Tuesday, June 19, 2007

சாரல் 317

சாரல் : 317 பொழிந்தது : ஜூன் 18, 2007

Add Nilacharal to your Signature

Adding Nilacharal's signature to your email helps introducing nilacharal to many. If you like to help us with this, please read further:

( Nilateam )

ரமண நட்சத்திரம்!

1950ம் ஆண்டு, ஏப்ரல் 14ம் தேதி. ரமண மகரிஷியின் உடல் நிலை கவலைக்கிடமானது. பக்தர்கள் ஹாலின் வெளியிலிருந்த வராண்டாவில் அமர்ந்து அருணாசல சிவ என பாட ஆரம்பித்தனர். இதைக் கேட்ட ரமணரின் கண்கள் மெல்லத் திறந்தன; ஒளிர்ந்தன.

( ச.நாகராஜன் )

தொழில்முனைவோர்க்கு வள்ளுவம் வழங்கும் ஆலோசனைகள்

தொழில் தொடங்க எண்ணங்கொள்ளும்போது ஒவ்வொருவரும் முதன்மையாக கவனத்தில் கொள்ள வேண்டுவது முதலீடு ஆகும் அவ்வாறு முதலீட்டு வினையினை மேற்கொள்ளும் ஒருவர் பல்வேறு காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டுவது அவசியமாகும் .

( முனைவர் பெ.லோகநாதன் )

அரசியல் அலசல்

"ஜாலி கிழவர்" என்று ஒரு பத்திரிகை கிண்டல் செய்கிற அளவுக்குத் தலைவர் கலைஞரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் தரம் தாழ்ந்து போயிருப்பது உண்மையிலேயே வேதனை தரும் விஷயம். பெண் அரசியல் தலைவரைப் பற்றி அவர் வெளியிடும் இரட்டை அர்த்த விமர்சனங்களும் அங்கதங்களும் அவரது வயசுக்கும், பதவிக்கும் பொருத்தமில்லாதவை.

( ஜ.ப.ர. )

நானென்றும் நீயென்றும் (71)

"நான் தான் பூஜா. நீ என்னை விட்டுப் போகிறாய் என்றதும் ஆடிப் போய்விட்டேன். உன்னை விட்டு என்னால் இருக்க முடியாது என்று உனக்குத் தெரியாதா? என்னை விட்டுப் போக முடிவு செய்தாயே.. உன்னை அந்த அளவு நான் வேதனைப்படுத்தி விட்டேனா? சாரிடா.." என்றவன் "என்னை மன்னித்துவிடு" என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

( சுகந்தி )

நகைச்சுவை பிட்ஸ் (1)

(போனில்) மச்சான்..ரொம்ப அர்ஜெண்ட் மேட்டர்டா. நாங்க இங்க சீட்டு விளையாடிட்டு இருக்கோம். ஜோக்கர் கார்டு மட்டும் மிஸ்ஸாகுது. நீ உடனே உன் போட்டோவை யார்கிட்டேயாவது கொடுத்து விட்டா யூஸ் பண்ணிக்குவோம். என்ன சொல்ற?

( ரிஷிகுமார் )

அம்மன்

அம்மனுக்கு ஏதோ கோபம். அபசாரம் ஏதோ நடந்துள்ளது. ஆத்தா மன்னித்தருள வேண்டும் என கூறிவிட்டு கலைந்து சென்றனர். அப்பாவிகளான அந்த ஆடுகளும், குட்டிகளும் அவிழ்த்துவிடப்பட்டன. நடக்கவிருந்த பத்து பற்றி ஏதும் அறியாமல் துள்ளிச்சென்ற அவற்றின் பார்வையில், என்னால் மட்டும் அம்மனின் கருணையைக்காணமுடிந்தது.

( வை. கோபாலகிருஷ்ணன் )

காவிய நாயகன் நேதாஜி (55)

சுபாஷ் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் ஒரு செய்தியைப் பரப்பி விட்டது. சுதந்திர இந்திய காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் டோக்கியோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் பழுதடைந்து விபத்து ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக விரிவான செய்திகள்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட்

கிழவி பஸ்ஸில் ஏறியதிலிருந்து அத்தனை பேரின் கவனமும் அவள் மீதுதான். ஒரு பித்தளை அண்டா, எவர்சில்வர் குடம் இரண்டையும் என்ஜினுக்கு அருகில் காலியாயிருந்த இடத்தில் பத்திரப்படுத்திவிட்டு தானும் மருமகளும் அமர இடம் தேடினாள்.

( ரிஷபன் )

பாரதி இரசித்த இயற்கை!

காலைப்பொழுதினை இரசிக்கும் பொழுது, ஞாயிறின் கேடில் சுடர்தனையும், தென்னை மரத்தின் கிளையிடையே தென்றல் சென்று, மன்னப் பருந்தினுக்கு மாலை இட்டுச் செல்வதையும், அம்மரக்கிளையிலே சிந்தனையோடு ஒரு காகம் அழகாய் அமர்ந்து வானை முத்தமிடுவதையும், காக்கைக் கூட்டமொன்று பறப்பதையும், குருவி, பச்சைக்கிளி, அன்னப் பறவை ஆங்கே வருவதையும் பாரதி இரசிக்கும் இயற்கையை....

( என்.வி.சுப்பராமன் )

Shabana Azmi

"A good actor should be able to prefix the words, "If I were…" to any one of a range of characters (a prostitute, Mother Teresa, Queen Elizabeth) and be able to play each equally well"

( PS )

நீ நான் தாமிரபரணி (75)

அவர்கள் இருவரும் மாதுரியைச் சுற்றி ஓட அவள் சோகம் கலந்த புன்னகையுடன் அவர்களைப் பார்த்தாள். சிறு வயதில் இழந்திருந்த இந்த உறவின் சீண்டல்களையும், சந்தோஷங்களையும் இப்போது தருவித்துப் பார்த்துக் கொள்கிறார்கள் என்று தோன்றியது. மனம் நெகிழ்ந்தது.

( என்.கணேசன் )

யதார்த்தம்

"நந்தினிம்மா, உனக்கு போஸ்ட்!" தபால்காரரின் குரலில் மகிழ்ச்சியும் பரபரப்பும் இருந்தன. ஆச்சரியத்தோடு வாசலுக்கு விரைந்தாள். அந்த தபால்காரர் பல வருடங்களாக அந்த ஏரியாவிலேயே இருப்பவர். நந்தினியை பள்ளியில் சேர்க்கும் பருவத்துக்கு முன்பிருந்தே பார்த்துக் கொண்டிருப்பவர்.

( ஸ்ரீ )

ஈடுபாடு

சென்னைப் பட்டிணத்திலே இருக்கும் கோடீஸ்வரர்களில் கோடியப்பனும் ஒருவர். அவருடைய செல்லக் குதிரை வயதாகி இறந்து விட்டது. அதன் மறைவு அவருக்கு சொல்ல முடியாத துக்கத்தைக் கொடுத்தது. சொந்தபந்தமில்லாத பிரம்மச்சாரியான அவர் குதிரை மேல் உயிரையே வைத்திருந்தார்.

( P.நடராஜ‎ன் )

சலனம்

துரும்பைத் தொலைக்கத்
தூக்கம் அணைக்க;
மனதின் அறிவின்
மகத்துவப் பரல்களில்
புதிதாய்ச் சிந்தனை
புலரச் செய்வோம்!!
யாவும் மாயை
என்றே நினைப்போம்!

( கவி வளவ‎ன் )

His Name is Siva Shankar..(252)

If you want to succeed, talk in terms of what the other person wants from you instead of talking in terms of what you want from the other person. Remember, that to catch a fish, you need to offer worms as the bait, not the dosa or idli that you like.

( N C Sangeethaa )

பட்டியல்

இன்று இவ்வுலகில்
வன்முறையும்
வெடிப்பும்
அடிதடியும்
உயிர்க்கொலையும்
அதிகமாகி
அன்றாட வாழ்வோடு
ஒன்றாகிப் போனதனால் …..

( இராம. வயிரவன் )

வசூல் ராஜாக்கள்

சென்னை மாநகரில் குறிப்பாக இந்த பீக் ஹவர்ஸில் பேருந்துகள் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதில்லை. நடுத்தர மக்களின் வசதிக்காக மீண்டும் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். அதே சமயம் நியாயமான ஆட்டோ கட்டணம் மீட்டரின் வழியே உறுதி செய்யப்பட வேண்டும்.

( திரு )

செய்திகள் அலசல்

வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் லத்திகா சரண். மாதிரிக்கு சில கேள்வி பதில்கள்:

( ஜ.ப.ர. )

இராசிபலன்கள் (18-6-2007 முதல் 24-6-2007 வரை)

ரிஷப ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். பூமி, நிலம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். எழுதுபொருள், நோட்டு, புத்தகம், பிரின்டிங் சம்பந்தமான தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். பெண்களால் ஆதாயம் இல்லை. அடுத்தவர்களுக்காக உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

( டாக்டர்.ப.இசக்கி )

நவதானிய சுண்டல்

பச்சைப் பட்டாணி, வெள்ளைப் பட்டாணி, மொச்சை, துவரை, காராமணி, வேர்க்கடலை,பயறு,கோதுமை,சிறிய சிறிய கொண்டைக்கடலை வகைக்கு ஒரு மேசைக்கரண்டி, துருவிய தேங்காய் – இரண்டு மேசைக்கரண்டி, உப்பு ருசிக்கேற்ப,

( பிரேமா சுரேந்திரநாத் )

No comments: