Tuesday, September 01, 2009

"சாரல் 432"


"அம்மா, ஒங்க மாதர் சங்கத்துல சொல்லி, செல்லப் பிராணிகளோட பிறப்புரிமையையும் சுதந்திரத்தையும் நிலை நாட்டக் கூடாதா அம்மா, இதுகூட ஒரு சமூக சேவை தானே."
 
இவை தீவிரமாகப் பணியாற்றினால் நமது கைகள் மற்றும் கால்கள் ஆகியவை நீண்டும் பெரிதாகவும் வளர்ச்சியுறும்
சம்பிரதாயமாய் என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லாதே. நீ சொல்லாமலேயே எனக்குத் தெரியும்..."
இந்தக் காலம் தங்களுக்கு, வெளிநாட்டுக்கு செல்லுதல் மற்றும் திருமண பாக்கியம் ஆகிய இரண்டையும் தந்துவிடும்
எம்.ஜி.ஆர் சுழன்று சுழன்று தான் ஆணையிட்டால் என்ன என்ன நடக்கும் என்பதைப் பாடியவாறே தெரிவித்தபோது ஜனங்கள் சொக்கிப் போனார்கள்
மனிதத் தத்துவத்தின் மகோன்னத நிலைகளால் ஆன தெய்வ நாட்டிற்கும், அதன் மிகத் தாழ்ந்த படிகளால் சமைந்த நரகத்திற்கும் இலக்கியம் நம்மை அழைத்துச் செல்கிறது
வனத்திற்கு நடுவில் மலைகள் சூழ எங்கும் பசுமைதான்! நம் மனதிலும் சொல்ல முடியாத ஒரு உணர்வும் மன அமைதியும் ஏற்படுகின்றன
நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று சொல்கிறாயே என்பதற்கு,"காது காது என்றால் லேது லேது என்கிறாயே" என முணுமுணுப்பவர்கள் உண்டு.
"அதனாலென்ன? எவ்வளவுநாள் நீ தனியாக இருக்க முடியும்? நீ என்னையே நினைத்துக்கொண்டிரு என்று க்ரிஷ் எப்போதும் சொன்னதில்லையே."
உன் ஒவ்வொரு அடியிலும் இடதுபுறம் உடைந்து கொண்டு நான்!
ஒரு கணம் உற்றுப் பார்த்து விட்டு அலறினான், "அட, வெங்கட்ரமணியாடா நீ? எப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டே? கன்னம் எல்லாம் குழி விழுந்து.. அந்த நாளில் ஜெமினி கணேசன் மாதிரி இருப்பியேடா?!"
கலாசாரப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் அடக்குமுறையோ வன்முறையோ இத்தகைய விவகாரங்களுக்கு என்றும் தீர்வாக முடியாது. மாறாக, விளைவுகள் குறித்த விழிப்புணர்வும், தனிமனித பொறுப்புணர்ச்சியுமே இப்பிரச்சினை வேரூன்றாமல் தவிர்க்க உதவும்.
"அவர்கள் உள்ளே வந்து தேடக் கூடும் என்ற சந்தேகம் வந்த போது அந்த அறையில் மடித்து வைத்திருந்த இந்த உடையை உங்கள் அனுமதியில்லாமல் எடுத்துப் போட்டுக் கொண்டேன். மன்னிக்கணும். நான் இதைத் துவைத்து உங்களுக்குத் தந்து விடுகிறேன்...."
"ஒருவன் ஆடப் பணயம் இன்னொருவன் வைப்பது எப்படி சரியாகும்?" என்று யுதிஷ்டிரன் கேட்ட கேள்விக்கு, "மாமன் ஆடப் பணயம் மருகன் வைக்கொணாதோ? இதில் வந்த குற்றமேதோ?" என்று ஒரே அடியாக அடித்து விட்டான் துரியோதனன்.
பூர்வீகச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்த பிரச்சனைகள் மாறி மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ள காலமாகும்.


No comments: