Monday, November 20, 2006

சாரல் 287

சாரல் : 287 பொழியும் நாள் : நவம்பர் 20, 2006

சிறந்த படைப்புக்கு பரிசு!!

ஒவ்வொரு மாதமும் நிலாச்சாரலில் இடம் பெறும் அனைத்து படைப்புகளும் ஆசிரியர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஒரு சிறந்த படைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்ந்தெடுக்கப்பட்டவர் பற்றிய குறிப்பும் புகைப்படமும் நிலாச்சாரலில் வெளியாகும். அவருக்கு நிலாஷாப் வழங்கும் பரிசும் உண்டு. ஜூன் மாத சிறந்த படைப்பாளர் பற்றிய விபரம் இங்கே....

(நிலா டீம்)

நடிகன்

வாசலில் வண்டியொன்று அறிவித்துப் போனது. மன்மதன் நம் ஊருக்கு வந்து, மாலை ஏழுமணிக்குப் பேசப் போவதாக ஒலிபெருக்கி ஒலிசுருக்கிப் போனது. வரவிருக்கிற தேர்தலில் நாற்காலி சின்னத்துக்கு ஓட்டுப்போடுங்கள், என மகாஜனங்களிடம் அவன் கேட்கப் போகிறான்.

(எஸ். ஷங்கரநாராயணன்)


சிரித்து வாழ வேண்டும்
நீதிபதி (குற்றவாளியிடம்): பயங்கரமான ஆயுதங்களைக் கோர்ட்டுக்குள்ள கொண்டுவரக் கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதா?
குற்றவாளி: அப்போ நீதிபதி ஐயா மட்டும் கையிலே சுத்தி வச்சுக்கலாமா?

(ஜன்பத்)


பிரமிப்பூட்டும் பிரமிட்டுகள்

உக்ரைன் நாட்டில், Luganshchina என்னும் இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிரமிட் உலக சரித்திரம் பற்றிய இதுவரையிலான கணிப்பில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தப் பிரமிட்டின் மேற்பகுதி மாத்திரமே இப்பொழுது தெரிகின்றது. இதைச் சுற்றியுள்ள மண்ணை முழுமையாக அகற்றி, முழுமையாக வெளிப்படுத்த, இன்னும் ஒரு தசாப்த காலம் எடுக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

(ஏ.ஜே.ஞானேந்திரன்)


சொல்லுவதறியேன் வாழி! தோற்றிய தோற்றம் போற்றி!!

வேகமும் பரபரப்பம் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு ஆட்டிப்படைக்கும் நவீன உலகிற்கு ஏற்றதான அவதாரம் ஒன்று தேவை என்று இறைவனே திருவுள்ளம் கொண்டு சத்யசாயி பாபாவாக புட்டபர்த்தியில் அவதாரம் எடுத்த அதிசய அற்புதமான காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது ஆச்சரியகரமான உண்மை!

(ச.நாகராஜன்)


நானென்றும் நீயென்றும் (41)

துச்சாதனன் போல ட்ராவிஸ் பூஜாவை வீதியில் இழுத்துச் சென்றான். வீதியில் இருந்த அனைவரின் பார்வையும் இவர்கள் இருவரின் மேலும் இருந்தது. ஒருசிலர் நின்று நடப்பதை வேடிக்கை பார்த்தனர். சிலர் பயத்துடன் விலகி வேகமாக நடந்தனர்.

(சுகந்தி)


அரசியல் அலசல்

பீகாரின் கிராமப்புற வளர்ச்சி அமைச்சருக்கு ஒரு பெரிய மாளிகையும் பரந்த விசாலமான நிலபுல‎ன்களும் இருக்கின்றன. ஆனால் அவர் பெயர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள மக்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இதுமாதிரியான வறுமைக்கோட்டின் கீழே வர யார்தான் ஆசைப்படார்?

(ஜ.ப.ர.)


நானுமொரு பறவை...

நிறமொன்றே என்றாலும்
காகம் பெறுவதில்லை
கானக் குயிலின் மவுசு.

(லோ. கார்த்திகேசன்)


A few products @Nilashop

Ebook : Aattip Padaiththa Adolf Hitler

Carnatic : Sri Muthuswamy Dikshitar`s Navagraha Kritis - Audio CD


பெண்ணினம்

பொறுத்துக்கொள் என்பீர்கள்
என்றெண்ணி சரியென்று
தலையசைக்க தயாராகிறேன்
அவன் மலடன்
என்பதை அறிந்த நான்.

(நிலாரசிகன்)


ஏன் சாப்பிடனும்?

காய்கனிகள், கீரைகளில் இல்லாத சத்து எதிலும் இல்லை. இவற்றிலுள்ள 'பைடோ கெமிக்கல்ஸ்' நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.

(ஆர்.கே.தெரஸா)


உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (4)

இந்தக் கொலைக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்த டிக் ஹம்ப்ரீஸ் என்பவரைக் காணவில்லை என்று செப்டம்பர் மாதம் 11ம் தேதி 1990ல் ஒரு புகார் வந்தது. அவரது உடல் அடுத்தநாள் மாலை மரியான் கவுன்டி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.அவரும் .22 பிஸ்டலால் ஏழு முறை சுடப்பட்டிருந்தார்.

(டி.எஸ் பத்மநாபன்)


நட்சத்திர விடுதியின் இமை மூடாத இரவு

சந்தோஷம் சந்தையில் விற்கும் சமாச்சாரமில்லை என்று புரிவதற்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் இவர்களுக்கு...?

(சிலம்பூர் யுகா)


Profile of Daniel Craig

Profile of new James Bond

(PS)


விரோதம்

உனக்கும் எனக்கும் இடையிலான இந்த ஆழ்ந்த விரோதம் நீயோ நானோ உயிருள்ளவரை மட்டும்

(சரண்)


இராசி பலன்கள் (20.112006 முதல் 26.11.2006 வரை)

விருச்சிகராசி அன்பர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. கலைத்துறையினருக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். காதல் விபகாரங்களில் எச்சரிக்கை தேவை. யாத்திரைகளில் நற்பலன் அடையலாம்.
(டாக்டர் ப. இசக்கி )


His Name is Siva Shankar..(222)

The Ultimate is One. We are all its children. Siva Purana says, ‘He is One, He is Many’. ‘He does not have one form, one name, we eulogize Him with several thousand names’.

(N C Sangeethaa )


தை வெள்ளிக்கிழமை
"இன்று தை வெள்ளிக்கிழமை டாக்டர். அம்பாள் போல அழகான பெண் குழந்தை பிறந்திருக்கு. மேலும் 'அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது' ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க; தானாகவே வந்த அதிர்ஷ்ட தேவதையான எங்க அஞ்சாம் பெண்ணைக் கொடுக்க மனசு வரலை, டாக்டர்"

(வை.கோபாலகிருஷ்ண‎ன்)


நீ நான் தாமிரபரணி (45)

அன்றிரவு அருணுக்கு உறக்கம் வர நிறைய நேரமாயிற்று. அம்மாவின் அழுகையும், அவளை வெறுக்கக் கூடாதென்று அவள் சத்தியம் வாங்கிக் கொண்டதும் அவனை நிறையவே யோசிக்க வைத்தது. மறுநாள் காலையும் அவன் பெற்றோர் பற்றிய எண்ணங்களே அவன் மனதைக் குழப்பின.

(என்.கணேசன்)


செய்திகள் அலசல்

புதுச்சேரியில் ஆறாவது படிக்கும் தனதிருகுமாரன் என்ற பத்து வயதுச் சிறுவன் 36 கிலோமீட்டர் பின் பக்கமாக நடந்துசென்று கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு சாதனையை செய்திருக்கிறான். நடக்கும்போது எடுத்துக்கொள்ளும் சின்னச் சின்ன இடைவேளைகளின் போது - விவேகானந்தர், அம்பேத்கர், எய்ட்ஸ், தேசிய ஒற்றுமை இவைகள் பற்றிப் பேசவும் செய்கிறான்.

(ஜ.ப.ர.)


பாட்டியின் கதைகள் (27)

"இப்போ புரியுது பாட்டி. திருடிய பின் உள்ளுக்குள் பயம் வந்து விடுகிறது. அந்த பயத்தைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக திருடர்களைக் கண்டுபிடித்து விட முடியும்."

(P. நடராஜ‎ன்)


நாயகன் ஒரு நங்கை (17)

எனக்குப் பொறுக்கவில்லை. என் அம்மாவிடம் சென்று அவள் காலடியில் அமர்ந்து கொண்டு, "அம்மா, என்னம்மா சொன்னா?" "டேய்.. உனக்காகத்தான் வெய்ட் பண்றா இவ.. வெளிய போணுமாம்... கூட்டிண்டு போயேன்... காசு கொடுத்தா போதுமான்னு கேக்கறா!"

(நரேன்)


காவிய நாயகன் நேதாஜி (25)

1924 அக்டோபர் 25ம் தேதி பொழுது விடிவதற்கு முன்னால் போலீஸ் அதிகாரிகள் சுபாஷின் வீட்டுக் கதவைத் தட்டி அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். இதை எதிர்பார்த்திருந்தவர் போல சுபாஷ் புன்முறுவலுடன் போலீஸ் வண்டியில் ஏறிக் கொண்டார்.

(டி.எஸ்.வேங்கட ரமணி)


A few products @Nilashop

Relax : Music for Meditation - Audio CD

Bharathnatya : Bharatanatyam Invocatory Items Twin DVD Pack

No comments: