Wednesday, February 07, 2007

சாரல் 298

சாரல் : 298 பொழிந்தது : பிப்ரவரி 05, 2007

வெளிச்சமும் வேதனையும்

சுற்றுச்சூழல் சீர்கேட்டில், நிலம், நீர், காற்றுக்கு அடுத்தப்படியாக அதிகப்படியான வெளிச்சமும் சூழல் சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறது. அதீத வெளிச்சம் தாவர, விலங்கினங்களைப் பாதிப்பதோடல்லாமல் மனிதர்களையும் வெகுவாகப் பாதிக்கவல்லது.

( ராஜூ சரவணன் )


சினி வம்பு

தசாவதாரம் கதை தன்னுடையது என்று சொல்லி அந்தப் படத்தை வெளியிடுவதற்கு ஒருவர் கோர்ட்டில் தடை வாங்கியிருப்பது தெரிந்த விஷயம், ஆனாலும் தசாவதாரத்தின் படப்பிடிப்பு விடாமல் தொடர்ந்து நடக்கிறது. வெளிப்புறக் காட்சிகளின் படப் பிடிப்புக்களின் போது ரசிகர்களின் அன்புத் தொல்லையைத் தவிர்க்கக் கமல் ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார், தன் சம்பந்தப்பட்ட காட்சி முடிந்ததும் யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தை விட்டுக் கம்பி நீட்டிவிடுவாராம்.

( ஜன்பத் )


நீ நான் தாமிரபரணி (56)

சந்திரனுக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை. "ராஸ்கல்" என்று அவனை அடிக்கப் போன அவர் கையை காவ்யா பிடித்துக் கொண்டாள். "அவங்க வர்றப்ப இதல்லாம் வேண்டாம்". அமைதியாகச் சொன்னாலும் அவளுக்கு வயிற்றைக் கலக்கியது.

( என்.கணேசன் )


நானென்றும் நீயென்றும் (52)

கமலாவின் வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் ஒரு வினாடி நிலை குலைய வைத்தது. அவினாஷை இன்னொரு பெண் விரும்பினாளா? பூஜாவுக்கும் சாந்திக்கும் அது அதிர்ச்சியாய் இருந்தது. சந்தனாவிடம் அதற்குள் பெண் பேசிவிட்டாளா என்று அதிர்ந்து நின்றார் விஸ்வநாதன்.

( சுகந்தி )


காவிய நாயகன் நேதாஜி (36)

லூயி பிஷர் என்ற வரலாற்று ஆசிரியர் சொல்லுவார்: "1930க்குப் பிறகு, இந்தியர்கள், தங்களுக்கும் இந்த உலகத்துக்கும் தெரியாமலே, விடுதலை அடைந்து விட்டார்கள். அச்சம் என்ற உணர்வே அவர்களிடமிருந்து அடியோடு அகன்று விட்டது." இந்திய சுதந்திர வரலாற்றிலும், அதில் சுபாஷின் பஙகு பணியிலும் இனிமேல்தான் விறு விறுப்பான கட்டங்கள் வரப்போகின்றன. நாற்காலி நுனியில் அமர்ந்து காத்திருப்போம்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


செய்திகள் அலசல்

இந்திய அரசு கடந்த 1995 ஆண்டு முதல் சர்வதேச அளவில் காந்திஜியின் கொள்கைகளுக்காக சுயநலமின்றிப் பாடுபடுவர்களைத் தேர்வு செய்து காந்தி விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தென்னாப்ரிகாவைச் சேர்ந்த ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுடுவிற்கு காந்தி அமைதி விருதை வழங்கிப் பெருமை செய்திருக்கிறது.

( ... )


செவத்திமீன்

தத்தம் கணவன்மார்களை கடலுக்கு மீன்பிடிக்க அனுப்பிவிட்டு, அவர்களின் வருகைக்காக நெஞ்சில் ஏக்கங்களை சுமந்து கொண்டும் கண்களில் உயிரை ஏந்திக்கொண்டும், பசியால் அழும் கைக்குழந்தையின் வாயினை தங்கள் பசையற்ற மார்பகங்களில் திணித்துக் கொண்டும் காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான மீனவப் பெண்களில் இவளும் ஒருத்தி.

( திரு )


வெளிச்சம்

" பஜார்ல பெரிய கட்டிடம் விழுந்திருச்சாம். ஆளுங்க உள்ளே மாட்டிகிட்டாங்களாம்.." உண்மைதான். எட்டு மாடிக் கட்டிடம் விழுந்திருந்தது. அது எழுப்பிய தூசிப்புகையில் எதுவுமே புலப்படவில்லை. இடிபாடுகளில் சிக்கியவர்களின் ஓலம் மனதைப் பிசைந்தது. கணேசனும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய முனைந்தான்.

( ரிஷபன் )


Bead Works

"Beads are simple decorative pieces with a hole through the centre. They may be of any shape and size and can be made from a variety of materials such as metal, glass, plastic, fiber, nylon, shells, woods, seeds and even semi precious stones. Beads fascinate both the discernment and the elegance."

( Abirami Michael )


பாட்டியின் கதைகள் (30) - பறக்காவெட்டி

அடுத்த நாள் பரந்தாமனின் பெயர் ரேடியோ, தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் வந்தது. 'சதிக் கும்பலை சாகசத்தோடு முறியடித்த ஜேம்ஸ் பாண்ட்' என்று கொட்டை எழுத்துக்களில் படத்துடன் தலைப்புச் செய்தியாகப் போட்டு ஒரு பிரபல செய்தித்தாள் விவரம் தந்திருந்தது. ஒரே நாளில் மிகவும் பிரபலமாகி விட்டான்.

( P. நடராஜன் )


Pachaikili Muthucharam - Music Review

Music is usually of two types. Good music and good selling music. Goutham Menon and Harris Jeyaraj team usually come out with excellent results when it comes to hip hop songs and picturization. Pachaikili muthucharam has 5 songs, all having the potential to hit the charts for sure.

( Vignesh Ram )


His Name is Siva Shankar..(233)

Learn to understand people, learn to evaluate them. Learn to distinguish the good from the bad.

( N C Sangeethaa )


அதிகாலை

சில்லென்ற பனிபடர
தேகம்
நனையும் சுகத்தில்
காலை
விடிந்தால்
நாளெல்லாம்
நாட்டியப் புத்துயிர்!

தெருக்களில்

புழுதி பறக்க
சுகாதாரம்
குடியமறும் அழகில்
கண்கள்
இளமையாகின்றன..

( ராசி அழகப்பன )


PRE-DAWN WALK!

In retrospect, when I think of the most valuable gifts my father bestowed on me about fifty five years ago when I was hardly five years old, it was his injecting in me the habit of getting up early in the morning and taking a brisk walk for an hour irrespective of the season! Yes, by morning, I mean, any time before five o’clock! At that age and stage, how foolish I was to feel very bad about that sort of compulsion!

( N V Subbaraman )


டபுள்ஸ்

சரசாவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரும் போது தன் சின்னப் பெண் பாக்யாவை ஹால் பக்கம் வராமல் பார்த்துக்கணும் என்பதில் சுந்தரம் மிகவும் கவனமாக இருந்தார். ஆனால் அதை நேரிடையாக பாக்கியத்திடம் கூறினால் அவள் எதேனும் தப்பாக எடுத்துக் கொள்வாளோ என்ற பயமும் அவருக்கு இருந்தது.

( லால்குடி வெ. நாராயணன் )


நான் ரசித்த பாடல் (8)

மீராவின் பக்திப் பாடல்களுக்கென்றே இலக்கியத்தில் ஒரு தனியிடம் உண்டு. மீரா சந்தித்த இன்னல்கள் பல. கிருஷ்ணப்ரேமை என்ற படகின் துணையுடன் அவர் தன் ஆழ்ந்த உன்னதமான நம்பிக்கையின் துணையினாலேயே பெறற்கரிய பேற்றை அடைய முடிந்தது. கண் விழிகளை மூடி மனதை ஒருமுகப்படுத்தினால் நம்முள்ளும் இந்த இனிய குழலோசையைக் கேட்க இயலும்.

( பிரேமா சுரேந்திரநாத் )


Maniratnam

"I do not have enough words to explain the experience of working with someone like Mani" - Abishek Bachan

( Jamuna )


அரசியல் அலசல்

தங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது ஆளும் கட்சியின் சதி என்று சொல்வது எதிர்க்கட்சித் தலைவர்களின் வழக்கம். தே.மு.தி.. தலைவர் விஜய்காந்தும் தனது வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தபோது இதையேதான் சொன்னார். அப்போது மவுனமாக இருந்த ஜெயலலிதா இப்போது விஜய்காந்தின் மேலும் கலவரம் நடத்திய அவரது தொண்டர்கள் மீதும் கடுமையாக அர்ச்சித்திருக்கிறார்.

( ஜபர )


இறுக்கினால்... அவிழ்ந்து ள்ளும் முடிச்சுகள்!

என்ன தான் நீ ஓடி ஓடிப் போனாலும், நின்றுகொண்டேதான் இருக்கின்றன உன் சின்னச் சிரிப்பும், பெரிய புன்னகையும்!

( சிலம்பூர் யுகா )


இராசி பலன்கள் 05.01.2007 முதல் 11.02.2007 வரை

ரிஷப ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. கணவன் மனைவி உறவுகள் பலப்படும். புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள். எந்தக் காரியத்தையும் எச்சரிக்கயுடன் செயதல் நல்லது.

( டாக்டர் . இசக்கி )


Powered by FeedJumbler.

No comments: