Monday, June 25, 2007

சாரல் 318


சாரல் : 318   பொழிந்தது :  ஜூன் 25, 2007

"நூல் ஆடைகளைத் தயாரிக்கிறது, புத்தகம் மனிதர்களைத் தயாரிக்கிறது" -கவிஞர் இக்பாலுடன் இ-முகம்

"மொழிபெயர்ப்பில் முதலில் காணாமல் போவது கவிதைதான்" என்பதை நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பலமுறை என் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது இதை நான் நேரடியாக அனுபவித்திருக்கிறேன்.

( ஜன்பத் )


Lewis Hamilton - Profile

Michael Schumacher: "Hamilton 's a quality driver, very strong and only 16. If he keeps this up I'm sure he will reach F1. It's something special to see a kid of his age out on the circuit. He's clearly got the right racing mentality"

( Gayathri and PS )


அரசியல் அலசல்

இதுவரை ராஷ்டிரபதி என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இனிமேல் ராஷ்டிரபத்னி என்றுதான் சொல்ல வேண்டும். - பால் தாக்கரே.

( ஜ.ப.ர )


நிலாவட்டம் (1)

பாரப்பட் சுவரை ஒட்டிய கம்பங்களில் இழுத்துக் கட்டப்பட்ட நைலான் கயிறு. ஒரு ஒதுக்குப்புறமாய் மட்டும் அமையாமல் குறுக்கிலும் ஒரு கயிறு கட்டப்பட்டு தழைந்திருந்தது. குறுக்கும் நெடுக்குமாய் ஓடுகிற சிறுவர்களுக்கு நிச்சயம் விபத்து நேரலாம். ஓடி வருகிற அவசரத்தில் தடுக்கி விழலாம்.

( ரிஷபன் )


சிவாஜி - The BOSS

சூயிங்கம்மை ஸ்டைலாக வாயில் தூக்கிப்போட்டுக் கொள்வதும் ஒரு ரூபாயை சுற்றி சுழட்டுவதும் இந்தப் படத்தில் ரஜினியின் ஸ்பெஷல் ஸ்டைல். 'சும்மா அதிருதுல்ல' என்று பன்ச் டயலாக் விடும்போது தியேட்டர் அதிருகிறது.

( ஜன்பத் )


ரிஷி சக்தி!

சுவாமி விவேகானந்தர் தூங்கிக் கிடந்த பாரதத்தை ரிஷி சக்தி மூலமாகவே, 1897 முதல் 1906க்குள் சுமார் பத்தே ஆண்டுகளில் தட்டி எழுப்பினார். இப்படி ஒரு பெரிய சக்தி தனக்கு எப்படி வந்தது என்ற ரகசியத்தை அவரே கூறி இருக்கிறார்:

( ச.நாகராஜன் )


செல்போனும் சிறப்புப் பயன்களும்

செல்லில் பேட்டரி குறைவாக இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். *3370# என்று அழுத்தினால் செல்லில் 50% பேட்டரி அதிகரிக்கும். அடுத்து எப்போது சார்ஜ் செய்கிறீர்களோ அப்போது இந்த 50% வீதமும் சார்ஜ் ஆகிவிடும்.

( கவிதா )


ஜோக்கர் ஜோன்ஸ் (4)

பாண்டுவின் எதிரி, அவர்கள் சென்றபின் பாண்டுவினுடைய குதிரையின் இடது காதை வெட்டிவிட்டுச் சென்று விட்டான். மறுநாள் குதிரையை வந்து பார்த்த இருவருக்கும் அதிர்ச்சி. யாருடைய குதிரை எதுவென்று கண்டுபிடிக்க முடியாததால்....

( ரிஷிகுமார் )


இராசிபலன்கள் (25-6-2007 முதல் 1-7-2007 வரை)

கும்ப ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். மாணவர்களுக்குக் கல்வியில் பரிசுகள் கிடைக்கும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். புதிய வீடு மாற்றம் ஏற்படும். செய்தொழிலில் கவனம் தேவை.

( டாக்டர்.ப.இசக்கி )


குட்டியாய் ஒரு கோடை விடுமுறை

ஜஸ்பீர் அங்கிள் சாப்பிட கூப்பிட்டாரு. பெரிய நாயைப் பார்த்து எனக்கு ஒரே பயம். டைனிங் ரூமுக்கு போகவே கஷ்டப்பட்டேன். உடனே அங்கிள் டைகர் கிட்டே பேசினாரு. 'நீ அங்கேயே இரு. ஆண்ட்டி பயந்துக்கிறாங்க' ன்னதும் சட்டுனு மூலைல உட்கார்ந்திருச்சி. சாப்பிடுற வரைக்கும் எந்திரிக்கவே இல்லை.

( ரஜினிமா )


காவிய நாயகன் நேதாஜி (56)

நேதாஜியின் முக்கிய சாதனை பெர்லினில் ஆசாத் ஹிந்த் வானொலியை அமைத்ததுதான். 1943 மார்ச் 13ம் தேதி இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான நாள்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


நீ நான் தாமிரபரணி (76)

'அம்மா, அம்மா கூட பேசிகிட்டிருக்காங்க' என்கிற வார்த்தைகள் அவரை மனம் குளிர்வித்தன. தாராவைக் கூப்பிடக் கிளம்பியவனை தடுத்து நிறுத்தினார். "அவங்களை எல்லாம் அப்புறம் பார்க்கறேன். நான் முக்கியமாய் வந்தது உன்னைப் பார்க்கத் தான்"

( என்.கணேசன் )


கனவு

அழைக்காமல் வந்தாலும்
அவள்முகத்தை
அழைத்துவந்தாய்!
அறிந்துவந்த விருந்தெவரும்
குறிப்பறிந்து தந்ததுண்டா?

( லேனா.பழ )


சினி மினி - சிவாஜி ஸ்பெஷல்

ஜப்பானிலிருந்து வெளிவரும் டோஷோ என்ற பத்திரிகை ஹாலிவுட் படம் காசினோ ராயல் படத்தைவிட எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும் ஜாக்கிச்சானுக்கு அடுத்தபடி அதிக ஊதியம் பெறும் நடிகர் ரஜினி என்றும் செய்திகள் வெளியிட்டுள்ளது.

( ஜன்பத் )


சிறந்த படைப்புக்கு பரிசு!

எனக்கு பிடித்த கவிதை மொழியில் மனிதனாக பிறந்தது மாபெரும் பாக்கியம் அது.. மேலோட்டமாய் வாழ்ந்து வெளிப்புறமாய் பாய்ந்து அறியாமலே வீழ்ந்து போக அல்ல என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.

( Nilateam )


செய்திகள் அலசல்

பங்களூருவில் ஒரு பரபரப்பு. அங்குள்ள சனீஸ்வரர் கோவில் ஒன்றில் 25 நாய்கள் வரும் வெள்ளியன்று ஹோமத்தின்போது உயிருடன் எரிக்கப்படப் போவதாக நோட்டிஸைக் கண்டபோது பலர் பதறித்தான் போனார்கள்.

( ஜ.ப.ர. )


Alter Ego

My mother never troubled me of all this, she knew that her daughter required some respite from studies and therefore she never disturbed watching me Television after my classes. So I never got to know the goings-on in the kitchen

( Deepa Krishnan )


கருத்தப் புள்ள செவத்த ரயிலு!

முட்டக் கண்ணு சிவந்திருச்சு
கெட்ட கோவம் வந்திருச்சு
தப்புக் கணக்குப் போட்டுப்புட்டா
மைனருன்னு நினைச்சுப்புட்டா
பஞ்சாயத்தக் கூட்டிப்புட்டா
பருத்திபோல வெடிச்சுப்புட்டா

( நிலாரசிகன் )


இறவாக் காவியம் (91)

இரையாவேனென்னும் பயத்தில் மீன்கள் கரையேறலாமோ கடவுளே - என்பதாய் ஒலித்தது பேதுருவின் வார்த்தைகள்.

( சேவியர் )


His Name is Siva Shankar..(253)

Never ever assume you are sacrificing your interests for the sake of your family. Whatever you do for your family is your penance. Whatever you do for the society is your penance.

( N C Sangeethaa )


செருப்பு

அவர் சொன்னது என்னவோ 'நியூட்டன்' விதியை ஞாபகப்படுத்தினாலும், மனம் லேசானதுபோல் ஒரு உணர்வு. ஒரு தெளிவு. அந்த தெளிவான மன நிலையில் வெளியே வந்து பார்த்தபோது... என்னவொரு ஆச்சரியம்!!!

( திரு )


 

No comments: