Monday, April 24, 2006

நிலவுச் சுடர் 2006 - உங்கள் படைப்புத் திறனுக்கு சவால்!

நண்பர்களே, நலம்தானே? வரும் மே பதினெட்டாம் தேதி நிலாச்சாரல் தனது ஐந்தாவது ஆண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது. இந்தப் பயணத்தை மிக இனிதாக அமைத்துக் கொடுத்த தங்கள் அனைவருக்கும் எங்கள் பணிவான நன்றிகள் பல. ஐந்தாமாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக மே மாத இதழ்கள் அனைத்துமே விசேஷமாக அமையும். குறிப்பாக சாரல் 260 பல பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி அதிவிசேஷ இதழாக வெளிவரும்.

இச்சிறப்புக்களோடு வாசகர்களின் படைப்புத் திறனைத் தூண்டிவிடும் நோக்குடன் நிலவுச் சுடர் 2006 என்ற போட்டியை நடத்த விழைந்துள்ளோம். நிலாச்சாரல் வாசகர்கள் அனைவரையும் இந்தப் போட்டியில் பங்கு கொண்டு ஊக்கமளிக்கும் பலவித பரிசுகளை அள்ளிக் கொள்ள மனதார அழைக்கிறோம்.

இந்தப் போட்டியில் பங்கு கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் படைப்புகளை விரைவாக எங்களுக்கு அனுப்ப வேண்டியது தான். படைப்புக்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மே 7. படைப்புக்களின் உட்கருத்துக்கும் வடிவுக்கும் வரைமுறை இல்லை. படைப்புகளை அனுப்பும்போது நிலவுச் சுடர் 2006 போட்டியில் கலந்து கொள்ள உங்கள் ஒப்புதலைச் சேர்க்க மறந்து விடாதீர்கள்!

இப்போட்டியில் பங்குபெரும் படைப்புகளில் மிகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு ட்ரை ஸ்டார் வழங்கும் ரூ3000 மதிப்புள்ள பரிசு காத்திருக்கிறது. மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படைப்புக்களுக்கு நிலா ஷாப் வழங்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு. இவை மேமாத இதழ்களிலேயே பிரசுரமாக வாய்ப்புண்டு. பரிசு பெறாத படைப்புகளும் நிலாச்சாரலில் பிரசுரமாகலாம்.

மேல் விபரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள சுட்டிக்குச் செல்லவும்:
http://www.nilacharal.com/notice/nilacharal_contest.asp

2 comments:

பரஞ்சோதி said...

வாழ்த்துகள் சகோதரி.

மிகவும் அருமையான சேவை.

நானும் என் பங்கிற்கு ஒரு பரிசு கொடுக்க நினைக்கிறேன். ஏற்றுக் கொள்வீர்களா?

நிலாச்சாரல் said...

கண்டிப்பாக, பரஞ்சோதி.
உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி.

பரிசு பற்றிய விபரத்தை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்:

nila at nilacharal dot com

உங்கள் வலைப்பதிவுக்கு தொடுப்பு கொடுத்து வெளியிட்டுவிடலாம்