Wednesday, February 28, 2007

சாரல் 301

சாரல் : 301 பொழிந்தது : பிப்ரவரி 26, 2007

அரசியல் அலசல்

பஸ் கொளுத்தப்பட்டு மாணவிகள் எரிந்து இறந்த இந்தச் சம்பவம் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் காலம் காலமாக ஈடுபடுகிற வன்முறைக் கலாச்சாரத்தின் விளைவுதான். இந்தத் தீர்ப்பு கொஞ்சமாவது ஒரு மனமாற்றத்தைக் கட்சிகளிடையே ஏற்படுத்த வேண்டுமென விரும்புவது காலிழந்தவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போலவோ?

( ஜ.ப.ர. )

ஜேம்ஸ்பாண்டின் பஞ்ச் டயலாக்ஸ்

இப்போது ஜேம்ஸ்பாண்ட் தமிழில் பேசுகிறார்!ஆம், படங்கள் டப்பிங் செய்யப்படுகின்றன! விஜய் சேனலில் பொங்கல் அன்று ஒளிபரப்பப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் படத்தைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் கூறுவது, பாண்ட், ஜேம்ஸ்பாண்ட், கலக்கறய்யா நீ கலக்கறே! இன்னும் தமிழில் ஜேம்ஸ்பாண்ட் கலக்குவாரோ?

( ச.நாகராஜன் )

தருமி 2007

காமெடி கலாட்டா செய்யும் தருமியும் சிவபெருமானும். 2007 இன் லேட்டஸ்ட் திருவிளையாடல்: தருமி தனிமையில் புலம்புகிறான். "ஐய்யோ ஆயிரம் டாலராச்சே. ஆயிரம் டாலராச்சே. எனக்கு மட்டும் அந்தப் பரிசு கிடைச்சிட்டா முதல்ல பையன் இஞ்சினீரிங் காலேஜ் ·பீஸ் கட்டிடுவேன். அப்பறம் மிச்சம் இருக்கிற பணத்தில... கிரெடிட் கார்டு ட்யூஸ் கட்டிடலாம். ஐய்யோ... அடுத்தவன் எவனாது இதை கேட்டு நோட்டு போடறதுக்கு முன்னாடி நான் போடனுமே...

( எம்.ஆர்.நடராஜன் )

மன இறுக்கத்தைத் தளர்த்த பத்து எளிய வழிகள்

வெற்றிக்குத் தடைக்கல்லாக இருக்கும் மன இறுக்கத்தை விரட்டி அடியுங்கள், பத்து எளிய வழிகள் மூலம். தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும்.

( ரிஷிகுமார் )

கவிதைகள்

ஈராக் மண்ணின் ஈனக்குழந்தை
ஈர விழிகளில் கேட்கிறது...
"மறுபிறப்பென்பதென் மதத்தில் இல்லை...
இந்திய மதங்களில்
சாத்தியம் உண்டெனில்
பிறந்திடச் செய்யுங்கள்...
இன்னொரு காந்தியை...!"

( நானா )

செய்திகள் அலசல்

ஜப்பானில் விநாயகர், சரஸ்வதி, ஜப்பானிய நாட்டுப்புற நடனத்தில் ராமாயணம்: ஜப்பானில் பல இந்து ஆலயங்கள் இருக்கின்றன, பண்டைக்காலத்தில் ஜப்பானில் சரஸ்தி தேவியையும் வினாயகரையும் வீரர்கள் வணங்கியதாகவும் கூறிய அவர், புகாக்கு, கிகாக்கு என்ற ஜப்பானிய நாட்டுப்புற நடனங்களில் ராமாயணக் காவியத்தின், கதையம்சம் இருக்கிறதெனவும் கூறினார்.

( ஜ.ப.ர. )

தன்வினை

கடைகளை அடித்து நொறுக்குவதும் வாகனங்களுக்குத் தீ வைப்பதுமாக சாதாரண மக்களை பீதி கொண்டு ஓட வைத்தனர். கலவரம் பரவிக் கொண்டிருந்தபோது வேலுவாலும் சும்மா இருக்க முடியவில்லை. கைபேசியில் தகவல் வந்து விட்டது.

( ரிஷபன் )

"மாற்றம் என்பது ஒரே ஒரு சினிமாக்காரனால் ஏற்படாது" - இயக்குநர் சேரன் (பாகம்-2)

போட்டிக்குத் தகுதியுள்ள படத்தைத் தேர்ந்தெடுப்பது 15 பேர் கொண்ட கமிட்டி. தவமாய்த் தவமிருந்து கூட நல்ல படம்தான், அந்த படத்தை ஏன் போட்டிக்கு செலக்ட் செய்யவில்லை என்று யாரிடமும் கேள்வி கேட்க முடியவில்லை. ரிலீஸ் ஆகிவிட்ட படங்களைப் போட்டியில் சேர்த்துக் கொள்வதில்லை என்கிறார்கள். ஏன் என்று புரியவில்லை.
( மதிமோகன் )

காவிய நாயகன் நேதாஜி (39)

அபூர்வமாக ஒரு விஷயத்தில் காந்திஜிக்கும், சுபாஷுக்கும் கருத்தொருமை ஏற்பட்டது. பிரீட்டன் வகுத்த சமஷ்டி அரசியல் திட்டம் என்ற திட்டத்தின்படி உண்மையான சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைக்காது என்று இருவரும் ஒருமித்துக் கருதினார்கள். இந்த அரசியல் திட்டத்தை ஏற்கக் கூடாது என்பதிலும், காங்கிரஸ்காரர்கள், சட்ட மன்றத் தேர்தலுக்கு நின்று, மந்திரி பதவி ஏற்கக் கூடாது என்றும் இருவரும் தீவிரக் கருத்துக் கொண்டிருந்தார்கள்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

மனசே சுகமா? (2)

கோபப்பட்டா வாழ்க்கையில சாதிக்க முடியுமாங்க? கோபத்தைக் குறைக்க ஓர் எளிய பயிற்சி.: நீங்கள் யார் மேல் அதிக காட்டமாக இருக்கிறீர்களோ, அவர்களை நினைவில் கொண்டு வாருங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு எந்த அளவு கோபம் இருக்கிறதென 0-10 அளவுகோலில் குறித்துக் கொள்ளுங்கள்.

( நிலா )

அழகழகாய்க் கேள்விகள்

"அழகாய் இருக்கிறாய்... மகிழ்ச்சியாய் இருக்கிறது" மேனியழகு மிளிர நிபுணரின் ஆலோசனைகள்: நீங்கள் எந்த வேலை செய்யும் போதும், கண்னை அடிக்கடி சிமிட்ட வேண்டும். 10 நிமிடத்திற்கு ஒரு தடவையாவுது தொலைதூரப் பார்வை பார்ப்பது நல்லது.

( நிலாரசிகை )

His Name is Siva Shankar..(236)

There is no need to carry a feeling of self-pity or guilt at whatever happens in life. Proceed to the next step, knowing that you have grown as a person. But ensure you do not repeat the same mistakes; there is something definitely wrong in repeating the same mistakes.

( N C Sangeethaa )

தாலாட்டு

பூவெடுத்து மேனிசெதுக்கி
விழியில் கவியெழுதி
விரலில் ஒவியமெழுதி
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாய்
வளரணும் வளரணுமே!
ஆராரரோ! ஆரிராரோ!

( கவிதா )

கண் எதிரே கார் கடத்தல்

அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுக்கலாமா என்று யோசித்தேன். தாமதம் செய்யச் செய்ய வண்டி வெளியூருக்கு எங்காவது கடத்தப்படக் கூடும். நம்பர் ப்ளேட் கழட்டப்படக் கூடும். அக்கக்காக அனைத்து பாகங்களும் பிரித்துப் போடப்பட்டு உதிரி பாகங்களாகவே விற்பனை செய்துவிடப் படக்கூடும். முடிவாக என் கைவசம் இருந்த டீ.வி.எஸ் 50யிலேயே, கடத்தப்படும் என்னுடைய காரைத் துரத்தினேன்.

( வை.கோபாலகிருஷ்‎ண‎ன் )

எழுச்சி

நீ நூலகங்களில் சரித்திர புத்தகங்களைத்தான் விரும்பிப் படிப்பாய். புரட்சிகளை ஏற்படுத்தி சமுதாயத்தைப் புரட்டிப்போட்ட தலைவர்களைப் பற்றி உணர்ச்சி வசப்பட்டு பேசுவாய். அந்த ஆர்வம்தான் சயன்ஸ்சிலும் கணக்கிலும் உன் மார்க்கையே குறைத்து விட்டது. இந்த இடத்தில் இன்னொன்றையும் நினைவு படுத்தட்டுமா?

( P.நடராஜன் )

நீ நான் தாமிரபரணி (59)

அம்பலவாணன் தொடர்ந்து சொன்னார். "....அவங்க உன்னைப் பார்த்த விதம் துப்பறியக் கிளம்பிய பத்திரிக்கைக்காரன் எப்படி இருப்பான்னு தெரிஞ்சுக்கற ஆர்வம் மாதிரி இல்லை. நிறைய காலம் கழிச்சு தன் குழந்தையைப் பார்க்கிற தாயின் பார்வையை அதில் பார்த்தேன். அப்போதே எனக்கு நீ அவங்களோட ஏதோ விதத்தில் சம்பந்தப்படற மாதிரி உறுதியாய்த் தோணிச்சு. எந்த விதத்தில்னு அப்பவும் சரி இப்பவும் சரி என்னால் யூகிக்க முடியலை.

( என்.கணேசன் )

இராசி பலன்கள் 26-2-2007 முதல 04-3-2007 வரை

ரிஷபராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு, ராணுவம், போலீஸ் துறை சார்ந்தவர்கள், இனையதளத்தவர்கள் நற்பலன் அடைவார்கள். உடம்பில் நரம்பு, வாயு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். தீர்த்தயாத்திரை சென்று வருவீர்கள். சில வீடு மாற்றம் உண்டாகக் கூடிய காலமாகும். கமிஷன் தொழில் செய்வோர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.

( டாக்டர் ப. இசக்கி )

நான் ரசித்த பாடல் (10)

பாபனாசம் சிவன் முதலில் இசையமைப்பாளரான பின்னர் தான் திரைப்படங்களில் இசையமைப்பாளருக்கு உரிய சிறப்பான அங்கீகாரம் கிடைத்தது. அதன் பின்னரே பல பின்னணித் திரையிசைப் பாடகர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் அற்புதமான பாடல்களைப் பாடி என் மனதில் என்றும் நினைவில் நிற்கும் எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்களின் பாடல்களின் நினைவுகளை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

( பிரேமா சுரேந்திரநாத் )

நானென்றும் நீயென்றும் (55)

ட்ராவிசைப் போல் ஆட்களிடம் மாட்டிக் கொண்டு கொடுமைக்குள்ளான பெண்களுக்கு உதவி செய்யும் நிறுவனத்தின் கல்லூரிப் பிரதிநிதியையும் சந்திக்கக அவர் உதவி செய்வார். உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் செய்யத் தயாராய் இருக்கிறோம். உன் கல்வி தடைபடாமல் நல்ல மதிப்பெண்களை எடுக்கப்பார். உடனடியாக நீ உன் வகுப்புகளுக்குச் செல்லப் பார்" என்று அவர் அறிவுரை சொல்ல பூஜாவிற்குத் தெம்பு வந்தது.

( சுகந்தி )

சில சமயம்

ரகசியமாய்க் கனவை
அடைகாத்து வைத்து
குஞ்சு பொறிப்பது போல்
சில துளி நிகழ்வுகள்..

தங்காது எனத் தெரிந்தும்
தென்றலை சுகிக்கும் மனம்.

( ராசி அழகப்ப‎ன் )

No comments: