Friday, October 24, 2008

"சாரல் 387"

லாவண்யாவின் முக ஜாடை அம்மாவிடம் இருந்தது. இன்னும் முப்பது வருஷங் கழித்து இவனுடைய லாவண்யா இப்படித்தான் இருப்பாள்.
துன்பத்தைக் கண்டு அழுதால் சோர்ந்து போவோம். சிரித்தால் புது வலிமை பெறுவோம்.
"இவங்க அப்பா எப்ப சொந்தமா முடிவெடுத்திருக்கார். அக்கா சொல்ற முடிவு தான் அவரோடதா இருக்கும். அந்த மகராசி டேப் செய்யறதெல்லாம் என்னத்துக்குன்னு சொல்வாள். வேணும்னா பார்த்துக்கோயேன்"
'கடைசி காலத்துல என்னைய கஷ்டபடுத்தாதடா... பொட்டுனு ஒரு ஊசிய போட்டு கொன்னுபுடுடா, உனக்குப் புண்ணியமாப் போவும்!'
உயிரணுக்கள் வாழ்வதற்கு உணவு, உயிர்வளி, நீர்மச் சூழல் ஆகியன இன்றியமையாதன. இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் உணவையும் நீர்ப்பொருளையும் அளிக்கின்றன.
"இதோ வருகிறேன்" என்று மரம்தழுவிச் சென்ற காற்று போன இடம் தெரியவில்லை
கடைக்காரரிடம், ஜோ : "நேத்து வாங்கும் போது ஜப்பான்ல செய்த ரேடியோனு சொன்னீங்க. ஆன் பண்ணினா 'ஆல் இண்டியா ரேடியோ'னு சொல்லுது"
அழிந்துவரும் கடல்வாழ் உயிரினங்களைப் பிடிப்பதைத் தவிர்க்கவும். ஏற்கனவே அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இம்மீனினங்களை விரைவில் இல்லாது போகச் செய்து விடாதீர்கள்.
இதன் புராணக் கதை என்னவென்றால், ருத்ர தாண்டவத்தி‎ன்போது சதிதேவியின் உடலைச் சுழற்றினாராம் சிவபெருமான். அந்த உடல் பல துண்டுகளாக பூமியில் பல இடங்களில் விழுந்து சிதறியது
நம்மிடம் உள்ள சொத்து மதிப்பை அல்ல; ஆனால் நாம் அவற்றுக்கு அடிமையாகி விட்டோமா என்றுதான்.
முகம் சுழிப்பதிலும்
"பரவால்லை.. எ‎ன் பென்சிலை வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறே‎ன் டாக்டர்"
மனதை அடக்க வெகுவாய் முனைந்து பார்த்துத் தோற்றுப் போய் 'இந்தக் குரங்கு அலைந்து திரும்பி அடிபட்டுத் திரும்பி வரட்டும்' என்று விட்டுவிடத்தான் தோன்றியது அவளுக்கு.
ஆம். சகோதரி கேரக்டரேதான். மணிரத்னம் இயக்கத்தில் ராவணனாக விக்ரம் நடிக்கும் 'அசோகவனம்' படத்தில், விக்ரமின் தங்கையாக சூர்ப்பனகை பாத்திரத்தில் பிரியாமணி நடிக்கிறார்.
சொந்தமாகத் தொழில் செய்கிறவர்கள் உண்மையாகவும் எளிமையாகவும் இருப்பது என்பது நடவாத காரியம். இந்த உலகச் சூழலில் இருந்துகொண்டு பணி செய்யும் போது அறநெறி வழுவாமல் இருப்பது என்பதற்கெல்லாம் சாத்தியமே இல்லை

No comments: