Monday, January 29, 2007

சாரல் 297

சாரல் : 297 பொழிந்தது : ஜனவரி 29, 2007

அரசியல் அலசல்

இப்போ உலகத்துலேயே தைரியமான தலைவர் யார்னு கேட்டா உலகமே ஜெயலலிதான்னுதான் சொல்லுது- அவங்க ஆயிரம் இந்திராகாந்திக்குச் சமம் -அ.தி.மு.க எம்.எல்.ஏ, நடிகர் எஸ். வி. சேகர். நாம்: சும்மாவா சொன்னாங்க உங்களை நல்ல நகைச்சுவை நடிகர்னு?

( ஜபர )


சினி வம்பு - அங்கிருந்தும் இங்கிருந்தும்

விஜய் நடித்து வெளியாகி இருக்கும் போக்கிரி கேரளாவில் வசூலில் ஒரு சாதனை படைத்திருக்கிறது. படம் ஓடிய முதல் வாரத்திலேயே 14 லட்சத்திற்கு மேல் வசூலாம். கேரளாவில் இது வரை வெளியான தமிழ்ப் படங்களில் அதிக வசூல் பெற்ரு சாதனை செய்திருப்பது போக்கிரிதானாம்.

( ஜன்பத் )


குழந்தையைத் தொலைத்து விட்டேன்

"பிள்ளை பிடிக்கிற கும்பல் ஒண்ணு மாட்டிச்சு.. அதுல ஒரு பையன்.. இந்த ஊர்னு சொல்றான்.. ஏழெட்டு வருஷம் முன்னால கடத்தினாங்களாம்.. உங்க பையனா இருக்குமா.. பாருங்க" இவளைத் திரும்பிப் பார்த்தேன்.

( ரிஷபன் )


விலங்குகளை எப்படிப் படம் எடுக்கிறார்கள்?

வேகமாக ஓடும் சிறுத்தை, மான், பாய்ந்து இரையை அடிக்கும் புலி, சிங்கம், வானில் உயரப் பறக்கும் குட்டிப் பறவைகள் - இவை அனைத்தும் தங்களுடன் சிறிய கேமராக்களைக் கட்டிக் கொள்வதாலேயே படப்பிடிப்பு அனைத்தும் எடுப்பது சாத்தியமாகிறது.

( ச.நாகராஜன் )


கற்கை நன்றே கற்கை நன்றே

புத்தகங்கள் மகத்தான சக்தி வாய்ந்தவை, சிந்திக்க சிந்திக்க, நொடிக்கு நொடி புத்தம் புதிய கருத்துக்களை வீசிக்கொண்டே இருக்கும். சிந்திப்பவனே மனிதன். அத்தகைய சிந்தனையை செம்மையாக்க உதவுபவை அறிஞர் தம் நூல்கள். புத்தகங்களை படிப்பதைவிட, படிப்பதற்குரிய புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் தான் அதிக கவனம் வேண்டும்.

( கு.சித்ரா )


வெற்றிக்கான சிந்த‎னைகள்

|தளராத முயற்சிக்கு ஈடாக உலகில் எதுவுமே இல்லை. திறமை கிடையாது. திறமையிருந்தும் வெற்றியடையாதவர்கள் ஏராளம். மேதாவித்தனம் கிடையாது. பலன் கிடைக்காத மேதாவிகளின் கதைகள் பிரபலம். படிப்பு கிடையாது. படித்தவர்களில் தோல்வியாளர்கள் பலர் இருக்கிறார்கள். திடமான உறுதியும், விடாமுயற்சியுமே சர்வ வல்லமை படைத்தவை.

( ஜ.ப.ர. )


ஆப்பிள் கனவு

ஆராய்ந்து பார்ப்பதில் அர்த்தமில்லை.. இதயம் துடிக்கும் ஓசை - புல்லாங்குழலின் நாதம் விடவும் மேன்மையானது..

( ராசி )


நான் ரசித்த பாடல் (7)

'நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறி விடு. மலையோ அது பனியோ நீ மோதி விடு. '

( பிரேமா சுரேந்திரநாத் )


காவிய நாயகன் நேதாஜி (35)

1930 ல் தொடங்கிய பத்தாண்டு இந்திய விடுதலைப் போரில் முக்கியமான காலகட்டம். உப்பு சத்தியாக்கிரகத்தில் தொடங்கி நமது சம்மதமில்லாமல், நமது நாட்டை இரண்டாவது உலகப் போரில் பிரிட்டன் ஈடுபடுத்தியதற்குக் கண்டனம் தெரிவித்து மாகாணக் காங்கிரஸ் மந்திரிகள் ராஜிநாமா செய்ததில் முடிவடைந்தது.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


நீ நான் தாமிரபரணி (55)

வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே மாதுரிக்கு மனம் திக் திக் என்று இருந்தது. போவதற்கு நேரம் நெருங்க நெருங்க அவள் படபடப்பு அதிகமாகியது. அருணின் நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்தால் பிள்ளையாருக்கு நூற்றியொரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டாள்.

( என்.கணேசன் )


நானென்றும் நீயென்றும (51)

"மாப்பிள்ளையை என்ன விட்டுட்டு? மாப்பிள்ளையே வேண்டாம் என்றுதானே யாரோ ஒரு பொறுக்கியோடு ஓடிப்போய் இப்படிக் காலை உடைத்துக் கொண்டு வந்திருக்கிறாள் உங்கள் மகள்" கோபமாகப் பொரிந்தார் கமலா.

( சுகந்தி )


சுவையான ரசவகைகள்

புளியைக் கொதிக்கவிட்டு நீர்க்கரைசலை தயாரித்துக் கொள்ளவும்.உப்பும், வெல்லமும் சேர்த்துக் கொதிக்க வைத்துக் கொண்டு, தாளிக்கும் கரண்டியில் சிறிது நெய் ஊற்றி துண்டுகளாக்கிய சிகப்பு மிளகாயுடன் பெருங்காயம், கடுகு, வேப்பம்பூவைச் சற்று வறுத்து, ரசத்தில் கொட்டி மூடி வைக்கவும். சற்றும் கசப்பில்லாமல் சுவையாக இருக்கும்.

( பிரேமா சுரேந்திரநாத் )


Deepavali – Music Review

Ezhil who has got hit flicks like “Thullaadha mananum thullum”, “Poovellaam un vaasam” to his credit, is back with Deepavali. This is Lingusamy’s maiden production and has music by Yuvan Shankar Raja. Ezhil is known for extracting wonderful songs from the music directors he had worked with in his previous films. Here too, he has inspired Yuvan to come out with brilliant songs.

( Vignesh Ram )


ராசிபலன்(சிறுகதை)

அடுப்பில் ரசத்துக்கு கடுகு தாளித்துக் கொண்டிருந்த லலிதா, ''அம்மா,அம்மா, இன்னிக்கு ராசி பலனில் உன் ராசிக்கு அமோகமா போட்டிருக்கு.''என்று கத்திக் கொண்டே வந்த தன் மகள் மாலினியிடம், ...

( புஷ்பா ராகவன் )


இந்திய நாட்டுச் சட்டங்கள்

இந்திய நாட்டுச் சட்டவிதிகள் பெரும்பாலும் ஆங்கிலேய நாட்டுப் பொதுச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றன. இந்தியச் சட்டங்கள் முதன் முதலாகப் பிரிட்டிஷாரால் அவர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தபோது கொண்டு வரப்பட்டன. பிரிட்டிஷ்காரர்கள் வகுத்த பல விதிகளும், ஆணைகளும் இன்றும் இந்தியாவில் அமலில் இருக்கின்றன.

( டி.எஸ்.பத்மநாபன் )


செய்திகள் அலசல்

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா உலக சமாதானத்திற்கான அதிருத்ர மஹாயக்ஞத்துக்காக சென்னை வந்திருக்கிறார். முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்கு அவர் சென்றது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி. முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் அவர் காலில் விழுந்து வணங்கியிருக்கிறார்.

( ஜ.ப.ர. )


அதீதாவுக்கு.. மடல் - 21

வீடு எரிந்து கொண்டிருக்கையில் நிம்மதியாகத் தூங்கும் மூடனடி நான். இதை உணரும் இந்தக் கணத்தில் தொண்டையை அடைக்குதடி துக்கம்! எப்போதுதானடி நான் துயிலெழுவேன்? எப்போதடி நிகழும் என் விடுதலை? எப்போதடி தப்பிப்பேன் வாழ்க்கை என்னும் கொடிய எரியும் தழலின் பிடியினின்று? சொல்லடி அம்பிஹே! சொல்!

( நட்சத்ரன் )


இராசி பலன்கள் 29.012007 முதல் 04.02.2007 வரை

துலாம்ராசி அன்பர்களே சூரியன் உங்களுக்கு நன்மை தரும் கிரகமாகும். செல்வாக்கு, புகழ் கூடும். உத்தியோகத்தால் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் மூலம் நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகளினால் சில தொல்லைகள் வந்து விலகும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் உண்டு.

( டாக்டர் ப. இசக்கி )


His Name is Siva Shankar..(232)

There is a voice of God inside you. He will always direct your actions, telling you ‘do this; don’t do this’. If you obey, you will always be in joy. If you disobey your inner voice that is the Divine Command, you will feel land yourself in sorrow. So, always follow the dictums of divinity. Nothing can go wrong with your life.

( N C Sangeethaa )


உறவுகள்

காதலி மணமாகிப்போனால் காதலனின் உறவு முட்டாள்தனமாய்! வசதி இல்லாதவர்களின் உறவு வசதியானவர்களுக்கு பைத்தியக்காரத்தனமாய்!

( சிலம்பூர் யுகா )


No comments: