Friday, November 16, 2007

சாரல் 338

ஜோதிடம் கேளுங்கள்

கல்வி ஸ்தானாதிபதி வியாழன் 9ஆம் இடத்தில் உச்சம் பெற்றுள்ளதால் தீர்க்கமான உயர்ந்த படிப்புப் படிக்க வாய்ப்பு உள்ளது. கம்ப்யூட்டர் துறையில் படிக்க வைத்தால் மிகவும் நன்று

(ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M)


திரட்டி வந்த சினி செய்திகள்

திரை உலகில் எதிரும் புதிருமாக இருந்த 'தலயும் தளபதியும் ஒண்ணாயிட்டாங்க' என்பதுதான் இப்போது அவர்களின் ரசிகர்களுக்குத் தலையாய சேதி. அஜீத்தைத் தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருக்கிறாராம் விஜய்

( ஜன்பத் )


நிலாவட்டம் (21)

என் ஆட்களுக்கு இதுவரை எந்த வசதிக் குறைவும் வைத்ததில்லை. மற்ற காண்டிராக்டர்களை விடவும் கூடுதலாய்த்தான் செய்கிறேன். இருக்க விருப்பப்பட்டால் தொடர்ந்து வேலை செய்யட்டும். இல்லாவிட்டால் எப்படி வேலையை முடிப்பது என்று எனக்குத் தெரியும்

( ரிஷபன் )


சாமரங்கள்

வாழ்க்கையில் எல்லோரும் முன்னேறுவார்கள். சரளி வரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம், வர்ணம், கீதம், கீர்த்தனை என்று... இவள் ராகம், தாளம், பல்லவி பாடக் கூடிய வித்வாம்சினியாக இருந்தும் இப்போது சரளி வரிசையில் நிற்கிறாள்!

( விமலா ரமணி )


மனிதரில் எத்தனை நிறங்கள்! (19)

Beliefs dictate our experience whether we realize it or not. We automatically notice things we're expecting to see, because we're looking for them. In this way, the world largely conforms to our beliefs about it. - Rich Rahn "வீணையையும், டிரஸ்ஸிங் டேபிளையும், அந்த பீரோக்களையும் ஆர்த்தி இதயம் கனக்கப் பார்த்தாள். அப்போது அறை வாசலில் "ஹாய்" என்ற குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்த போது அறைக் கதவில் கை வைத்தபடி அழகான திடகாத்திரமான ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்."

( என்.கணேசன் )


பூரி ஜகன்னாத்

ஜூலை மாதம் வரும் அமாவாசைக்கு இரண்டு நாள் கழித்துப் பிரம்மாண்டமான தேரோட்டம் பூரியில் நடைப் பெறும். பத்து நாட்கள் முன்பே கல்யாணக்கோலம் கொள்ளும்.

( விசாலம் )


அரசியல் அலசல்

கட்சியில் இளைஞர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் - கருணாநிதி (நீங்கள் ஸ்டாலின், கனிமொழிக்கும், ராமதாஸ் அன்புமணிக்கும், சோனியா ராகுலுக்கும் வழி விட வேண்டும் - அப்படித்தானே!)

( ஜ.ப.ர)


உலகின் மிக நீண்ட மெகா மெகா மெகா சீரியல்!

உலகின் மிக நீண்ட டி.வி.டிராமா என்ற புகழைப் பெறுவது கைடிங் லைட் என்ற பிராக்டர் அண்ட் கேம்பிள் புரடக்ஷன்ஸின் தயாரிப்பு தான்! இது 1952-ம் வருடம் ஜூன் 30-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை நடக்கிறது. கின்னஸில் இடமும் பிடித்து விட்டது!

( ச.நாகராஜன் )


சூரியனுக்கு சுப்ரபாதம் : 2. வழமையான செயல் திட்டங்களையும் மிஞ்சி சாதிக்கும் துடிப்பு

வழக்கத்தை மிஞ்சிய சாதிக்கும் துடிப்பு இருக்கிறதா உங்களிடம்? நீங்களே வெற்றியாளர்!

( ஜெயந்தி சங்கர் )


வெற்றிக்கலை (6) : இனிமையான ஆளுமை

புற அழகு சிறிது அனைவரையும் கவரவே செய்யும். ஆனால் அக அழகு,உள் அழகு,பலவித நல்ல குணங்களால் விகசித்து மலரும் உள்ளழகு மட்டுமே நிலைத்து நிற்கும் பயனைத் தரும். பொக்கை வாய்க் கிழவரான மகாத்மாவிற்கு உலகமே அடிபணியவில்லையா? உலகிலேயே குள்ளமான படைத் தலைவனான நெப்போலியன் காலில் உலகமே விழவில்லையா?

( ச.நாகராஜன் )


Benazir Bhutto

Former prime minister of Pakistan, dismissed for alleged corruption - Benazir Bhutto Profile

( PS and Gayathri )


செய்திகள் அலசல்

இங்கிலாந்து நாட்டின் பிளைமவுத் பல்கலைக் கழகப் பேராசிரியர் ராய்லாரி என்பவர் 55000 ராக்கெட் பட்டாசுகளை இணைத்து ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்தார். இதுவும் ஒரு கின்னஸ் சாதனை.

( ஜ.ப.ர. )


இராசிபலன்கள் (12.11.2007 முதல் 18.11.2007 வரை)

சிம்ம ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். வடதிசையில் இருந்து நற்செய்திகள் கிடைக்கும். பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் நன்மை அடைவார்கள

( டாக்டர்.இசக்கி )


முள்ளங்கி ஆம்லெட் மற்றும் ஜவ்வரிசி பாத்

ஊற வைத்த அரிசியை சிறிது அரைத்த பின்னர் முள்ளங்கித் துண்டுகள், தனியா, ஜீரகம், பூண்டு, வெங்காயத்துண்டுகள், உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொண்டு தேவையான அளவு நீர் சேர்த்துக்கொள்ளவும்.

( பிரேமா சுரேந்திரநாத் )


போனஸ

நிலாவின் "நானென்பதை மறந்து.." சிறுகதை இந்த வார போனஸ் – உறுப்பினர்களுக்கு மட்டும்

( nilateam )


சற்றே நகுக!

ஒரு மன நல மருத்துவ மனையில்: "ஏன், ஐம்பது பைத்தியங்களுக்கே உள்ள இடத்தில் நூறு பேரை அட்மிட் செய்திருக்கீங்க?" எல்லோருமே அரைப் பைத்தியங்க தானே!!

( ஜன்பத் )


His Name is Siva Shankar..(273)

learn to transform your thoughts, lessen your needs and share what you can with others, and you will start tasting the nectar of love.

( N C Sangeethaa )


பீச்சோரக்கவிதைகள்

வானத்து விமானத்தைப் பிடிக்கமுயலும் சிறுவனது பட்டம்! குறைவானதுதான், பட்டக்கயிற்றின் நீளம் சிறுவனது முயற்சியல்ல!

( சங்கரன் )


குகை ரயில் [1]

அவர் வாழ விரும்பினார். ஆசைப்பட்டார். மருத்துவர் தவிர்க்கச் சொன்ன உணவுகள் அவருக்கு அதிக ருசியாய் இருந்தன. நாவின் அடியில் ருசி இன்னும் மரத்துப் போகவில்லை. மறந்து போகவில்லை. மிச்சமிருந்தது.

( எஸ்.ஷங்கரநாராயணன் )


கனவின் ஆளுமை

"நேரில் பேச இயலாமல் போன சின்ன வயசு சிநேகிதி கனவில் அநாயசமாய் ஒரு புன்னகை வீசிப் போகிறாள்"

( ரிஷபன் )


Another

" Looking to you, we did not go for another though grannies did not agree- living a life spinning around you? "

( A.Thiagarajan )


பூமிக்குப் பெயரில்லை

"பூமிக்குப் பெயரில்லை பூமி மட்டும் இங்கில்லை வானுக்கும் பெயரில்லை இது மட்டும் வான் இல்லை! "

( நட்சத்ரன் )


No comments: