Wednesday, March 14, 2007

சாரல் 303

சாரல் : 303 பொழிந்தது : மார்ச் 12, 2007

ஜோதிடம் கேளுங்கள்

நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவரை நான் திருமணம் செய்துகொள்வேனா? எனக்கு நல்ல பதில் தாருங்கள். எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?. எனது தெய்வம் என்ன? மறுபிறவி ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

( குருஜி கார்த்திகா சித்தார்த் )

அன்றாடக் கவலைகளைத் தூளாக்கி ஆன்மீக சிகரத்தில் ஏற்றும் பாரத ஸாவித்ரியும் அரவிந்த ஸாவித்ரியும்

பாரத ஸாவித்ரீ எனப்படும் இந்த நான்கு சுலோகங்கள் சுவர்க்காரோஹண பர்வத்தில் ஐந்தாவது அத்தியாயத்தில் வருகின்றன. ஸவித்ரு தேவதையைக் குறிக்கும் ஸாவித்ரியை தினசரி சந்தியாவந்தனத்தில் துதிப்பது மரபு.அந்த ஸாவித்ரியை தினமும் துதிப்பது போல இந்த பாரத ஸாவித்ரியையும் தினமும் காலையில் எவன் படிக்கிறானோ அவன் மகாபாரதம் முழுவதும் படித்த பயனை அடைவதோடு பரப்ரஹ்மத்தையும் அடைவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. (இமாம் பாரத ஸாவித்ரீம் ப்ராதருத்தாய யஹ படேத், ஆஸ பாரத பலம் ப்ராப்ய பரம் ப்ரஹ்மாதி கச்சதி)

( ச.நாகராஜன் )

அரசியல் அலசல்

உச்ச நீதி மன்றத்தின் நீதிபதி தனது உரை ஒன்றில் இங்கு அங்கு எனாதபடி பரவி இருக்கும் லஞ்சத்தைப் பற்றிக் கவலை தெரிவித்து அதை ஒழிப்பதற்கு லஞ்சக் குற்றம் புரிந்தவர்களை, சட்டம் அனுமதிக்காவிட்டால் கூட விளக்குக் கம்பத்தில் தூக்கிலிட வேண்டுமெனக் கூறியிருக்கிறார். நாட்டில் உள்ள விளக்குக் கம்பங்கள் போதுமா என்று கவலை தெரிவிக்கிறார் பாமரன். அப்படித் தொங்கவிட்டால் நமது அரசியல்வாதிகளுக்குப் பஞ்சம் எற்பட்டு விடுமே என்பது இன்னொரு கவலை.

( ஜ.ப.ர. )

மனசே சுகமா? (4)

குழந்தையாக இருக்கும்போது எல்லாரும் ஒரே போல்தானே இருக்கிறோம் - பசியென்றால் வெட்கப்படாமல் அழுது தேவையானதைப் பெறுகிறோம்; பொம்மையைப் பார்த்தால் மெய்மறந்து சிரிக்கிறோம். வாழ்க்கையில் சோகமென்று ஒன்றுமில்லை. ஆனால் வளர வளர அடுத்தவர்களின் கருத்துக்கள் நமக்குள் புகுந்து தேவையில்லாத தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்திவிடுகின்றன.

( நிலா )

உலகக்கோப்பை 2007

இங்கிலாந்து இந்தியாவுக்கிடையே நடந்த போட்டிதான் முதல் உலககோப்பைப் பந்தயம். இங்கிலாந்து முதலில் விளையாடி அறுபது ஓவர்களில் 332 ரன்களைக் குவித்தது. இந்தியாவோ என்ன செய்வது, எப்படி விளையாடுவது என்று புரியாமல் தட்டுத் தடுமாறியது. இறுதியாக 60 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களே எடுத்தது. இந்தப் போட்டியில் தான் கவாஸ்கர் தொடக்க ஆட்டக்காரராகக் களத்தில் இறங்கி 60 ஒவர்களும் ஆடி அவுட்டாகாமல் 36 ரன்கள் எடுத்த பரிதாபம் நிகழ்ந்தது.

( டி.எஸ்.பத்மநாபன் )

செய்திகள் அலசல்

அமெரிக்காவின் நெவேடா மாநிலத்தின் சட்டசபைப் பேரவை (1864க்குப் பின்) 143 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக அதன் துவக்க நாளில் ஒரு இந்திய (இந்து) பிரார்த்தனையுடன் துவங்க இருக்கிறது. ரிக் வேதத்திலிருந்து ஒரு சுலோகத்துடன் இந்தப் பிரார்த்தனையைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். நம்மவர்களுக்குப் புரிந்தால் சரி.

( ஜ.ப.ர. )

His Name is Siva Shankar..(238)

Love is a living energy, a live vibration. What you expect from others, is very much within you. When you express your love, the recipient will be motivated to reciprocate, It is a mirror image concept, but it must be a genuine and sincere expression of what you feel.

( N C Sangeethaa )

வலைத் தளம்

நுனி நாக்கு மொழியில்
யதார்த்தம்
அன்னியப்பட்டு
மௌனம் காக்கிறது.

தகவல் பரிமாற்றம்
வரப்புகளின் நுனிப்புல் சுகத்தை
ஸ்கேன் செய்து விற்கிறது.

( ராசி அழகப்பன் )

நீ நான் தாமிரபரணி (61)

"அந்த லாஜிக் சரியாய் இருந்தால், அந்த விஞ்ஞானி கதைப்படியே செத்திருக்கணும் அருண். ஏன்னா என் மாமா அவரோட தங்கையோட சந்தோஷத்துக்காக எதையும் செய்யக் கூடிய ஆள். அவரால் தன் தங்கைக்கு அந்த விஞ்ஞானியைக் கல்யாணம் செய்து கொடுக்க முடியாமல் போகணும்னா அந்த மனிதர் செத்துப் போயிருந்திருக்கணும். வேற எந்தக் காரணமும் என் மாமாவைப் பின் வாங்க வச்சிருக்க முடியாது"

( என்.கணேசன் )

காவிய நாயகன் நேதாஜி (41)

ஜனவரி 28 ஹரிஜன் இதழில் "உள்ளூரச் சீரழிவு" என்ற தலைப்பில் காந்திஜி எழுதியதன் சாராம்சம்: "காங்கிரஸ்காரர்களிடையே ஊழல் மலிந்து விட்டது. ஆள் மாறாட்டம், போலி உறுப்பினர் சேர்க்கை இவை ஏகப்பட்ட அளவில் பெருகியுள்ளன. தேர்தல்களில், சச்சரவுகள் மிகுந்து விட்டன. காங்கிரஸ்காரர்களிடையே ஒழுங்கீனம் அதிகம் ஆகிவிட்டது. இந்தச் சீரழிவைத் தடுத்து நிறுத்துவதே நம் முன்னுள்ள முக்கிய கடமை.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

சாதுர்யம்

"பறவைகளாகிய நீங்களும் மிருகங்களாகிய நாங்களும் இப்பொழுது நண்பர்கள் ஆகி விட்டோம். அதனால், இப்போது நாங்கள் சைவமாகி மாமிசம் சாப்பிடுவதையே விட்டு விட்டோம். கீழே இறங்கி வாங்க விளையாடலாம். அந்த புதருக்குப் பக்கத்தில் ஓடிப் பிடித்து ஒளிந்து விளையாட நிறைய இடம் இருக்கு." நரியின் பேச்சைக் கேட்ட குஞ்சுகள் தங்களுக்குள் பேசிக் கொண்டன. அவைகளுக்கும் விளையாட ஆசைதான். திரும்பி வரும் வரை எங்கும் போகக் கூடாது என்று அம்மா சொல்லி இருந்ததால் கீழே வர தயக்கம் காட்டின

( P.நடராஜ‎ன் )

சினி வம்பு

செல்வராகவன் தயாரித்து ஜவஹர் டைரக்ட் செய்யும் படத்தில் தனுஷ் நயன்தாராதான் நாயகியாக நடிக்க வேண்டும் என்று சொல்கிறாராம். பகைவனுக்குப் பகைவன் நண்பன் என்ற விதிதான். சிம்பு வந்த வம்பை விடுவாரா? தன்னுடைய படத்தில் தனுஷுக்கு எதிரான பஞ்ச் வசனங்களை வைத்திருக்கிறாராம்.

( ஜன்பத் )

Mozhi – Music Review

Melody lovers can give a standing ovation to Vidyasagar for this musical treat, which is soothing to listen. Hats off to Radhamohan-Prakashraj-vairamuthu team, whose hard work and involvement is obvious in each and every song.

( Vignesh Ram )

இராசி பலன்கள் 12-3-2007 முதல் 18-3-2007 வரை

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். செய்யாத குற்றங்களுக்காகப் பழிச்சொல் ஏற்படலாம். எனவே புதிய நண்பர்கள் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களும், பரிசும், பாராட்டுதல்களும் பெறுவார்கள். அழகுசாதனப் பொருட்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், பொதுநலத் தொண்டு நிறுவனத்தார்கள் நற்பலனடைவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தூரத்து நற்செய்திகள் கேட்பீர்கள். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தனவரவு உண்டாகலாம். காதல் விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.

( டாக்டர் ப. இசக்கி )

பறக்கும் தட்டுகளும் பிறக்கும் கேள்விகளும் (2)

ஒரு தட்டைத் தண்ணீரில் வேகமாகவிட்டால் அது எப்படித் தாவித்தாவி விரைந்து செல்லுமோ அதுபோலிருந்தது தான் பார்த்த தட்டுபோன்ற அந்த பொருட்களின் பயணம் எனச் சொல்கிறார். இவர் கூறியவை ஊடகங்களில் பெரும் செய்தியாயின. மக்களிடையே இது பற்றிப் பரபரப்பாகப் பேசப்பட்டது. தான் பார்த்த பொருட்கள் ஒரு தட்டைப் போல் இருந்தன- பிறைநிலவுபோல் இருந்தன என்றெல்லாம் விவரித்தார் ஆர்னால்ட்.

( டி.எஸ்.பத்மநாபன் )

VANNA KOLANGAL

வண்ணக்கோலங்கள்

( G.Divya praba )

அஸ்தமனம்

ஓயாமல் பேசிய வாய்தான்... இன்று ஒரு் வார்த்தை பேச ஒன்பது நிமிடங்கள் எடுத்துக் கொள்வதும் எதுவும் தெளிவாய்த் தெரிவதில்லை மரணம் உட்பட...

( சரண் )

ரூபாவை நாய் கடிச்சிருச்சி...

"டேய், சாயங்காலம் உங்க டிஸ்பென்சரிக்கு வரேன்னு சொன்னேன்ல... ரூபாவ நம்ம நாய் கடிச்சிடுச்சு. அதனால உங்க டிஸ்பென்சரிக்கு அருகில் உள்ள பேங்கிற்கு போயிட்டு உடனே உன்ன பாக்க வரேன்"னு செல்போனில் மாமா சொல்ல எனக்கு மிகவும் பதட்டமாகிவிட்டது. நல்லவேளை டாக்டர் இருக்கிறாரே எனற தெம்பில் "உடனே ரூபாவ கூட்டிக்கிட்டு வந்துடுங்க மாமா" என்றேன் கம்பவுண்டரான நான்.

( லால்குடி வெ. நாராயணன் )

ஒளிமயமான எதிர்காலம்

என்னிடம் காலையில் வாங்கிச் செல்லும் பணத்தையும் திரும்பக் கொடுப்பதுடன், தன் இலாபத்தில் கால் பகுதிக்கு குறையாமல் மாலையில் ஒழுங்காகச் செலுத்தி வந்தான். எங்கள் இருவர் வாழ்வும் இதனால் வளம் பெறத் தொடங்கியது. இன்று நானும் அவனும் தொழிலில் பங்குதாரர்கள் ஆகி விட்டோம். எங்கள் பெயரில், எங்களின் முதலீட்டில், அவன் தொடங்கவிருக்கும் நிரந்தர மளிகைக் கடையின், திறப்புவிழா இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது.

( வை.கோபாலகிருஷ்ணன் )

நானென்றும் நீயென்றும் (57)

திடீரென்று அவினாஷ் மேல் வந்த பிரியம் ஒரு கானல் நீரோடை இல்லை. இது நிஜம். இப்போது அவள் மனம் எப்படி வலிக்கிறதோ அதே போல அவள் அன்பும் நிஜம். அவினாஷிற்குத் தான் செய்த துரோகத்தை நினைத்து மறுகும் ஒவ்வோரு வினாடியும் அவன் மேல் கொஞ்சம் கொஞ்சமாக அன்பும் நாட்டமும் வளர்ந்திருக்கின்றன. அவன் காதலோடு அணுகிய ஒவ்வோரு சந்தர்ப்பத்தையும் நினைத்து நினைத்து மனம் ஏங்கியது. ஒன்றா, இரண்டா? எத்தனை முறை இவள் முட்டாள்தனமாய்த் தவறு செய்திருக்கிறாள்.

( சுகந்தி )

No comments: