Tuesday, March 27, 2007

சாரல் 305

சாரல் : 305 பொழிந்தது : மார்ச் 26, 2007

உலகக்கோப்பை 2007 "சாதனைகள் வேதனைகள்"

இந்திய அணியினர் வங்க தேசத்திடம் தோல்வியடைந்தது. 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?' என்பது போல் அலட்சியப்போக்குக் காட்டியதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். வங்க தேசத்தைப் பற்றித் தப்புக்கணக்குப் போட முடியாது. அதனால்தான் இந்த வங்க தேசம் இடம் பெற்றுள்ள அணியை Death trap என்பார்கள். எதிர்பாராத சந்தர்ப்பங்களில் எதிர் அணியை வீழ்த்திவிடும். ஆனாலும் டாசை வென்ற பிறகு பீல்டிங் செய்வதற்குப் பதிலாக பேட்டிங் தேர்ந்தெடுத்ததுதான் தோல்விக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

( டி.எஸ்.பத்மநாபன் )

காவிய நாயகன் நேதாஜி (43)

காங்கிரஸ் தலைவர்களின் தனிப் பெரும் தலைவராக மதிக்கப்பட்ட காந்திஜியின் விருப்பத்தையும் மீறித் தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் ஓர் அறிக்கை விடுத்தார். அதில் அவர், தேர்தலோடு கருத்து வேற்றுமைகள் அனைத்தும் புதைக்கப்பட்டு விட்டன, காங்கிரசுக்குள் பிளவு ஏற்படும் என்று நினைத்து சில காங்கிரஸ்காரர்கள் மகிழ்கிறார்கள், அவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

பிரமிக்க வைக்கும் கின்னஸ் உலக சாதனைகள்!

சில வாரம் முடங்கிக் கிடந்த ஏ.எக்ஸ்.என் ('AXN') சேனல் மீண்டும் செயல்படத் துவங்கி விட்டது. இதில் அனைவரும் விரும்பிப் பார்க்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் அல்டிமேட் கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட்ஸ் பிரமிக்க வைக்கும் நிகழ்ச்சியாகும்! (செவ்வாய்க்கிழமை தோறும் Guinness World records புதன்கிழமை தோறும் Ultimate Guinness World records )

( ச.நாகராஜன் )

சர்தார் தி கிரேட்! (3)

நண்பர் : ஏன் மானிட்டரை துணியைவச்சு அடிக்கடி துடைச்சிக்கிட்டு இருக்கே? சர்தார் : என்னோட டாஸ் வெர்சன்ல "க்ளியர்" கமாண்டு வொர்க் ஆக மாட்டேங்குது.

( ரிஷிகுமார் )

மனசே சுகமா? (6)

கையில் ஒரு நாணயத்தை எடுங்கள். அதனை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொள்ளுங்கள். பின் அந்த நாணயம் சூடாக இருக்கிறது என எண்ணுங்கள். திரும்பத் திரும்ப அதே சிந்தனையை மனதில் ஓட விடுங்கள். அந்த நாணயத்தை வைத்திருக்கும் கை நெகிழ்வதைக் கவனியுங்கள். சற்று நேரத்தில் அந்த நாணயத்தை நீங்களாகவே கீழே வைத்துவிடுவீர்கள். இதுதான் எண்ணங்களின் வலிமை.

( நிலா )

Maayakannaadi – Music Review

Maestro has come up with this song on Cheran’s request of a song with "basic love feel". A typical Raja styled melody, beautifully rendered by Shreya and Karthik. This is the first song of Pa.Vijay in Raja's music and he has come up with lyrics praising the mobile phone for connecting people in love. De ja vu feeling of many recent Raja songs is unavoidable.

( Vignesh Ram )

'வர்த்தகமல்ல கல்வி'

"எனது பெற்றோர்கள் என்னைப் படிக்க வைக்கத் தயங்கினார்கள். மற்ற பள்ளிகளில் ரூபாய் நூறோ இருநூறோதான் உதவித் தொகையாக வழங்குவதாகச் சொன்னார்கள். ஆனால் சுஷீல் ஹரியில் எனக்கு இலவசக் கல்வியோடு இருக்க இடமும் உணவும், ஏன் சீருடை முதற்கொண்டு தந்து உதவுகிறார்கள். இந்த உதவித் திட்டத்தினால்தான் என்னால் மேலே படிக்க முடிகிறது" என்கிறார் பதினோராவது வகுப்பு படிக்கும் பனிப்பாவை. இவர் போல உதவித் தொகை பெறும் பல கிராமப்புற மாணவர்கள் இப்பள்ளியில் உண்டு.

( நிலா )

காலிஃப்ளவர் தண்டு சூப்

காலி ஃப்ளவரின் சுற்றியுள்ள இலையையும், தண்டுப்பகுதியையும் நன்றாகக் கழுவிய பின்னர் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு குக்கர் பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய இலை,தண்டுப்பகுதியுடன் , அரிசி களைந்த நீர், நறுக்கிய தக்காளித் துண்டுகள், துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கிய பூண்டு துண்டுகள், நறுக்கிய வெங்காயம், மிளகு, ஜீரகம்,உப்பு, சர்க்கரை சேர்த்துத் தேவையான நீர் ஊற்றி , மேல் தட்டில் பொடியாக நறுக்கிய காய்கறித்துண்டுகளைச் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

( பிரேமா சுரேந்திரநாத் )

செய்தித் துளிகள்

தாராபாய் பூனேயைச் சேர்ந்த 40 வயதுப் பெண்மணி. இவர் சமைக்கும்போது குக்கர் வெடித்து அதன் ஏழு அங்குலக் கைப்பிடி அவர் கண்களைத் துளைத்து, மண்டைக்குள் புகுந்து, மூளையைக் கடந்து சென்றது. இவர் நாலு நாட்கள் கோமாவில் இருந்தபிறகு இப்போது சுயநினைவோடு தேறி வருகிறார் என்றால் இதைவிட அதிசயம் என்ன இருக்க முடியும்?

( ஜ. ப .ர )

வெண்மைப் பொய்

அனிச்சையாய் தீபிகாவிடம் திரும்பியவர், அவள் முகத்தில் தெரிந்த பரவசத்தைக் கண்டதும் யோசனையிலாழ்ந்தார். அவர் உற்றுப் பார்ப்பதை உணர்ந்து கண்விழித்த தீபிகா ஆதரவாய்ப் புன்னகைத்து, "பயப்படாதீங்கப்பா... வாமனன் சுவாமி கடவுளின் அவதாரம். அவர் என்னைக் கண்டிப்பா காப்பாத்துவார்" என்றாள். வெளிறிய முகத்தில் கண்கள் நம்பிக்கையோடு மின்னின.

( நிலா )

நீ நான் தாமிரபரணி (63)

தன் தாயிற்கு நன்றாக வரைய வரும் என்று நேற்று தெரிந்து கொண்டதை அவள் சொன்ன போது அவள் உணர்ச்சிவசப்பட்டாள். "...ஒரு நிமிஷம் அம்மா தான் தேவியாய் இருக்கலாம்னு தோணுது....இன்னொரு நிமிஷம் இருக்க முடியாதுன்னு தோணுது.... இப்படி மாறி மாறி சந்தேகம் வர்றது பெரிய சித்திரவதையாக இருக்கு அருண். இந்தப் புதிரை எல்லாம் விடுவிக்காம நாம் திரும்பக் கூடாது"

( என்.கணேசன் )

His Name is Siva Shankar..(240)

A Mahaan has come to coach. So he must be among the masses, swimming along until such time the seekers learn to swim. And then he must wait by the banks as his disciples swim along in the confidence that their Master is with them. Gradually the seekers learn swimming against the current with or without their Master’s physical presence.

( N C Sangeethaa )

பறக்கும் தட்டுகளும் பிறக்கும் கேள்விகளும் (4)

UFO வின் பெரிய ஆதரவாளரான ஹைனிக் என்பவரே ஊடகங்களில் வரும் செய்திகளைப் பற்றிக் குறை கூறியிருக்கிறார். பத்திரிக்கைகள் வியாபார நோக்கத்தோடு வதந்திகளையும் இல்லாதவற்றையும் மிகைப்படுத்தி மக்களைக் கவரவேண்டும் , பத்திரிக்கை அமோகமாக விற்கவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றன. அமெரிக்கர்கள் UFO வை நம்புகிறார்கள் என்பது UFO ஆதரவாளர்களுக்குக் கிடைத்தவெற்றியல்ல- பத்திரிக்கைகளின் வியாபாரத் தந்திரங்களுக்குக் கிடைத்த வெற்றிதான்.

( டி.எஸ்.பத்மநாபன் )

கண்ணுறங்கு

தழையுறங்கத் தரையுறங்க
தாமரைப்பூவும் தானுறங்க
தங்கமே நீ
கண்ணுறங்கு!

கல்லுறங்கக் கரையுறங்க
காத்துங்கூடக் கண்ணுறங்க
காவியமே நீ
கண்ணுறங்கு!

( கவிதா )

பாடம்

" கணேஷ் வேலைக்கு வந்தப்ப நீங்க சொன்ன மாதிரி எஸ்எஸ்எல்சி தான். ஒரு பெண்ணை லவ் பண்ணான்.. நேரே போய் தன்னோட லவ்வை சொன்னப்ப அவங்க இவன் படிப்பு பத்திச் சொல்லி உனக்கெல்லாம் எதுக்கு லவ்வுன்னு கேலி பண்ணிட்டாங்க. அப்ப முடிவு பண்ணியிருக்கான். தன்னோட ஓய்வு நேரத்தை வீணாக்காம கரெஸ்பாண்டென்ஸ்ல படிக்க ஆரம்பிச்சான்.

( ரிஷபன் )

ஜோதிடம் கேளுங்கள்

தங்களின் ஜாதகத்தை ஆராய்ந்தோம். புரட்டாதி நட்சத்திரம் மீன ராஸி விருச்சிக லக்னம் உடைய தங்களுக்கு தற்பொழது புதன் தசை நடந்து வருகிறது. 26 வயது நிறைவு பெற்ற தங்களின் ஜாதகத்தில் களத்திராதிபதி 8-இல் மறைந்து விட்டார். ஏனவே பிரிந்தவரை நினைத்து வருந்திக்கொண்டிருக்க வேண்டாம். உங்களை மறந்த அவரை நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது நியாயம் இல்லை. நல்ல மணவாழ்க்கை உடைய தங்களின் ஜாதகம் எதிர்காலத்தில் நன்றாகவே இருக்கும். கவலைப்பட வேண்டாம்.

( குருஜி கார்த்திகா சித்தார்த் )

இராசி பலன்கள் 19-3-2007 முதல 25-3-2007 வரை

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, வியாழன், ராகு, நன்மை தரும் கிரஹங்களாகும். பிள்ளைகயளால் இருந்து வந்த தொல்லைகள் தீரும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவு உண்டாகும். மனைவி அல்லது மனைவி வழிச் சொந்தங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடம்பில் முதுகு, மற்றும் மார்பு சம்பந்தமான வலிகள் வந்து போகும். தந்தை மகன் உறவில் விரிசல் காணப்படும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

( டாக்டர் ப. இசக்கி )

கவிதைகள்

இத்தனை நாள்
வெள்ளைதான் அழகென்று
நினைத்த நீ கூட
இன்றென்னாட்டு பெண்கள்
கண்மணி நிறம் பார்த்து
கருத்தம்மா ஆனாய்
நிலவே!

அழகு ஓவியம்

அழகு ஓவியம்

( முத்துக்குமார் )

நானென்றும் நீயென்றும் (59)

அதுவும் மருத்துவ மனையில் அவளை அணைத்துக் கொண்டு படுத்த பிறகு. ஆசையாய் உதட்டில் முத்தமிட்டாகிவிட்டது. ஒரு முறை இல்லை. இரு முறை. தன்னை அறியாமல் அவன் விரல்களால் அவன் உதட்டைத் தொட்டுப் பார்த்தன. எத்தனை மென்மையாய், நனைந்த பஞ்சு போன்ற உதடுகள் பூஜாவிற்கு. அவள் அவன் கன்னத்தில் முத்தமிட்ட இடத்தில் இன்னும் ஈரம் காயாதது போல ஒரு உணர்வு. கன்னத்தைத் துடைக்க கையைத் தூக்கினான்.

( சுகந்தி )

கவிதைகள்

தெரியாதது என்பது தெரியாததே
தெரியாததைத் தெரிந்தது போல்
யூகம் செய்யத்
தெரிந்தது என ஒன்று வேண்டும்
எனவே நீ
கற்பனை செய்திருக்கும்
அந்தத் தெரியாதது
ஏற்கனவே உனக்கு
நன்கு தெரிந்ததே

( சரண் )

No comments: