வலிகொண்ட முத்தம்...
தாவணிப் பருவத்தில் தோழி
வீடுசென்று தாமதமாக திரும்பிய
நாட்களில் உன் அவஸ்தையின் வலி
நான் உணரவில்லை...
கல்லூரிப் பருவத்தில் கண்ணாடியுடன்
சினேகித்து பட்டாம்பூச்சியாய்
பறந்த நாட்களில் உன் அறிவுரையின் வலி
நான் உணரவில்லை...
( நிலாரசிகன் )
Kanimozhi Karunanidhi
* as a sub-editor of The Hindu in Chennai in 1992 - 1997. She worked with the arts section of the newspaper, the Friday Review, till 1997. * Was in charge of Kungumam, a Tamil weekly. * Was Features Editor of the Tamil publication, local newspaper, Tamil Murasu, in Singapore
( PS )
ஒரு தலைசுற்றுச் சூழல் விவகாரம்
இன்றைய இளைஞர்கள் அதைரியப்பட முக்கியக் காரணம் நல்வழிகாட்டிகள் தற்காலத்தில் அவர்களுக்கு இல்லை என்பதே. இருக்கற கும்பலில் ஒரு சண்டியர் நான் சொல்றதுதாண்டா இலக்கியம்னு ஆர்ப்பரிக்கிறான். கைல கொஞ்சம் துட்டு புரண்டால் சிற்றிதழ் ஆரம்பிக்க வேண்டியது.
( ஞானவள்ளல் )
பதில் தெரிந்தால் சொல்லுங்கள்
'அவளுக்குப் பிடிக்கும்' என்று
ஒரு பை நிறைய
விளையாட்டு சாமான்கள்..
தின்பண்டங்கள்..
'யாருக்குடி' அம்மா கேட்பாள்.
'பக்கத்து வீட்டு வாலு'
எப்போது மடி கனக்கும் என்று
மனம் கனத்துப் போகும் அம்மா.
( ரிஷபன் )
சிறந்த படைப்புக்கு பரிசு!
ஒவ்வொரு மாதமும் நிலாச்சாரலில் இடம்பெற்ற படைப்புகள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் சிறந்த படைப்புக்குப் பரிசு வழங்கப்படும். சிறந்த படைப்பாளருக்கான நிலாச்சாரல் பரிசினைப் பெறுபவர் லேனா கதிரவன் பழனியப்பன்.
( நிலாச்சாரல் )
இராசிபலன்கள் (11-6-2007 முதல் 17-6-2007 வரை)
மீன ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். பழைய வீட்டைத் திருத்திக் கட்ட வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் நற்பலன் அடைவார்கள். உப்பு வியாபாரம், நீர்வளத்துறை சார்ந்தவர்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் வியாபாரிகள் நற்பலன் அடையக்கூடிய காலமாகும்.
( டாக்டர்.ப.இசக்கி )
சினி மினி
'சிவாஜி' படம் ஒரு வழியாக ஜூன் 15ஆம் தேதி நிச்சயம் வெளிவந்து விடுமாம். இதற்கிடையில் சிவாஜி என்பது தமிழ்ப் பெயரா? வரிவிலக்கு அளிக்க முடியுமா? என்பதில் சின்னப் பிரச்சினை.
( ஜன்பத் )
வல்லமை தாராயோ?
வலம்புரி ஜான் வார்த்தைச் சித்தர். அவரது இளவயதில் அவரது ஆசிரியர் அவரை மாணவிகள் முன் அவமானப்படுத்திய போது நெஞ்சில் கனன்ற நெருப்பு தான் அவரை முன்னேற வைத்ததாகக் கூறுகிறார்.
( தொகுப்பு: வேணி )
அரசியல் அலசல்
நில கையகப்படுத்துதலில் வரவிருக்கும் சீர்திருத்தங்கள்; அண்ணா தி.மு.க கட்டட நோட்டீஸ் விவகாரத்திலிருந்து சூடுபிடித்துள்ள தமிழக அரசியல்; மூன்றாவது அணிக் கனவு; இதுதானா காங்கிரஸ் ஜனநாயகம்?
( ஜ.ப.ர )
செய்திகள் அலசல்
அறம் விழுதல் என்று தமிழில் ஒரு சொற்றொடர் உண்டு. வாயிலிருந்து ஏதோ ஒரு வார்த்தை வரும், அது பின்னால் நிஜமாகப்போய் விடும். உதாரணத்துக்கு, சஞ்சய் காந்தி இறுதியாகத் தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு போன வார்த்தை, "அம்மா, நான் போறேன்."
( ஜ.ப.ர )
"நூல் படிப்போம். . . . . சாதனை படைப்போம்!"
அந்த நடு மண்டபம் குட்டி போட்டு இருக்குமா? அந்தக்குட்டி ஒரே வாரத்தில் இவ்வளவு பெரியதாகி, நகரவும், நீந்தவும், மிதக்கவும் முடியுமா? போன வாரம், தான் குளத்தில் தூக்கிப்போட்ட ஒரு சிறிய கல் மட்டும், மிதக்காமல் குளத்தில் அமுங்கிப்போய் விட்டதே? இவ்வளவு பெரிய தெப்பம், இவ்வளவு பேர்களுடன் ஜாலியாக மிதக்கிறதே? அது எப்படி?
( வை. கோபாலகிருஷ்ணன் )
சுண்டைக்காய் வற்றல் குழம்பு
பெருங்காயத்தைச் சேர்த்து மட்டான தழலில் கொதிக்க விடவும். கொதித்ததும் ஒரு ஸ்பூன் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். சுவைக்கு சுவை. உடலுக்கும் நன்மை.
( பிரேமா சுரேந்திரநாத் )
பேரிழப்பு
நேற்று
உன் கண்களையே
பார்த்துப் பேசிக்கொண்டிருந்த நான்
கையிலிருந்த என்
கவிதைத் தொகுப்பையும்
தவற விட்டேன்
( நவநீ )
நீ நான் தாமிரபரணி (74)
அருண் வந்த கணம் முதல் தாராவின் மீது வைத்த பார்வையை எடுக்கவில்லை. அவன் மனதில் எத்தனையோ எண்ண அலைகள்.... அவன் கண்களில் நீர் கோர்த்து நின்றது. எத்தனை ஜென்மங்கள் எடுத்து சேவை செய்தாலும் இவள் கடனைத் தீர்க்க முடியும் என்கிற நம்பிக்கை அவனுக்கில்லை. மௌனமாகக் கை கூப்பினான்.
( என்.கணேசன் )
His Name is Siva Shankar..(316)
Everyone knows what is good and what is bad. Good is something which will not hurt others; which will not harm others; which will not harm us. If somebody knows that something is good and he is not prepared to follow that, then the wrong is on his part
( N C Sangeethaa )
'சிம்பொனியில் திருவாசகம்'
ஒரு தலைமுறையின் சகல உணர்வுகளோடும் தன் இசையை ஊடுருவ விட்டுப் பதிவு செய்தவர்; காதலைப் பாலியல் வெறியாகவோ, மகிழ்ச்சியைக் களி வெறியாட்டமாகவோ, துயரத்தை விரக்தியாகவோ மாற்றி இசையைக் கொச்சைப்படுத்தாதவர்.
( அருட்தந்தை ஜகத் கஸ்பாருடன் நேர்முகம் )
மதிப்பு
மூட்டை தூக்கி சம்பாதித்துத் தன்னை இஞ்சினியரிங் படிக்கவைத்த அப்பாவுக்கு அமெரிக்காவிலிருந்து எவ்வளவு பணம் அனுப்பினாலும் இந்த மதிப்புக்குரிய விருதினைத் தன் சார்பாகப் பெறச்செய்யும் கௌரவத்துக்கு ஈடாகுமா?
( நிலா )
அத்தை மகள்
"சென்னையில் இருந்து மதுரை வந்து, அப்புறம் பஸ் பிடித்து போடிக்கு வருவதை விட இப்போ அமெரிக்கா போவது ஈசி. அதோட நம்மையும் கூப்பிட்டாங்களே. நீதான் பிகு பண்ணிட்டே." அதிகாலை கதவு தட்டப்படும் சத்தம். கதவைத் திறந்தால் அங்கே சிதம்பரத்தின் அக்காவும் அத்தானும்.
( P.நடராஜன் )
அழகு ஓவியம்
அருப்புக்கோட்டை மாணவர் வரைந்த அற்புத ஓவியம
( முத்துக்குமார் )
வேகம் விவேகம்!
குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...
( நிலா )
ஆபத் சந்நியாசம்
ஆரம்பத்தில் கண்ட சின்னச்சின்ன கனவுகள், சமையலறை சங்கீதத்தில் சிறைபிடிக்கப்பட்டன. குக்கருக்கு வெயிட் போட்டோமா, குழந்தைக்கும், கணவனுக்கும் ப்ரேக் பாஸ்ட் தயாரித்தோமா - என்று ஆலாபனை செய்யவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. இந்த சமையலறை சங்கீதமே வாழ்வின் ராகம், தாளம், பல்லவி ஆயிற்று.
( விமலாரமணி )
நானென்றும் நீயென்றும் (70)
"போதும் அவினாஷ் என்னை வருத்தப்படுத்தனும்னே வீம்புக்காக எதையும் பேசாதே. நீ வாங்காமல் இந்தப் பட்டு வேஷ்டி புடவை மோதிரங்கள் எல்லாம் தானாய் வந்து குதிச்சுடுச்சா?" குரலில் எரிச்சல் காட்டிப் பேசினாள் பூஜா. தான் நினைத்து போல் காதலுடன் பரிசுகளை அவினாஷ் வாங்கவில்லையோ என்ற ஆதங்கம் அவளுக்கு.
( சுகந்தி )
காவிய நாயகன் நேதாஜி (54)
சுபாஷ் ஜெர்மனியருடன் இணைந்து செயல்படவேண்டும், இத்தாலியர்கள் அவரைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. அதற்காகவே மிகவும் சாமர்த்தியசாலியான வெல்லரை அவருடன் அனுப்பி வைத்தார்கள். இத்தாலியரும் ஜெர்மானியரும் என்னதான் நண்பர்களாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்குள் உள்ளூரப் புகைச்சல் இருக்கத்தான் செய்தது.
( டி.எஸ்.வேங்கட ரமணி )
ஜோக்கர் ஜோன்ஸ் பராக்! பராக்!! (3)
நண்பர் : ஆக்சிஜன் உயிர் வாழ மிகவும் அவசியம். அது இல்லாமல் ஒரு நொடிகூட உயிருடன் இருக்க முடியாது. ஆக்ஸிஜன் 1773ல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜோன்ஸ் : அப்படியா!! நல்லவேளை, நான் 1773க்குப் பிறகு பொறந்தேன். அதுக்கு முன்னாடி பொறந்திருந்தா செத்திருப்பேன்.. இல்ல!.
( ரிஷிகுமார் )
No comments:
Post a Comment