சாரல் : 293 பொழிந்தது : ஜனவரி 1, 2007
கடவுள் நம்பிக்கை மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்றாது. அவர்களுக்காவது, தவறு செய்தால், கண்ணைக் குத்துவதற்கு ஒரு கற்பனைக் கடவுள் உண்டு. மாறாக, பாவ புண்ணிய கணக்கில், மறுபிறப்பில், விதியில், கடவுளில், சடங்குகளில் நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்கள், தம் நடத்தைகளை தம் எண்ணங்களால் சீர்தூக்கி, கொள்வன கொண்டு, குறைப்பன குறைத்து, தனக்கும், சமூகத்துக்கும் பயனுள்ள ஒரு மாமனிதனாக வாழமுடியும்,
( கு.சித்ரா ),
2006ம் ஆண்டைத் தமிழ்த் திரையுலகின் பொற்காலம் என்று சொல்லலாம். இதற்கு முந்தைய 2005ம் ஆண்டில் எடுக்கப்பட்ட எழுபது தமிழ்ப் படங்களில் மொத்தம் ஆறு படங்களே பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி கண்டன.
( ஜன்பத் ),
உலகப்போரை நிறுத்தியிருக்கலாமோ?
நான் சொல்வதை நம்புவதற்குக் கடினமாக இருக்கும். கிறிஸ்துமஸ் அன்று அதிகாலை ஒரு மணிக்கு நான் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிப் பகுதியிலிருந்த வீரர் ஒருவர் எனக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்தும் காலை வணக்கமும் சொன்னார்.
( நிலா ),
நாட்டியப்பேரொளி திருமதி.பத்மினி சிறு குழந்தையைக் கையில் ஏந்தியவாறு 'மங்கையர் திலகம்' படத்தில் பாடிய 'நீலவண்ணக் கண்ணா வாடா ' என்ற பாடல் நான் ரசித்த பாடல்களில் ஒன்றாகும்.
( பிரேமா சுரேந்திரநாத் ),
ட்ராவிஸின் இருப்பிடத்தையும் சோதித்துப் பார்த்ததில் அவன் ஒரு கயவன் என்று மட்டும் தெரிகிறது.ப்ளாரிடா மாநிலத்திலும் அட்லாண்டாவிலும் பெண்களைக் கொடுமைப் படுத்தும் சட்டத்தின் கீழ் கைதானவன் என்பது மட்டுமே அவனைப் பற்றிய விஷயம் அவர்களுக்குக் கிடைத்து இருக்கிறது.
( சுகந்தி ),
ஒரு ஆண்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் எழுதுவது சாத்தியமல்ல. தமிழ்நாட்டிலும், மத்திய அரசிலும் நடந்த முக்கியமான நிகழ்வுகளின் செய்திச் சிதறல்களின் தொகுப்பு இது.
( ஜபர ),
சென்ற மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் எனப் பெருமை பெற்றார் அனில் கும்ப்ளே.
( ஜன்பத் ),
தாமிராவின் கேள்வி தாராவை நிலைகுலைய வைத்தது. என்ன சொல்வது என்று அவள் தடுமாறுவதற்குள் ஈஸ்வரன் மருமகளைப் பார்த்து எரிச்சலுடன் சொன்னார். "அந்த விஞ்ஞானியைப் பத்திக் கேட்டு கேட்டு எனக்குக் காது புளிச்சுடுச்சு. உங்கம்மா கிட்டயும் அந்த ராமாயணத்தை ஆரம்பிச்சுடாதே".
( என்.கணேசன் ),
எது நல்ல கதை என்று இவர்களிடம் கேட்டால்.....
குடிகாரர்: "என்னதான் கதை அப்படி இப்படி போனாலும் அதன் மெயின் தீம் ஸ்டெடியா நிக்கணும்"
( மெலட்டூர்.இரா.நடராஜன் ),
வெளிநாட்டுப் பயண வாய்ப்பு இன்னும் 9 மாதம் சென்ற பின்பு தங்களைத் தேடி வரும். அதைப் பயன்படுத்தி நல்ல வெளிநாட்டு உத்யோகத்தில் சேர்ந்து விடுவீர்கள். தற்பொழுது சொந்தத் தொழிலுக்கு முயற்சி செய்யாமல் வேறு ஒரு இடத்தில் வேலைக்கு அமர முயற்சி செய்யுங்கள்.
( குருஜி கார்த்திகா சித்தார்த் ),
"கேன்ஸர் இன்ஸ்டிட்யூட் கிட்ட, ராங் சைட்ல வந்தா. கார் மோதி, சைக்கிள் அவமேல விழுந்துருத்து! அவ பேக்ல ஐஐடி அட்மிஷன் கார்ட் பார்த்து, இங்க கூட்டிண்டு வந்தேன். அடிப்பட்டப்ப கூட நல்லா தான் இருந்தா. கார்ல தான் மயங்கிட்டா போல" மூச்சு வாங்கிக்கொண்டே சொன்னாள்.
( நரேன் ),
ஊரோர ஆலமரம் வேலியோரத்துக் கள்ளிகள் பள்ளிக்கழிப்பறை அரசாங்கப் பேருந்து நான் சுவாசித்துவிடும் காற்று எல்லாவற்றிலும் எழுதியிருக்கிறேன் நம் காதலை!
( சிலம்பூர் யுகா ),
'சாப்ட்வேர் கம்பெனியின் பணிமனை, செயற்கையின் சொர்க்கமாக இருந்தது. வரவேற்பறையில் நுழைந்து கொண்டிருந்த நித்யா சிநேகிதியின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.
( P.நடராஜன் ),
இராசி பலன்கள் 1-7-2007 முதல் 7-7-2007 வரை
சிம்மராசி அன்பர்களே கேது நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயங்களில் கவனம் தேவை.பொதுத் தொண்டுகளில் பிரியமுடன் சென்று பணியாற்ற வாய்ப்புள்ளது. அந்நிய நாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
( டாக்டர் ப. இசக்கி ),
நான் தேடியோடி வரவழைத்துக்கொள்ளும் தனிமையிலா? தங்காமல் ஒடிவிடும் கனவுத் துளிகளிலா? தேங்கும் மழையிலோ? காலத்திலோ? இல்லை பூசணி சிரிக்கும் புள்ளிக் கோலத்திலா?
( லேனா.பழ ),
தமது பரமார்த்த சிஷ்யன் என்று நினைத்துக் கொண்டிருந்த ஜவஹர்லால் இப்படி அதி தீவிரமாகப் போவது காந்திஜிக்குப் பிடிக்கவில்லை. தமது மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி ஜனவரி 4,1928 ல் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
( டி.எஸ்.வேங்கட ரமணி ),
''மீனாட்சி! ஏழு மணிக்கு அம்பாளுக்கு அர்ச்சனை, மச மச மசன்னு நிக்காம நைவேத்ய வேலையப் பாரு. ஆறரைக்கு புளியஞ்சாதமும், சக்கரப் பொங்கலும் ரெடியா இருக்கணும்'', சிவபால குருக்கள் கட்டளையிட்டுவிட்டுப் போனார்.
( திரு ),
கடவுள் கேட்காத ஒன்பது விஷயங்கள்
நீ எவ்வகையான காரை ஓட்டுகிறாய் என்று கடவுள் கேட்க மாட்டார்; வாகனமில்லாத எவ்வளவு பேரை நீ ஏற்றிக்கொண்டு சென்றாய் என அவர் கேட்பார்.
( ஆ.கி. இராஜகோபாலன் ),
Whatever God does is for your good; God Cares; God Cares Only; Only God Cares. Happy 2007 to all of you; Happiness always, in all ways!
( N C Sangeethaa ),
ம்! ஏண்டி இப்போ கொட்டாவி விடுறே? ரொம்ப சீரியஸா போயிட்டேனோ! ஸாரிடி! இனிமே இப்பிடி படுத்தமாட்டேன். உனக்கு தலையே வெடிச்சுடும்போல் ஆயிருக்குமே இப்ப. தலை பயங்கரமா வலிக்குதில்லே? அடடா, எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு! என்ன செய்யிறது, என் பேச்சைக் கேட்க யாருமில்லையடி பெண்ணே, உன்னைத்தவிர?
( நட்சத்ரன் ),
No comments:
Post a Comment