Friday, October 24, 2008

"சாரல் 386"

நன்றாக, கலகலப்பாக எல்லோருடனும் பழகுகிற மாணவ மாணவிகளுக்கும், நன்றாக அழகாக உடை உடுத்திக் கொண்டு தலைசீவிக் கொண்டு வருகிற மாணவ மாணவிகளுக்கும் பரிசு கொடுத்தால் என்ன என்று யோசித்தேன்.
''சாப்பிடட்டும் சாப்பிடட்டும்'' என்றார். ''கடைசிச் சாப்பாடு'' என்று முடிக்குமுன் கண் கலங்கினார். ''ஷ்'' என்றான் ரமணி அவர் கையை அழுத்தி.
கேட்டு விட்டு பார்வதி தனக்குத் தானே சத்தமாகச் சொல்லிக் கொண்டாள். "அப்படின்னா பாண்டிச்சேரி ஆஸ்பத்திரில நான் பார்த்ததும் தற்செயலா நடந்ததில்லை"
தனிமையில் கழிக்கப் போகும் வார இறுதி, வெள்ளியன்றே அவளை பயமுறுத்த ஆரம்பிக்க, மதிய உணவு இடைவேளையில் கவனத்தைத் திருப்பலாமென்று கல்லூரியின் வடகோடியிலிருந்த பூங்காவில் உலவி வரக் கிளம்பினாள் அஞ்சனா.
இன்னொரு அதிசயம் - அங்கே தூசு, குப்பை எதுவும் இல்லை என்பதுதான். மரங்களின் இலைகள் உதிர்ந்து குப்பையாகக் காணோம்.

No comments: