ஏன்? எனது வார்த்தைகளைப் போட்டு உடைக்கிறாய்? ஒட்டடை படிந்து விடும் எனது கனவுக்குள் என்றாவது உன் பாதம் பதி!

( ராசி அழகப்ப‎ன் )

ஜ.ப.ர.வின் செய்திகள் அலசல்

தீர்ப்பு என்ன வந்தாலும் நடக்கப்போவது என்னவோ ஒன்றுதான்! மழை கொட்டோ கொட்டு என்று கொட்டினாலொழிய கர்நாடகம் தண்ணீர் தரப்போவதில்லை. ஆணையத்தின் தீர்ப்பு கோர்ட்டின் தீர்ப்பைப் போன்றது என்று சொல்கிறார்கள். இது எப்படி நடைமுறைக்கு வரப்போகிறது என்று காண ஒவ்வொரு விவசாயியும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
( ஜ.ப.ர. )

ரயில் சிநேகம்

"சார் வண்டியை கொஞ்சம் நிறுத்தணும்" என்று ரஞ்சன் கூற, "அட ஏன் சார் விளையாடறீங்க, ஏற்கனவே எங்களுக்கு ஆபிஸுக்கு டயமாயிடுச்சு" என்றனர் சிலர். "இல்ல சார் டிராக்கில் வெடி குண்டு இருக்கு. அதனால் அவசியம் நிறுத்த வேண்டும்" என்று ரஞ்சன் கூற சிலர் சிரித்தனர். "இல்லங்க வெடி குண்டு வச்சதே எங்க சகாதான், நான் தான் அதற்கு காரணகர்த்தா" என்று சீரியஸாகச் சொல்ல அனைவரும் கலவரமானார்கள்

( லால்குடி வெ.நாராயணன் )

அம்மா

உங்கப்பன் அவளைக் கல்யாணம் பண்ணதே அவ பாடறதைக் கேட்டுத்தான். எதிர் வீட்டுக்குத்தானே குடிவந்தா. தினசரி சாதகம் பண்ணுவா. யாரோ நல்லாப் பாடறாளே.. யாருன்னு விசாரின்னான். உங்கம்மாவைப் பார்த்ததும் அப்படியே மயங்கிட்டான்"

( ரிஷபன் )

பொறுமை

அருகில் அமர்ந்திருந்த ஆசாமி, கோபியிடம் "சார்....வாழ்க்கையில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும். இது போல பொது இடங்களில் புலம்புவது தவறு. மருத்துவமனைக்கு வந்தால், அவர்களின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, நாமும் நாகரீகமாக நடந்து கொள்ளணும்" என்று உபதேசம் செய்ததும் கோபியின் கோபம்கட்டுக்கடங்காமல் வெடித்தது.

( வை.கோபாலகிருஷ்ணன் )

No comments: