Tuesday, March 06, 2007

சாரல் 302

சாரல் : 302 பொழிந்தது : மார்ச் 5, 2007

கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரி சேஷாத்ரியுடன் மின்னுரையாடல்

ஆரம்பித்த மூன்றே வருடங்களில் 200க்கும் மேற்பட்ட தலை சிறந்த நூல்களை வெளியிட்டு தமிழ் பதிப்புலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது கிழக்குப் பதிப்பகம். கிழக்கு என்றால் தரம் என்ற எண்ணத்தையும் பெரிய எதிர்பார்ப்பையும் தமிழ் வாசகர்களிடம் இவ்வளவு குறைந்த அவகாசத்தில் ஏற்படுத்தியிருப்பது பெரிய சாதனையே. ஆனால் போக வேண்டிய தொலைவு மிக அதிகம் என்கிறார் இந்த சாதனையைச் செய்த பத்ரி சேஷாத்ரி.

( நிலா )

மொழி - திரை விமரிசனம்

படத்தின் பெயர்தான் மொழி. ஆனால் படம் முழுவதும் மவுனம்தான் பேசுகிறது. எளிமையான ஒரு கதையை எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் காட்சிகளில் அமைத்திருக்கிறார் இயக்குனர். விஜியின் வசனங்களில் காமெடியும் கவிதையும் இணந்து கைகோர்க்கின்றன. "காற்றின் மொழியே ஒலியா இசையா" என்பது போன்ற வைரமுத்துவின் கவிதை வரிகளுக்கு வித்யாசாகரின் இசையில் மனத்தை வருடுகின்ற சுகமான ராகங்கள்.

( ஜம்பு )

லாலுவின் ரயில் பட்ஜெட்டும் சிதம்பரத்தின் பொது பட்ஜெட்டும்

லாலுவின் பட்ஜெட் அனைவரின் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சிதம்பரத்தின் பொது நிதி நிலை அறிக்கை குறையா அல்லாது நிறையா என்று சொல்ல முடியாதபடி இருக்கிறது என்பது நிபுணர்களின் கணிப்பு. கூட்டணி (அ)தர்மங்கள், அடிக்கடி வருகின்ற தேர்தல்கள், எதிர்க்கட்சிகளின் உண்மையான அல்லது அரசியல் நோக்கான எதிர்ப்புக்கள், பலதரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு பட்ஜெட் தயாரிக்கப்பட வேண்டிய நிலையில் எந்த பட்ஜெட்டும் ஒரு பரிபூர்ண திருப்தியை அளிக்க முடியாது என்பது நிதர்சனம். ( ஜ.ப.ர. )

சர்தார் தி கிரேட்! (1)

இங்க்லீஷ் டீச்சர் சொல்கிறார், "எல்லோரும் கிரிக்கெட் மேட்ச் பத்தி ஒரு கட்டுரை எழுதுங்க". சிறுவர்கள் பரபரவென எழுத ஆரம்பிக்க, சர்தார்ஜியின் பையன் மட்டும் டக்கென எழுதிவிட்டு அமைதியாய் உட்கார்ந்திருந்தான். என்ன எழுதியிருக்கிறான் என இங்க்லீஷ் டீச்சர் ஆர்வத்துடன் பார்க்க, அதில் எழுதியிருந்தது. "தொடர் மழையின் காரணமாக இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது"

( ரிஷிகுமார் )


பறக்கும் தட்டுகளும் பிறக்கும் கேள்விகளும் (1)

பறக்கும் தட்டுக்கள், அயல் கிரகவாசிகளின் வருகை போன்றவை நிஜம்தானா அல்லது பார்த்ததாகக் கூறுபவர்களின் கற்பனையா என்று இன்னமும் அறுதியிட்டுத் தீர்க்கமாகக் கூற முடியவில்லை- இது போல் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத, ஆராய்ச்சியினாலும் உறுதி செய்யப்படமுடியாத அன்னியத் தோற்றங்களை UFO ( Unidentified Flying Objects) என்று சொல்கிறார்கள் ( டி.எஸ்.பத்மநாபன் )

Helen Mirren - Profile

Oscar winning actress Helen Mirren, "I don't mind if I don't have any lines as long as I get to wear a crown."

( PS )

மெய்ப்பொருள்

ரெண்டு ஆம்பளப்புள்ளங்க இருக்கயில இவரு இந்த வயசுல என்னத்துக்கு இப்பிடி அலையணும்னு தங்கம்மாவுக்குத்தேன் வெசனமா கெடக்கும். குமாரவேலு என்ன ஏதுன்னு எப்பவும் கேக்கதில்ல. வேலைக்குப் போன நாளுலர்ந்து ஒத்தப்பைசா குடுத்ததில்ல. ஆனா ராசவேலு அயல்நாடு போனதிலருந்து வருசம் தவறாம ஒரு லச்ச ரூவா அவங்கய்யாகிட்ட குடுக்கான்.

( நிலா )

சினி மினி

பெரியார் படத்தை வெளியிடுவதற்கு முன் கலைஞருக்குப் போட்டுக் காண்பித்தார்கள். பல காட்சிகள் அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. காட்சிகள் முழுமையாக இல்லையென சொல்லிவிட்டதால் மீண்டும் அந்தக் காட்சிகளை எடுக்கிறார்களாம்.

( ஜன்பத் )

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நொய்டா குழந்தைகளின் கொலைகளைக் கண்டிக்கப் போகிறார்களா? மெகா-மகா சீரியல்களைப் போலத் தொடரும் விதர்ப்ப தேசத்து விவசாயிகளின் தற்கொலைகள் இவர்கள் நெஞ்சங்களைப் புண்ணாக்கிவிட்டதா? பழங்குடி மக்களின் பட்டினிச் சாவுகள் இவர்களைப் படுத்தி எடுக்கிறதா? ஈழத்தின் பச்சைப் படுகொலைகள் இவர்களை பாதித்துவிட்டதா? நமது நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களை அரசாங்கத்தின் ஆதரவோடு, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, இடையறாது உறிஞ்சி வரும் கோக், பெப்சி ஆலைகளை எதிர்த்துப் போர்க் கொடி ஏற்றிவிட்டார்களோ?

( கு. சித்ரா )

உணவே மருந்து - மருந்தே உணவு (1)

இரண்டு பெரிய துண்டு சுக்குடன் இரண்டு ஏலக்காய் முதலியவற்றை நசுக்கிக் கொண்டு ஒரு தேக்கரண்டி ஜீரகம் இரண்டு கப் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க வைத்து முக்கால் கப்பாக நீர் குறைந்தவுடன் பனை வெல்லம் அல்லது வெல்லம் சேர்த்துக் குடித்தால் அஜீரணம், பசியின்மை, உடல் வலி நீங்கும்.

( பிரேமா சுரேந்திரநாத் )

Chennai 600028 – Music Review

This is Yuvan Shankar Raja’s debut in penning lyrics and undoubtedly he has done a good job compared to the junk some lyricists churn out nowadays. This bit song has wonderful strings and it is all about friendship and the pain in parting a friend. Yuvan has written, composed and sung the song.

( Vignesh Ram )

His Name is Siva Shankar..(237)

People have certain expectations about life. Misery does not befall one who is devoid of expectations. The world does not affect him. Only those who anticipate a particular result, suffer when their dreams do not materialize. And they become the root cause of others' miseries. ( N C Sangeethaa )

சந்'தோஷம்'

கட்டம் போட்டுக் கணித்துச் சொன்னான்
காவி கட்டிய கோவில் சோதிடன்
பிறைநிலவாய் வளர்ந்த எங்கள் சந்தோஷம்
பொருந்தாது பிள்ளைக்கு செவ்வாய் தோஷமென்று!

( கவிதா )

நீ நான் தாமிரபரணி (60)

அன்று உறங்காதது அவள் மட்டுமல்ல, அருணும் தான். அம்பலவாணன், தாரா அவனைப் பார்த்ததும், கண்களைத் துடைத்துக் கொண்டு சென்றதும் பற்றி சொன்னதை நினைக்கையில் அதன் பொருள் என்ன என்று அவன் ஊகிக்க முடியாமல் தடுமாறினான். அவர் சந்தேகப்படுவது போல் நிஜமாகவே அவன் ஈஸ்வரன், தாராவுடன் ஏதாவது வகையில் சம்பந்தப்படுகிறானா என்பதை அவனால் தீர்மானிக்க முடியவில்லை. அவனும் அவன் தாயும் இந்தக் கதையிலோ, கதாபாத்திரங்களின் வாழ்க்கையிலோ எப்படி சம்பந்தப்படுகிறார்கள்?..... நினைக்க நினைக்கக் குழப்பமே மிஞ்சியது...

( என்.கணேசன் )

பவழம்

கடைக்குப்போன பின் தான் எனக்குத் தெரியும் - பவழத்தின் மேல் மூணே முக்கால் பவுன் தங்கம் போடப்பட்டுள்ளது என்று. அட்வான்ஸ் ஆயிரம் போக கூலி, சேதாரம், வரி, சேவை வரி அது இது என்று சுளையாக முப்பத்து நாலாயிரம் தரணும் என்றார் கடைக்காரர். பவழம் வாங்கி வந்த மச்சானை மனதிற்குள் திட்டியவாறே ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எல்லாவற்றின் மூலமும் நகைக்கடைக்குத் தர வேண்டியதைப் பட்டுவாடா செய்து விட்டு, பவழ மாலையுடன் வீட்டுக்கு வந்தேன்.

( வை.கோபாலகிருஷ்ணன் )

தேடல்

பிறப்பு கொடுத்த உறவை
இறப்பு முத்தமிட்டதால்
வறுமை உறவானதோ? - இல்லை
திசை மாறிய உறவுகள்
பிறப்பளித்ததால்
வறுமை உறவானதோ? - இல்லை
பெண்முகம் கண்டு பொன்முகம் காணா
உறவுகள் கைவிட்டதால்
வறுமை உறவுக்கை நீட்டியதோ?
பதில் தேடி எனக்குள் ஒரு தேடல்.

( ஆண்டெனி )

காவிய நாயகன் நேதாஜி (40)

இந்த மகாசபையில் சுபாஷ் ஆற்றிய தலைமை உரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த உரையில் அவர் எத்தனையோ அரசாங்கங்களும் நாகரிகங்களும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனதைச் சரித்திரச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்னார். பிரிட்டனின் அசுர சக்திக்குக் காரணம் பல நாடுகளை பிரிட்டன் அடிமைப் படுத்தி வைத்திருந்ததுதான் என்று லெனின் சொன்னதை நினைவுபடுத்தினார். பிரிட்டன் பல நாடுகளில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டதையும் அதனால் தானே விழி பிதுங்கி நிற்பதையும் சான்று காட்டி விளக்கினார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

இராசி பலன்கள் 05-3-2007 முதல் 11-3-2007 வரை

அன்பார்ந்த கடகராசி வாசகர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் மன நிம்மதியும் பணவரவும் உண்டாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் வந்து போகும். தாயின் உடல் நிலைப்பாதிப்படைவதால் மருத்துவச் செலவு மேலோங்கும். வெளிச் செல்லும் முயற்சிகளைத் தள்ளிப் போடுதல் நல்லது. வீடு மாற்றம் மற்றும் புதிய வீடு வாங்குவீர்கள். வாகனங்யளைப் பழுது பார்ப்பதால் செலவுகள் ஏற்படும். உடம்பில் நரம்பு மற்றும் தலை சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். கண்களில் கவனம் தேவை.

( டாக்டர் ப. இசக்கி )

மனசே சுகமா? (3)

மன்னிப்பது பலவீனமான செயல் என்பது போலவும் மன்னிக்காததன் மூலம் தமது கௌரவத்தை நிலை நிறுத்திக் கொள்வது போலவும் ஒரு மாயையை பலர் தமக்குள் உருவாக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் செய்வதெல்லாம் தம்மைத் துன்புறுத்தியவர்களை ஜென்மம் முழுவதும் மனதில் மூச்சிறைக்கச் சுமந்து, தமது வாழ்க்கையைப் போராட்டமாக்கிக் கொள்வதுதான

( நிலா )

நானென்றும் நீயென்றும் (56)

இவன் வாழ்க்கையை இவர்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டார்களே, இவனும் அப்படிச் செய்தால் இவர்களுக்குத் தெரியும் இவன் படும் வேதனை! இடது பக்கக் கன்னத்தை சவரம் செய்து கொண்டிருந்த கைகள் அப்படியே நின்றன. கண்கள் பளபளக்க தன்னையே ஒரு முறை கூர்மையாகப் பார்த்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். மனதில் ஒரு திட்டம் உருவானது. இனிமேல் தானே இருக்கிறது.

( சுகந்தி )

No comments: