Monday, January 15, 2007

சாரல் 295

சாரல் : 295 பொழிந்தது : ஜனவரி 15, 2006

வெயில் - திரைவிமர்சனம்

விருதுநகரின் புழுக்கமான சந்துபொந்துகளில்தான் கதை நகர்கிறது. பசுபதியும், பரத்தும் சகோதரர்கள். அன்புக்கு ஏங்கும் பசுபதி - ஆனால் அது கிடைக்காமல் போகும் பரிதாபம். துறுதுறு இளைஞன் பரத் - விளம்பர கம்பெனி நடத்துகிறார். இருவரது பள்ளிப்பருவத்திலிருந்து கதை ஜோராக ஆரம்பிக்கிறது.

( ரிஷிகுமார் )


அரசியல் அலசல்

தமிழக அரசு பொங்கல் நாளை முன்னிட்டு இலவச காஸ் அடுப்பு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அடுப்பும் இணைப்பும் இலவசமாம். காஸின் விலை 300 ரூபாயைப் பயனாளிகள் செலுத்த வேண்டுமாம். மாதாமாதம் காஸ் வாங்குவதற்குப் பணமிருப்பவர்கள் அடுப்பை வாங்கிக்கொள்ள மாட்டார்களா? இந்த அடுப்படி காஸ் திட்டம் அடிப்படையிலேயே கசியும் திட்டம்.

( ஜபர )


நான் செஞ்சது தப்பா?

"வருஷத்துக்கு ரெண்டு தடவை ஃபீஸ் கட்டினது போக அதிகப்படியாவே மிஞ்சுதுய்யா. நான் மட்டும் படிச்சு முன்னேறினாப் போதுமா.. என்னை மாதிரி எங்க ஊர்ல சில மாணவர்கள் சிரமப் படறாங்க. அவங்களுக்கு ஃபீஸ் கட்ட யூஸ் பண்ணிக்கிட்டேன். நான் செஞ்சது தப்பாய்யா" மனசெல்லாம் சிலிர்த்துப்போக ஜவஹரை அப்படியே கட்டிக் கொண்டேன்.

( ரிஷபன் )


புதையல் வேண்டுமா?

காலம் என்பது யாருக்காகவும் காத்திருக்காது; நேற்று என்பது ஒரு சரித்திரம்; நாளை என்பது ஒரு மர்மம்; இன்று என்பது நிச்சயம் ஒரு வெகுமதி;

( வை. கோபாலகிருஷ்ணன் )


ஹாலி, பாலி, கோலி--- ஜாலி!

திரெளபதி வஸ்திராபரணம் என்ற புராணப்படம் 1917 ல் வெளியானது. தயாரிப்பு நடராஜ முதலியார். இதில் திரெளபதியாக நடிப்பதற்கு எந்த தமிழ்ப் பெண்ணும் முன்வராததால் வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவர் நடித்தாராம்.

( ஜன்பத் )


நானென்றும் நீயென்றும் (49)

இந்த பூஜா என்ன இப்படி விளையாட்டுத்தனமாகவே இருக்கிறாள்? எல்லாமே இவளுக்கு விளையாட்டுத்தானா? இல்லை அப்படி நடிக்கிறாளா? பட்டென்று ஏதாவது அவளுக்கு வலிக்கும்படி சொல்ல வேண்டுமென்று நாக்குத் துடித்தது.

( சுகந்தி )


நீ நான் தாமிரபரணி (53)

தாரா பேச்சிழந்தது போல ஓரிரு நிமிடங்கள் அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் எல்லையில்லாத சோகம் படர்ந்தது. பிறகு உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள். "சில விஷயங்களை திருப்பி கொண்டு வர்ற சக்தி நம்ம கிட்ட இல்லை சார். அப்படி இருந்திருந்தா எவ்வளவோ நல்லா இருக்கும். விதி தீர்மானிச்சுட்ட விஷயங்களை மனுஷன் மாத்திட முடியுமா சார்?"

( என்.கணேசன் )


ஜோதிடம் கேளுங்கள்

எப்பொழுது எனக்கு திருமணம் நடக்கும்? எனது குடும்பவாழ்க்கை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும்?

( குருஜி கார்த்திகா சித்தார்த் )


காவிய நாயகன் நேதாஜி (33)

எது எப்படியிருந்த போதிலும், தீவிரவாதத்துக்கும், வன்முறைக்கும் ஆதரவும் அனுதாபமும் பெருகி வருவது காந்திஜியின் மனத்தில் ஒரு பீதியை ஏற்படுத்தி விட்டது. விரைவிலேயே, அஹிம்சை முறையிலான ஒரு தீவிரப் போராட்டத்தைத் தொடங்காவிட்டால், வன்முறையாளர்கள் மற்றும் தீவிரவாதிகள் கை ஓங்கிவிடும் என்று அவர் புரிந்து கொண்டார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


நான் ரசித்த பாடல் (5)

கவிஞர் கண்ணதாசன் காதல் கனிரசம் சொட்டும் ஸ்ருங்காரப் பாடல்களை மாத்திரமின்றி வாழ்க்கையின் நிலையாமையைக் குறித்த தத்துவப் பாடல்களையும் எழுத வல்லவர் என்பதை அனைவரும் அறிந்ததோடன்றி அப்பாடல்களை நாம் திரும்பத் திரும்பக் கேட்டும், சுவைத்தும் மகிழ்ந்திருக்கிறோம்.

( பிரேமா சுரேந்திரநாத் )


உங்கள் கூடவே நிரந்தரமாக இருக்கும் இரண்டு டாக்டர்கள்!

தினமும் விடாமல் அரை மணி நேரம் நடப்பதால் கவர்ச்சி, அழகு, ஆரோக்கியம், நீடித்த ஆயுள் நிச்சயம்.ஆகவே உங்களுடன் கூடவே இருக்கும் இரண்டு டாக்டர்களைச் சற்று போற்றி மதியுங்கள்; அதன் மூலம் வலிமை வாய்ந்த உடலுடன் சமுதாயத்தில் மதிப்புடன் வாழுங்கள்!

( ச.நாகராஜன் )


Paruthi veeran – Music Review

Ameer’s previous ventures “Mounam pesiyadhe” and “Raam” were backed up by Yuvan’s songs and background score. The successful combination is back in “Paruthiveeran”, but into neck deep rustic folk this time.

( Vignesh Ram )


நாயகன் ஒரு நங்கை (25)

அன்று இரவு முழுவதும் அழுது கொண்டே தான் இருந்தாள். காலையில் மணப்பந்தலில் அமர்ந்துகொண்டோம். இன்னும் சோகமாகவே காணப்பட்டாள். அவள் சித்தப்பாவின் மடியில் அவளை அமர்த்தி நான் திருமாங்கல்யத்தை அவள் கழுத்தில் கட்டும் சமயத்தில், யாரோ என் பின்னாடி உதைத்தார்கள். "நான் இல்லாம தாலி கட்டிடுவியாடா?"

( நரேன் )


His Name is Siva Shankar..(230)

Lord Siva says, 'People are fighting over religion and are dying. So go and remove their confusion...' and goes on to complete, 'loving all forms of life is what is dear to me. Fighting and dying over religion is not.'

( N C Sangeethaa )


இராசி பலன்கள் 15.012007 முதல 21.01.2007 வரை

விருச்சிக ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். உங்களுக்குத் தீராத நோய்களும், கடன் தொல்லைகளும் தீரக்கூடிய காலமாகும். எதிர்பாராத தனம் கை வந்து சேரும். தொட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

( டாக்டர் ப. இசக்கி )


காக்கைப் பொன்

சொற்பொறி அழகேசன். அவனது நிஜப்பேர் என்ன என்று இன்றுவரை அவளுக்குத் தெரியாது. சொந்தப்பேரை அவனே விரும்பவில்லை போல. தாய் தந்தை யாருமே இல்லை அவனுடன். சின்ன வயசிலேயே வீட்டில் கோபித்துக் கொண்டு ரயிலேறியவன்.

( எஸ். ஷங்கரநாராயணன் )


பாட்டியின் கதைகள் (29)

கும்பகோணம் அருகில் சுவாமி மலை முருகன் கோவில் இருக்கிறது. அங்கு பொன்னன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் தொடர்ந்து பருவமழை தவறியதால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பிழைப்புக்காக நிறைய பேர்கள் குடும்பம் குடும்பமாக ஊரை விட்டு வெளியேறினார்கள்.

( P.நட‎ராஜன் )


மகனுக்கு தோழனாய்...

இனிய மகனே எனக்காக எழுதுகிறேன் இருந்தும் இது உனக்காகவும். உபதேசமென்று நினைத்து ஒதுக்க வேண்டாம்!

( சிலம்பூர் யுகா )


செய்திகள்அலசல்

புதிய வாட் முறையில் மூலப்பொருளை வாங்குகிற போது கொடுக்கிற வரியை, அதன் மூலம் உற்பத்தி செய்து விற்கிறபோது கொடுக்க வேண்டிய வரியில் கழித்துக் கொள்ளலாம். இதன் மூலம் விற்பனை விலை ரூ.114.40 தான் ஆகும் என்று கணக்கிடப்படுகிறது. இந்த வரிகள் நுகர்வோரிடமிருந்தே பெற்று செலுத்தப்படுகிறது. எனவே புதிய முறையில் நுகர்வோருக்கு லாபம் ரூ. 3.12.

( ஜ.ப.ர. )


தேவை இரண்டு கிளிகள்!

நீ! என் இதயத்தைத் தின்றது போதாதென்று கனவுகளையும் களவாடுகிறாய்.. இமைகளின் மேல் அமர்ந்து கொண்டு கொட்டமடிக்கும் உன் சிரிப்பை-நான் எப்படிப் புறக்கணிப்பது?

( ராசி )


No comments: