புதிதாக ஒரு இணையதளம் ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதனைப் பிரபலப் படுத்த விரும்புகிறீர்கள். பட்ஜெட் இல்லை... அல்லது மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் நீங்கள்தான் ஐடியா கிங்/குயின் ஆச்சே! அதனால் திரும்பிப் பார்க்க வைக்கிற சில crazy உத்திகளைக் கையாள்வீர்கிறீர்கள். உதாரணத்துக்கு பீச்சில் உடலெல்லாம் வண்ணம் பூசிக் கொண்டு நெற்றியில் உங்கள் இணையதள முகவரியோடு சிலை போல் ஒருவரை அமர வைக்கிறீர்கள்
இது போன்ற கலக்கலான ஐடிக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...
நீங்கள் வலைபதிவாளர் இல்லை எனில் மின்னஞ்சல் மூலமாக ஐடியாவை அனுப்புங்கள் team at nilacharal dot com
சிறந்த crazy ideaவுக்கு நிலாஷாப் வழங்கும் crazyயான பரிசு உண்டு
முடிவு தேதி: நவம்பர் 24
12 comments:
http://vavaasangam.blogspot.com/2006/11/blog-post_16.html
போட்டிக்காக
அந்த இணைய தள முகவரியை தலைகீழாய் ஒரு போர்டில் எழுதி வைக்கவும். (அப்போதானே 'திரும்பி' பார்க்க வைக்க முடியும்);-0)
*
---------------------------
http://valai.blogspirit.com/
இணையதள முகவரியின் பெயரில் ப்ளாக்கர் அக்கவுண்ட் ஏற்படுத்தி எல்லா தமிழ்மண வலை பதிவுகளிலும்
பின்னூட்டமிடுவேன்
நச்சுனு நமீதா போட்டாவ நாலு மூலைலயும் போட்டா போச்சு...ரேட்டிங்க் பிச்சுகிட்டு போகாது :-)
இளா
ஐடியா எங்கேங்க?
//எல்லா தமிழ்மண வலை பதிவுகளிலும் பின்னூட்டமிடுவேன்//
அதைத்தாங்க சொல்லாம சொல்லி இருக்கேன், சங்கத்துக்காக
ஐடியா ந-2
ஒரு பிரபலத்துக்கு மிரட்டல் இமெயில் இணைய தள முகவரியோடு அனுப்ப வேண்டும். மறுநாளே அந்த தளம் பிரபலமாகிவிடும்.
ஐடியா ந-3
பிரபல அரசியல்வாதி லஞ்சம் வாங்கற ஒரே ஒரு வீடியோ படத்தை தளத்தில் இடவேண்டும். அப்புறம் பாருங்க...
சிவாஜி படத்துக்கு 10 டிக்கெட் இலவசம் அப்படின்னு பெரிசா விளம்பரம் போட்டு வைங்க. கூடவே கண்ணுக்கு தெரியாத எழுத்தில் சின்னதா 'ஏழாவது வாரம் முன்வரிசை டிக்கெட்!'னு போடணும்.
சந்தனமுல்லை
இது ரொம்ப பழைய டெக்னிக் இல்லையோ?
போட்டி முடிவு எப்போது?
போட்டி முடிவு - திங்கட்கிழமை (27 நவ 06)
Post a Comment