Tuesday, February 20, 2007

சாரல் 300

சாரல் : 300 பொழிந்தது : பிப்ரவரி 19, 2007

இயக்குனர் சேரனுடன் ஒரு கலந்துரையாடல்

சினிமா இப்படிதான் இருக்க வேண்டும் என்று நாம் சொல்லவே கூடாது. என்னைப் பொறுத்த வரை மறு மலர்ச்சி என்பது என்ன, சினிமா மூலமாக நல்ல திரைப்படங்கள், சமூகம் சார்ந்த திரைப்படங்கள், கலல உணர்வுள்ள, ரியாலிடி உள்ள திரைப்படங்கள் - இதைத்தான் நாம் நினைக்கிறோம். இவை நம்முடைய ரசனை, நம்முடைய தாக்கம், நாம் சினிமாவை நேசிக்கிற விதம். நமக்கு இதுதான் நல்ல சினிமா.

( மதிமோகன் )

நீங்கள் முன்னேற ஏ.கே.47 மிரட்டல்தான் வேண்டுமா?

கொல்லப்படுவதற்கு இறுதி எச்சரிக்கை தரப்பட்டவுடன் டாம் தனது டயரியை எடுத்தார்; தனது கனவுத் தோட்டத்தை முழு விவரங்களுடன் வரைய ஆரம்பித்தார். ஏ.கே. 47 அவரது தலையை நோக்கிக் குறி பார்த்துக் கொண்டிருக்க அவரதுமனம் கனவு ப்ராஜக்டில் '·போகஸ்' ஆனது! நான்கு சுவர்களுக்கு நடுவில் அந்த வரைபடம் ஆரம்பமாகி முன்னேறிக் கொண்டே இருந்தது.

( ச.நாகராஜன் )

மனசே சுகமா? (1)

முதலில் தற்போதைய மனநிலையில் உங்களுடைய மகிழ்ச்சியின் அளவீடு என்ன என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள் (ஒன்றிலிருந்து பத்துக்குள்). இப்போது கண்களை மூடி உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தை நினைவு கூறுங்கள். அப்போது என்ன உடை அணிந்திருந்தீர்கள், உடனிருந்தவர்கள் யார், எங்கு நடந்தது, என்னவிதமான சூழல் இருந்தது, என்ன விதமான வெப்ப நிலை இருந்தது போன்ற நுணுக்கமான விபரங்களையும் கூட நினைவில் கொண்டுவாருங்கள்.

( நிலா )

சர்தார்ஜி பில்கேட்ஸுக்கு எழுதிய கடிதம்

இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

( ரிஷிகுமார் )

Prabhu Deva - Profile

Choreography is not just about speed, complex steps and raunchy gyrations. The choreographer has to capture the mood so that the right emotion comes across - Prabhu Deva
( PS )

மனவெளி

"நல்ல கற்பனைம்மா உங்களுக்கு. எனக்கு சாமி மேல நம்பிக்கை போயிடுச்சு... அவ்வளவுதான். வேறொண்ணுமில்லை. சரியா?" தாயை சமாதானம் செய்யும் நோக்கில் மென்மையாய்ச் சொன்னாள் சுவாதி. "என்னது, அவ்வளவுதானா? சாமி மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்றது உனக்கு சின்ன விஷயமா போச்சா? இதான் இப்ப ஃபேஷனா? இதைத்தான் அமெரிக்காவில கத்துக்கிட்டியா?" காந்தியின் முகமெல்லாம் ரத்தம் பாய்ந்து கோபத்தால் சூடேறிக்கொண்டே வந்தது.

( நிலா )

Bead Works- Part - III

Step 1. : Cut 250 cm of black nylon thread insert needle in one end and make a knot on other end. Step 2. : Thread one Red bead, three green beads, 25 copper beads, three green beads, one red bead then one large glass beads and repeat this sequence for 5 more times.Step 3. : Take another 250 cm of thread and pass the needle through first red bead and thread the same sequence as three green beads, 25 copper beads, three green beads now pass the needle through red bead, large glass bead and another red bead.

( Abirami Michael )

நான் ரசித்த பாடல் (9)

பசுமை சூழ்ந்த ஒரு குக்கிராமத்தில் வளர்ந்த கள்ளம் கபடமற்ற மனதின் அடி ஆழத்திலிருந்து ஊற்றாய் சுரக்கும் சின்ன சின்ன ஆசைகள் அழகாக வெளிப்படுகின்றன. இப்பாடல் எத்தனையோ நுணுக்கங்களை உள்ளடக்கிக் கொண்ட பொழுதும் மிகவும் எளிமையாக இனிமையாக அமைந்து அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்கிறது.

( பிரேமா சுரேந்திரநாத் )

நானென்றும் நீயென்றும் (54)

"தம்பி, உங்கள் கோபம் எனக்குப் புரியுது. விவாகரத்து விவாகரத்து அப்படின்னு வாய் நிறைய பேசினாலும் இந்த நிமிஷம் வரைக்கும் நீங்க பூஜாவின் கணவன் தான். பூஜா உங்கள் மனைவி தான். அது என்னைக்கும் மாறக்கூடாது. அது என்னுடைய விருப்பம். ஆனால் என் விருப்பப்படி எல்லாம் நடக்கும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அதனால் நான் கொஞ்சம் வெளிப்படையாப் பேசிடறேன். தயவு செய்து தப்பா நினைக்காதீங்க" என்றவர் மூச்சு விடாமல் தொடர்ந்தார்.

( சுகந்தி )

His Name is Siva Shankar..(235)

The right step in one's spiritual quest is to imbibe determination of mind. Have the firm conviction that 'nothing can happen without God's Will. He is our Eternal Escort.' Then you will fear nothing. Understand that God exists; only God exists. When you are really convinced about that, you will get over your fears.

( N C Sangeethaa )

நீ நான் தாமிரபரணி (58)

"24 மணி நேரமும் அந்த ஆளைக் கண்காணிச்சுட்டிருங்க. சந்தேகம் வராத மாதிரி இருக்கணும். நான் சொல்ற வரைக்கும் யாரும் அவனை நெருங்கக்கூடாது. பேசவும் வேண்டாம். ஆனா எந்தக் காரணத்தை வச்சும் உங்க கண்காணிப்புக்குத் தப்பிச்சு அந்த நாய் போயிடக்கூடாது. எத்தனை ஆளை வேணும்னாலும் இதுக்கு ஏற்பாடு பண்ணிக்க. புரிஞ்சுதா?"

( என்.கணேசன் )

Unnale Unnale – Music Review

"Unnaale Unnaale" songs have all the qualities to become heartthrob of youth and have already hit the charts. All the songs have strong flavour of fresh and funloving youthfulness.

( Vignesh Ram )

புது வண்டி புது வண்டி

தன்னுடைய புத்தம் புதிய வண்டியை சுத்தமாகக் கழுவித் துடைத்து இரண்டு ஊதுபத்திகள் ஏற்றி, மல்லிகை மணத்துடன் ஸ்ப்ரேயர் தெளித்து, டேஷ் போர்டில் இருந்த விநாயகருக்குப் பூ வைத்து சவாரிக்க ஏதும் அழைப்பு வராததால் அன்றைய செய்தித்தாளைப் புரட்டிய வண்ணம் அமர்ந்திருந்தான் ராமய்யா.

( வை.கோபாலகிருஷ்ணன் )

சாபமே விமோச்சனம்!

ஏதெ‌ன் தோட்டத்து
எடுத்தெறியப்பட்ட‌ விலாயெலும்பே‍
நீ ச‌பிக்கப்ப‌ட்டிருப்ப‌தும்
வ‌ர‌த்தால்....

உன்னால் தான்
இருளை உடுத்திய என்
ஏகாந்த ய‌தார்த்த‌ங்க‌ள்
நிர்வாண‌மாகும்...

( அல்மதீன் )

சுவையான ரசவகைகள்

கர்நாடக மாநிலத்தில் புளியை நீர்க்கக் கரைத்துக் கொண்டு அதில் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து ஒரு பச்சை மிளகாயை நசுக்கிச் சேர்த்து உப்பும், வெல்லமும் சேர்த்துக் கொதிக்க வைக்காமல் சாதத்தில் கலந்து உண்பார்கள். இதை அடுப்பில் வைக்காத காரணத்தினால் 'பச்சி சாரு' என்பார்கள்.

( பிரேமா சுரேந்திரநாத் )


இராசி பலன்கள் 19-2-2007 முதல் 25-2-2007 வரை

கன்னிராசி அன்பர்களே புதன் நன்மை தரக்கூடிய கிரகம் ஆகும். குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். கமிஜன், காண்டிராக்ட் தொழில் நன்றாக இருக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடும்.

( டாக்டர் ப. இசக்கி )

பேசிவிடு என்னோடு....

மொழியின் இனிமை
நீ பேசுகையில்தான்
புரிகிறது எனக்கு...........

இதழ்வழி பேசும்
வார்த்தைகளை விட
உன் விழிவழி கூறும்
கவிதைகள்
நன்றாய்ப் புரிகி‎ன்றன
எனக்கு...........

( கு.திவ்யபிரபா )

சினி வம்பு

ரஜினிகாந்திற்கு அடுத்தபடியாக ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருப்பவர் விஜய். அவரது 'போக்கிரி' படம் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வெளி நாடுகளிலும் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. லண்டனில் முதல் 20 படங்களின் வரிசையில் போக்கிரியும் இடம் பெற்றிருக்கிறது.

( ஜன்பத் )

காவிய நாயகன் நேதாஜி (38)

சுபாஷின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, காந்தி - இர்வின் ஒப்பந்தத்தை அங்கீகரித்தும், லண்டனில் நடக்க இருக்கும் வட்டமேஜை மகாநாட்டுக்கு காங்கிரஸின் பிரதிநிதியாக காந்திஜி கலந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தும் நேரு முன்மொழிந்த தீர்மானம் கராச்சி காங்கிரஸில் ஏற்றுக் கொள்ளப்பட்டது .மனமுடைந்து சுபாஷ் கல்கத்தா திரும்பினார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

பாட்டியின் கதைகள் (32) "நினைக்காதது"

படகு தள்ளும் பொழுது விரலில் இருந்த வைர மோதிரம் நழுவி ஏரிக்குள் விழுந்து தொலைந்து போனது. விலை உயர்ந்த மோதிரம் மட்டுமல்லாமல் திருமணத்திற்காகப் போட்டது. ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதனால் அந்தச் சம்பவம் அவருக்குக் கெட்ட சகுனமாகப் பட்டது. அதை அடிக்கடி நினைத்து மிகவும் கவலைப் படுவார். என்ன சமாதானம் சொல்லியும் வேதாசலத்தால் சமாதானப் படுத்த முடியவில்லை.
( P. நடராஜ‎ன் )

No comments: