Wednesday, April 16, 2008

சாரல் 360


மனிதரில் எத்தனை நிறங்கள்!(41)
கணவன் தன்னிடம் பேசியதைக் கேட்டு ஏதோ உலுக்கியதைப் போல பதறி இயல்பு நிலைக்குத் திரும்பிய மேரி "என்ன கேட்டீங்க" என்றாள்.


"எஸ்.. எம்...எஸ்!" (4)
பாயசம் ரசிக்கிற மூடில் நான் இல்லை. ஒரு அண்டா பாய்சன் இருந்தால் மெசேஜ் அனுப்புகிற தடியனுக்கு ஊத்திக் கொடுத்து விடுவேன்.


நிறைவு
மாமி சொன்னபடியே வந்து விட்டாள். மடியாகச் சமையலும் ஆரம்பித்து விட்டது. ரொம்பவும் இயல்பாகச் செய்தாள். சர்வீஸ்தான்!


குழந்தை வளர்ப்பு (2)
உணவைத் தட்டிலிட்டு உங்கள் குழந்தைகளிடம் கொடுக்கவும். அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதற்காக மாற்று உணவு அளிக்காதீர்கள்.


தொலைநகலி
அவரது சோதனைகளுக்குத் தேவைப்பட்ட கருவிகள் இரண்டு பேனாவும் செம்புக் கம்பிச்சுருளால் கட்டி இணைக்கப்பட்ட இரண்டு ஊசல்களுமே (pendulums) ஆகும்.


கனவுகள் (4)
துரிதக் கண்ணசைவு நேரங்களில் ஒருவர் நாலு அல்லது ஐந்து முறை கனவு காண்கிறார்கள் என்று சொல்லும்போது இது எப்படி சாத்தியம் எனத் தோன்றலாம்.


அறிவியல் அதிசயங்கள் (1)
வெறும் கறிகாய் வகைத் தாவரம் தானே என்று செடிகொடிகளை அனைவருமே அலட்சியம் செய்கின்றனர். அவற்றிற்கு உரிய மரியாதையைத் தருவதில்லை.


சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (9)
சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதென்ற அவருடைய நீண்ட நாள் கனவு இவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறுமென எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் இவர்.


இராசிபலன்கள் (14-4-2008 முதல் 20-4-2008 வரை)
கடக ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். வாகனங்களைப் பழுது பார்ப்பதால் பொருட் செலவு உண்டாகும். அந்நிய நாட்டுப் பயணங்களைத் தள்ளிப் போடவும்.


கருணை கந்தன்
அந்த நாட்டு வழக்கப்படி, யார் வேண்டுமானாலும் தங்களிடமுள்ள எந்தப் பொருளையும் தேவதைகளிடம் கொடுத்து பண்டமாற்று செய்து கொள்ளலாம்.


வீரத்துறவி விவேகானந்தர் (18)
அவர்கள் எல்லாம் ஆழமில்லாத குட்டைகள் மாதிரி. கொஞ்சம் தெய்வ சக்தி உள்ளே போனதும் உணர்ச்சிப் பிரவாகம் ஏற்படுகிறது. நீயோ மஹாநதி.அமைதியாக இருப்பாய்.


கழனி (2)
வரப்பில் பெட்ரோமாக்சுக்குக் கொஞ்சம் காத்து ஏத்தி சுடரை உசுப்பேத்திக் கொள்ளலாம் என நின்றான். ஆ..அங்க பார்றா, வாளை! எலேய் உள்ளங்கைத் தண்டி!


எது தேசபக்தி?
கண்மணி கருகிய
மின்மினிக் கூட்டம் இந்த
வெளிச்சத்தின் புதல்வனை
விமர்சிக்கிறது.


வெற்றிக்கலை (18) : இறை நம்பிக்கை (1)
பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை ஜெயிப்பதற்குப் பதிலாக, நம் மனதின் ஆழத்தைக் கண்டு அகவுலகை ஜெயித்தால் அதுவே உண்மை வெற்றி என்றார் அவர்.


நகைச்சுவை பிட்ஸ் (16)
வக்கீல் : விபத்து நடந்தபோது நீ எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தாய்?
சாட்சி : 40 அடி, 11 அங்குலம், ஒன்றரை செமீ.


கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (9)
பாகிஸ்தானை உருவாக்கி அதன் கவர்னர் ஜெனரலாகவும் பொறுப்பேற்ற ஜின்னா மரணத் தறுவாயில் கூறியது : "நான் வாழ்க்கையில் செய்த மாபெரும் தவறே இந்தியாவை இரண்டாகப் பிரித்ததுதான்."


திருவக்கரை வக்கிர காளியின் மகிமை
இந்தக் காளியைத் தரிசித்தால் வக்கிர கிரஹங்களினால் ஏற்படும் தொல்லைகளும், வக்கிர சக்தியால் ஏற்படும் இன்னல்களும் அறவே நீங்குகின்றன.


அடிச்சுவடு அறியாமலே...
கற்பனையாம் நூலெடுத்து பாமாலை கட்டி
கவினுலகம் காண கவிக்கு சில நொடிகள்
கனவிலேயே காலம் கழித்து கரையேறுகையில்

No comments: